Skip to content

இனிக்கும் விருந்தில் கசக்கும் உண்மைகள்

May 25, 2010

இனிக்கும் விருந்தில் கசக்கும் உண்மைகள்  

– செ.குணசுந்தரி & கு. செந்தமிழ்ச் செல்வன்


    “நேரமாச்சி, சாப்பிட்டு புறப்படலாம் வாங்க”
 மணமக்களை வாழ்த்திவிட்டு,சேகரும் செல்வியும் விருந்து சாப்பிட விரைந்தனர்.  உணவருந்த காத்திருக்க நேர்ந்தது.  ஊர் பிரமுகர் வீட்டுத்திருமணம்,கூட்டம் அலை மோதியது.
    “ரசித்து சாப்பிட விடராங்களா?பின்னாலேயே நின்னுகிராங்க!”
    “வீட்டிலதான் தினம் சோறு தின்றையே, மற்ற அயிட்டம்லா சாப்பிடு”.
    “வைச்ச ஸ்விட்டும் போண்டாவும் விடலயா? கட்டுப்பாடே கிடையாது உங்களுக்கு”
பல காட்சிகளை ரசித்துக் கொண்டே நின்றிருந்தனர்.
    “சாப்பிட்டீங்களா என்று விசாரிக்கக் கூட ஆளில்லையே” காத்திருப்பின் கடுகடுப்பில் செல்வி.
    “எல்லாத்தையும் காண்டிராக்குக்கு விட்டுடராங்க . யார்வந்தா என்ன, போனா என்ன? அவங்களுக்கு ‘இலை’ கணக்குத்தான்”.  சேகரின் சொற்பொழ்வு ஆரம்பமாகிவிட்டது.
சாப்பிட்டவர்கள் நகரத் தொடங்கினார்கள். அடுத்த பந்திக்கு இடம் பிடித்து சேகரும் செல்வியும் அமர்ந்தனர்.  இலைகள் எடுக்கப் படவில்லை, சுத்தம் செய்யப்படவில்லை.  ஆனாலும், இடம் பிடிப்பதில் கூட்டம் தீவிரமாக இருந்தது.

 சாப்பிட்ட இலைகளிள் மீது செல்வியின் பார்வை சென்றது.  இலைகளில் சிதறிக் கிடந்த உணவுகள், பரிமாறியதில் பாதிக்கு மேல் வீணாவதைப் பார்த்து வேதனையுற்றாள்.
    எதற்கெடுத்தாலும் புலம்புவாரே, கண்ணேதிரே இப்படி அழிவதைப் பார்த்தால் நான்தான் செய்தது போல என்னிடம் கத்துவாரே”
    சேகரைப் பற்றிய அச்சத்துடன் செல்வி திரும்பினாள்.  மனைவி குழைந்தைகள் எல்லோரும் எழுந்து விட்டாலும் ஒருவர் மட்டும் பொருமையாக சாப்பிடுவதை சேகர் ரசித்துக் கொண்டிருந்தார்.
    “நமக்காக நாம் சாப்பிடறோம், பொறுமையாகவே சாப்பிடுங்க”. வீணாக்காமல் சாப்பிடுவதாகக் கருதி சேகர் தானாகவே ஆஜரானார். ஆனால், கொஞ்ச நேரத்த்திலேயே அதற்காக வருந்த நேர்ந்தது. அவரை உற்று நோக்கிய சேகர் அதிர்ந்து போனார்.  ஐய்கிரீமைத்தான் அவர் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  சேகரின் அதிர்ச்சி ஐய்கிரிமில் இல்லை, அவரது இலையில் தான். பிரியாணி, காய்கள், சப்பாத்தி,  சாம்பார் பிசைந்த பாதிசாதம், தயிர் சாதம் இப்படி பலவும் அவர் இலையில் அப்படியே கிடந்தன.  இத்தனை வீணானாலும் ஐய்கிரீமை மட்டுமே விட  மனமில்லை போலும்.  தான் சாப்பிட கற்றதையே, தன் குடும்பத்தார்கும் கற்பித்துள்ளார் என்பதை அவர்களின்  துவங்கினார்கள். பார்பதற்கே வேதனையளித்த இலைக்களை  உணவிற்காக தத்தளிக்கும் அந்த வேலையாட்கள் எப்படித்தான் எடுக்கிறார்களோ? மறத்துப் போயிருப்பார்களோ?

 செல்வியின் அச்சம் நிஜமானது . சேகரால் அடக்க முடியாமல், புலம்ப ஆரம்பித்துவிட்டார்.இலைகளை எடுத்து ,மேசையை சுத்தம் செய்து மீண்டும் இலைகளை போட்டு பரிமாறும் வரை  கிடைத்த நேரத்தில்  கொட்டி தீர்த்து விட்டார். செல்விக்கு சங்கடமாகவும், சுற்றி இருந்த்தவர்களுக்கு பொழுது போக்காகவும் இருந்தது.

    “விருந்து என்ற பெயரில் இத்தனை கூத்தா?  செல்வாக்கை காட்ட இலையில் வைக்கும் ஐடத்தில் தானா போட்டி! வீணாக்கும் அளவுதான் தாங்கள் திருப்தியாக விருந்தளித்ததற்கான குறியிடாகக் கருதுகிறார்கள்.   விருந்தினர்களுக்கு பழக்கமே படாத உணவைப் போடுவதில் பெருமிதம் கொள்கிறார்கள்.

    “கல்யாண சமையல் சாதம்.  காய்கறிகளும் பிரமாதம்” என்று சினிமா பாட்டுகூட உண்டு.  பிரமாதமான காய்கறிகளோ, பழங்களோ இடம் பிடிப்பதில்லை.  ஸ்வீட்டும், எண்ணெய் பொருட்களும் ஆக்கரிமித்து விடுகின்றன.  இதனாலும் கூடுதலாக சாப்பிட முடிவதில்லை.
    விருந்தினர்களும் இவ்வளவு போதுமென்று சொல்வதில்லை பல நேரங்களில், முதலிலேயே பரிமாறி வைத்துவிடுவதால் அவர்களுக்கு வாய்ப்பும் இருப்பதில்லை.
    இன்னும் 2 கோடி பேர் இரவு வெறும் வயிற்றுடன் படுக்க செல்லும் நமது நாட்டில், இவர்கள் மட்டும் பொருட்களை வீணாக்க உரிமை யார் கொடுத்தது. உற்பத்தி செய்த விவசாயியை சிந்தித்தோமா? “உலகிற்கு உண்டி கொடுக்கும்  பெருமையும் இல்லாமல் போவதால்,அவர்களை அவமானம்தானே செய்கிறோம்.

 செல்விக்கு அவரின் உணர்வுகள் புரியாமலில்லை.புலம்பலால் சாதிக்க ஏதுமில்லை என்பதாலும், கோபத்தோடு சாப்பிட வேண்டாம் என்பதற்காகவும் சேகரை சமாதானப்படுத்தினாள். சேகரின் புலம்பல் உண்மையானது என்பதை மிச்சமின்றி வழித்து உண்ட அவரின் இலை சாட்சி கூறும்.
நியாயங்களை  உரக்க ஒலைக்க முடியாமல் அதற்கான மாற்று கூறமுடியாமல் போகும் போது எத்தனகைய நியாயங்களும் புலம்பலாகத்தான் போய்விடுகிறது தானே !!
இந்த புலம்பலிலிருந்து நாம் நியாங்களை தேடுவோமா?

திருமணம் மட்டுமின்றி, பல நிகழ்வுகளில் இப்படி உணவுகள் வீணடிக்கப்படிவதாக எப்படித் தடுப்பது?
இது கலாச்சாரத்திற்கு எதிரான போராட்டமா?

விருந்து அளிப்பவர் செலவு செய்தாலும், வீணடிக்கப்படுவது நாட்டின் உணவு.
இதனை சட்டரீதியாக  தடுக்க முடியுமா?

ஒரு விருந்தில் பரிமாறப்படும் உணவுப்பொருட்களை வரையறுக்க முடியுமா?
பரிமாறப்படும் முறையில் எந்த மாற்றத்தின் மூலம் தனக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ள முடியும்?

ஒரு விருந்தில் கலந்து கொள்பவரின் எண்ணிக்கையை வரையறுப்பது முடியுமா?

இருப்பவர்கள் செலவு செய்வதாலும், இல்லாதவர்கள் மீதும் திணிக்கப்படுகிறது அல்லவா?
“விருந்து உணவிற்கு” சரியான அர்த்தம் கூறமுடியுமா?

– செ. குணசுந்தரி & கு. செந்தமிழ்ச் செல்வன்

Advertisements
13 Comments leave one →
 1. Vijayalakshmi permalink
  May 25, 2010 5:17 pm

  Mikka arumai! Idhu oru vagaiyil nam naatirku seyyum sevai endru ninaikkiraen… ennaal mundindhavarai pinpatrugiraen.., en nanbargal vattarathilum theriyappaduthugiraen… eduththu chonnadharku nandri!

 2. Vijayalakshmi permalink
  May 25, 2010 5:27 pm

  ellorukkum idhu pol thondruvadhillai!
  thondrubavargal pagirndhu kolvadhillai!
  namakkenna endru ninaippavar yaeraalam!
  nammaal edhaavadhu mudiyuma endru yosippavar oru silar mattume!
  nammaal nichayam edhaavadhu seiyya mudiyum endru ninippavar aayirathil oruvar!

  mudiyuma endru yosikkum ennai pol oruvaraal nichayam edhavadhu seiyya mudiyum endru ninaikka vaithamaikku mikka nandri…:)

 3. May 26, 2010 4:55 am

  அருமை. …… என் வாழ்த்துக்களை அம்மாவிடம் சொல்லுங்கள் உமா

 4. May 26, 2010 5:51 am

  மிகத் தேவையான இடுகை.. அற்புதமாய் சொல்லி இருக்கீங்க..

  எனக்குத் தெரிந்து பாகிஸ்தான் நாட்டில் திருமண விருந்திற்கு கட்டுப்பாடு உண்டு. நம் நாட்டில் திருமணம் என்பது மற்றவர்களின் முன் தனது கௌரவத்தை வெளிக்காட்டும் ஒன்றாகத்தான் வெளிப்படுத்தப்படுகிறது. இதில் விருந்து என்ற பெயரில் நாகரீகமும் கொண்டாட்டமும் மிக அதிகப்படியானதே..

  தங்களின் மனக்குமுறல் மற்றும் ஆதங்கங்களில் எனக்கு முழு உடன்பாடு உள்ளது.

  திருமணக்காலங்களில் ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லங்களிற்கும் உணவு ஏற்பாடு செய்து அனுப்பி வைத்து தானும் பகிர்ந்துண்ணல் என்ற கொள்கையும் அவர்களின் ஆசிர்வாதங்களுமே புதுமணத்தம்பதியினருக்கு தேவையான ஒன்றாகக் கருதப்பட வேண்டும்.

  – சென்ஷி

 5. May 26, 2010 11:30 am

  ம்ம்ம் நல்லதொரு இடுகை, எனக்குத் தெரிஞ்சு நான் கல்யாணங்களுக்குப் போனால் தேவைக்கு மேல் வாங்கிக்கொள்வதில்லை. கூடிய வரை இலையில் போட்ட உணவை வீண் பண்ணுவதும் இல்லை. இது தெரியாமல் இலை சாப்பிட்டதும் காலியாய் இருப்பதைப் பார்த்துக் கேலி செய்பவர்கள் இப்போதும் உண்டு. என்றாலும் லக்ஷியம் செய்வதில்லை. இதை ஒரு கொள்கையாகவே கடைப்பிடிக்கிறேன். வேண்டாம்னு சொல்லியும் அவங்க உபசாரம் பண்ணிப் போட்டால் அதைச் சாப்பிட முடியாமல் வேறு வழியில்லாமல் ஒதுக்குவதும் உண்டு. 😦 மன வேதனையுடன் தான்.

 6. May 26, 2010 11:31 am

  இந்த ஒருநாள் கூத்து எல்லார் குடும்பத்திலும் சகஜமாயிட்டது. வீணாக்காமல் சாப்பிடுவது எப்படின்னு பெரிய விளக்கமே கொடுத்தாலும் …நம்ம மக்கள் மாறப் போறது இல்லை. கொஞ்சம் கவனிச்சு பாருங்க ..இந்த மாதிரி விருந்தில் மொத்தம் எத்தனை பேர் கையை கழுவிட்டு வந்து ( அதற்கான இடம் சென்று) சாப்பிடுறாங்கன்னு பாருங்க :)) ..அவங்கள வேணும்னா நாம திருத்திடலாம். இதெல்லாம் நம்ம சமூகத்தில சகஜம்ங்க :))) . பந்தியில் போய் சாப்பிட வேண்டாம் பாத்தாலே இன்னும் பல பதிவுகள் போடலாம் ..நானும் என் அனுபவத்தை எழுத டிரை பண்ணுறேன் .. படம் சூப்பர் தம்பி!

 7. elango permalink
  May 26, 2010 11:50 am

  I Agree !!!!

  Good

 8. Jawahar permalink
  May 26, 2010 3:15 pm

  சென்ஷி சொல்வது மிகச்சிறந்த யோசனை.

  உண்மையில் அஷோக் லெய்லண்ட் ஹோசூரில் இந்த வேலையைச் செய்தோம். மிஞ்சிய உணவு அனாதை விடுதிக்கும், வீணாக்கப்பட்டது மாட்டுப்பண்ணைக்கும் போகும்.

  கல்யாணங்களில் பஃபே முறையில் உணவு தந்தால் அங்கே மீறும் உணவை அனாதை விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பலாம்.

  http://kgjawarlal.wordpress.com

 9. May 26, 2010 4:19 pm

  a very true and insightful post thalai!

  I agree with you.. thats what I had been following the principle of “NOT WASTING” the food right from my childhood!! and I do insist my colleagues in office whomever I happen to see wasting the food. Some relief is that atleast due to my compulsion, the rate of wastage has reduced 🙂

 10. May 27, 2010 5:50 am

  அறத்துப்பால் – இல்லறவியல் – விருந்தோம்பல் அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியதை நன்கு உணர்ந்திருந்தால் இன் நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இன் நாளில் பெரும் பாலும் யார் வருகிறார் என்பதை பொறுத்தே பணிவிடைகளும் நடக்கின்றன. இதில் குறிப்பாக :

  உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
  மடமை மடவார்கண் உண்டு.

  இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
  துணைத்துணை வேள்விப் பயன்

  ராம்ஜி

 11. June 8, 2010 12:19 pm

  அனைத்தும் உண்மையான உண்மை….
  மறுக்க முடியாத, மறக்கக் கூடாத உண்மை…
  மேலே வாசிக்கும் முன் யோசிக்க வைக்கிறது ஒவ்வொரு வரியும்….

 12. June 14, 2010 11:52 am

  அருமையான பதிவு விழியன்.

  நடைபெறும் அனைத்து திருமணங்களிலும் உணவு வீணடிக்கப்படுவது மறுக்க முடியாத உண்மை. ஆனால் விருந்தளிப்பவர்களை மட்டுமே குறை கூற முடியாது. ஆடம்பரமான திருமணங்களாகட்டும் எளிமையான திருமணங்களாகட்டும் உணவு வீணடிக்கப்படுவது எதிலும் விதிவிலகல்ல. உணவு விணாக்குவதில் பெரும் பங்கு விருந்தினர்களுக்குதான். விருந்துண்பவர்களில் குறைந்தது 75 சதவீதம் பேராவது உணவை வீணடிக்கின்றனர். அந்த 75 சதவீதனரும் தங்கள் வீட்டில் இதெப்போல் உணவை வீண் செய்பவர்களா? நிச்சயமாக இருக்க முடியாது. எவனோ ஒருத்தன் விருந்து வைக்குறான் நம்மக்கு என்ன போச்சு என்று எண்ணவில்லை என்றாலும் மானப்போக்கு என்னவோ அப்படித்தான் உள்ளது. இதில் ஆண் பெண் வித்தியாசம் கிடையாது, எல்லோரிடமும் இதே போன்ற மனநிலைதான் உலவுகிறது. இது கண்டிப்பாக தனி மனித ஒழுக்கம் சார்ந்து அணுகப்படவேண்டிய பிரச்சணையாக நான் கருதுகிறேன்.

  – நவீன்

  • June 16, 2010 3:58 am

   சரியா சொன்னீங்க நவீன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: