Skip to content

புதிதாய் வேலை தேடுபவர்களுக்கு – 1

June 8, 2010

புதிதாய் வேலை தேடுபவர்களுக்கு – 1

சென்ற வருடம் கல்லூரிகளைவிட்டு வெளியேறியவர்களின் நிலை மிகுந்த சங்கடங்கத்தில் இருந்தது. ஐ.டி. தொழிற்சாலையே சோ வென வெறிச்சோடி இருந்தது. இந்த வருடம் நிலைமை அப்படி இல்லை. கல்லூரி விட்டு வெளியேறும் இளசுகளை லபக் என லாவகமா கவ்விச் செல்ல காத்திருக்கின்றன நிறுவனங்கள். எங்கள் நிறுவனத்தில் நடைபெறும் “அனுபவமில்லாதோர்” தேர்விற்கு நிறைய தகுதிகுறிப்புகள் வந்திருந்தன. இதனை கண்டபோது தான் எப்படி வேலை தேடுவது என பதிவெழுத வேண்டும் என்ற ஆவல் (கடுப்பு என்றும் சொல்லாம்) எழுந்தது. அதில் முதலில் “எப்படி ரெஸ்யூமை  நிறுவனத்திற்கு அனுப்புவது” என்பதை பற்றி எழுதுகிறேன்.
Reumse
புதிதாய் வேலை தேடுபவர்களின் தகுதிகுறிப்பை Resume என்பதை விட Curiculum Vitae என குறிப்பிடுவது தான் சரியான சொல். ஆனால் வழக்கத்தில் இரண்டும் மாறி மாறி பயன்படுத்தப்படுகின்றது. இதற்கும் Bio -Data விற்கும் கூட நிறைய வித்யாசங்கள் உள்ளது. மூன்றும் ஒன்றே என்பதை போல தோற்றமளித்தாலும் அனைத்து வேறு வேறு.

எனக்கு வந்த தகுதிகுறிப்புகளில் இருந்த தவறுகளை இங்கே முதலில் சுட்டிக்காட்டி ஆரம்பிக்கின்றேன்.

1. மடலை கவனி :
நிறுவனத்திற்கு உங்கள் தற்குறிப்பினை அனுப்பும் போது, கவர் லெட்டர் மிக முக்கியமான ஒன்று.

அ) அதில் அந்த நிறுவனத்தில் யார் இந்த தேர்வினை / நேர்முகத்தை நடத்த உள்ளார்களோ அவர்களுக்கு விண்ணப்பியுங்கள்.

ஆ) பொருள் (Body) மிக அவசியம். உங்கள் விளம்பரத்தை அங்கு பார்த்தேன், இது தான் என் தகுதி, இங்கு படித்து இத்தனை மதிப்பெண் பெற்றுள்ளேன். விண்ணப்பத்தை ஏற்று ஆவன செய்யவும் என மடலிட வேண்டும். கெஞ்சவும் கூடாது.
இ) ஒரு நிறுவனத்திற்கோ / நபருக்கோ அனுப்பிய மடலினை அப்படியே முன்னனுப்பாதீர்கள் (Forward). அப்படியே அனுப்பினாலும் யாருக்கு விண்ணப்பிக்கின்றீர்கள் என்பதை கவனிக்கவும், மடல் தலைப்பில் (Fwd:) என்பதை அழிக்கவும். ஜிமெயிலில் இதனை பார்த்து செய்யவும். வழக்கமாக முன்னனுப்புவதை தவிர்ப்பது நலம்.

2. மடலின் தலைப்பு:

Subject Line மிக அவசியம். வெறும் Resume என்று தலைப்பிடுவது வரவேற்க்கத்தக்கது அல்ல. சில நிறுவனங்கள் குறிப்பிட்ட வரிகளை குறிப்பிட்டு தலைப்பில் போடுங்கள் என பரிந்துரைப்பார்கள். வழக்கமான பரிந்துரை “Fresher- {Name} – {Dept} – {Percentage}”. சில மடல்கள் தலைப்பேதும் இல்லாமலும் வருவதுண்டு.

3. அது என்ன முகவரி?
வேலை தேட முயல்வோர், மடலிடும் முகவரியினை நல்ல/ ஒழுக்கமான முகவரியாக வைத்திருத்தல் நலம். அது நேர்முகம் செய்வோரிடம் நன்மதிப்பை ஏற்படுத்தும். பல முகவரிகள் படிக்க கூட கடினமாக இருக்கும். girlscatchthisromeo, salemruler, mickey12345, இப்படி கண்டமேனிக்கு முகவரி வைப்பதை தவரித்து உங்கள் பெயர் umanath, அத்துடன் சில எண்கள் umanath80, அல்லது முழுபெயர் umanathselvan, umanath_selvan, தேவைப்படுமாயின் ஒரு எழுத்தை அதிகம் சேர்த்தல் umanaths, umanath.s. இப்படி வைப்பது எப்போதும் சிறந்தது.

4. எப்படி இருக்க வேண்டும் கோப்பு
வழக்கமாக எல்லா நிறுவனங்களும் .doc வடிவிலேயே தகுதிகுறிப்பினை பெற விரும்புவார்கள். தேவையான தரவுகளை வெட்டி ஒட்டவும் பயன்படும். அதுமட்டுமில்லாமல் இந்த வடிவினை திறக்க அனைத்து நிறுவனத்திலும் அனைத்து பயனாளரிடமும் மென்பொருள் நிச்சயம் இருக்கும். பி.டி.எப் வடிவிலும் தகுதிகுறிப்புகளை அனுப்பலாம், ஆனால் அவை ஸ்கேன் காப்பியாக இருப்பதை தவரித்தல் நலம். .Docx வடிவில் அனுப்புவதை தவர்க்கவும். பல நிறுவனங்களில் இதை திறக்க மென்பொருள் இல்லாமல் போக வாய்ப்பு இருக்கின்றது. புகைப்படங்களை தகுதிக்குறிப்பில் ஒட்டும் போது தெளிவான படங்களை ஒட்டவும்.

5. கோப்பின் பெயர்:
கோப்பினை பெயரிடுவதிலும் ஒரு ஒழுக்கம் கடைபிடித்தல் நலம். முன்னரே குறிப்பிட்டது போல வெறும் Resume.doc என பெயரிட வேண்டாம். உங்கள் முழு பெயரினை கோப்பின் பெயராக வைக்கவும். ஏனெனில் உங்கள் தகுதிக்குறிப்பினை சேமிக்கும் போது இது வசதியாக இருக்கும். நிறைய கோப்புகள் Resume1.doc , Resume_July.doc, Umanath_Final.doc, என்பது போல வருகின்றன. இவற்றை தவரிக்கலாம்.

5. மீண்டும் சரிபார்க்கவும்

தலைப்பு, மடல், முகவரி, கோப்பு வலையேற்றமாகிவிட்டதா என அனைத்தையும் சரிபார்த்து, பிறகே “போ” என்று அழுத்தவும் 🙂

இந்த குறிப்புகளின் அவசியம் என்ன? புதிதாய் விண்ணப்பிப்போர் தற்போது லட்சக்கணக்கில் இருக்கின்றார்கள். உங்களுக்கு தகுதி இருந்தாலும், இதில் எங்கேனும் தேர்வு செய்பவருக்கு பிடிக்கவில்லை என்றாலோ, சின்ன தவறு நிகழ்ந்தாலோ உங்கள் தகுதிகுறிப்பு அடுத்த நிலைக்கே போகாது. Recruiters also need some reason for filtering. Don’t take Chances.

Handshake

(இன்னும் தகுதிகுறிப்பிற்குள் செல்லவில்லை. அடுத்த பதிவில் தகுதிகுறிப்பிற்குள் போகலாம்)

– விழியன்

Advertisements
20 Comments leave one →
 1. Velvizhi permalink
  June 8, 2010 1:09 pm

  Highly useful info for freshers…Thanks for sharing..

 2. Sathish Rajamani permalink
  June 8, 2010 1:48 pm

  Excellant Article Umanath
  You are 100% true in what ever you have mentioned. This is NOT just applicable for FRESHERS. It is equally applicable for experienced professionals who are applying for a Job.
  Do continue this Series of Blog.
  Cheers
  Sathish R

  • June 8, 2010 4:44 pm

   கண்டிப்பாக தொடர்கிறேன் சதீஷ்.

 3. udhayan permalink
  June 8, 2010 1:48 pm

  thanks for sharing

 4. June 8, 2010 2:11 pm

  மனிதவளத்துறையை சார்ந்தவன் என்ற முறையில் 3, 4, 5 வது யுக்திகளை பெரிதும் பாராட்டுகிறேன். மிக மிக அவசியமானவை இவை. எனது நேர்முகத்தேர்வு பயிலரங்கத்தில் இவற்றை மாணவர்கள் மனதில் ஆழப்பதிக்கும் வகையில் வேடிக்கையாக சில விளையாட்டுகளை நடத்தி இந்தக் கருத்துக்களை நாம் விளக்குவதுண்டு. வாழ்த்துக்கள் தம்பி.!

  • June 8, 2010 4:45 pm

   நன்றி ராமா. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.

 5. முத்தலிப் permalink
  June 8, 2010 2:38 pm

  Excellent post. One of my friend was in love with a girl. Her name is Gayathri. He had mail id like gay_3_hisname@yahoo.com.

  Indha kodumaya ennannu poi solradhu. After knowing the meaning of the word, he felt lot of shame shame puppy shame…

  • June 8, 2010 4:46 pm

   இன்னும் பல கொடுமைகள் நடக்கின்றது தம்பி..

 6. Sashidharan permalink
  June 9, 2010 2:44 am

  good job

 7. வாணி permalink
  June 9, 2010 4:47 am

  அருமையான பதிவு அண்ணா

  :))

 8. June 9, 2010 5:08 am

  வணக்கம் அண்ணன்…

  எப்படி இருக்கீங்க? இங்கு அனைவரும் நலம்… 🙂

  அண்ணன் பதிவு கலக்கல்…

  அப்புறம் உங்க பதிகளை தமிழிஷ் & தமிழ்மணத்தில் பார்க்க முடியல… அங்கே பப்ளிஷ் பண்ண வில்லையா?

  உங்களின் அனுமதியுடன் உங்க தள லிங்கை என்னோட நண்பர்களுக்கு அனுப்பி கொள்ளலாமா?

  நல்லது அண்ணன்….

  என்றும் உங்கள்
  அருண் பிரசங்கி

 9. Vijayalakshmi permalink
  June 9, 2010 5:20 am

  Kandippaaga therindhukolla vaendiyadhu! Padithathodu pogaamal pinpattravum seiyungal freshers….! 🙂

  -Viji

 10. June 9, 2010 5:59 am

  பயனுள்ள பதிவு.

  தொடரவும்.

  • June 9, 2010 12:26 pm

   நன்றி அண்ணா. நிச்சயமாக.

Trackbacks

 1. புதிதாய் வேலை தேடுபவர்களுக்கு – 2 « விழியன் பக்கம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: