Skip to content

வடுக்கள் நடுவே வாடைகாற்று

March 23, 2010

அன்றைய மனநிலையினை இன்னும் மறக்கமுடியவில்லை.  ஒரு வேளை எங்கோ நிகழும் நிகழ்வுகள் நிகழ்த்தும் பாதிப்பைவிட, அருகே நிகழும் நிகழ்வுகளால் அதிக பாதிப்பு இருக்கலாம்.  இத்தனை காலம் தெரியாமல் போனதால் கொஞ்சம் ஏமாற்றம் அதிப்தி போன்ற காரணங்களாலும் இருக்க கூடும்.  மனம் கசங்கி, நொருங்கி இருந்தது.  இயலாமையால் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அமுதா பழகி சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.  கல்லூரி தோழி ஒருத்தியின், உறவினர் என அறிமுகமானாள்.  இணையம் கொடுத்த வரம் உலகின் வெவ்வேறு துருவங்களிலில் வசித்தாலும் நட்பும் அறிமுகமும் அதிகரித்திக் கொண்டே போகும்.  நாங்கள் நேரிலும் சந்தித்துக்கொள்ளவில்லை, அலைபேசி வழியாகவும் பேசிக்கொண்டது இல்லை.  மிதமான நட்பு.  அரசியல் விவாதம், கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் என விரிந்தது.  தன் மண வாழ்வு பற்றி அவ்வப்பொழுது சொல்லுவாள்.  கணவன் பணி, ஊர் மாற்றம், கருத்சிதைவு என இடைவெளி விட்டு செய்திகள் இடையிடையே வரும்.

சில மாதங்கள் செய்தி பரிமாற்றமின்றியும் கடக்கும்.  ஒற்றை வரியில் நலமா என்கின்ற விசாரிப்பில் கடந்துவிடும்.  எங்கள் உறவுக்கு வித்திட்ட கல்லூரி தோழி திருமணத்தின் போது அவசியம் சந்திக்கலாம் என உரையாடி, திருமணத்தில் சந்திக்கமுடியாமல் போனது.  ஒரே மண்டபத்தில் ஒரே நேரத்தில் இருவரும் இருந்தும் சந்தித்து பேசமுடியாமல் போனது வருத்தமே.  என்னதான் இணைய வழியாக பேசினாலும், நேரில் சந்தித்தாலே அது நிலைக்கும், வலுபெறும் என்பது என் எண்ணம்.  அப்படி எதுமில்லை என்பாள் அமுதா. அவள் உறவு மட்டும் நிஜமாகி போனது.

குழந்தை பிறக்கும் இரண்டு நாள் முன்னர் “எனக்காக வேண்டிக்கேங்க” என மடலிட்டு இந்தாள்.  வாரம் கழிந்து ஆண்மகன்  கார்திக் என்ற மடல் என் பிராத்தனை வீண்போகவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தியது.  என் வாழ்கை துணைக்கு அவளின் தோழிகளை யாரேனும் பரிந்துரைக்க முடியுமா என்ற கேள்விக்கு சின்னதாய் புன்னகை குறியினை திரையில் போட்டுவிட்டு மறைந்துவிட்டான்.  தவறாக ஏதேனும் கேட்டுவிட்டேனோ என குழப்பத்தில் ஆழ்ந்துபோனேன்.

அன்று மாலை “உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்புகிறேன்” என்றாள்.  அந்த கடிதம் தான் என்னை பாடாய்படுத்தியது.

அன்புள்ள அம்மாவுக்கு,

கார்திக் பிறந்துவிட்டான்.  அத்தனை அழகு அவன்.  அத்தனை சுட்டித்தனம்.  உலக சந்தோஷங்களை மொத்த வடிவமாய் ஆண்டவன் அவன் ரூபத்தின் எனக்கு அனுப்பியுள்ளான்.  என்ன அழுதாலும் நான் அணைத்துக்கொண்டால் அடங்கிவிடுகின்றான்.  தாய்மை என்னும் புதிய பதவி உயர்வை ஆனந்தமாய் அனுபவிக்கிறேன்.  தாத்தா என்றால் உயிராக இருக்கிறான்.  காலை மாலை தாத்தாவுடன் தான் நேரம் கழிகின்றது, கார்த்திக்கிற்கு.  இன்னும் வளர்ந்துவிட்டு அப்பா எங்கே அம்மா என்றால் என்னிடம் பதில் இல்லையே அம்மா.

எல்லா அம்மாக்களுக்கும் உச்சகட்ட தாய்மையின் அனுபவம் பாலூட்டுவது.  ஆனால் எனக்கு அந்த பாக்கியம் இல்லாமல் போய்விட்டதம்மா.  பால் சுரக்கவில்லை.  ஒழுங்கான உணவு உட்கொள்ளாததே காரணம் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.  நான் என்ன சாப்பிட மாட்டேன் என்றா சொன்னேன், கொடுத்தால் தானே.  கருவில் இருக்கும் போதும், அவன் வெளிவந்த பிறகும் எனக்கு சரியான உணவே கிடைக்கவில்லை அம்மா.

நானும் கணவரும் தனியாக வெளியூரில் இருந்தபோது அவரிடம் மட்டும் அத்தனை கொடுமை அனுபவித்தேன்.  கதைகளில் படித்த கணவன் கொடுமையினை தினசரி வாழ்வில் கண்டேன்.  எங்கள் படுக்கயறை சுவர்களுக்கு வாயிருந்தால் கதறி கதறி அழும்.  முதல் குழந்தை கருவில் சிதைந்ததே, அதற்கு காரணம் ஒர் நாள் அந்த அரக்கன் என்னை உதை உதையென உதைத்தது தான் அம்மா,  வெளியே சொல்லவில்லை.  அவருடைய மரியாதையினை வெளியுலகில் கெடுக்க விருப்பமில்லை.  எல்லா பெண்களும் இப்படித்தான் என நினைகிறேன்.  கல்வி மனிதனை செழுமையாக்க வேண்டும், நான் பார்த்த வரையில் அப்படியேதும் மாற்றம் அந்த அரக்கனிடம் இருக்கவில்லை.எத்தனை படித்து என்ன பிரயோசனம்.

என் நடத்தையில் சந்தேகமாம்.  நினைத்தாற் போல நான் வெளியே சென்று வர அனுமதி இல்லையாம்.  அவர்களிடம் அடிமையாகி போனேன்.  அப்பாவிடம் பேசும் பொழுதும் அருகிலேயே நிற்கின்றார்கள்.  அவர் இல்லாத பொழுதும் நான் எதும் வம்பு பேசப்போவதில்லை.  எத்தனை சிரமப்பட்டு, துயரப்பட்டு அப்பா திருமணம் செய்து வைத்தாரென எனக்கு தெரியாதா?  எத்தனை அவமானம் தாங்கிகொண்டார்.  அவரிடம் போய் நான் கஷ்டப்படுகிறேன் என்றால் துவண்டுவிடமாட்டார்.  அதை கூட யோசிக்கும் திறன் இல்லை.  மூடர்கள்.

அன்றைய உச்சகட்ட சண்டைக்கு பிறகு  அப்பாவுடன் வந்துவிட்டேன்.  வந்து ஐந்து மாதமாகின்றது, மகன் எப்படி இருக்கிறான், பேரன் எப்படி வளர்கிறான் என்கின்ற எந்த விசாரிப்புகள் கூட இல்லை.  மனம் எப்பொழுதோ கல்லாகி போய்விட்டது. அவர்களோடு பழகி என்க்கு சற்றே பாறை போல் தோன்றுகின்றது.  சொன்னால் அழுவீர்கள் அம்மா, கார்திக் எனக்கும் என் கணவருக்கும் பிறக்கவில்லையாம் இப்படி கூடவா யோசிப்பார்கள்.  அதனையே காரணம் காட்டி என்னிடம் இருந்து விவாகாரத்து கோரப் போகின்றாராம்.  என்ன வேடிக்கை பாருங்களேன்.

ஒரு விதத்தில் அது கூட சரிதான் என்று தோன்றுகின்றது.  காலம் முழுக்க அந்த மனிதர்கள் கூட என் மகன் வளர்ந்தால் மூர்கமாக வளர்வான் என்கின்ற பயம் அதிகமாக உள்ளது.  என் உலகம் இனி அவள்தான் என்றாகிவிட்டது.  மகளின் வாழ்கை இப்படி நேர்ந்துவிட்டதேவென அப்பா தான் எனக்கு தெரியாமல் கதறுகின்றார்.  என்ன செய்ய, போராட தானே வேண்டியுள்ளது.  அம்மா…. அம்மா…..

ஏண்டி என்னை விட்டு போன?

ஏண்டி என்னை இப்படி தனியா தவிக்கவிட்ட

ஏண்டி ஒரு வார்த்தை கூட ஆறுதல் சொல்ல வரல

நீ மவராசி என கல்யாணம் முடிச்ச கையோட மேல போயிட்ட…..

உமாநாத், என் அம்மாவுக்கு எழுதிய கடிதம்.  மேலோகத்தின் முகவரி என்னிடம் இல்லை.  உங்களின் அறிமுகம் கிடைத்த அந்த வாரம் தான் அம்மா தவறினார்கள்.  அம்மா பெயர் உமா, ஏனோ உங்களிடம் என் அம்மாவின் ஸ்பரிசத்தை உணர்ந்தேன்.  அதே அன்பு, கனிவு, பெயர்.  மனம் ஏனோ இக்கணம் லேசாய் உணர்கின்றது உங்களிடம் உரையாடும் போது.

அன்புடன்,
அமுதா”

கோபமும் இயலாமையும் வாட்டி வதைத்தது.  நட்பினை தாய்மையாக்கி தோழியால் வடுக்கள் நடுவே வாடைக்காற்று.

(இதனை உண்மையென்று நான் சொன்னால் என்ன செய்துவிட முடியும் உங்களால்……)

-விழியன்

Advertisements
21 Comments leave one →
 1. March 23, 2010 5:18 am

  அருமை விழியன்…

  முடிவில் கேட்கும் கேள்வியில் உள்ள ரணம் மனதைச் சுடுகிறது…

 2. March 23, 2010 5:25 am

  Hmmm machi super ah irukku un kwritting….

  aamaa ithu unmayana story ah ? 🙂

  machi keep writing and keep post me the link..

 3. Parames permalink
  March 23, 2010 5:26 am

  உண்மை என சொன்னால்.
  எல்லோருக்கும் தாம் விரும்பும் வாழ்க்கை கிடைப்பதில்லை. தன்னை அந்த வளையத்தில் இருந்து விடுபட்டு கொண்ட அமுதாவிற்கு சபாஷ்..
  அவருக்கு உற்ற தோழனாக இருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்…

  பொய் என சொன்னால்..

  மனதை தொடும் கதை.. நல்ல கற்பனை.. வாழ்த்துகள்..

  • March 23, 2010 5:48 am

   உண்மை சம்பவம் தான் பரம்ஸ். பெயர்கள் பொய்.

 4. March 23, 2010 5:35 am

  வாவ். அருமை உமா. நல்ல எழுத்து நடை.

  புனைவா..? கதையா..? உண்மையா..? எப்படியிருப்பினும் சரியே.

  வாழ்த்துகள்.

 5. Loveish permalink
  March 23, 2010 6:32 am

  I feel it as real!

  Thanks & wishes to Uma (both) to console Amudha’s heart.

 6. Sashidharan permalink
  March 23, 2010 9:04 am

  இது எழுதிய உங்களுக்கு மட்டுமல்ல – “…கோபமும் இயலாமையும் …”. இது போன்ற நிகழ்வுகள் கேட்கும்போதும், படிக்கும்போதும் அல்லது நேரில் சந்திக்கும்போது…

 7. Elango permalink
  March 23, 2010 9:12 am

  !!! Super !!!

 8. ஓம் ஸ்ரீ permalink
  March 23, 2010 9:30 am

  நல்லா இருக்கு ஜி,

  இது புனைவாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

 9. nrnatesan permalink
  March 23, 2010 10:41 am

  sorry for english!!
  really heart touching !!!

 10. selvaraj permalink
  March 23, 2010 12:40 pm

  அருமை…..
  உண்மை எப்போதும் கசக்கும்… அது உண்மைதான்…. இதிலிருந்து தெரிகிறது…

  • March 24, 2010 3:39 am

   பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

 11. Velvizhi Perumal permalink
  March 24, 2010 5:08 am

  Good one…

 12. March 27, 2010 1:58 pm

  உமா,
  படிக்கவே கஷ்டமா இருக்கு
  அமுதா மனசுல சுயபரிதாபம் மேல் எழாமல்
  நம்பிக்கையோட ஒரு புது வாழ்கை துவங்க வாழ்த்துகள்.

 13. satheesh permalink
  April 2, 2010 5:17 pm

  இது போல் சம்பவங்களை கேட்கும் பொழுது எனக்கு ஆண் வர்கத்தின் மேல் கோபம் வருகிறது .நல்ல உரைநடை பாராட்டுக்கள் விழியன் .

 14. மகி permalink
  April 5, 2010 8:01 am

  மனம் கனக்கின்ற வரிகள்.. உண்மையாய் இருக்க வாய்ப்புகள் அதிகம் உமா..
  பெயரில் என்ன இருக்கு என்ற சிலரின் கேள்விக்கு இது பதிலாய்க்கூட இருக்காலாம்..
  என்னைச்சுற்றியும் இப்படி அமுதாக்கள் உண்டு..

 15. Kandasamy permalink
  April 5, 2010 11:37 am

  If it is a real story then it is very difficult to digest it easily by everyone.

  If it is not real story then it is very nice and kudos to you to thik like this and it is there in today’s world.

  Thanks,
  -Kandasamy

 16. May 11, 2010 6:42 am

  கதையோட்டம் அருமை. ஆனால் இது கதையல்ல நிஜம் என்பது கொடுமை. அமுதா புது வாழ்வு தொடங்க வாழ்த்துகள்.

 17. Kanthi Jaganathan permalink
  May 15, 2010 8:11 am

  //கோபமும் இயலாமையும் வாட்டி வதைத்தது. நட்பினை தாய்மையாக்கி தோழியால் வடுக்கள் நடுவே வாடைக்காற்று.

  (இதனை உண்மையென்று நான் சொன்னால் என்ன செய்துவிட முடியும் உங்களால்……)

  -விழியன்//

  Very touching Vizhiyan! You are just GREAT. Let your friendship be a blessing to your friend!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: