Skip to content

வரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…

September 7, 2010

பூச்சரம் தொடுக்க அழைத்த உயிர் தோழன் நிலாரசிகனுக்கு நன்றி

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

விழியன்.

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால்
பதிவில்  தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயர் உமாநாத். எழுத ஆரம்பித்த காலத்தில் ஒரு புனைப்பெயர் வைத்துக்கொள்ளலாம் என யோசித்த போது அம்மா பரிந்துரைத்த பெயர் தான் விழியன். என் மனதிலும் அதே போன்ற பெயர் இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. பின்னாளில் புனைப்பெயரின் அவசியமின்மை புரிந்தது🙂 விழியன் பெயர் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பிக்கும் முன்னரே வைத்தாகிவிட்டது.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?
Blog என்ற சொல்லை அறிமுகப்படுத்தியது முத்துகிருஷ்ணன் என்ற நண்பன். பின்னர் தமிழில் வலைப்பூ ஆரம்பிக்க ஊக்குவித்தது சித்தார்த். (anguningum.wordpress.com)

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம்  செய்தீர்கள்?

என் எல்லா பதிவுகளையும் நண்பர்களுடன் பகிர்வேன். மற்ற படி ஏதும் பிரத்தியேகமாக செய்ததில்லை.

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா?   ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன?   இல்லை என்றால் ஏன்?

பயணங்கள் தான் என் உற்சாக டானிக். ஆகவே ஒவ்வொரு பயணத்தின் அனுபவத்தையும் பதிவு செய்வது வழக்கம். ஆனால் சொந்த விஷயத்தை பகிர்ந்ததால் எந்த பாதிப்பும் நிகழவில்லை.

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள்  மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இரண்டும் அல்ல.

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்  பதிவு?

ஒரே ஒரு வலைப்பூ மட்டுமே. புகைப்படங்களை ஒரே வலைப்பூவில் சேகரிக்கும் எண்ணத்தில் ஒரு வலைப்பூ தொடங்கினேன் ஆனால் தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை.

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம்  என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

யார் மீதும் கோபம் இல்லை, ஆனால் எல்லோர் மீது நிறைய அன்பு உண்டு.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

முதல் பாராட்டை விட, நினைவில் நின்ற பாராட்டு என் முன்னாள் கம்பெனியின் (Bluestar Infotech) CEO ரகு சொன்ன வார்த்தைகள் தான். “உன் எழுத்துக்களை படித்ததும், காலையில் பல் துளக்கியதும் கிடைக்கும் Freshnessஐ  உணர்கின்றேன்” என்றார்.

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.

என்னைப்பற்றி சிறப்பாக கூற ஏதுமில்லை. என் வலைப்பூவே என் பிம்பம்.

பூச்சரத்தில்  மேலும்  வாசம் சேர்க்க நான் அழைப்பது அக்கா ஷைலஜா

– விழியன்

One Comment leave one →
  1. G.Sundaram permalink
    September 8, 2010 2:25 am

    Solli therivathillai ungalai patri..
    Ungal pugai padam sollum ungalai patri…

    Vala valthukkal..
    Anbudal,
    G.Sundaram.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: