Skip to content

காதில் விழுந்தவை

January 4, 2010

பல்வேறு தரப்பட்ட மக்களை ஒரே இடத்தில் சந்திப்பது / பார்ப்பது என்பது கடினமாகி போய்விட்டது. மெகா கலை நிகழ்ச்சிகளில் இவர்களில் பங்களிப்பு வெறும் கைத்தட்டல்களோடு நின்றுவிடும். புத்தக் பிரியர்கள்/ நேசிப்பவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் காண நேரிடுவதே அழகிய அனுபவம். இந்த கண்காட்சியில் மக்கள் பேசிய பேச்சுக்களின் நினைவில் நின்றவை இதோ. இவை வெறும் பேச்சுக்கள் மட்டும் அல்ல, மக்கள் மன நிலையின் பதிவுகள்.

“இது அம்மா நம்பர், இது அத்தை நம்பர். தொலைஞ்சு போனா யாராச்சும் அங்கிள் கிட்ட செல் வாங்கி, இந்த கடையில இருக்கேன்னு சொல்லு, வந்து கூட்டிக்கிறோம். போ.” ( பத்துக்கும் குறைவான வயதுடைய பையனிடம்)

” இங்க புக் எல்லாம் வாங்க கூடாது, இதோ பார் இந்த பட்டியலை வீட்டுக்கு எடுத்துட்டு போய், எது வேணுமோ அதை மட்டும் வாங்கிக்கலாம்..புரியுதா? ”

“கதை எல்லாம் படிச்சிட்டு பாட்டிக்கு சொல்லனும்..”

“அங்க வேணாம்டா, ஒரே சாமி படமா இருக்கு..”

“ஆம்பூர்ல் இப்படி கண்காட்சி நடத்தமுடியும்னு நெனைக்குற.. ஒரு பய வரமாட்டான்..”

“சுஜாதா புக் எல்லாம் இங்க தான் போட்டாங்கடா”

“இன்னும் அந்த புத்தகம் வரல சார். இன்னும் ஒரு நாள்ல வந்துடும் ”

“ஹலோ நான் ஸ்டால் 388ல் இருக்கேன்”

“பாப்பா, ஒரு சீ.டி எடுத்துக்க, நல்லா இருந்தா நிறைய வாங்கலாம்..”

“உங்கள் புத்தக கண்காட்சி அனுபவம் பற்றி சொல்லுங்க” லைட்ஸ் ஆன்.

“வாங்க சார், பிடிச்சிருந்தா வாங்குங்க, கட்டாயம் எல்லாம் இல்லை”

“புத்தக விற்பனையாளர்களுக்கு அன்பான வேண்டுகோள், யாரும் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க வேண்டாம்”

“நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தலைவர் இதோ வந்துவிட்டார்..”

“என்னது பஜ்ஜி முப்பது ரூபாயா?”

“இவ்வளவு தான் டிஸ்கவுண்டா?”

“சார் டிக்கெட் இருக்கா?”

“நீங்க இந்த முகவரிக்கு எழுதி அனுப்புங்க”

“அம்மா கால் வலிக்குது”

“ரொம்ப வெயிட் ஆகிடுச்சு போலாமா?”

“எல்லாம் பழைய புத்தகமா இருக்கு. வேணாம் வா”

“இந்த இதழுக்கு சப்கிருப்ஷன் போட்டுங்கோங்க சார். இங்க வாங்கினா கம்மி”

“புகைப்படம் எடுத்துக்கலாமா?”

“வைகோ பேசப்போறாராம் ..”

“காசு தீந்துடுச்சு, நாளைக்கு தான் திரும்ப வந்து வாங்கனும்”

“இவங்க என் தோழி. இவரு..”

“இன்னைக்கு என்ன புக் வாங்கனும்னு குறிச்சிகிட்டேன். புக் சொமந்துகிட்டு சுத்த முடியாது இல்லையா”

“மூணாவது நாளா வரேன்..”

“வணக்கம். நியாபகம் இருக்கா?”

“ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசமா? இது என்ன ஜவுளி வியாபாரம் போல இருக்கு..”

“அட்டைப்படம் மாத்திருக்காங்க. நல்லா வந்திருக்கில்ல..”

“துணை செயலாளர் உடனே வரவேற்பு அலுவலகத்திற்கு வரவும்”

“ரெண்டு மாசக் கொழந்தையா? ஏன் சார் இங்கெல்லாம் கூட்டிட்டி வரீங்க?”

“இவனுங்களே எத்தனை ஸ்டால் வெப்பாங்க, வேற வேற பேர்ல?”

“அப்பா, அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா?”

“எப்படி சார் போகுது புத்தகமெல்லாம்..”

“இன்னும் அரை மணி நேரத்தில் மதிய உணவு முடிவடையும்”

“நீங்க சொன்ன கடையில வாங்கிட்டண்ணே”

“ஐ பலூன்.” ” தாங்ஸ் சொல்லு..”

“அங்கயே பாதி புக் படிச்சிட்டேன்..”

இன்னும் நிறைய. சில பேச்சுக்கள் சுவாரஸ்யமாக இருந்தது. புத்தக நேசம் மெய்சிலிர்க்க வைத்தது. உற்சாகம் தீப்பொறி போன்றது.

டிஸ்கி: இவையாவும் ஒட்டுக்கேட்டவை அல்ல. காதில் விழுந்தவை மட்டுமே 🙂

– விழியன்

Advertisements
6 Comments leave one →
 1. மீனா permalink
  January 4, 2010 8:58 am

  இண்ட்ரஸ்டிங் :)))

 2. January 4, 2010 9:29 am

  ம்… இதுகூட நல்லா இருக்கே…!!! எங்க அக்கா பையன் 6 வது படிக்கிறான் – செய்யார் – விஸ்டம்ல… அவன் என்ன புக் படிக்கப்போறான்னு தெரியல… டி.வி.ல பாத்துட்டு அடுத்த சனிக்கிழமை கூட்டிட்டு போயே ஆகனும்னு ஒத்த கால்ல நிக்கிறான்…

  போன முறை நெறய புத்தகம் வாங்கினேன்… அதனால் இப்போது அவனாகவே ஆரம்பித்துவிட்டான்…!!!

  • January 6, 2010 3:56 am

   சின்ன வயதில் புத்தகம் வாசிக்கும் ஆர்வம் அவசியம் வர வேண்டும் மாணிக்கம்.

 3. Kumar permalink
  January 5, 2010 11:45 am

  புத்த‌க‌ காட்சி உள்ளே போய் வ‌ந்த‌ மாதிரி இருக்கு.ப‌ட‌ங்க‌ளை பெரிதுப‌டுத்திப் பார்க்கும் வ‌ச‌தியை முட‌க்கி வைத்துள்ளீர்க‌ளா?

 4. கார்த்திக் permalink
  January 8, 2010 1:45 pm

  அட இதுகூட நல்லாருக்கே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: