Skip to content

பகிர்வு (08/09/2010)

September 8, 2010

தொடர் பயணங்கள் உற்சாகத்தை கொடுக்கின்றன. தூத்துக்குடி, பாளயங்கோட்டை, திருச்செந்தூர் மற்றும் ஊட்டி.  ஒவ்வொரு ஊரிலும் , பயணத்திலும் நிறைய அனுபவங்கள். குழலி ஒத்துழைப்பதால் அனைத்தும் சாத்தியமாகின்றது. இன்று இரவும் நரேஷ் திருமணத்திற்கு மேட்டூர் பயணம். அடுத்த இரண்டு வாரங்கள் பெங்களூர் பயணம். முடிந்தளவு நண்பர்களை சந்திக்க வேண்டும்.

*-*-*-*-*-

சென்னையில் வீடு வாங்கியாச்சு. அய்யோ சாமி. அது பெரும் தொல்லை. வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என சொல்வார்கள். வீட்டை வாங்கியதே பெரும் பாரமாய் இருந்தது. எந்த சேவை எடுத்தாலும் அதில் அவஸ்தை (கட்டுமானம், டைல்ஸ், பெயிண்டிங்..இப்படி எல்லாம்). கொஞ்சம் சிந்திக்கும் திறனற்று ஏதோ வேலை செய்தோம் என செய்கின்றனர். புது மனை புகுவிழா என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 5 சின்ன கூடல் விழா நடந்தது. உறவினர்கள், நண்பர்களென இனிமையான நாளாக அமைந்தது.

*-*-*-*-*-*

தூரத்து உறவினர் வீட்டில் ஒரு மரணம். சில மரணங்கள் உலுக்கிவிடும். திருமணமான இரண்டு மாதத்திற்குள்ளே மாப்பிள்ளை இறந்தால் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும். கொடூரம். ரத்த குழாய்கள் வெடித்ததாக டாக்டர்கள் சொல்லி இருக்கின்றார்கள். இரண்டு மூன்று நாட்களுக்கு அதே சிந்தனையாக இருந்தது. நான் அந்த மாப்பிள்ளையோ பெண்ணையோ பார்த்தது கிடையாது. அவசர உலகில் அந்த துக்கம் மறைந்து போனது. இதற்காகவேனும் அவசர உலகில் அல்லல் படலாம் போலிருக்கே !

*-*-*-*-*-*

ஊட்டிக்கு பேருந்து மெல்ல ஊர்ந்து சென்றது. மேட்டுப்பாளையத்தில் டீ குடிக்க வண்டி நின்ற போது காலை 7 மணி. இருக்கைக்கு வந்தால் கீழ் இருக்கையில் அனாதையாக ஒரு அலைபேசி. பேருந்தில் மொத்தம் 6-7 பேர் தான் மிஞ்சி இருந்தோம். கடைசியாக அழைத்திருந்த எண்களுக்கு ஒவ்வொன்றாக அழைத்தேன். நான்காவது எண்ணில் அலைபேசி சொந்தக்காரரின் சொந்தக்காரி (மனைவி)யை பிடித்தேன். ஐந்து நிமிடத்தில் குமரேசன் அழைத்தார். தன்னுடைய அலுவலக அலைபேசி அது எனவும், என்ன செய்யலாம் என ஆலோசித்தோம். மாலை அதே பேருந்து ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக சென்னை செல்லும், அதனால் ஓட்டுனரிடம் கொடுத்துவிடுகின்றேன் என சொல்லி அதன்படியே செய்தேன். என் எண்ணையும், அந்த ஓட்டுனர் எண்ணையும் அனுப்பி வைத்தேன். அன்று இரவு ”நன்றி’ என குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். அலைபேசியினை தொலைத்தால் நிகழும் பிரச்சனைகள் ஏராளம். எங்கிருந்து கிளம்பினாலும் ஒன்றுக்கு இரண்டு முறை பொருட்களை சரி பார்த்து கிளம்பவும்.

-*-*-*-*-*-*-*

கடந்த வெள்ளி இரவு அடையார் ரெயின் பாரஸ்ட் சென்றிருந்தோம் அலுவலக நண்பர்கள். தீம் ஹோட்டல். காட்டில் இருப்பது போன்ற அமைப்பு. இருட்டு, பூக்கள், விலங்குகள், சத்தம், உறுமல் என சிறப்பாக இருந்தது. சாப்பாடு நன்றாக இருந்தது. விலையும் ரொம்ப அதிகம் இல்லை. என்னை கவர்ந்த ஒரு விஷயம், சாப்பிட்டு முடித்த பின்னர் மீதம் இருந்த உணவினை பார்சல் செய்ய வேண்டுமா என ஒவ்வொரு குழுவிடமும் கேட்கின்றனர். வீணாக்க கூடாது என்ற எண்ணத்தில். நிச்சயம் அனைத்து ஹோட்டலும் இதனை நடைமுறை படுத்த வேண்டும். முதலில் நாமும் அளவிற்கு அதிகமாக ஆர்டர் செய்யவும் கூடாது.

மீதமிருந்த பார்சலை எடுத்துக்கொண்டு வழியில் யாரேக்கேனும் கொடுத்திடலாம் என கிளம்பிவிட்டேன். இரவு 11 மணியாகிவிட்டதால் யாரும் தென்படவில்லை. ஐயப்பன் தாங்கலில் ஆட்டோவில் ஏறி வீடு நோக்கு சென்று கொண்டிருந்தேன். வழியில் யாரேனும் கட்டிட காவலாளிக்கு கொடுத்துவிடலாம் என நினைத்தேன். ஆட்டோ டிரைவரிடம் பேச்சு கொடுத்த போது நல்ல போதையில் இருக்கின்றார் என தெரிந்தது. சாப்பிட்டீங்களா? சாப்பிடுகின்றீர்களா? என்றதும் வண்டி நிறுத்தி திரும்பி பெரிய கும்பிடு போட்டார். “சார், ரொம்ப நன்றி சார்” என்றார். வீடு வரை ஏதேதோ பேசிக்கொண்டு வந்தார். ஊர்ல யாருக்காச்சும் பசின்னா உடனே எந்த வீடா இருந்தாலும் சமச்சி போடுவாங்கன்னு படிச்சிக்கேன். அப்படி திரும்பற காலம் எப்ப வரும்?

– விழியன்

Advertisements
3 Comments leave one →
 1. Velvizhi permalink
  September 8, 2010 7:00 am

  Good one..

 2. G.Sundaram permalink
  September 9, 2010 2:30 am

  Valkai valvatharkku…mudinthavarai udhavi seiyalam…nammidam alavirkku adhigamai irukkum varai..

  Netraya actor murali indru illai…idhuthan valkai…

  Earn the money..spend reasonable…save little for old days…
  don’t depend on family members in future…

  Payanangal thodarattum..eluthungal anubhavangalai..mudindharai..

  Anbudan..
  G.Sundaram

 3. September 11, 2010 3:20 pm

  நல்ல பயணக்கட்டுரைகள் பகிர்வுக்கு நன்றி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: