Skip to content

Shwaas – திரை அனுபவம்

January 29, 2010

Shwaas (Fresh breath)
ஓவ்வொரு நோயும் தீவிரமானது. உண்மையினை சந்தித்து அதனை எதிர்கொள்வதிலே தான் வாழ்வின் வெற்றி அடங்கி இருக்கின்றது. சுவாஸ் என்னும் மராத்திய படத்தினை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. கடந்த மாதம் மூன்று தினங்கள் மோர்தானா அணையில் நடந்த திரை இயக்க பயிற்சி பட்டறையில் கிடைத்த உற்சாகத்தில் அதே வாரமே பர்மா பஜாரில் இயக்குனர் சிவக்குமாரின் பரிந்துரையில் சுமார் 80 டி.வி.டிகள் வாங்கி நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்த்துக்கொண்டு வருகின்றேன்/ வருகின்றோம்.

Shwaas

கிராமத்தில் வளரும் ஒரு சிறுவனுக்கு கண்ணில் கேன்சர் வந்துவிடுகின்றது. கண் பார்வை சரியாக தெரியவில்லை என்று தாத்தாவும் பேரனும் நகரத்திற்கு வரும் போது தான் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் அவர்களுக்கு கிடைக்கின்றது. நகரத்திலேயே தங்கி அறுவை சிகிச்சை மூலம் கண்ணை எடுத்து ஊருக்கு திரும்புவதே கதை. மிக எதார்த்தமான கதை. (இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாம்). நகரத்தின் மருத்துவனை ஒன்றில் துவங்குகின்றது கதை. டாக்டர் வீட்டிற்கு கிளம்பும் தருவாயில் உள்ளே நுழைகின்றார்கள் தாத்தாவும் பேரனும். வெகு தூரத்தில் இருந்து வந்துள்ளபடியால் கண்டிப்பாக டாக்டரை பார்த்துவிட்டு போகவேண்டும் என அடம் பிடிக்கின்றார். டாக்டரும் சில பரிசோதனைகளை செய்துவிட்டு அந்த ரிப்போர்டை எடுத்துக்கொண்டு வரும்படி சொல்கிறார். ரிப்போர்ட்டில் தான் அந்த சிறுவனுக்கு கண்ணில் கேன்சர் இருப்பது தெரியவருகின்றது. கண்கள் இரண்டை எடுத்தால் மட்டுமே சிறுவன் உயிர் பிழைக்க முடியும், இல்லையெனில் அவர் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்கின்றார் டாக்டர். தாத்தாவிற்கு மட்டும் சொல்லப்படும் இந்த செய்தியினை மற்றவர்களிடம் இருந்து மறைக்க எவ்வளவோ முயற்சிக்கின்றார். ஒரு சமூக சேவகி இவரிடம் பேசி அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்க வைக்கின்றாள்.

மேலும் ஒரு சிக்கல் காத்துக்கிடக்கின்றது. உடலில் எந்த பாகத்தை அகற்றும் போது நோயாளிக்கு அந்த செய்தியினை சொல்லிவிட வேண்டுமாம். தாத்தா எப்படி பேரனிடம் சொல்வது என தவிக்கின்றார். மீண்டும் டாக்டரின் உதவியினை சமூக சேவகி மூலம் நாடி பெரும் போராட்டத்திற்கு பிறகு சிறுவனிடம் விஷயம் சொல்லப்படுகின்றது. அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கபடுகின்றான். அங்கே அவன் யாருக்கும் அடங்காமல் இருக்கின்றான். டாக்டர் வேறு ஒரு அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்ததால் குறிப்பிட்ட தினத்தில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை நடைபெறவில்லை. அறைக்கு வந்ததும் அவன் மேலும் கட்டுப்படுத்த முடியவில்லை. தாத்தை அவனை அழைத்துக்கொண்டு வெளியே தப்பித்துவிடுகிறார்.

kid

உண்மை

மருத்துவமனையே அல்லோல் படுகின்றது. ஒவ்வொரும் பொறுப்பை தான் ஏற்காமல் தட்டிக்கழிக்கும் மனப்போக்கை அழகாக படம் பிடித்துள்ளார். நெருக்கடியில் தவிக்கும் டாக்டர் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றார். மறுநாள் தாத்தாவும் பேரனும் வருகின்றார்கள். டாக்டர், தாத்தாவை வன்மையாக கண்டிக்கின்றார். அதற்கு தாத்தா, இவன் இருட்டிற்கு போகும் முன்னர் இந்த அழுக்கு ஆஸ்பத்திரி காட்சிகளுடன் ஏன் போக வேண்டும், ஏன் இந்த் மருந்து மாத்திரைகள், வலிகள், காயங்களுடன் இருட்டிற்கு செல்ல வேண்டும், அதனால் தான் அவனுக்கு இந்த வானத்தையும், நகரத்தின் அழகினையும் காட்டினேன். அவன் வண்ண நினைவுகளோடு இருட்டிற்கு செல்லட்டும். தவறு என்றால் மன்னியுங்கள்” என்பார். படத்தின் அழகிய காட்சி.

தாத்தாவாக நடித்தவர் கனமான பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகின்றார். சமூக சேவகி, உறவினராக வரும் இளைஞர் என எல்லோரும் தங்கள் பாத்திரத்திற்கு ஏற்றவாறு பொறுப்பாக நடித்துள்ளனர். சிறுவனின் நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது. தன் பார்வை மங்குவதை அவன் நடிப்பில் / அவன் காட்டும் எரிச்சரில் நாம் உணர்ந்து கொள்ள முடியும். மருத்துவமனை வாடை அவனுக்கு வெறுப்பை கொடுக்க அவன் சன்னல் வழியே வெளியே காண்டு அடங்குவது கவிதை. தமிழில் சப்டைட்டிலுடன் பார்த்தது ஒரு சுக அனுபவம் தான்.

இந்த கதை கத்தியின் மேல் நடப்பது போன்ற பயணம், கொஞ்சம் தவறினாலும் ஒரு அழுகாச்சி மெகாசீரியல் தோற்றத்தை பெற்றிருக்கும். மென்மையான இசையும், அற்புதமான கேமரா கை வண்ணமும் மிகச்சிறந்த படைப்பிற்கு வித்திட்டுள்ளது. கிராமத்தில் சிறுவன் செய்யும் சேட்டைகள் நகரத்தில் வளர்ந்தோர் தவறவிட்ட தருணங்கள். மருத்துவமனைக்கு சென்ற தாத்தாவும் பேரனும் ஊரில் இருக்கு அம்மாவிற்கு தொலைபேசியில் பேசிக்கொள்வார்கள். தாத்தாவிற்கும் நமக்கும் மட்டும் அவன் கண் போகப்போவது தெரியும். அந்த சம்பாஷனையில் “அம்மா மாடு குட்டி போட்டதா? அதன் நெற்றியில் நட்சத்திர குறி இருக்கின்றதா? என்ன வண்ணம்?” என்று சிறுவன் விசாரிக்கும் போது நெஞ்சு கனப்பதை தவிர்க்க முடியவில்லை.

சிறுவனுக்கு அறுவை சிகிச்சை தள்ளி வைக்கப்பட்டதும் தாத்தா அவனை கூட்டிக்கொண்டு ஊர் சுற்றி காண்பிப்பது கவிதை. நெஞ்ச வருடும் காட்சியமைப்பு.

இந்தியாவில் இப்படிப்பட்ட படங்கள் எடுக்கப்பட்டுள்ளது என அறியும் போது சந்தோஷமாக இருக்கின்றது. சுமார் 30 லட்சத்தில் இந்த படத்தை முடித்துள்ளார்கள். பல கோடி முதல் போட்டு எடுக்கப்பட்ட படங்கள் கொடுக்காத உணர்வை இந்த படம் கொடுத்தது.

– விழியன்

Advertisements
6 Comments leave one →
 1. January 29, 2010 8:03 am

  அறிமுகத்திற்கு நன்றி.

 2. January 29, 2010 12:50 pm

  //சுமார் 80 டி.வி.டிகள் வாங்கி //

  இனி நான் டி.வி.டி வாங்க வேண்டிய அவசியமே இல்லை.:)

 3. January 30, 2010 1:37 am

  நல்ல விமர்சனம் விழியன்.

  சினிமா பற்றி நானும் என் அலுவலக (மராத்திய‌) நண்பனும் உரையாடினோம். 3 idiots ல் ஆரம்பித்து avataar , up in the air , the blind side வழியாக ஆயிரத்தில் ஒருவனில் முடிந்தது. up in the air , the blind side போன்ற படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றாலும், அதுவே நம் மொழியில் வெளி வந்திருந்தால் வரவேற்பைப் பெற்றிருக்குமா என்பது சந்தேகமே !

  அவனும் தான் பார்த்த ஒரு நல்ல மராட்டியப் படம் பற்றி சொன்னான். ஒரு உடல் வலிமையான‌ கிராமத்து விவசாயத் தொழிலாளி வேலை வாய்ப்பு இல்லாமல், தன் வறுமை காரணமாக தெருக்கூத்தில் யாருமே எடுக்க முன்வராத ஒரு பெண் பாத்திரம் எடுத்து, அதற்காகத் தன் உடலை வருத்தி பெண் போல மாறி பல சமூக இன்னல்களை மீறி வெல்வதே கதை!

  மசாலா எதுவும் இல்லாமல் கதையாழம் , திரைக்கதை போன்றவற்றை ஊக்குவிப்பதற்கு மேல்தட்டு (என்று சொல்லிக்கொள்ளும்) மக்கள் முன்வர வேண்டும். நமக்கு நல்ல‌ ஈரானிய , சீன , ஜப்பானியப் படங்கள் பற்றித் தெரிந்த அளவுக்கு நல்ல மலையாள , வங்காள , மராத்தியப் படங்கள் பற்றித் தெரிவதில்லை, அல்லது நம்ம்கு எட்டுவதில்லை. அதற்கான விழிப்புணர்வு , விளம்பரம் குறைவாக உள்ளது.

  மராத்தியப் படங்கள் தமிழில் துணை உரையுடன் (உதவி: tamildict.com :))நம் இந்திய மொழிப்படங்கள் கிடைப்பது மிக மகிழ்ச்சி !

  பாலிவுட் என்றால் இந்தி என்ற மேற்குலகப் பார்வையை மாற்றவே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் பாடல் இலண்டனிலும் படம் நியூ யார்க்கிலும் வெளியிடப்போவதாக ஆரிவித்திருக்கிறார்கள் ! இது மற்ற மொழிகளுக்கும் ஒரு நல்ல முன்னுதாரணம். கோலிவுட், பாலிவுட்டுக்கு அடுத்து வருமளவு வளர்ந்திருப்பதற்கு இந்தியை எதிர்த்த அண்ணாவும் ஒரு காரணம் என்பது என் கருத்து. இந்தி மொழி ஆதிக்கம் பல நல்ல, பிற வடமொழிப் படைப்புகளை வெளியுலகத்திற்கு தெரியாமல் மறைத்துவிட்டதாகவே என் எண்ணம்.

  கலை , இலக்கியம் வளர மொழியின் ஊக்குவிப்பு அவசியமாகவே இருக்கிறது. இதை அந்தந்த மொழியை தாய்மொழியாய்க் கொண்ட படித்த மக்களே வெளியுலகுக்கு சென்றடையச் செய்ய வேண்டும். இதே நிலை கணினி உலகத்திலும் தொடர்கிறது. அதிக பக்கங்கள் கொண்ட விக்கிபீடியா மொழிகள் வரிசையே இதற்கு எடுத்துக்காட்டு ! தெலுங்கு பல நாட்கள் இந்திய மொழிகளில் முன்னனியில் இருந்ததாகக் கேள்விப்பட்டேன். அவர்களின் மொழி ஆர்வம் பிரம்மிபூட்டுகிறது.

  வாய்ப்பு கிடைத்தால் இந்தப் படத்தைக் கண்டிபாகப் பார்க்கிறேன் ! நான் படம் அதிகமாக பார்ப்பதில்லை 🙂 கடந்த 2 மாதங்களில் பார்த்தது 5 படம் ! அதுவும் பார்க்கவேன்டும் என கடின முயற்சியுடன் 🙂

  பி.கு: ‘தமிழ் பட’த்திற்கு மாயாஜாலில் இரண்டு நாட்களுக்கு டிக்கட் இல்லையாம்! நம்ம இன்னும் முன்னேறனுமுங்க 🙂

 4. January 30, 2010 9:04 am

  உமா
  நல்ல விமர்சனம்,வாழ்வை பற்றிய உன் பார்வை இன்னும் விரிவடைய வாழ்த்துகள்

 5. சிரவணன் permalink
  February 1, 2010 11:40 am

  நெகிழ்வூட்டிய படைப்பு. நினைவூட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே!

 6. meens permalink
  February 2, 2010 9:03 am

  if u attach the film list also will be useful for us to the cinema

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: