Skip to content

செம்பரம்பாக்கதில் ஓர் அதிகாலை

October 4, 2010

சென்னைக்கு அருகில் இப்படி ஒரு ரம்மிய இடமா என குதுகலத்தில் இருந்தாள் தங்கை. வேலூரில் இருந்து சென்னைக்கு பயணிக்கும் போது செம்பரம்பாக்கத்தை கடக்காமல் வர முடியாது. ஆனாலும் இரண்டு மாதம் முன்னர் நானும் நந்தாவும் அங்கே புகைப்படம் எடுக்க சென்ற போது தான் அதன் வசீகரம் புரிந்தது. நீர் நிலைகள் என்றாலே ஒரு வசீகரம் தான். கடலைப்போல ஒரு ஏரியை காண கசக்குமா என்ன. கூகுள் மேப்ஸ் வைத்தே முதல் முறை செம்பரம்பாக்கத்தை அடைந்தோம். அங்கே கண்ட சில காட்சிகள் சிலிர்க்க வைத்தது. பல பறவைகள் வந்து சென்றும், ஒரு பறவையின் பெயர் கூட தெரியாமல் இருந்தது கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்த்தியது. புகைப்படங்களில் ஓரளவு மட்டுமே அந்த ஆனந்தத்தத பகிர முடியும்.

இந்த ஞாயிறு எங்கேனும் புகைப்படஷூட் செல்லலாம் என யோசனை. கடைசியில் செம்பரம்பாக்கம் செல்லலாம் என முடிவாயிற்று. நான், மனைவி, தங்கை வீட்டில் இருந்து 4.30க்கு கிளம்பிவிட்டோம். அருண், ஹேமாவும் கிளம்பிவிட்டதாக தெரிவித்தார்கள். ஸ்டாலின் மற்றும் உதயன் கிண்டியில் இருப்பதாக தெரிவித்தார்கள். அதிகாலை எழுந்து இன்று போக முடியுமா என பார்க்க வெளிவந்த போது பிரகாசமான நிலா முடியும் என்றது. ஆனாலும் மெல்ல மெல்ல மேகங்கள் வானை ஆக்கிரமிக்க துவங்கின. ஒரே ஒரு குடை மட்டும் எடுத்துக்கொண்டோம். அருண் ஹேமாவின் குழந்தை ஜெய்க்கும் கேமராவிற்கு மட்டும் தான் குடை. பூவிருந்தவல்லி தாண்டி பனிமலர் கல்லூரி வாசலில் நிற்பதாக ஏற்கனவே முடிவு செய்திருந்தோம். ஆனால் அங்கே போதிய வெளிச்சம் இல்லாததால் கொஞ்சம் தாண்டி, போலிஸ் குடியிருப்பு வாசலை அடைந்தோம். மணி சுமார் 5.15. அருண் 1 கி.மீ பின்னால் இருப்பதாக தெரிவித்தார். ஸ்டாலின் & உதயன் போரூரில் மழைக்காக ஒதுங்கி இருப்பதாக தெரிவித்தார்கள்.

அருண் வண்டி வந்தவுடன் செம்பரம்பாக்கத்திற்கு செல்லும் மண் சாலையில் திரும்பினோம். தங்கையும் மனைவியும் ஏற்கனவே காலை டீக்கு காத்திருந்தார்கள். பெட்டி கடை ஒன்றில் தேநீர் இருந்தது. குழந்தைக்கு பிஸ்கட் பேக்கட்டும் வாங்கிகொண்டோம். குழலியை கூட்டிக்கொண்டு வரவில்லை. மழை இருந்ததால் வேண்டாம் என விட்டுவிட்டோம். ஆனால் அவள் வந்திருந்தால் மிகவும் ரசித்திருப்பாள் என மனைவி தெரிவித்தாள். குழந்தைகளுக்கு இயற்கையினை ரசிக்க கற்று கொடுக்க வேண்டும் என்பது என் தீவிர கொள்கை.

“வாவ்..” என ஆச்சிரியப்பட்டார்கள் அனைவரும். கரு நீல வண்ணத்தில் மிக குறைந்த ஒளியில் ஏரி மிகவும் ரம்மியமாக இருந்தது. நானும் நந்தாவும் வந்திருந்தபோது ஏராளமான கருமையான வாத்துக்களை கண்டோம், அவை இன்று இல்லை. கிழக்கு திசையில் இருந்து கரு மேகங்கள் சூழ்ந்து லேசாக மழை பெய்தது. சில்லென சிலிர்த்தது. உதயனும் ஸ்பேவும் மழையில் நனைந்தபடி எங்களுடன் இணைந்தனர். உதயன் தன் புது கேமராவை காண்பித்தான். நிக்கானில் சொடுக்கும் போது எழும் சத்தம் கிறங்கடிக்க வைக்கும்.  தங்கை – இடம் சூப்பரா இருக்கு சூப்பரா இருக்கு என புலம்ப ஆரம்பித்தாள். அனைவரையும் அறிமுகம் செய்து வைத்து அடுத்த இடத்திற்கு நகர்ந்தோம்.

படித்துறை போல இருந்தது. மதகு என எழுதி இருந்தார்கள். அங்கே மீன் பிடிக்க படகுகள் இல்லை, தெர்மாகோலினால் செய்யப்பட்ட படகில் கிராமத்தினர் மீன் பிடித்தார்கள் கைகளை துடுப்பாக பயன்படுத்தினர். பலவகை மீன்கள் சிக்குகின்றன. மீன்களை வாங்க அருகில் இருக்கும் கிராமங்களில் இருந்து மக்கள் வருகின்றனர். உயிருடன் துள்ளும் மீன்களை வாங்கி செல்கின்றனர். மற்றபடி இங்கு நடமாடுவது சுகந்த காற்றை சுவாசித்தபடி நடைபழகும் மக்கள் சிலர்.

தூரத்தில் சீன டவர் போன்ற இடம் தெரிந்தது. அங்கே பிரவீன் இருப்பதாக அலைபேசியில் அழைத்தார். அங்கே மூட்டைகட்டி சென்றோம். அனைவரும் நலம் விசாரித்து கொண்டோம். பிரவீனுடன் இரண்டு நண்பர்கள் (ராஜேஷ், மாரிமுத்து) வந்திருந்தனர். அருண் முந்தைய பயணத்தின் போது பிரவீன் எடுத்த புகைப்படங்கள் அருமையாக வந்திருந்தது என தன் மகிழ்வினை தெரிவித்தார் (மகாபலிபுர பயணம் – நான், மனைவி, குழந்தை, பிரவீன், நரேஷ், அருண் குடும்பம்).

ஐ! வானவில்

அணைக்கு சென்றோம். நீரில் கால் நனைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியது. கொஞ்ச நேரத்தில் அந்த அற்புதமான காட்சி தெரிந்தது. அரை வட்ட வானவில். முதல் முறையாக அந்த பிரம்மாண்டத்தை காண்கின்றேன். முழு வானவில்லையும் பிரேம் செய்ய முடியவில்லை. தூர ஆரம்பித்துவிட்டது. அங்கேயே இருக்கலாம் போல இருந்தாலும் பசி வயிற்றை கிள்ளியது. அதிகாலையே வேறு எழுந்துவிட்டோம். போகும் போது குன்றத்தூர் – போரூர் வழியாக செல்லலாம் என திட்டம். வழியில் குன்றத்தூர் காவல் நிலையத்தை ஒட்டிய சிறிய ஓட்டலில் சூடான இட்லி, பூரி, வடை உண்டு, வயிற்றை நிரப்பி,(மேலே இருந்த இதயம் ஏற்கனவே நிரம்பி இருந்தது), டாட்டா செல்லி கிளம்பினோம்.

அடுத்து எங்கே செல்வது என அதற்குள் யோசனை துவங்கிவிட்டது.

செம்பரம்பாக்கம் – சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரி.

எப்படி செல்வது.

வழி 1: பூந்தமல்லி – பனிமலர் கல்லூரி – போலிஸ் குடியிருப்பு – செம்ப்ரம்பாக்கம் ஏரி போர்டு – மண் சாலை

வழி 2: போரூர் – குன்றத்தூர் – மாதா பொறியியல் கல்லூரி – அப்புறம் அங்க கிராமத்தில் வழி கேட்கவும் 🙂

அங்கே கடைகள் எதுவும் கிடையாது. அதிகாலை மட்டுமே சிறந்தது. தண்ணீர் எடுத்து செல்லுங்கள் (அனேகமா அங்கிருந்து வந்த தண்ணீராக தான் இருக்கும்)

– விழியன்

Advertisements
5 Comments leave one →
 1. October 4, 2010 12:07 pm

  கண்முன்னே காட்சியை வரிகளில் தந்த விதம் அருமை அண்ணா…

 2. October 4, 2010 12:22 pm

  அண்ணா, சூப்பரா இருந்ததுண்ணா.
  படங்களும் நல்ல வந்துருக்கு,

  அண்ணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிருங்க.
  பிறந்தநாளுக்கு ட்ரீட் வைத்ததை யார்க்கும் சொல்லமாட்டேன்
  அடுத்து எங்க போகலாம்?

 3. October 4, 2010 1:06 pm

  superb presentation! kaN munnE kAkshikaL viRikinRana! moTHaTHil ithu ezhuTHilEyE oru pukaippadam ! nanRi !

 4. G.Sundaram permalink
  October 5, 2010 12:51 am

  Hi Vizhiyan,

  I hope see the செம்பரம்பாக்கம் on this vacational holiday (Dec’10)..

  Thanks for sharing the experience..very nice writing..

  Anbudan,
  G.Sundaram..

 5. November 12, 2010 4:59 am

  kolli malai vaanga

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: