Skip to content

இ-கலப்பை 3.0 – புதிய பரிமாணம்

April 16, 2010

இ-கலப்பை 3.0 பீட்டா – இந்த கருவி மட்டும் இல்லாமல் போயிருந்தால் நிறைய பேர் தமிழில் எழுத வந்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். இந்த கருவி கொடுத்த சொகுசு, ஆங்கிலமே தட்டச்சி வந்த பல பேருக்கு மிகப்பெரிய வரம். இ-கலப்பை இப்போது அடுத்த பரிமாணத்திற்கு சென்றுள்ளது.

இ-கலப்பை இதுவரை 2.0 ஆம் வெர்சனில் இருந்து 3.0 பீட்டாவிற்கு செல்கின்றது. அதனை தரவிறக்கம் செய்து கொள்ள
http://code.google.com/p/ekalappai/downloads/list

முந்தைய வெர்சன்களைவிட சற்றே பெரிய கோப்பு. ஆனால் பயன்படுத்த வெகு சுலபமாக இருக்கின்றது. வெறும் எஸ்கேப் பொத்தனை அழுத்தினாலே செயல்பட துவங்கிவிடுகின்றது.

தமிழில் எளிதாக தட்டச:
1. இ-கலப்பையினை தரவிறக்கம் செய்யுங்கள்
2. அதை உங்க கணினியில் நிறுவுங்கள்.
3. அந்த நிரலை தேர்வு செய்தவுடன், டெஸ்க்டாப் ட்ரேயில் இ-கலப்பை ஐகான் தெரியும்.
4. எஸ்கேப் பொத்தனை அழுத்தினால் “Phonetic” என்று ஒரு பலூன் வரும், அது தட்டச்ச தயாராகிவிட்டதற்கான அறிகுறி.
5. நீங்கள் ஜிமெயில், நோட்பேட், வேர்ட் போன்ற எந்த இடத்திலும் தட்டச்ச துவங்கலாம். (தமிழ் ஒருங்குறி எழுத்துருக்கள் தேவை. தற்போது எல்லா கணினியிலும் அதனை காணலாம்.

இந்த கருவியில் ஏதேனும் ஆலோசனை / பிழைகள் இருப்பின் இங்கு பதிவு செய்க.
http://code.google.com/p/ekalappai/issues/list

முகுந்தராஜ்:
முகுந்தின் இந்த முயற்சி மிகவும் பாராட்ட தக்க ஒன்று. அவரை பெங்களூரில் சந்தித்த போது பெரிதும் ஆச்சரியமூட்டினார். வீட்டிற்கு அருகாமையில் இருந்ததால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தொழில்நுட்பத்தை விரல் நுனியில் வைத்து கொள்வதோடு மட்டுமல்லாமல் எப்படி எல்லோரும் அதன் மூலம் பயன்பெறலாம் என சதா சிந்தித்துக்கொண்டே இருப்பவர். புதிது புதிதாக ஏதேனும் சோதித்துக்கொண்டே இருப்பவர். முதல்முதலாக பேட்டரியில் இயங்கும் மோட்டார் சைக்கிளை இவர் வீட்டில் தான் பார்த்தேன் / ஓட்டினேன். அவர் கனவுகள் மெய்ப்பட வேண்டும்.

முகுந்தை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல் அவரின் இந்த முயற்சிக்கு நம்மாலான பங்கினையும் செய்வோம்.

(C, C++ தெரிந்த ஆர்வலர்கள் அவரை தொடர்பு கொள்ளலாம்)


விழியன்
https://vizhiyan.wordpress.com

20 Comments leave one →
  1. ஞானவெட்டியான் permalink
    April 16, 2010 6:45 am

    வாழ்க. வளர்க மென்மேலும்.

  2. April 16, 2010 6:57 am

    //இ-கலப்பை 3.0 பீட்டா – இந்த கருவி மட்டும் இல்லாமல் போயிருந்தால் நிறைய பேர் தமிழில் எழுது வந்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். இந்த கருவி கொடுத்த சொகுசு ஆங்கிலமே தட்டச்சி வந்த பல பேருக்கு மிகப்பெரிய வரம்.//

    இதைக்கூட இ-கலப்பையில்தான் எழுதுகிறேன்.
    உண்மையிலேயே இ-கலப்பை ஒரு வரம்தான்.

  3. April 16, 2010 7:00 am

    வணக்கம்,
    எ-கலப்பை 3.0 பற்றி உங்கள் பதிவில் எழுதியமைக்கு நன்றி.

    முக்கியமாக இந்த பதிப்பில் நான் குறிப்பிட விரும்புவது, இந்த பதிப்பு முற்றிலும் ஓப்பன் சோர்ஸ்ஸாக உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்த பதிப்புகள் கீமேன் என்ற மென்பொருளை(அது ஓப்பன் சோர்ஸ் அல்ல) கொண்டு உருவாக்கப்பட்டது.

    இதன் மூல நிரலும் இணையத்திலுள்ளது பார்க்க – http://code.google.com/p/ekalappai/source/browse/

    c++ தெரிந்த நண்பர்கள் இந்த முயற்சியில் கலந்து கொள்ளலாம். இது ஓப்பன் சோர்ஸ்ஸா இருப்பதால் நாம் விரைவில் பல புதிய வசதிகளை இதில் கொடுக்க இயலும்.

    தற்போது இது பீட்டா1 பதிப்பில்தானுள்ளது அதனால் பிழைகள் இருக்க வாய்ப்புள்ளது, அவை அவ்வப்போது களைந்து இற்றைப்படுத்தப்படும்..

    அவ்வப்போது http://code.google.com/p/ekalappai தளத்தைப் பார்வையிடவும்.

  4. April 16, 2010 7:19 am

    தகவலுக்கு நன்றி செல்வா.

  5. ramji_yahoo permalink
    April 16, 2010 7:30 am

    but al these Tamil typing software are not user friendly.

    Google transliteration is very much user friendly.

  6. April 16, 2010 12:29 pm

    முகுந்துக்கு வாழ்த்துகளும் நன்றியும்.

  7. April 16, 2010 1:21 pm

    வாழ்த்துக்கள்

  8. April 16, 2010 5:24 pm

    நான்கூட இதன் உதவிகொண்டுதான் எழுதுகின்றேன்.

    பலருக்கும் இதனை அறிமுகம் செய்து வைத்துள்ளேன்.

    எழுத எழுத்தை அறிமுகப்படுத்திய முகுந்தா வாழ்க!!!

  9. April 16, 2010 11:55 pm

    நானும் இ கலப்பை தன பயன்படுத்தி வந்தேன். இப்பொழுது உபுண்டு பயன்படுத்துவதால் firefox க்காக கூகுள் bookmarklet பயன்படுத்துகிறேன். இ கலப்பை உபுண்டுவிற்கு வரும் வரை 🙂 !
    http://code.google.com/p/t13n/

    • விபாகை permalink
      April 17, 2010 2:45 am

      இ-கலப்பை உபுண்டுவிலும் உள்ளது என்றே எண்ணுகிறேன்…

      முகுந்த்… சிறிது விளக்குங்களேன்.

      முகுந்த் – வாழ்த்துக்கள்.

  10. April 18, 2010 12:37 am

    ஹோ… வாழ்த்துக்கள் முகுந்த்… 2004லிருந்து இ-கலப்பையை நான் உபயோகிக்கிறேன்… மிக்க மிக்க நன்றி… விபரங்களுக்கு நன்றி உமா…

  11. April 19, 2010 9:48 am

    புதிய இ-கலப்பை செயலியை என் கணினியில் நிறுவி செயல்படுத்திப் பார்த்தேன். எளிதாகச் செயற்படுத்த முடிகிறது. இதனை நண்பர்களுக்கும் அறிமுகம் செய்வேன். தங்களுக்கு நன்றியும் பாராட்டும் உரித்தாகட்டும்.

  12. April 20, 2010 1:53 pm

    இந்த லிங்கை உடனடியாக பாருங்கள்

    http://bluehillstree.blogspot.com/2010/04/blog-post_17.html

  13. April 25, 2010 10:12 am

    திரு. முகுந்தராஜ், இதுவரை நான் Ekalappai 2ப் பயன்படுத்தி வருகிறேன்.இப்போது 0.3
    தரவிரக்கம் செய்து பயன்படுத்துவதற்கு 0.2இ நீக்கிவிட வேண்டுமா அல்லது அதுவே செய்துவிடுமா?
    0.3இ தரவிரக்கம் செய்த பின்னரே இடைப் பதிவு செய்கிறேன்.

    அன்புடன்,
    தணிகாசலம்

  14. April 25, 2010 10:54 am

    இடுகைக்கு நன்றி.

  15. April 25, 2010 10:59 am

    வாழ்த்துக்கள் முகுந்த்.

  16. April 25, 2010 11:13 am

    Upon installation giving error buddy.

  17. மாறா permalink
    April 26, 2010 3:04 pm

    உங்களிற்கு நன்றிகள் பல. புதிய இடுகைகள் வரும்போது எனக்கும் அறியத் தாருங்கள்.

  18. November 14, 2010 4:07 am

    வாழ்த்துக்கள் முகுந்!
    இதுவரை NHM பயன்படுத்தி வந்த நான் மீண்டும் புதிய எ-கலப்பையைப் பயன்படுத்திப்பார்க்கவிருக்கின்றேன்.

Trackbacks

  1. Tweets that mention இ-கலப்பை 3.0 – புதிய பரிமாணம் « விழியன் பக்கம் -- Topsy.com

Leave a reply to நிலா மகேன் Cancel reply