Skip to content

விளையாட விடுங்க மார்க்குக்கு நாங்க கேரண்டி

April 21, 2010

விளையாட விடுங்க

மார்க்குக்கு நாங்க கேரண்டி

– கு. செந்தமிழ்ச் செல்வன்

“என் குழந்தை நல்ல மார்க் எடுக்கணும். மாலையிலும் டியூசனுக்கு அனுப்பிடறோம். இல்லைன்னா விளையாடியே நேரத்தை வீணடிச்சிடுவான்”

அக்கறையுள்ள பெரும்பாலான அம்மாக்களின் அணுகுமுறை இது தான்.

“படி, படி, படி”

பள்ளியில் ஆசிரியர்களும்,

வீட்டில் பெற்றோர்களும்,

குழந்தைகளுக்கு இடும் ஒரே கட்டளை இது தான்.

குழந்தைகள் மீது பெற்றோர்களின் அன்பு அளவில்லாதது. “படி படி” என்பது அன்பின் வெளிப்பாடே. ஆனால் ஒரு குழந்தையின் உண்மையான தேவைகளை உணர்ந்து, அதனை அனுமதிப்பது எத்தனை பேர்.

தெருக்களில் குழந்தைகளின் ‘ஓ’வென சத்தம் எவ்வளவு இனிமையானது. விளையாட்டுகளுடன், வேடிக்கை காட்டும் குழந்தைகள் எவ்வளவு அழகானவர்கள். இக்காட்சிகளை எங்கே காண முடிகிறது.

இரண்டு குழந்தைகள் சந்தித்து கொண்டால் போடும் ஒப்பந்தம் விளையாட்டு தானே. பலவகை விளையாட்டுகளை அவர்கள் எங்கு, எப்படி கற்றுக் கொள்கிறார்கள். ஆசிரியரிடமிருந்தும், பெற்றோர்களிடமிருந்தும் எப்போதேனும் கிடைக்கும் சலுகை நேரங்களில், அவர்களின் விளையாட்டு சாம்ராஜ்யம் தான் விரிகிறது. குழந்தைப் பருவத்தின் பிரிக்க முடியாத இயல்பு விளையாட்டு. குழந்தைகளின் உரிமை விளையாட்டு, அதனைப் பறித்திடும் நாம் குற்றவாளிகள் தானே !!

விளையாட்டு, ஒரு குழந்தைக்கு தேவையான அடிப்படை ஒன்று, உடல்களைக்க விளையாட்டு அவர்களை உற்சாகமூட்டுகிறது, சுறுசுறுப்பாக்குகிறது. உணவை பெற்றோர் கண்டிப்பின்றியே உண்ணத் தூண்டுகிறது. ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது. ஏராளமானவற்றை கற்றுக் கொள்ள விளையாட்டு வழிவிடுகிறது. கணக்குகளை அறியவும், காரணகாரியங்களை அறியவும் பல விளையாட்டுகளில் உள்ளடக்கமாக உள்ளது. கற்பனைக்கும், ஆக்கபூர்வ சிந்தனைகளுக்கும் விளையாட்டு மேடை அமைக்கிறது.

நண்பர்களின் வலைபின்னலுக்கும் விளையாட்டு தானே அடிப்படையாக உள்ளது.

விளையாடுவதும், விளையாட்டை கற்பதம் இயல்பானது, இயற்கையானது. சக நண்பர்களிடமிருந்துதான் ஏராளமானவற்றை கற்றுக் கொள்கிறார்கள்.

இதனை உணர்ந்தே, பாரதியும் குழந்தைகளுக்கு சொல்லும் முதல் வாழ்த்தாக “ஓடி விளையாடு பாப்பா” என்று பாடினார். மாலை முழுவதும் விளையாடி வழக்கப்படுத்திக் கொள்ள பரிந்துரை செய்கிறார்.

பலவகை உள்ளரங்கு, வெளியரங்கு விளையாட்டுகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கம்யூட்டர் விளையாட்டுகளும் சிந்திக்க தூண்டுபவைகளே. ஆனால், அளவை மீறும் போது அது வெறித்தனமாகிவிடுகிறது. அப்போது , அதில் சிந்தனைகள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன.

பெற்றோர்களும் குழந்தைகளுடன் விளையாடுவது அவசியம்.

“அது சரி, ஆயிரக்கணக்கில் பீஸைக்கட்டி பள்ளிக்கு அனுப்புவது நாங்கள் விளையாடுவதற்கா?”

உங்களின் முணுமுணுப்பு கேட்கிறது.

குழந்தைகளோடு விளையாடுவது உங்களுக்கும் உற்சாகமளிக்கும், குழந்தைகளிடையே உங்களின் மதிப்பு உயரும். அவர்களின் நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் நீங்களும் இடம் பிடிக்கலாம். குழந்தைப் பருவத்தில் நீங்கள் இழந்ததை உங்களின் குழந்தைக்கள் மீட்டுத்தரட்டுமே.

இதன் அடுத்தப்பகுதி,”விளையாடாதே” எனும் போது, குழந்தைகளின் வெறுப்புக்கு ஆளாகிறோம். அவர்களை விட்டு விலகுகிறோம். அவர்களின் உரிமையினை பறித்த குற்ற உணர்வோடு நிற்கிறோம்.

“என்ன சொன்னாலும், குழந்தைகளின் வருங்காலம் என்பது அவர்களின் படிப்பு தானே, அவர்களின் மார்க்கு தானே அவர்களின் வாழ்வைத் தீர்மானிக்கின்றது” இது பெற்றோர்களின் அர்த்தமுள்ள அங்கலாய்ப்பு.

அர்த்தமுள்ள  ஒரு கேள்வியினையும் நாம் முன்வைப்போம்.

“விளையாட்டும் படிப்பும் எதிரெதிரானதா?”

“இல்லவே இல்லை”

விளையாட்டு குழந்தைகளின் மூளைகளை இயங்க வைக்கிறது. புதியவைகளை எளிதாக உள்வாங்கவும் பதிய வைக்கவும் பக்குவப்படுத்துகிறது. விளையாட்டில் ஆர்வமானவர்கள் படிப்பிலும் ஆர்வம் செலுத்துவார்கள் என்பது தான் பல ஆய்வுகளில் தெரிகின்றது. விளையாட்டு, சமூக சிந்தனை, சக மாணவர்களுடன் உறவு இவைகளெல்லாம் இல்லாமல் படிப்பை மட்டுமே பெறும் குழந்தைகள் உள்ளீடற்ற மனிதர்களாகவே வளருகின்றார்கள்.

போதிய விளையாட்டும், தேவையான படிப்பும் குழந்தைகள் சீராக வளர வழிவகுக்கும்.

குழந்தைகளோடு விளையாடுங்கள்.

குழந்தைகளை விளையாட விடுங்கள்

அவர்கள் மார்க்குக்கு நாங்க கேரண்டி

– கு. செந்தமிழ்ச் செல்வன்

இவரின் மகன் தான் விழியன் 🙂

Advertisements
13 Comments leave one →
 1. Jeevananthan permalink
  April 21, 2010 6:54 am

  உண்மையான உணர்வுகளை உருக்கி தந்தமைக்கு மிக்க ந்னறி

 2. April 21, 2010 8:57 am

  Unmai.. Hundred percent 🙂

  Nice post Vizhiyan.

 3. காந்தி ஜெகநாதன் permalink
  April 21, 2010 9:42 am

  Nice Article Vizhiyan – Shibu will really like this one! 🙂 I have allowed him to enjoy the two full months – April and May – at my in-laws place! You know what he was asking me once “ஏம்ம்ம்ம்மா…..ஹோம்வர்க் & எக்ஸாம் இல்லாத ஸ்கூலே கிடையாதா?” and I replied “இருடா….உங்க அம்மா அப்படி ஒரு ஸ்கூல தொடங்கறேன்!”. :-)) He did not stop with that! “ஏம்மா….அப்ராட் (abroad) போயிட்டா, தமிழ் படிக்க வேண்டாம்ல?” “இல்ல இல்ல….தாய்மொழி தமிழ் அதனால உலகத்தில எந்த மூலைக்கு போனாலும், தமிழ் கட்டாயம் படிக்கனும் மகனே” என்றுச் சொல்லி வைத்திருக்கிறேன்…!

  <<>>

  அப்போ எனக்கு கவலயே இல்லை விழியன்!!!!!!!!! :-))

 4. Elango permalink
  April 21, 2010 10:32 am

  mudiyala

 5. April 21, 2010 11:33 pm

  இது அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய விடயம் !
  நன்றி விழியன் & அப்பா !

 6. மயில் permalink
  April 22, 2010 3:18 am

  திரு.செந்தமிழ்ச் செல்வன் அவர்களை நினைத்தால் பெருமையாகவும், மகிழ்சியாகவும் உள்ளது.

  விளையாட்டின் முக்கியதுவத்தை பலர் புரியாதிருப்பது மனதிற்கு வேதனையை அளிக்கிறது. சமீப காலங்களாக தெருவில் குழந்தைகள் விளையாடுவது குறைந்து போனது போல் தோன்றுகிறது.

 7. April 22, 2010 11:02 am

  விழிய‌ன் ரொம்ப‌ விளையாண்டிருப்பிங்க‌ போல்ருக்கே‍:)

  ம‌திப்பெண்க‌ள் வாழ்க்கையின் ம‌திப்பீடுக‌ள் அல்ல‌ இதை எப்ப‌தான் ம‌திகெட்ட‌ பெற்றோர் புரிஞ்சுப்பாங்க‌ளோ

 8. April 24, 2010 1:27 pm

  good post!

  //குழந்தைகளோடு விளையாடுவது உங்களுக்கும் உற்சாகமளிக்கும், குழந்தைகளிடையே உங்களின் மதிப்பு உயரும். அவர்களின் நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் நீங்களும் இடம் பிடிக்கலாம். குழந்தைப் பருவத்தில் நீங்கள் இழந்ததை உங்களின் குழந்தைக்கள் மீட்டுத்தரட்டுமே.//

  arumai!! 🙂 very true!

 9. தமிழார்வன் permalink
  April 24, 2010 1:43 pm

  குழந்தைகளின் சுமைகளை சுருக்கென பெற்றோர்களுக்கு புரிய வைத்த உமக்கும் நும் தந்தைக்கும் வாழ்த்துக்கள் …

 10. April 25, 2010 4:59 am

  அருமையான பதிவு. மன்னிக்கவும். ஆர்வக்கோளாறால் தங்களின் அனுமதி பெறாமலே பேரண்ட்ஸ் கிளப் வலைப்பக்கத்தில் மீள்பதிவு செய்து விட்டேன்.என் தவறை மன்னிக்கும் படி வேண்டுகிறேன். நன்றி!

  • April 27, 2010 4:21 pm

   எல்லோரும் வாசிக்க தானே பதிவுகள். மிக்க நன்றி. சுட்டியினை பகிர்ந்தால் மகிழ்ச்சி

 11. April 26, 2010 9:11 am

  அருமை!பூங்கொத்து!

 12. April 27, 2010 4:22 pm

  பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி
  – கு.செந்தமிழ்ச் செல்வன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: