Skip to content

Meter Jamமாம்..

August 12, 2010

வீட்டிலிருந்து பேருந்து நிலையம் வரை செல்ல ஐம்பது ரூபாய் ஆனால் பேருந்து நிலையத்தில் இருந்து வேலூருக்கு செல்ல நாற்பத்தைந்து ரூபாய் தான் என காலையில் அலுத்துக்கொண்டாள் அம்மா.  பேருந்தில் செல்வதற்கு குறைந்த கட்டணம், ஆனால் ஆட்டோவில் சிறிது தூரம் பயணிக்கவும் அதிக காசு.

இன்று ஆகஸ்ட் 12ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடக்கின்றதாம். எதற்கு தெரியுமா? ஆட்டோக்கள் மற்றும் டேக்ஸிக்களை இன்று புறக்கணிக்க வேண்டுமாம்.
http://www.meterjam.com/

“Because strikes need a strike back!  We’re tired of meter that always reads more than it should, drivers who refuse to ply and demand return fare whenever they want. And if all that wasn’t enough, now we have to deal with strikes too, any time the ‘unions’ decide!
Everyone is holding the janta to ransom. How much more will we pay? It’s time to turn the tables.
So on 12th August, shake your head and say NO if an auto driver offers a ride!”

என சொல்கிறது அந்த தளம்

ஆட்டோக்காரர்கள் அடாவடியாக தான் இருக்கின்றார்கள். ஆனால் ஏன் அவர்கள் அப்படி இருக்கின்றார்கள் என்பதை ஆராய்ந்தால் விஷயத்தை அறிய உதவும்.

எரிபொருள் விலை:
தினமும் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகின்றது. அதற்கு பலி தினம் தினம் வருந்தும் ஆட்டோகாரர்களும் வலியோரும் தான். ஒவ்வொரு உயர்விலும் தங்கள் தினசரி வாழ்கை பாதிக்கப்படுகின்றது என்பது கசக்கும் உண்மை. இதற்கு அவர்கள் என்ன செய்வார்கள்? அதனை எதிர்க்க தான் அவர்கள் போராடுகின்றார்கள், ஸ்டிரைக் செய்கின்றார்கள். அந்த போராட்டமானது அவர்களுக்கு மட்டுமானது அல்ல, நமக்கு சேர்த்து தான். கேள்வி கேட்க நாதி இல்லாத நமக்குமானது தானே?

சாலைகள்:
இந்த இடத்திற்கு போக வேண்டும் என்கிறோம். இல்லை சார் சவாரி அந்தப்பக்கம் வராது என்கிறார்கள் என குற்றச்சாட்டு. சாலைகள் சரியாக இல்லாமல் இருப்பதனால் தயங்குகின்றார்கள், தங்கள் வாகனம் நாசமாகின்றது என அஞ்சுகின்றார்கள். நியாயம் தானே. ஏன் சாலைகள் ஒழுங்காக இல்லை என நாம் என்றேனும் கேட்டிருக்கின்றோமா? தேர்தல்கள் வந்தால் சாலைகள் சீரமையும். அதுவும் தரமான சாலையாக இருக்கின்றதா? பெய்யும் மழைக்கு அடித்து சென்று விடுகின்றன. ஆட்டோகாரர்களுக்கு வருமானத்தில் உயர்வு உண்டா? ஆரோக்கியம் இருக்கும் வரை தான் வாழ்வு.

மாமூல்கள்
பல ஆட்டோகாரர்களிடம் பேசியதில் இருந்து தெரிந்து கொண்டது. என்ன தான் வாகனத்தின் அனைத்து சான்றிதழ்களை வைத்துக்கொண்டிருந்தாலும் தினம் தினம் போலிஸ்காரர்கள் வாகனத்தை மடக்கி பிடுங்கும் மாமுல் தொல்லையால் தங்கள் வருமானத்திற்கு பங்கம் விளைகின்றது. அவர்கள் தொல்லைகள் இல்லாமல் இருந்தால் நாங்கள் ஏன் சார் நிறைய வாங்க போகின்றோம் என்கின்றார்கள். முரண்டு பிடித்தால் ஏதேனும் எழுதி சார்ஜ் ஷீட் போட்டு விடுகின்றார்கள்.

மீட்டர்கள் இல்லை
சென்னையில் சில வருடம் முன்னர் ஆட்டோக்களில் கட்டாயமாக மீட்டர்கள் வைக்க வேண்டும் என்று ஆணை பிறந்தது. வந்த புதியதில் பல ஆட்டோக்களில் டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்டது என்னவோ உண்மை தான். அந்த நாட்களில் ஆட்டோக்களில் பயணித்த போது ஆட்டோகாரர்கள் சொன்னது, என்ன ஆணை பிறப்பித்தாலும் சென்னையில் இது நடைமுறைக்கு வராது சார், இது ஒரு அரசியல் ஸ்டண்ட் என்றனர் பல ஆட்டோகாரர்கள். காரணம் சென்னையில் ஓடும் பாதிக்கும் மேற்பட்ட ஆட்டோக்களின் சொந்தக்காரர்கள் போலிஸ்காரர்கள். இது நடைமுறைக்கு வந்தால் தங்கள் வருமானம் குறைந்துவிடும் (ஆட்டோ மற்றும் மாமுல் மூலம்) என நிச்சயம் போலிஸ்காரர்களே எப்படியாச்சும் இதை நடைமுறைக்கு கொண்டு வராமல் செய்திடுவாங்க பாருங்க. அதே தான் நடந்தது என்பது வருத்தமான உண்மை.

கூட்டம் நிறைந்த பேருந்தில் கால் மிதிக்கப்பட்டால் மிதித்தவனை கடிந்து கொள்வோம், நியாயமா கூட்டமாக பேருந்து ஏன் இருக்கு? இவ்வளவு மக்கள் பயணிக்கின்றார்கள் என அதிகமான பேருந்து விட வேண்டியது யார், நகரில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கின்றது அதை Decentralize செய்ய வேண்டியது யார்? யார் மீது கோபம் வர வேண்டும்? அதே நிலை தான் இங்கும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வசதி செய்ய வேண்டியது யார் கடமை. நகரில் எல்லா இடத்திற்கும் செல்ல பேருந்து விடவேண்டியது யாருடைய கடமை? அதுவும் போதிய பேருந்துகள்.

ஆனாலும், ஆட்டோகாரர்கள் எங்கு கூப்பிட்டாலும் வருவதில்லை, அதிகமாக கட்டணம் கேட்கின்றார்கள் என்பது நியாயமான கோரிக்கை தான். ஆனால் அவர்கள் ஸ்டிரைக் செய்கின்றார்கள், நாமும் அவர்களுக்கு ஸ்டிரைக் செய்வோம் என்பது எப்படி நியாயமாமும்? அதே சமயம் அவர்களுக்கு இருக்கும் இடர்களையும் நாம் அறியவேண்டும். அந்த இடர்களை களைவதில் நமக்கும் ஏராளமான பங்கு இருக்கின்றது. பல இடர்களில் நாமும் சிக்கி தவிக்கிறோம். இது சிக்கலான ஒரு பிரச்சனை. நேரடியாக அணுகுவதில் சிக்கல்கள் நிறைய இருக்கின்றது. ஏரியில் பெரிய ஓட்டை இருக்கு அதை விட்டுட்டு சின்ன ஓட்டைக்கு கூப்பாடு வேண்டாம் என்பதே சாராம்சம்.

கால் டேக்ஸிக்களில் எந்த பிரச்சனையும் இருப்பததாக தெரியவில்லை, இதனையும் ஏன் போராட்டத்தில் சேர்த்துக்கொண்டார்கள் தெரியவில்லை. வெளி மாநிலங்களில் நிலைமை வேறாக இருக்கலாம் ஒரு வேளை.

– விழியன்

One Comment leave one →
  1. koteeswaran permalink
    August 12, 2010 5:10 am

    Compared to other cities in india(whereever i have roamed),chennai auto drive is costly..ther is no fixed price or minimum price.in gujrat if i travel (in ahmedabad) 12-15 Km, i have to pay Rs 90-110…just compare this with chennai..u may end up anywhere between 200 to 300.Sorry to say,when i discuss this issue with some of auto drivers,one thing is sure..they r pretty confident that every auto driver will charge the same rate,so passenger has no option…apart from scolding and travelling.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: