Skip to content

Vizhiyan Photography – CSR Event

July 21, 2009

நான் பணி புரியும் நிறுவனத்தில் CSR – Corporate Social Responsibility என்னும் குழு சார்பாகா செயிண்ட் தாமஸ் மவுண்டில் உள்ள வெப் மொம்மோரியில் என்னும் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு விளையாட்டுகள் வைத்து, நாங்களும் உங்களுக்கு இருக்கின்றோம் என்று ஆழமாக அழகாக சொல்ல ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை முதல் மாலை வரை  நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பெரும்பாலான மாணவர்கள் ஆதரவற்றோர், சிலருக்கு தாய் தந்தை இருந்தாலும் படிக்கும் வசதி இல்லாததால் இங்கே தங்கி படிக்கின்றார்கள். விழுப்புரம், சென்னையின் சுற்றுப்புறம் மற்றும் இதர இடங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தங்குகின்றனர். ஹாஸ்டல், இரண்டு கட்டிடங்கள் தள்ளி பள்ளிக்கூடம்.

சில குழந்தைகள் பார்க்கும் பொழுதே அவர்களின் நிலை தெரிந்துவிடுகின்றது. மிகவும் ஏழ்மை. ஆடைகள் கூட சரியாக இருக்கவில்லை. உற்சாகமாக போட்டிகளில் கலந்து கொண்டனர். அலுவக நண்பர்கள் குழந்தைகளுடன் ஒன்றி விளையாடியது மகிழ்வாக இருந்தது. மதியம் அவர்களுக்கு உணவளித்து, மாலை வரை விளையாடி, சுற்றுப்புற உறுதிமொழி எடுத்து, பரிசுகள் வழங்கி நாள் நிறைவடைந்தது.

இது சின்ன அடிதான். கடக்க வேண்டியது நிறைய தூரம். இந்த செயல்கள் போதாது போதாது, போதவே போதாது.

இதோ உங்களுக்காக எடுத்த சில படங்கள்.

1. தனியே தன்னந்தனியே

2. வேண்டும் ஓர் வீடு

3. அண்ணாத்தை வணக்கம்

4.ஒளி கக்கும் கண்கள்

5. அழிப்பானை தாங்களேன், எங்க சோகங்களை அழித்திட

6. தலையெழுத்து மாறப்போவது கைரேகையில் தெரிகின்றதா?

7.நாங்கள் வெற்றி பெறுவோமா…? — நிச்சயம் கண்ணே..

8. நன்றி, வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். அலுவலக நண்பர்களுக்கு..

9. காகித ராசா. (காகிதம் வைத்து உடை தயாரிக்கும் போட்டியில் முதல் பரிசு பெற்றவன்)

10. போஸ் ப்ளீஸ்

11. போலிஸின் மிடுக்கும் கம்பீரமும்

12.அழகிய தமிழ்மகன்.

13. கொஞ்சும் கண்ணில் கொஞ்சம் கண்ணீர்

14. பாவாடை சட்டை கிழிஞ்சி போச்சுதே…பள்ளிக்கூட பசங்க எல்லாம் கேலி பேசுதே

15.அள்ள அள்ள உற்சாகம்

– விழியன்

Advertisements
8 Comments leave one →
 1. டுப்பு permalink
  July 21, 2009 3:57 pm

  nice

 2. July 21, 2009 4:18 pm

  நெகிழவைக்கிறது.

  உங்களது பணி சிறக்கட்டும்.

  அருமையான படங்கள். குறிப்பாக “5. அழிப்பானை தாங்களேன், எங்க சோகங்களை அழித்திட” என்னவோ செய்கிறது.

  நன்றி.

 3. July 21, 2009 4:48 pm

  வழக்கம் போல அருமையான படங்கள் !!!!!! 🙂

 4. Jawahar permalink
  July 22, 2009 3:50 am

  வண்ணத்தைக் கருப்பு-வெள்ளை ஜெயித்து விட்டது.

  அழிப்பான் கேட்கும் சிறுமியின் படத்துக்கு நீங்கள் தந்துள்ள காப்ஷன் மட்டுமல்ல, படமும் அற்புதம்.

  http://kgjawarlal.wordpress.com

 5. Mohan Kumar permalink
  July 22, 2009 4:09 am

  படங்கள் மிக அருமை!!! கிரகணத்தை நேரில் பார்த்த திருப்தி

 6. July 22, 2009 4:28 am

  “இந்த செயல்கள் போதாது போதாது, போதவே போதாது.” இந்தமனம் இருந்தாலே நிறைய செய்திடலாம் வாழ்த்துக்கள்.

 7. uma maheswari.V permalink
  July 22, 2009 5:03 am

  விழிக‌ள் ஒளி க‌க்குகிற‌தோ என்ன‌வோ, என் விழிக‌ளுக்கு அத‌ன் சோக‌ங்க‌ளும் வாழ்க்கை எதிர் கொள்ள‌ போகும் சோக‌மும், ப‌ய‌முமே தெரிகிறது.

 8. July 24, 2009 5:46 pm

  Padangalum thalaippugalum kana kachitham… Arumai:)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: