Skip to content

குழந்தை வளர்ப்பு பகிர்வுகள்

November 11, 2010

வெகு நாட்களுக்கு முன்னர் ஒரு கதை படித்த நியாபகம். அதில் குழந்தை வளர்ப்பில் கருதவேண்டிய முக்கிய அம்சம் இருந்தது. சிறுமி ஒருத்தி விளையாடிக்கொண்டிருக்கின்றாள், அவள் தாழ்வாக இருந்த மரக்கிளையில் ஏறிவிடுகின்றாள்.”அம்மா அப்பா” என்று கத்துகின்றாள். உள்ளிருந்து வந்த அம்மா, மகள் தொங்குவதை பார்த்து, “கிளையை விட்டுவிடாதே” என கத்துவாள், சிறுமி கீழே விழுந்துவிடுவாள், அதே சமயம் என்ன செய்ய வேண்டும்? அம்மாவிற்கு பதில் அப்பா வருகின்றார், மகள் தொங்குவதை பார்த்து, “கெட்டியாக பிடித்துக்கொள், அப்பா வந்துவிடுகின்றேன்” என சொல்கின்றார். மகள் கிளையை பிடித்தபடி இருக்க அவளை பத்திரமாக பிடிக்கின்றார் தந்தை.என்ன வித்தியாசம்? அம்மா கிளையை விடாதே என்றதும் கிளையை விடு என்பது மட்டுமே காதில் , அந்த பதட்டத்தில் விழும், அதற்கு பதில் என்ன செய்ய வேண்டும் என சொல்வதே இந்த மாதிரி சூழ்நிலைகளில் சிறந்தது.

இதே பாடத்தினை நாங்கள் இப்போது தினமும் கடைபிடிக்கின்றோம். என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் குழலிக்கு சொல்லி பழகுகின்றோம். எங்கள் ஐவருக்கும் (நான், மனைவி, அப்பா, அம்மா, தங்கை), புதிய அனுபவமாக இருக்கின்றது. சில நாட்கள் முன்னர், அப்பாவின் அலைபேசியினை காதில் வைத்தபடி என் கைகளில் அமர்ந்திருந்தாள் குழலி. அந்த பக்கம் வந்த அப்பா, “செல்லை கீழ போடப்போறா..” என்றது தான் தாமதம், அத்தனை நேரம் அமைதியாக வைத்திருந்தவள் டமால் என வீசி எறிந்தாள். (மூன்று பக்கம் சிதறியது வேறு கதை) . மேலே சொன்ன கதை தான் இதற்கு விளக்கம். அன்றில் இருந்து எல்லோரு நேர்மறை வாக்கியங்களையே சொல்ல முயற்கிறோம். கொஞ்சம் பலன் இருக்க தான் செய்கின்றது🙂

போனஸ் செய்தி : இரண்டு நாட்களாக “அமேரிக்கா அதிபர் யாரும்மா” என்றாள் முதலில் “மாமி” என்பாள், திரும்ப கேட்டாள் “ஒபாமாமா…” என்கின்றாள்.

4 Comments leave one →
  1. November 11, 2010 9:37 am

    அட சூப்பருங்க.
    குழந்தையும் ரோபோவும் ஒன்னு..!!

    என்றும் அன்புடன்
    செல்வ.முரளி

  2. G.sundaram permalink
    November 14, 2010 2:45 am

    Hi Vizhiyan,

    Ningal solvathu sarithan, en Ponnum appadithan..seiyathey entral seiyum..sei entru sonnal seiyathu..idhu kulanthaiyin manopakkuvum..

    Pakirthamaikki Nantri..

    Anbudan,
    G.sundaram

  3. நிம்பன் கார்த்திக் permalink
    November 15, 2010 4:31 am

    குளறல் செய்தி, இனிக்க செய்கிறது. நிம்பன் கார்த்திக்

    • November 16, 2010 8:10 am

      நன்றி நிம்பன் கார்திக்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: