Skip to content

நானும் நடனமும்

November 11, 2009

நடனமும் நானும்:

சக தோழி ஒருத்தியின் நடன புகைப்படங்களை பார்த்தவுடன் ஏனோ மனம் நடனத்தின் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களை அசைபோட வைத்தது.

ஐந்தாம் வகுப்பு.பாண்டிச்சேரியினை நோக்கி பள்ளியில் சென்ற போது முதல் முறையாக நடனமாடினேன். பேருந்தில். என் அக்காவும் அதே பள்ளியில் பணி புரிந்ததால், பரிந்துரையின் பெயரில் ரஜினியின் “ராஜா சின்ன ரோஜா”வுக்கு முதல் நடனம் அந்த வருடமே பள்ளி ஆண்டுவிழாவில் அரங்கேறியது. அந்த நடனத்திற்கு நிறைய துணைக்கதைகள் உண்டு.

நடனத்தின் மீதான அன்பு அதிகரித்து முறையாக பரதம் பயில கிருஷ்ண கலா மந்திரில் சேர்ந்தேன். வீட்டிலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. கல்யாண மண்டம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகாமையில் இருந்தது. பரதம் பயின்ற நாட்களின் நினைவுகள் மிகவும் லேசாக தான் இருக்கின்றது. என்னுடன் அசோக் (கேடி என்ற புனைப்பெயரினை உடையவன்) என்னும் நண்பனும் சேர்ந்தான். சேர்ந்த சில நாட்களிலேயே என்னை காய்கறி வெட்ட சொல்றாங்க என்னால முடியாதுன்னு நின்றுவிட்டான். எனக்கு அப்படி ஏதும் கசப்பான அனுபவம் நேரவில்லை. அந்த கால சிஷ்யர்களின் பொறுமையினை வியக்க தான் வேண்டும். குருகுல கல்வி பயில இந்த கால மாணவர்களுக்கு பொறுமை நிச்சய்ம் கிடையாது, அதே போல குரு மீதான நம்பிக்கை, பக்தி துளியும் கிடையாது. அசோக் டிஸ்கோ மற்றும் சினிமா பாடல்களுக்கு தனியான குழு ஒன்றில் நடனமாடி சின்ன வயதிலேயே சம்பாரிக்கவும் ஆரம்பித்தான். எனக்கு வந்த அழைப்பினை வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை.

dance1

அந்த நடனப்பள்ளியில் எனக்கு தெரிந்து நான் மட்டும் தான் ஆண் மகன். அனைவரும் பெண்கள். சின்ன பயனுங்க. முதல் நாள் ஆசானிடம் காலில் விழும்போது “கமல் போல பெரிய ஆளா வரனும்” என்று ஆசிர்வதித்தார். அப்படி ஒரு பெருமிதம். கமல் தான் ஹீரோ. இன்று வரையிலும். என் பள்ளியினை மாணவிகள், சீனியர்கள் ஜூனியர்கள் என மாறிக்கொண்டே இருப்பார்கள். சில ஒரு மாதம் வருவார்கள். சிலர் சில நாட்கள் மட்டுமே வருவார்கள். சுமார் இரண்டு மூன்று வருடம் பயின்று இருப்பேன். அரங்கேற்றம் நடந்த நாளில் தான் மற்றும் ஒரு அண்ணனும் அங்கே பயில்கிறார் என்பது தெரியும். அன்றைய கலெக்டர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்து, பரிசிகளையும் சான்றிதழ்களையும் பெற்றேன்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நடனம், கராத்தே, ஹிந்தி வகுப்புகள் என நேரம் அனைத்து ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. யாரோ சிலர் பரதம் பயின்றால் பெண்மை குணங்கள் அதிகமாகும் என்று சொல்லிவிட்டார்கள். லேசாக பயம் தொற்றிக்கொண்டது. நிஜம் என்றும் தோன்றியது. வீட்டில் வேறு ஏதோ சாக்கு சொல்லி பரதம் பயில்வதை நிறுத்திவிட்டேன். ஆனாலும் பரதம் ஆடுவது ஒரு போதை, ஒரு எல்லையில்லா ஆனந்தம், ஒரு தெய்வீக அனுபவமும் கூட.

தமுஎச நடத்திய கலை இரவொன்றில் “அமுத மலையின் என் கவிதை நனைகிறது” என்ற பாடலுக்கு நானும் இராதா என்னும் சிறுமியும் பரதம் ஆடினோம். சின்ன வயது முதல் கலை இரவுகளை நேசித்த எனக்கு அதே மேடையில் என் பங்களிப்பும் நடந்தது ஆனந்தத்தை கொடுத்தது. இதே மேடையில் தான் அன்றைய நாட்களில் பிரபலமாகாத லியோனியும் பங்குபெற்றார்.

dance1

இடைப்பட்ட காலத்தில் பரதம் அல்லாமல் பள்ளியில் நாட்டுப்புற நடனத்திற்கு பெயர் பெற்றுவிட்டேன். ஒரு முறை கும்பக்கரை தங்கையாயின் ஒரு பாடலுக்கு முதல் பரிசு கிடைத்தது. மாவட்ட அளவிலான பல போட்டிகளில் பரதம் மற்றும் இதர நடனங்களில் பங்கு பெற்று பல மாணவர்கள், பல்வேறு அனுபவங்களை பெறும் வாய்ப்பு கிடைத்தது.

பரதம் நிறுத்தியவுடன் உடம்பு பெருக்க ஆரம்பித்தது என்னவோ உண்மை தான். குண்டான உடல்கட்டுடன் நாட்டுப்புற நடனம் ஆடுவதால் பிரபு போல ஆடுகின்றான் என்பார்கள்.  தொன்பாஸ்கோ பள்ளியில் ஒரு விளையாட்டு ஆசிரியர் இருப்பார். எங்கேனும் ஆதரவற்றோர் பள்ளிகளில் விழாக்கள் நடக்கும் போது அழைப்பு விடுப்பார். அன்றைய தேதியில் வெற்றி பெற்ற பாடலுக்கு நடனமாடிவிட்டு வந்துவிடுவேன். மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்த பிறகும் நாட்டுப்புற நடனத்தில் மட்டும் கவனம் செலுத்தினேன். படிப்பில் கவனம் சென்றதால் இதர வெளிப்புற நடவடிக்கைகள் குறைந்து போனது.

கல்லூரியில் சேர்ந்த பிறகு மேடை ஏறும் வாய்ப்பு வெகுவாக குறைந்துவிட்டது. தவிர்க்கும் படியும் ஆகிவிட்டது. சீனியர்களில் பிரிவு உபச்சார விழாக்களில் மட்டும் இரண்டு முறை ஆடினேன். கடைசி ஆண்டு நம் கடைசியாக ஒரு முறை நடனம் ஆடிவிடலாம் என்று நடன போட்டிக்கு பயிற்சித்தேன். Fusion நடனம், அதாவது பரதம் + மேற்கத்திய நடனம் + நாட்டுப்புற நடனம் என மூன்றையும் கலந்து ஆடிவிடலாம் என பயிற்சித்தேன். போட்டி நாளும் வந்தது, ஜூனியர் பெண் ஒருத்தி நடனமாடும் போது மாணவர்கள் கலாட்டா செய்ததில் போட்டி ரத்தாகி போனது.

வேலைக்கு சேர்ந்த பிறகு அங்கு நடைபெற்ற ஒரு மாலை விழாவில் களத்தில் குதித்து சிறப்பு பரிசினை பெற்றேன்.எல்லா ஆட்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நடந்தேறியது ஒரு விபத்து. இடக்கால் முட்டி பிசைந்துவிட்டது. அந்தக்காலுக்கு அதிகமான வேலை கொடுக்க கூடாது என்று சொல்லிவிட்டனர். ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது முறைவைத்து எங்கேனும் மடங்கி விடுகின்றது. இதற்கு சிகிச்சை கிடையாது, உடல் பருமனை குறைத்தால் கால் தோல்லைகள் குறையும் என்றார்கள்.

ஆட்டத்துக்கு குட்பை. உங்களிடமிருந்தும் தற்போதைக்கு…

Advertisements
9 Comments leave one →
 1. November 11, 2009 3:22 am

  WELCOME TO THE CLUB:)
  முறையாக நடனம் பயின்றவரா நீங்கள் உமா!

  நல்ல எழுத்தாளரும் kooda. கோர்வையாக எத்தனை சம்பவங்கள்.
  குயிலிக்கும் கற்றுக்கொடுங்கள். பிரமாதமாக வருவாள்.

  கலை உடலில் புகுந்துவிட்டால் அது தெய்வீக உணர்வுகளுக்கே இடம் தரும்.
  காலை வாரிவிட்டாலும் கலை மறையாமல் உங்களிடம் தான் இருக்கும். எனக்கும் லிகமெண்ட் அறுந்ததுதான் பிரச்சினை. அப்படியும் நடை பயின்றே ஆகவேண்டும். சர்க்கரைக்கும் உடல் பாரத்துக்கும் அதிக சம்பந்தம் உண்டு.
  கவனமாக இருங்கள் விழாமல் இருக்க இறையருள் இருக்கட்டும்.

 2. November 11, 2009 8:16 am

  Nalla thoguppu… I also went back to my bharata naatyam days 🙂 Thanks for this post.. I agree with the fact that Baratham oru arumaiyaana anubhavam…I can sit in a barata natyam programme for over three hours easily without getting bored 🙂

  I now know the reason behind your very understanding write-ups. Kala rasanai enbhadhu valarkka pada vendum… 🙂 It has started off early for you and its always been there 🙂

  I am sorry about the knee cap thing that has put a stop to your dance. but I guess you can still stay connected with dance, by writing about it 🙂 and watching a lot of programmes.. I miss chennai that way.. ange niraiyaa programmes nadakkum.

 3. November 11, 2009 4:46 pm

  அது எப்படின்னா.. நீயும் நானும் ஒரே தலைப்புல ஒரே நாள்-ல பதிவு போட்டு இருக்கோம்.. ?
  இதுக்கு பேரு தான் வேவ்ஸ் ஆ?ஆ

 4. November 12, 2009 5:11 am

  ஆயக்கலை வல்லனோ என் அன்பு விழியன்! வாழ்த்துக்கள்!

 5. மாணிக்கம் permalink
  November 12, 2009 5:21 am

  நடனமாடவும் தெரியுமா..!!! பேஷ் பேஷ்…

 6. November 12, 2009 9:01 am

  நீங்க சகல கலா வல்லவரோ 🙂

 7. thilagavathi permalink
  November 14, 2009 4:38 pm

  try to reduce ur weight.. u have more responsibilities.. take care

 8. soundr permalink
  November 16, 2009 10:18 am

  இந்த
  mega mall மாதிரி
  இல்லன்னாலும் ஒரு
  பங்க் கட rangeக்காவது வரணும்ன்னு
  நான்,
  ஒரு முட்டு சந்து ஓரமா
  புதுசா கட விரிச்சிருக்கேன்.

  http://vaarththai.wordpress.com/

  அப்டியே
  அந்தான்ட…இந்தான்ட‌
  போறசொல‌
  நம்ம கடையான்ட வந்து
  எட்டி பாருங்கோ… Senior

 9. gomathypriya permalink
  November 27, 2010 7:14 am

  hey,
  i remember ur dance in ur hr. sec.
  you danced with priya for ‘otha rooba tharen'( information to all: uma got first price)
  that was very nice and i learnt how to be confident seeing u.(u was little fat that time)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: