Skip to content

Vizhiyan Photography – Night

August 13, 2010

நேற்று இரவு வானில் வான வேடிக்கைகள் நிகழும் என மோகனாவின் கட்டுரையினை படித்துவிட்டு, இரவு எட்டு மணியில் இருந்து 12 மணி வரை மொட்டை மாடியில் காத்துக்கொண்டிருந்தேன். மேகங்கள் சூழ்ந்து பாதி நேரம் நட்சத்திரங்களை கூட காண முடியாத அளவு தடுத்திருந்தது. அப்பா பத்து மணிக்கு வந்து, இன்று இரவு செவ்வாய், வெள்ளி, சனி ஆகியவை முக்கோண வடிவில் வானில் தெரிகிறதாம் என சொல்லிவிட்டு அலைபேசியில் ஏதோ கூட்டம் பற்றி பேசி சென்றுவிட்டார்.

இரவில் வானை பார்ப்பது அற்புதமான அனுபவமாக இருந்தது. (அம்மணி ஊரில் இல்லாததால் இடையிடையே எந்த பணியும் கட்டளையும் வரவில்லை) KP இங்கிலாந்திலிருந்து அழைத்திருந்தான். சுமார் 1 மணி நேரம் மொக்கை போட்டான். நீண்ட வருடங்கள் கழித்து விபாகை அழைத்திருந்தார்.

முதல் படத்தில் காணப்படும் ஓடுகள் நம் சாதாரண கண்களில் இரவு பார்க்கும் போது இருந்த இடம் மட்டுமே தெரியாது, ஆனால் கேமரா கண்களில் வித்யாசமாக தெரியும். ஷட்டரை சுமார் 13 விநாடிகள் திறந்து வைத்ததால் நிறைய ஒளிகளை சேகரித்து இம்மாதிரி தெரிகின்றது.

(The first picture is to show the difference between a normal eye vision and a camera vision. The image was clicked with exposure of 13 secs and it gathered sufficient light)

1. ஓடுகள்

2. மொட்டைமாடியில் மயக்கம்

3. போரூர் – Porur

4. வெளிச்சப்பாதை

5. இனிய இல்லம்  (Sweet Home)

6. சன்னலின் அலறல் (Scream of Window)

7. மாலையின் மந்திரம் (Evening’s Magic)

– விழியன்

ஆகஸ்ட் 25 வரை இரவின் வான வேடிக்கை நடக்குமாம்.

இன்று இரவு.. வானில் ..வாண வேடிக்கை..!

இன்று இரவு வானை 10 மணிக்கு மேல் பாருங்கள். வானம் பட்டாசு கொளுத்தி, நம்மையெல்லாம் மகிழ்விக்கப் போகிறது. அந்த வண்ணப் பட்டாசின் பெயர்தான் பெர்சியாய்டு விண்கற்கள் பொழிவு (Perseid meteor shower).இதனை நாம் அனைவரும் வெறும் கண்ணாலேயே , எந்த வித கருவிகளும், இன்றி பார்க்கலாம்.இது நீண்ட காலமாக, கடந்த 2000ஆண்டுகளாய் மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இரவு வானில் வடகிழக்கே பெர்சியஸ் விண்மீன் தொகுதி தெரியும் பூமி தன சுற்றுப் பாதையில் செல்லும்போது ஸ்விப்ட் டர்ட்டில் என்ற வால்மீன் விட்டுச் சென்ற தூசி வழியாக கடக்கும். ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும் நம் பூமி வானில் வடகிழக்கில் தெரியும் பெர்சியஸ் விண்மீன் தொகுதி வழியே வலம் வரும்.. இது இந்த காலகட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல்தான், பெர்சியஸ் விண்மீன் தொகுதி வானில் தெரியும் . இதிலிருந்து இந்த விண்கற்கள் பொழிவு தெரிவதால் இது பெர்சியாய்டு விண்கற்கள் பொழிவு எனறே அழைக்கப் படுகிறது. அந்த விண்மீன் தொகுதியிலிருந்து அனைத்து திசைகளுக்கும். விண்கற்கள் தீபாவளி மத்தாப்பூ போல, பல வண்ணங்களில் எரிந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் பூமியை நோக்கி விழும். ஆனால் அவை பூமியைத் தொடுவதற்குள் எரிந்துசாம்பலாகிவிடும்.

(செய்தி : மோகனா )

Advertisements
14 Comments leave one →
 1. Velvizhi permalink
  August 13, 2010 5:14 am

  Awesome pics – Special mention to oodugal and malaiyin mandhiram

 2. August 13, 2010 5:17 am

  சூப்பர். அருமையான புகைப்படங்கள் உமா.

  மோகனாவிற்கு நன்றி.

  சென்னை அடிக்கடி வராங்க.. ஒரு மீட் போடலாம் உமா.

 3. வாணி permalink
  August 13, 2010 5:27 am

  அண்ணா உங்க படங்கள் எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கு

  :))

 4. வாணி permalink
  August 13, 2010 5:31 am

  முதல் ஓடு படம் செம கலக்கல் !!

 5. August 13, 2010 5:36 am

  எல்லா படமும் சூப்பரா இருந்தாலும் கடைசி படம் கலக்கல் அண்ணா…

 6. வாணி permalink
  August 13, 2010 5:46 am

  விண்கற்களோட பொழிவையும் படம் எடுத்துபோடுங்க அண்ணா

 7. senthil kumar-logica permalink
  August 13, 2010 6:00 am

  Vizhiyan Vizhigalil(eyes-camera) chennai kooda azhakuthaan..

 8. vijay kannan permalink
  August 13, 2010 6:01 am

  Nice one uma. i would suggest to add water mark signature in all ur photos

 9. August 13, 2010 6:38 am

  எல்லாமே அசத்தலா இருக்குது உமா… ரொம்பப் பிடிச்சது சன்னலின் அலறல்.. உமாவுக்கு உம்ம்ம்ம்ம்மா கொடுக்கணும் போல இருக்குது. அம்புட்டு அழகு.. அந்த வெளிச்சப்பாதையும் கலக்கல்

 10. August 13, 2010 9:48 am

  எல்லா படமும் வழக்கம் போல அட்டகாசமா இருக்கு உமா…

 11. முத்தலிப் permalink
  August 13, 2010 12:19 pm

  super news… super fotos

 12. August 13, 2010 1:35 pm

  முதல் படம் சூப்பர்… 🙂

 13. August 13, 2010 2:15 pm

  சொல்லத்தான் வேண்டுமா..! 🙂

 14. CVR permalink
  August 13, 2010 2:50 pm

  Inspiring

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: