Skip to content

சுஜாதா விருதுகள் 2010 விழா – குறிப்புகள்

May 7, 2010

மே 3 திங்கட்கிழமை மாலை ஆறு மணி முதல் இரவு 9 மணி வரை சுஜாதா அறக்கட்டளை & உயிர்மை இணைந்து நடந்த்திய சுஜாதா விருதுகள் 2010 விழா இனிக்க இனிக்க நடந்தேறியது. விழாவில் நடந்தவை நினைவில் இருப்பவை குறிப்புகளாக..

– விழாவிற்கு கிளம்பும்போது சுஜாதாவின் பரம பரம விசிறி என் இனிய தம்பி முத்தலிப்பிடம் இருந்து ஒரு மடல். “சுஜாதா அம்மா கிட்ட என் அன்பை தெரிவிக்கவும், அவர் கணவனால் தான் நான் B.E. படிச்சேன்னு சொல்லுஙக”.

– விழா அழைப்பிதழில் வாஸந்தி பெயர் பார்த்ததும் நிச்சயம் சென்று அவர்களை பார்க்கவேண்டும் என தோன்றியது. சுமார் 1.5 ஆண்டுகளாகிவிட்டது சந்தித்து. நிச்சயம் திட்டு விழும் என தெரியும் 🙂

– தேவநேயர் பாவாணர் அரங்கலில் பத்து நாளில், இது மூன்றாவது நிக்ழவு ( உலக புத்தக தினத்திற்காக புத்தகம் பேசியது நடந்த்திய கருத்தரங்கம் & திரிசக்தியும் 12 நூல் வெளியீடு)

– மின்சாரம் இல்லாததால் மின்விசிறிகள் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. நிகழ்ச்சி ஆரம்பித்தும் இடையில் சில நிமிடங்கள் மின் தடை ஏற்பட்டு விழா தாமதமானது.

– அழைப்பிதழில் இருந்த அனைத்து பிரமுகர்களையும் மேடைக்கு அழைத்தனர். முறையாக இந்திரா பார்த்தசாரதி, ஞானகூத்தன், வாஸந்தி, பேராசிரியர் ஞானசம்பந்தன், சாரு, தமிழச்சி தங்கபாண்டியன், இயக்குனர் பாலுமகேந்திரா, இயக்குனர் ரா.பார்த்தீபன் அமர்ந்திருந்தனர்.

– நிச்சயம் மனுஷ்யபுத்திரனை பாராட்டாமல் இருக்க முடியாது. அவர் செய்யும் இந்த பணி நிச்சயம் பாராட்டத்தக்கது. மறைந்த ஒரு நண்பருக்கு அவர் காட்டும் அன்பு மெய்சிலிர்க்க வைக்கின்றது. சுஜாதா எங்கே ஒரு நல்ல எழுத்தாளனை பார்த்தாலும் அவனை உடனே அடையாளம் கண்டு, அடையாளமாக மாற்றி வந்தவர், அந்த பாங்கினை தன் வசம் எடுத்து அந்த பணியினை சீரும் சிறப்புமாக செய்துவருகின்றார்.

– வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளார்களுக்கும் பாராடுகள். பட்டியல் இதோ

– மேடையில் தாமதமாக இணைந்து கொண்டார் தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராசன். தாமதமாக வந்தமைக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டார். நீண்ட நேரம் பேசினார்.

– அனைத்து பேச்சாளர்களும் சுஜாதாவுடனான தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டது தென்றல் வருடுவது போல இருந்தது. தாங்கள் தான் அவரிடம் நீண்ட நாட்கள் நட்பு கொண்டாடினார்கள் என ஒவ்வொருவரும் போட்டி போட்டார்கள்.

– பார்தீபன் தன் வழக்கமான பாணியில் பேசினார். பணிவில்லாத வணக்கத்துடன் துவங்கினார். பணிவுடன் இருந்தால் நெருக்கம் இருக்காது என்றார். என் பள்ளிக்காலத்தில் சரவணன் என்றொரு நண்பன் உண்டு, அவன் ஒருமுறை “Not Bad Morning Miss” என்றான், அதுவும் குட் மானிங்குக்கு சமம் தானே என வாதாடினான். ஆனால் அன்றைய தினம் முழுக்க வகுப்புக்கு வெளியே நின்றது தனிக்கதை. பார்த்தீபன் அப்படி பேசியது சரவணன் தான் நினைவிற்கு வந்தான்.

– சாரு ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பேசினார். பாரதிக்கு பிறகு மாபெரும் எழுத்தாளன் சுஜாதா என்றார். மக்கள் அங்கீகாரம் மட்டும் போதாது என்றார். அது எல்லா பாவலா என்றார். மற்ற நாடுகளில் எழுத்தாளர்களை எப்படி கொண்டாடுகின்றார்கள் என தனது வழக்கமான பேச்சுகளை தொடர்ந்தார். “கனவுத்தொழிற்சாலை” பற்றி சிலாகித்து பேசினார். அந்த காலத்தில் வெளிவந்த சுஜாதாவின் புத்தகங்கள் மிகவும் மோசமாக (ப்ரிண்ட் & பேப்பர்) உள்ளதாகவும், அவரின் அனைத்து புத்தகங்களையும் ஒரே பதிப்பகம் உரிமை பெற்று மீண்டும் அச்சில் கொண்டு வரவேண்டும் என்றார். விருதுகள் பற்றியும் அவற்றில் இருக்கும் அரசியம் பற்றி குறிப்பிட்டார்.  மற்ற மொழியில் தமிழுக்கு இருக்கும் மரியாதையினை கூறினார். அப்துல் கலாமிற்கு எதுவும் தெரியாது என்பதை போலவும் பேசினார். அதாவது மற்ற துறை வல்லுனர்களுக்கு இலக்கியம் பற்றி தெரியாதாம். ஒவ்வொரு விவாதத்திலும் தன்னை முன்னிலை பற்றியே பேசினார் என்பது கொஞ்சம் யோசித்தாலே புரிந்துவிடும்.

– சுஜாதாவின் ஆளுமை பற்றி ஒவ்வொரு பேசும் பொழுதும் அவரை பற்றிய மதிப்பு வளர்ந்துகொண்டே சென்றது. அவரின் ஆளுமையினை அவரின் எழுத்துக்களில் மட்டும் பார்த்தவர்களுக்கு, இவை அனைத்தும் கூடுதல் செய்திகள். சுஜாதா ஒரு தீவிர வாசகர், உலக அரங்கில் வெளிவரும் சில எழுத்து பாணிகளை தமிழுக்கு அறிமுகம் செய்துவைத்தவர். இவர் தொடாத எழுத்து துறையே இல்லை.

– வாஸந்தி குறிப்பிட்ட “Personal life is to cherish” என்று சுஜாதா சொல்லும் வாசகம் நினைவில் நின்றது. தன் சொந்த வாழ்கை பற்றி எழுத்துக்களில் எங்கும் கருத்திட்டு இருக்கமட்டார் சுஜாதா.

– இயக்குனர் பாலு மகேந்திரா முன்னொரு கூட்டத்தில் சுஜாதா பற்றி பேசிய போது தொண்டை வரண்டு, குரல் தழுதழுத்ததாக கேள்விப்பட்டதுண்டு. அவரே தன் பேச்சில் சுஜாதாவுடனான நெருக்கமான நினைவுகள் நான் அசைபோட போவதில்லை என்றார். சுஜாதா ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர். அதனால் அடுத்த ஆண்டு முதல் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். சுஜாதாவின் சில சிறுகதைகள், படைப்புகளை குறும்படம், படமாக எடுக்க திட்டமுள்ளதாக தெரிவித்தார்.

– அரங்கமே குலுங்கி குலுங்கி சிரித்து ரசித்தது பேராசிரியர் கு.ஞானசம்பந்தனத்தின் பேச்சில் தான். அபாரமான திறமை. சுஜாதாவின் அத்தனை துறைகளை பற்றியும் பேசினார். என்ன நினைவாற்றல். அத்தனை ஆழமாக பதிந்திருக்கின்றது. அவருடனான நெருக்கம், பேட்டிகள், சேட்டைகள், கேள்வி பதில்கள் என மனுஷன் அலுக்காமல் பேசிக்கொண்டிருந்தார். கேட்பவருக்கும் அலுக்கவில்லை. கடைசியாக பேசியதால் சீக்கிரம் முடித்துவிடுவார், நிகழ்ச்சி முடியப்போகின்றது என இருந்தவர்களுக்கு விருந்து படைத்தார்.

– நடுவில் வந்து நடுவிலே சென்றார் இணைய நண்பர் அஷிதா. சாருவின் பேச்சை ரொம்ப சுவாரஸ்யமாக ரசித்தார். மனம் விட்டு சிரித்தார்.

– தமிழச்சி தங்கபாண்டியன் சுருக்கமாகவும், பல்வேறு வாசகம்/கவிதைகளுடன் தன் உரையினை சிறப்பித்தார்.

– இணைய எழுத்தாளர்கள் நிறையபேர் அரங்கில் குழுமி இருந்தார்கள். சிலர் – கேபிள் சங்கர், நந்தவனம் சூர்யா, அகநாழிகை பொன். வாசுதேவன், அபிலாஷ், அதிஷா, இளம் இயக்குனர் இளங்கோ – மற்றவர்கள் முகங்கள் தெரிந்தாலும் பெயர்கள் தெரியவில்லை.

– நன்றியுரை நிகழ்த்திய சுஜாதா அம்மாவின் பேச்சு, உள்ளத்தில் இருந்து நேரடையாக வந்த வார்த்தைகள். பெருமிதமாக பேசினார். என் கணவர் இருந்த போது அவரை சுற்றி புத்தகம் இருக்கும், இப்போது என்னை சுற்றி புத்தகங்கள் இருக்கு, இது தான் அவர் விட்டுச்சென்ற பரிசு என ஆனந்தமாக கூறினார். அடுத்த வருடமும் இதே போல திரண்டு வந்து நிகழ்ச்சியினையும் புதிய கலைஞர்களையும் வாழ்த்துமாறு கேட்டுக்கொண்டர்.

– புத்தகம் பேசுது நாகராஜனிடம் சில மணித்துளிகள் செலவிட்டேன். காப்புரிமை பற்றிய கட்டுரை தொகுப்பு சற்று தாமதமாவதாக தெரிவித்தார். மே 8ஆம் தேதி வெளிவருவதாக இருந்தது.

– விழா முடிந்ததும் வாஸந்தியை சந்தித்ததும் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. அடையாளம் கண்டு கொண்டு, ரொம்ப இளச்சிட்டீங்க.குட் என்றார்கள் (கேட்டுக்கங்க…). பெங்களூரில் இருந்த போதே குழந்தைகள் நாவல் பற்றி பேசி இருந்தேன். சென்ற ஆண்டு வெளி வந்த என்னுடைய நாவலை அவர்களுக்கு பரிசாக அளித்தேன். மிகவும் மகிழ்ந்தார்.

(போனஸ் செய்தி)

(வாஸந்தி அவர்கள், என் கேரக்டரை மையமாக வைத்து ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர் ஒன்று கவிதா பதிப்பதகத்தால் புத்தகமாக வெளிவந்து இருக்கின்றதாம்)

Advertisements
18 Comments leave one →
 1. May 7, 2010 5:09 am

  Good.. 🙂

 2. May 7, 2010 5:13 am

  ரமேஷ் பிரதேன் என்றா தற்போது பெயர் வைத்திருக்கிறார்! அது பழைய ரமேஷ் பிரேம் தானே!

 3. May 7, 2010 5:19 am

  அவரே தான் இவர். ரமேஷ் – பிரேம் என்பது இருவர்.

 4. நடராஜன் கல்பட்டு permalink
  May 7, 2010 5:36 am

  நிகழ்ச்சியினை அருமையாக அளித்துள்ளீர்கள்.

 5. முத்தலிப் permalink
  May 7, 2010 5:40 am

  இன்னும் கொஞ்சம் விரிவா எழுதுங்களேன்… இது போதாது…

  • May 7, 2010 6:15 am

   உனக்கு வீடியோ காட்சி தான் போடணும். 🙂

 6. May 7, 2010 5:40 am

  அருமையான தொகுப்பு . சாருவின் பேச்சை நினைக்கையில் இப்போவும் சிரிப்பு வருது . நன்றி :)))))

  • May 7, 2010 6:16 am

   இது எந்த வகையான சிரிப்பு என தெரிவிக்கவும் 🙂

 7. May 7, 2010 6:19 am

  அழகான நடை. அருமையான தொகுப்பு..

  பகிர்விற்கு நன்றி நண்பா.

 8. May 7, 2010 6:32 am

  நல்ல தொகுப்பு. என்னைப் போன்ற வெளியூர் வாசிகளுக்கு உங்களை மாதிரி யாராவது எழுதினால்தான் தெரிய வரும். வாழ்த்துகள்.

  அனுஜன்யா

 9. வாணி permalink
  May 7, 2010 9:19 am

  நல்ல கட்டுரை

 10. May 10, 2010 2:51 am

  விழா துளிகள் பகிர்விற்கு நன்றி விழியன். சிறு கேள்வி, பேச்சில் அப்துல் கலாம் எதற்காக உள்ளே இழுக்கப்பட்டார்?

  • May 10, 2010 3:30 am

   சாருவின் வாதம் – மற்ற துறை வல்லுனர்களிடம் தான் இலக்கிய பரிசுகளுக்கான பரிந்துரை கேட்கப்படுகின்றது. அப்படி பேசும் போது கலாம் உள்ளே வந்தா.

 11. பாலாஜி (மேம்) permalink
  May 20, 2010 8:59 am

  என் ‘வாத்தியார்’ சம்பந்தமான எந்த விசயமானாலும்
  தேடி படிப்பேன்!

  உங்கள் பதிவு மனதுக்கு இதம். நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: