Skip to content

சிலிர்ப்பு

May 9, 2010

சிலிர்ப்பு

கட்டுரை ஒன்றினை வாசிக்கும் போது மிகவும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆங்கிலத்தில் இருந்த கட்டுரையின் சிறு பகுதியினை உங்களோடு பகிர்கின்றேன். பார்வை இழந்தோருக்கான பள்ளியில் ஆங்கிலம் கற்றுத்தரும் ஆசிரியராக , இந்த கட்டுரையின் ஆசிரியர் பணி புரிகின்றார்.

” இங்க படிச்ச மாணவர்கள் உலகத்தின் சிறந்த பல்கலைகழகங்களில் படிக்கிறார்கள். சிலர் உலக அளவிலான செஸ் மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

என் வகுப்பில சுமார் 20 மாணவர்கள் இருந்தாங்க. பதினேழில் இருந்து இருபத்தி மூனு வயதுடையவர்கள். எல்லோரும் ஆந்திர கிராமப்புறத்தில் இருந்து வந்தவர்கள். வாழ்கையை ரொம்ப ரசிக்கிறவங்க. அவ்வளவு சந்தோஷம் கொண்டாட்டம் இருக்கும். அவர்களுக்கு நான் ஆங்கிலம் கற்று தர வேண்டும். ஆரம்ப கால கட்டத்தில் பார்வையற்ற மாணவர்களுக்கு கற்று தருவது சிரமாக இருந்தது. வழக்கமா சொல்வது போல “இங்க பாருங்க..” “என்னை பாருங்க” அப்படின்னு சொல்லி ரொம்ப சிரமப்பட்டதுண்டு. சொல்லிட்டு நாக்கை கடித்து கொள்வேன். ஆனாலும் அவர்களை தலையை கீழ தொங்கவிட்டு என்னை கவனிக்கும் போது சமநிலைக்கு வந்திடுவேன். கொஞ்சம் கொஞ்சமா அந்த வார்த்தைகளை குறைத்து நிறுத்திவிட்டுட்டேன்.

குழந்தைகளை சமாளிக்கவே முடியாது. மொத்த சக்தியும் போயிடும். ஆனாலும் ஒரு மனநிறைவு கிடைக்கும். என் வகுப்பில் யாரேனும் பதில் சொன்னால், அனனவரையும் கை தட்ட வைப்பேன். அவர்களுக்கு அது ரொம்ப பிடிக்கும், இன்னும் சிறப்பா செய்ய நிறைய முயற்சி செய்வாங்க. என்னுடைய வகுப்பு ஒரு மணி நேரம் தான், ஆனா குழந்தைகள் அந்த ஒரு மணி நேரத்தில் நான் இல்லாத போது நடந்தவைகளை எல்லாம் பகிர்வார்கள். அவர்களையும் நான் ஏதும் கட்டுப்படுத்துவதில்லை. முறை செய்யப்பட்ட பாடங்களில் என்ன கற்றுக்கொள்ள முடியும்?

என்னுடைய தனிப்பட்ட வெற்றி என்பது சாட்டி பாபு என்கின்ற மாணவனுடன் நிகழ்ந்தது. அவனை ஒரு முறை கேள்வி கேட்டபோது, அவன் கைகளை கட்டிக்கொண்டு நின்றான். நான் நின்று கொண்டிருக்கும் திசைக்கு நேரெதிர் திசை நோக்கி தன் முகத்தை வைத்துக்கொண்டிருந்தான். அவனிடம் நெருங்கி சென்ற போது தான் அதை கவனித்தேன். அவனுடைய அழகான விரலகள் தாளம்போட்டுக்கொண்டிருந்தன பயத்தில்.அவனை தொட்டபோது அவன் உடல்முழுதும் குலுங்குவதை உணர்ந்தேன். அவன் வீட்டில் மிகுந்த தொல்லைக்கு ஆளாகி இருக்க வேண்டும். மனதளவில் நொருங்கி இருந்தான். அவனை மெல்ல தழுவியபடி, அன்புடன் மீண்டும் கேள்வியினை கேட்டேன். மெல்ல மெல்ல அவனும் தத்தி தத்தி பதிலினை சொன்னனன், வகுப்பு முழுதும் பலத்தை கரவோசை எழுப்பியது, அவன் முகத்தில் புன்னகை. இப்போதெல்லாம் அவன் தெளிவாகிவிட்டான், நடுக்கம் நின்றுவிட்டது..”

நன்றி  (The Vision of Blind – Shyamola Khanna)

Advertisements
6 Comments leave one →
 1. May 9, 2010 7:07 pm

  நல்ல பதிவு விழியன் !!
  /* வழக்கமா சொல்வது போல “இங்க பாருங்க..” “என்னை பாருங்க” அப்படின்னு சொல்லி ரொம்ப சிரமப்பட்டதுண்டு */
  நாம் அவர்களின் உலகத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்பதை எடுத்து உரைத்தது !

 2. Velvizhi permalink
  May 10, 2010 2:18 am

  Good one

 3. வாணி permalink
  May 10, 2010 4:58 am

  நல்ல கட்டுரை

  :)))

 4. elango permalink
  May 11, 2010 5:05 am

  @ NICE ONE @

 5. Thiagu permalink
  May 12, 2010 2:33 am

  That is one of the satisfying things about becoming teacher which no other profession can give. Even the richest man on the earth or the greatest software engineer in the world can never feel what the teacher felt. Will keep these things in mind as I have started teaching now (as a teaching assistant). More of us should share this fun of teaching, right??

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: