Skip to content

கடுநட்பு – சிறுகதை

June 29, 2009

கடுநட்பு – சிறுகதை

நீண்ட நாட்கள் தேடுதலில் நாட்கள் நீண்டு பிரகாசமாக திகதியொன்றில் மணப்பெண்ணை சந்திக்க நாள் குறித்தார்கள். எனக்கு மணப்பெண்ணா என நேரில் சந்தித்து முடிவெடுக்க குடும்பங்கள் கோவிலில் கூடினோம். பெண் பார்க்கும் படலம் உருத்தாலாக இருந்தது. வேண்டாமென சொல்லிவிட்டால் பெண்ணின் மனநிலை என்னாகும் என வருத்தம். அக்காள் சமாதானம் செய்து எடுத்தோம் கவிழ்த்தோம் என இருக்க முடியாது, பேசு,பார், பிடித்திருந்தால் முடிக்கலாம் என்றாள். தனியாக பேசுங்கள் என்றார்கள் ஆனால் மூவர் இருந்தோம். அவள் சேலையினை அரிதாக கட்டுவாள் என தெரிந்தது. பார்த்த மாத்திரத்தில் காதல் பற்றிக்கொள்ளவில்லை, ஆனால் இருவருக்கும் பிடித்திருந்தது. நாங்கள் இருவர் அல்லாமல் மூன்றாவதாக பூர்வா உடனிருந்தாள். பூர்வா அவளின் உற்ற தோழி. பள்ளி முதல் தொடர்ந்துவரும் நட்பு. சிலசமயம் மெய்சிலிர்த்துவிடும் இத்தகைய நட்பை பற்றி கேள்வியுரும் பொழுதுகளில், உறவாடும் கனங்களில். நான் பார்க்க சென்ற பெண் குறைவாகவே பேசினாள். என்னை பிடித்திருந்தது உணர முடிந்தது.

* * * * * * *

பூர்வா என்னைப் பற்றி அதிகம் விசாரித்தாள். வேலை, கல்லூரி, நண்பர்கள், அலுவலகம், ரசனை என கேள்விகேட்டுக்கொண்டே இருந்தாள். நாங்கள் இருவரும் தனியாக விடப்பட்டோம். நானும் பூர்வாவும். அவள் கோவில் பிராகரத்திற்கு சென்று சாமி கும்பிட்டு வருவதாக சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். திண்ணையொன்றில் அமர்ந்தோம். என் மனைவி (பின்னாளில் மணம் புரிந்து கொண்டோம்) பற்றி விவரித்தாள். அக்கறையுடன் அவளின் பழக்கவழக்கங்கள், அவளின் அறியாமை, அவளின் அன்பு, அவளின் கனவுகள், அவள் குடும்பம் என யாரிடமும் விசாரிக்க அவசியமின்றி அனைத்தையும் நடுநிலையுடன் மெதுவாக சொல்லிக்கொண்டே இருந்தாள். இடையே தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை,ஆனால் என் மனைவிக்கு அதிக நம்பிக்கை என்றாள். “கோவிலுக்கு வருவேன் ஆனால் நான் இப்படி வெளியில் நின்றுவிடுவேன்” என்றாள். என் மனைவி விபூதியை நீட்டினாள். நெற்றியில் இட்டுக்கொண்டேன். பூர்வாவின் நெற்றியில் அவளே பூசினாள். என்னைப் பார்த்து புன்னகைத்தாள். கடவுளிடம் இந்த வரன் முடிந்துவிடவேண்டுமென வேண்டி வந்ததாக தேன்நிலவிற்கு செல்லும் வழியில் கூறினாள். கடவுள் வரமளித்துவிட்டார் போலும்.

* * * * * * *

“மாலை நான்கு மணிக்கு பூங்காவிற்கு வந்துவிடுங்க..” என்று அலைபேசியில் அழைத்தாள் பூர்வா. என்னையும் என் மனைவியையும் சந்திக்க அவள் செய்த ஏற்பாடு தான் அது. “போனில் மணிக்கணக்கில் பேசினாலும் நேர்ல பாக்குற மாதிரி வராது. நேர்ல நல்ல பேசுங்க” என எங்களை மரமொன்றின் கீழ் அமர வைத்துவிட்டு, இதோ வந்துவிடுகின்றேன் என சொல்லிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து வந்தாள். அவள் சொன்னது போல நேரில் பேசியபோது தான் அதிக நெருக்கமானதை உணர்ந்தோம்.பாப் கார்ன் வாங்கி கொடுத்தேன். வேண்டாம் நீங்களே சாப்பிடுங்க என்றாள்.

“எனக்கு உங்களை அண்ணான்னு கூப்பிட தோணல. அது என்ன தோழியின் கணவனை அண்ணா ன்னு தான் கூப்பிடனுமா? யார் வெச்ச சட்டம்.” – பூர்வா. சில சமயம் சார் என்றாள், சில சமயம் நீங்க வாங்க என்றாள்.

உறவை நிர்பந்தப்படுத்தி இப்படி தான் கூப்பிட வேண்டும் என்று யார் கட்டாயப்படுத்தினார்கள்? என் நண்பர்களும் என் மனைவியினை தங்கை என கூப்பிட வேண்டும் என்கின்ற எண்ணம் உடைந்தது. அவளும் அவர்களுக்கு தோழி தான். அந்த உறவை அவர்கள் எவ்வாறு எடுத்து செல்வது என அவர்கள் இருவரும் தீர்மானிக்கட்டும் என தீர்மானம் போட்டுக்கொண்டேன். ஆசையாசையாய் இருந்தது நட்பை நினைக்கும் பொழுதுகளில் எல்லாம். வாழ்நாள் முழுதும் நட்பின் கதகதப்பின் வாழ்வது சுகம் என நினைத்துக்கொள்வதுண்டு.

* * * * * * *

திருமணம் முடிந்து முதல் சண்டை அரங்கேறியது. இரண்டு நாட்கள் பேசிக்கொள்ளவில்லை. அவள் அம்மாவீட்டிற்கு சென்றுவிட்டாள். நாங்கள் குடியிருந்த ஊருக்கும் அவள் அம்மா வீட்டிற்கும் இரண்டு மணி நேர பயணம். அலுவலக போனில் இருந்து தகவல் “உங்களை பார்க்க ஒரு பெண் வந்திருக்காங்க.”. பூர்வா சிரித்துக்கொண்டே இருக்கையில் அமர்ந்திருந்தாள். “என்ன சார் சண்டை ஆரம்பிச்சாச்சா? “ என்றாள். எனக்கு வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது. வெளியே காபி சாப்பிட அழைத்து சென்றேன். “சண்டை வரும் சார், அதுக்க வருத்தப்படாதீங்க. அப்புறம் வரும் அன்னோன்னியம் இருக்கே அது சூப்பரா இருக்கும்..அவ தங்கமானவ. நீங்க அவளை விட தங்கமானவரு..இப்படி நீங்க இருக்குறது நல்லா இல்ல. அவங்க வீட்ல அவ சண்டைய பத்தி எதுவும் சொல்லல..சும்மா அம்மா நியாபகம் வந்தது அது தான் வந்தேன்னு சொல்லி இருக்கா..” என்னன எதுவும் பேசவிடவில்லை. “இப்ப கெளம்பி என் கூட வாங்க. வந்து அவங்க வீட்ல உட்காருங்க. அது போதும்” என்றாள்.

அலுவலகத்தில் பர்மிசன் சொல்லிவிட்டு மாமனார் வீட்டிற்கு இருவரும் கிளம்பினோம். பூவும் இனிப்பும் வழியில் வாங்கிக்கொண்டேன். வீட்டிற்குள் போனது தான் தாமதம், ஓடி வந்து கட்டியணைத்துக்கொண்டாள்.அவள் அம்மா, பூர்வா எல்லோரும் இருப்பதை கூட அவள் கண்டுகொள்ளவில்லை. பூர்வாவிற்கு பார்வையால் நன்றி சொன்னேன். அவள் கண்களில் ஏனோ ஈரம்.

* * * * * * *

கருவில் குழந்தை பிறந்ததற்கு எங்களை விட ஆனந்த அடைந்து நேராக வீட்டிற்கு வந்து “பத்திரமா பாத்துக்கோங்க சார் பத்திரமாக பாத்துக்கோங்க சார்” என சொல்லிவிட்டு சென்றாள்.

* * * * * * *

எங்கள் முதல் வருட திருமண தினத்திற்கு அழகிய ஆயில் பெயிண்டிங் அனுப்பி தன் வாழ்த்துக்களை தெரிவித்தாள் பூர்வா.

* * * * * * *

பள்ளி முடித்து கல்லூரி செல்லும் தருவாயில் மனைவியின் வீட்டில் ஏகத்திற்கு கஷ்டம். வறுமை தாண்டவமாடி இருக்கின்றது. படிக்க வைக்க நினைத்தும் முடியாத சூழல். பூர்வா அப்பா தான் உதவினார். என் மனைவி திருமண முன்னர் இந்த செய்திகளை சொன்னபோது நெகிழ்ந்து போனேன். “இதுபாரும்மா, நான் உன்னை படிக்கவெக்கறேன். நீ திருப்பி காசு தர வேணாம். ஆனா நீ பிற்காலத்தில உன் கல்வியால யாராச்சும் ஒருத்தரையாவது படிக்கவெக்கனும்..அவ்வளவு தான்..” என்றாராம். பூர்வா மீது மட்டுமல்ல அவள் தந்தை மீதும் அளவுகடந்த மரியாதை வந்திருந்தது. திருமணத்தின் போது என் பெற்றோர்கள், அவள் பெற்றோர்கள் காலில் தவிர யார் காலிலும் விழமாட்டேன் என சொல்லிவிட்டேன். திமிர் பிடிச்சவன் என்றார்களாம். பூர்வாவின் வீட்டிற்கு விருந்திற்கு சென்றபோது அவர்கள் காலில் விழுந்தோம்.

* * * * * * *

யார் மீது கோவம் கொள்வது என தெரியவில்லை. ஆனால் கட்டுக்கடங்காத கோவம். மனைவி அந்த செய்தி சொன்னதில் இருந்தே மனசு பாரமாக இருந்தது போன்ற உணர்வு. “பூர்வாவுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சுங்க. அவசியம் போகனும். கடைசியா இப்ப தான் பாக்க முடியும்” என்றாள். வெளிநாடு செல்ல போகின்றாளா என விசாரித்ததில், அவள் எங்க ஊரில் தான் இருக்க போகின்றாள் என தெரியவந்தது. அவள் தன் மாமா மகனை விரும்பி திருமணம் செய்து கொள்ள போகின்றாள். குடும்ப சண்டைகள் தகர்ந்து திருமணம் நடக்கவுள்ளது. கல்லூரியில் படிக்கும்பொழுதே காதலித்து இருக்கின்றார்கள், அப்போதே சொல்லிவிட்டானாம் பூர்வானின் மாமன் மகன் “கல்யாணத்து அப்புறம் நீ யார் கூடவும் பேசக்கூடாது. நான் நம்ம குடும்பம் மட்டும் தான்..” ஏன்? ஏன் இப்படிப்பட்ட எண்ணம் எல்லாம்? தன் மனைவிக்கும் ஆசைகள்,கனவுகள், நட்பு இருக்கக்கூடாதா? பூர்வா ஏன் ஒத்துக்கிட்டா?

* * * * * * *

தூரத்தில் எங்களை பார்த்ததும் மகிழ்ச்சி பொங்கியது அவளுக்கு. மனைவி நிறைமாத கர்பிணி. கண்களால் நலம் விசாரித்தாள். மணமகன் நன்றாக தான் இருந்தான். ஆனால் ஆத்திரமாக இருந்தது.பூர்வாவின் அப்பா வாட்டமாக காணப்பட்டார். உடல்நிலை சரியில்லையாம்.அதனால் அவசரமாக திருமணம் போலும்.அது மணவிழா அல்ல, நட்பின் மரண விழா.தாலி கழுத்தில் ஏறியது. எல்லாம் முடிந்தது. அட்சதை தூவினர். பரிசுகளுடன் அனைவரும் வரிசையில் சென்றோம். மனைவியின் கைகளை இறுக பற்றினாள். “சொல்லி இருக்கேனே என் பிரண்டுங்க..” என்றாள் கணவனிடம். நகைத்தான். நகைத்தோம். “வாழ்த்துக்கள் பூர்வா.” என்றேன். வாய் திறக்காமல் நன்றி தெரிவித்தாள். சாப்பிட்டுவிட்டு மீண்டும் வந்து கிளம்புவதாக தெரிவித்தோம்.

“பாப்பா பொறந்தா எங்க அம்மாகிட்ட சொல்லிடுடீ. நான் அம்மா கிட்ட கேட்டுக்கறேன்..பாத்துக்கோங்க அண்ணா..” என்றாள்.

* * * * * * *

– விழியன்

இந்த கதை ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

Advertisements
38 Comments leave one →
 1. June 29, 2009 5:06 pm

  அருமை.

  வாழ்த்துகள்.

 2. Ajith M S permalink
  June 29, 2009 6:09 pm

  Very Nice.

 3. vidya permalink
  June 29, 2009 9:57 pm

  Eppadi ethanai natpukkaloo …

 4. Parames permalink
  June 30, 2009 1:10 am

  Nalla iruku thozha..

 5. இளங்குமரன் permalink
  June 30, 2009 1:26 am

  இதைப்போன்று மெளனமாக அரங்கேறும் கவிதைகள் ஏராளம். மனம் கனக்கிறகது.

 6. இளங்குமரன் permalink
  June 30, 2009 1:31 am

  //பாப்பா பொறந்தா எங்க அம்மாகிட்ட சொல்லிடுடீ. நான் அம்மா கிட்ட கேட்டுக்கறேன்..பாத்துக்கோங்க அண்ணா..” // சித்திரவதை செய்யும் எதார்த்தம்.

 7. cable சங்கர் permalink
  June 30, 2009 2:41 am

  nice..all thebest

 8. Karthic permalink
  June 30, 2009 3:57 am

  Nice..

  • June 30, 2009 6:58 am

   ஒற்றை வார்த்தை விமர்சனத்திற்குநன்றி கார்த்திக்.

 9. vijay permalink
  June 30, 2009 6:44 am

  a nice one

  I started admiring POORVA character

  Is it true story

  • June 30, 2009 6:58 am

   நன்றி விஜய்.. இது ஒரு புனைவு கதை. நிஜம் பாதி, நிழல் மீதி.

 10. Gayathri Devi permalink
  June 30, 2009 6:47 am

  miga miga arumai.
  aangalin natpu avargal mudiyum varai
  pengalin natpu thirumanam mudiyum varai
  anaal pengal thundipathu santhippai mattum thaan
  natpai alla…

  • June 30, 2009 6:59 am

   பெண்கள் நட்பும் என்றென்றும் தொடரும் சூழல் வளர வேண்டும்.

 11. Saraboji Jayaraman permalink
  June 30, 2009 7:42 am

  Vizhiyan,

  Really nice yaar “Athuvum antha Anna serthu varum varthai kalantha Vaakkiyam” kavithai pottikke pogalam, (I don’t want to put fullstop here. need to say more)

  It is really nice man.

  Thanks,
  JSaraboji.

 12. Sakthivel T permalink
  June 30, 2009 12:39 pm

  Very Nice Story….i have no words to express my feelings…
  Simply great

 13. June 30, 2009 2:33 pm

  விழியன், உங்க வலைத்தளத்த கொஞ்ச நாளாவே படிச்சிட்டு வர்றேன் . அருமையா இருக்கு உங்க படம் பிடிக்கும் திறமைகளும் , உங்க கற்பனை திறன் மற்றும் மொழி ஆளுமையும் , ஒரு குட்டி பாலுமகேந்திரா மாதிரி.

  வாழ்த்துக்கள்!!

 14. சா.கி.நடராஜன். permalink
  June 30, 2009 2:58 pm

  அருமையாக இருக்கிறது
  ஒரு வித மன வலி தருகிறது
  எழுதியவர் ஜெயித்து விட்டார்
  ஆனால் அங்கே ஒரு நட்பு விடுபட்டுவிட்டது

  என்றும் அன்புடன்
  சா.கி.நடராஜன்

 15. June 30, 2009 3:21 pm

  நல்லதொரு சிறுகதை. கதையென்று தோன்றவில்லை. விழி கசிய வைத்தது. வாழ்த்துக்கள் !

 16. June 30, 2009 6:36 pm

  அழகான சிறுகதை. ஆண்,பெண் நட்பினை அழகான இன்னொரு கண்ணோட்டத்தில் பதிந்திருக்கிறீர்கள். “அண்ணா” என்றழைக்கப் படவேண்டிய காலத்தின் கட்டாயத்திற்கு பூர்வா ஆளான நிலையை அழகாய்ச் சொல்லி முடித்திருக்கிறீர்கள் விழியன்.

  வாழ்த்துகள்.

 17. July 1, 2009 2:13 pm

  வெற்றி பெற வாழ்த்துகிறேன் நண்பா.

 18. July 1, 2009 3:03 pm

  சுடுநட்பு என்றிருக்க வேண்டுமோ? நல்ல சிறுகதை விழியன்!

 19. kanmani permalink
  July 2, 2009 1:06 pm

  splendid story; today i was a bit upset over the verdict of delhi high court on gay culture.
  the story picturised promising relations. hats off!!!

 20. வெ.இராதாகிருஷ்ணன் permalink
  July 2, 2009 1:49 pm

  மிகவும் அழுத்தமான ஆழமான கதை.

  பூர்வா தனது காதலுக்காக தனது நட்பினை விட்டுக் கொடுத்திருக்கிறாள், விட்டுத்தான் கொடுக்க வேண்டும். பூர்வாவின் கணவரின் செயல்பாடு கொஞ்சம் அதிகபிரசங்கித்தனமாக இருந்தாலும், தனது காதல் தனக்கே எனும் ஒருவித ஆளுமைத்தன்மை தெரிகிறது.

  பூர்வா ‘அண்ணா’ என அழைத்ததில் ஆயிரம் அர்த்தம் பொதிந்து இருக்கும். திருமணம் ஆகிவிட்டால் ‘நட்பு’ இருக்கக் கூடாது என்பதில்லை, ஆனால் பல நேரங்களில் இதுபோன்ற நட்பு ஒருவித இடைவெளியை திருமணத் தம்பதியரிடம் ஏற்படுத்துவதை மறுக்க இயலாது.

  ‘நானே எல்லாம்’ என கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்குமாக இருப்பது என்றாகிவிடுகிறது. மேலும் இங்கே தனிப்பட்ட நட்பு என்பது இனிமேல் எடுபடாது, ‘இரு குடும்பங்களின் நட்பு’ என்றுதான் தொடர வேண்டும்

  பூர்வாவின் கணவனும் யார் கூடவும் பேசாமல் இருக்கட்டும்!

 21. anonymous permalink
  July 30, 2009 12:51 pm

  vazhuthukal vizhiyan.
  It is a true story, which is happening in most of the girl’s life, including my friends.. They may say many reason for that like possessiveness, bla, bla….. to stop that friendship. aanal avargaluku purivathilai avargal thootravargal dhan manaiyazhidam endru?

  Eppoludhum vitukoduthavargalae vettripetravargal.

  Than thozhiyin vazhvitkaga avalin natpai vitukodhu vetripetravargal nanbargal!!!

  We may far in distance, not in touch, Still we are friends always.

 22. Lavanya (a) Sameera permalink
  September 6, 2009 3:55 pm

  Unmai sudum!

  Kanniyamana Aan pen natpai ella kanavargalum purinthu kondal, manaivigal Anna endra vaarthaiyai avasiyamatru ubayogikka vendam!

 23. அகமது சுபைர் permalink
  January 10, 2011 11:46 am

  நமக்கும் நடக்கும்போதுதான் வலி தெரிகிறது. நல்ல பதிவு நண்பா..

 24. February 7, 2012 6:51 am

  அருமை விழியா !

  நிஜங்களின் யதார்த்தம், ‘//பாப்பா பொறந்தா எங்க அம்மாகிட்ட சொல்லிடுடீ. நான் அம்மா கிட்ட கேட்டுக்கறேன்..பாத்துக்கோங்க அண்ணா..” // என்ற வரிகளில் பளிச் …

  நல்ல ஒரு கதை படித்த மகிழ்வு. படித்தவுடன் மனதைப் பிசைய வைக்கும் அதன் இறுதி வரிகள் !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: