Skip to content

செய்திகள் சில..

February 1, 2010

செய்தி 1:

தங்கச்சியோட வலைப்பூவில் இருந்து “தேவதை” பெண்களுக்கான இதழில் கட்டுரையும் அவளின் புகைப்படமும் வந்திருக்கு. பார்க்கவே சந்தோஷமா இருந்தது.

அவளுடைய வலைப்பூ – திவ்யா செல்வன்

செய்தி 2:

எங்க அலுவலகத்தில் நடந்த சில புது வருட / பொங்கல் போட்டிகளை புகைப்படம் எடுத்து அவற்றில் சிறந்த புகைப்பட கலெக்ஷனுக்கு போட்டி நடந்தது. உரி அடிக்கும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி மற்றும் ரங்கோலி போட்டிகளை மட்டும் புகைப்பட எடுக்க முடிந்தது. ஆனாலும் பரிசு எனக்கு எனக்கு. சொக்கா சொக்கா.

செய்தி 3:

15வது முன்னாள் மாணவர் சந்திப்பிற்கு 13வது வருடமாக கலந்து கொண்டேன். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26ஆம் தேதி தவறாமல் நான் இருப்பது வி.ஐ.டி வளாகத்தில் தான். நான் என் முதுநிலை மற்றும் இளநிலை பட்டங்களை பெற்றது இதே கல்லூரியில் தான். வேலூர் எஞ்சினியரிங் கல்லூரி என இருந்தது வேலூர் பல்கலைகழகமாக மாறி உள்ளது. ஒவ்வொரு வருடம் கல்லூரிக்குள் நுழையும் போது ஏதாவது புதிய கட்டிடம் எழுந்தருளி இருக்கும். ஏகப்பட்ட வளர்ச்சி. நான் படித்த வகுப்பறைகள் எதுவும் இப்போது இல்லை. எல்லாம் வேறு அறைகளாக மாற்றம் பெற்றுள்ளது. இந்த முறை மனைவியையும் குழந்தையும் அழைத்து சென்றேன். மதிய உணவு ஆம்பூர் பிரியாணி இந்த விழாவில் பிரசித்தி (இந்த முறை சாப்பாடே கிடைக்காது வேறு கதை). ஆனாலும் ஒவ்வொரு வருடமும் மிக நெகிழ்வான நாட்களில் இதுவும் ஒன்று.

விஷயம் என்னன்னா, இந்த வருடம் நடந்த திடீர் போட்டியில ஐயா தான் வென்றார். அரங்கில் இருப்பவர்களில் யாருடைய பெல்ட் மிக நீளமாக இருக்கோ அவங்களுக்கு பரிசு. ஒரு பெரிர்ர்ர்ய மனிதர் மிதப்பாக சென்று தன்னுடைய பெல்டை மேடையில் காட்டி ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தார். ஆனா போட்டியில கெளுச்சது என்னமோ அடியேன் தான். அரசியல் வாழ்கைன்னு வந்துட்டா…

துணை -முதல்வர் சேகரிடம் இருந்து பரிசு பெறுகிறேன் (படத்திற்கு நன்றி http://www.vitaa.org)

துண்டு செய்தி : முன்னாள் மாணவர்களில் இணைய தளத்திலும் புத்தக வெளியீட்டு செய்தி வந்துள்ளது. மகிழ்ச்சியா இருந்தது. முகப்பு பக்கதிலே http://www.vitaa.org ( Alumnus turned Author)


செய்தி 4:

என்னுடைய சிறுவர் நாவலை இணையத்திலும் வாங்கலாம். இணைப்பு எப்போதோ வந்துவிட்டாலும் கொடுக்க மறந்துவிட்டேன்.

காலப் பயணிகள் – விழியன்

நன்றி

விழியன்

6 Comments leave one →
  1. February 1, 2010 5:21 pm

    congrats

  2. February 2, 2010 2:43 am

    வாழ்த்துக்கள் விழியன் !

    பெல்ட் நீளமாக இருந்தாலும் , நீங்க ஒல்லி ஆகிட்டீங்க🙂

  3. February 2, 2010 5:08 am

    மனமார்ந்த வாழ்த்துக்கள்😉

  4. February 4, 2010 2:07 am

    வாழ்த்துக்கள் விழியன்….(முக்கியமா பெல்ட்டுக்கு)

  5. கோபி permalink
    February 21, 2010 9:52 am

    நல்ல வேளை பெல்ட்டை அளக்கச் சொன்னாங்க. யாருக்கு நகம் நீளம், இல்லை நாக்கு நீளம், இல்லைன்னா விரல் நீளம்னு அளக்காம. ரொம்ப அபத்தமா இருக்கு. அதுவும் இது மாதிரி போட்டிங்க ஒரு பல்கலைக்கழகத்துல நடக்கதுங்கறப்போ எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. ஆனாலும் நண்பா நீங்க ஜெயிச்சதுக்காக வாழ்த்துக்கள்

  6. Loveish permalink
    March 23, 2010 6:39 am

    Valzhthukkal Nanba!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: