Skip to content

பதிப்புக் காப்புரிமை சிறப்புக் கருத்தரங்க குறிப்புகள்

April 27, 2010

உலக புத்தக & காப்புரிமை தின நிகழ்வு:

 பதிப்புக் காப்புரிமை சிறப்புக் கருத்தரங்க குறிப்புகள்.

– இடம் : தேவநேய பாவாணர் அரங்கம்.
– நாள்   : 22 ஏப்ரல் 2010
– நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை & புத்தகம் பேசுது.
– நிகழ்ச்சி சரியாக 6.00 மணிக்கு துவங்கியதே இதன் சிறப்பு
– இந்த நிகழ்ச்சிக்கு செல்ல முக்கிய காரணம் ஆயிஷா என்னும் அற்புத குறுநாவலை எழுதிய இரா.நடராசனை சந்திக்க தான்.
– அரங்கை நுழைந்ததும் வெகு சிலரே அரங்கில் இருந்தது கவலைக்கு உள்ளாக்கியது.
– நிகழ்வை தமிழ்நாடு அரசு பொதுநூலகக்துறையும் புத்தகம் பேசுடு இதழும் இணைந்து நடந்தியது.
– பபாசியின் தலைவர் சேது. சொக்கலிங்கம் வரவேற்புரை வழங்கினார்.
– உலக புத்தக தினத்தின் விழிப்புணர்வு தற்போது தான் அதிகரித்து வருகின்றது, என்ன நிகழ்வுகள் நடக்கின்றது என பத்திரிக்கையாளர்கள் தங்களை அழைப்பதாக தெரிவித்தார்.
– நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியது இரா.நடராசன்.
– பதிப்புக்காப்புரிமையும் நூலகமும் என்ற தலைப்பில் நா. ஆவுடையப்பன் உரை நிகழ்த்தினார். பதிப்புக்காப்புரிமை சட்டம் இந்தியாவில் இந்த சட்டம் எப்படி வந்தது, எந்த ஆண்டுகளில் எந்த மாற்றங்கள் வந்தது என குறிப்பிட்டார். ஒரு நூலகர் தெரிந்து வைத்திருக்க வேண்டிய காப்புரிமை சட்டங்களை விவரித்தார். எந்த சந்தர்பங்களில் காப்புரிமை செல்லாது எனவும் குறிப்பிட்டார்.
 
ஞாநி பேச்சு:
எழுத்தாளர் ஞாநி படைப்பாளியும் காப்புரிமையும் என்ற தலைப்பில் பேசினார். ” எப்படி அக்ஷயதிருதி போஸ்டர்கள் ஒட்டாமல் எங்கும் கொண்டாடப்படுகின்றதோ அதே போல உலக புத்தக தினமும் கொண்டாடப்பட வேண்டும். தமிழகத்தில் படைப்பாளிக்கு கிடைக்கும் ராயல்டி மிக குறைவு. சராசரியாக 10% தான் கொடுக்கப்படுகின்றது. சில பதிப்பகங்களில் இதை வாங்குவது கூட சிரமமாக இருக்கின்றது.”
தனக்கு நேர்ந்த சில அனுபவங்களையும் பகிர்ந்தார்.
“கிழக்கு பதிப்பகத்தில் 10% ராயல்டி கொடுத்தார்கள், ஆனால் அதே புத்தகத்தை வாங்கி விற்றால் 30% தள்ளுபடி கொடுத்தார்கள், ஒரு எழுத்தாளன், விற்பனையாளராக மாற்ற உந்தப்படுகின்றான். இதில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. வாழ்கையில் மிகப்பெரிய அதிர்ச்சி எனக்கு ஆனந்தவிகடன் கொடுத்த 6.5% ராயல்டி தான். அத்தனை பெரிய நிறுவனமே 6.5% தரும் போது சின்ன நிறுவனங்கள் 5% ராயல்டி தந்தால், முழுநேர எழுத்தாளனின் நிலைமை என்னாவது?”
சில சட்ட சிக்கல்கள் காப்புரிமையில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். ” ஒரு எழுத்தாளன், பதிப்பு நிறுவனம் ஒன்றின் கீழ் வேலை செய்யும் போது, அவன் எழுதும் எந்த படைப்பின் காப்புரிமையும் அந்த
பதிப்பு நிறுவனத்திற்கே செல்லும், படைப்பாளிக்கு செல்லாது. இதில் மிகவும் அடிபட்டவர் அமரர் தேவன். அவரின் புகழ்பெற்ற தொடர்கள் எல்லாம் புத்தமாக போடாத நிலையிலேயே வெகு காலம் இருந்தது. எஸ்.எஸ் வாசன் அவரின் முதலாளியாக இருந்தார். தேவன் இறந்த பிறகே அவரின் படைப்புகள் புத்தகமாக வெளிவந்தது”.
– “படைப்பாளிகளில் மிகவும் காப்புரிமைகளில் பாதிக்கப்படுவது ஓவியர்கள் தான். எடுத்துக்காட்டாக, தீம்தரிகிடதாவிற்கு வரைந்த பாரதியின் ஓவியம் எல்லா இடங்களிலும் எந்த அனுமதி இன்றி பயன்படுத்தப்படுகின்றது. ஒருவர் மீது வழக்கு தொடுக்கலாம், இருவர் மீது வழக்கு தொடுக்கலாம், ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு தொடுக்க முடியுமா?”
– இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தார்
1. படைப்பாளிகளுக்கு குறைந்தபட்ச சன்மானத்தொகையினை அரசு நிர்ணயிக்க வேண்டும்.
2. படைப்பாளி – பதிப்பகத்தார் இருவருக்கும் பயிலரங்கத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.
 
இரா.நடராசன் பேச்சு:
– மொழிபெயர்ப்பும் காப்புரிமையும் என்ற கட்டுரையினை அழகாக வாசித்தார்.
– காப்புரிமை பற்றிய கட்டுரை தொகுப்பு மே 7 வெளியிடப்படுகின்றதாம்.
– காப்புரிமைகளில் உள்ள அரசியலை தரவுகளோடு தந்தார்.
– மொழிபெயர்பில் உள்ள காப்புரிமை பிரச்சனைகளை தந்தார்.
– சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற தமிழரின் கட்டுரையினை மொழிபெயர்க்கும் உரிமையை வெங்கட்டிடம் வாங்கினாலும், அமெரிக்க மற்றும் பிரட்டனிடம் உரிமையினை வாங்க முடியாத சிக்கலில் உள்ளதாம்.
– சில வாசகர்கள் சொந்த விருப்பில் மொழிபெயர்ப்பு செய்வதை எழுத்தாளர்கள் பாராட்டுவார்கள், இதில் எந்த சட்ட சிக்கலும் இருப்பதில்லை.
 
இரா.நடராசன் பேசிய பின்னர் காந்தி கண்ணதாசன் உரை நிகழ்த்தினார். பதிப்பகமும் பதிப்புரிமையும் என்ற தலைப்பில் பேசினார்.
 
புத்தகம் பேசுது நாகராஜன் நன்றியுரை ஆற்றினார். அவர் தான் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்.

விழியன்
https://vizhiyan.wordpress.com

Advertisements
No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: