Skip to content

புகைப்படகலைஞர் கல்பட்டு நடராஜனுடன் ஒரு அதிகாலை

December 6, 2010

உற்சாகம் பீரிட்டு கிளம்பும், அடச்ச என்னம்மா வாழ்கையை வாழ்ந்திருக்கார், வாவ்,எவ்வளவு விஷயம்,  எப்படிப்பட்ட அனுபவங்கள், என ஒரு சேர யோசனைகள் அலைமோதுவது சில ஆளுமைகளை சந்திக்கும் போது மட்டும் தான். அப்படிப்பட்ட அமைதியான ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு பெரியவரை கடந்த ஞாயிறு அதிகாலையில் அவரது இல்லத்தில் சந்தித்தோம். கல்பட்டு நடராஜன்.  ஏற்கனவே பல முறை இணைய குழும சந்திப்புகளில் பேசி இருந்தாலும், இன்று சந்தித்தது முழுக்க முழுக்க புகைப்படம் பற்றி மட்டும் பேச தான்.

அதிகாலை ஆறு மணிக்கு அவர் வீட்டில் சந்திப்பதாக பேசி இருந்தோம். நான் , நந்தா , உதயன், ப்ரவீன் ஆகியோர் அவரை சந்திப்பதாக இருந்தது. காலை அலைபேசியை பார்த்த போது தான், நந்தாவின் அறைவாசிகள் இரண்டு பேர் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரமுடியாத சிக்கல் கொண்ட குறுஞ்செய்தி வாசித்தேன்.  காலை 5 மணிக்கு கிளம்பி சரியாக அவர் வீட்டு தெருவை அடைந்ததும் ப்ரவீன் எதிர்பட்டார். மழை பெய்து இருந்த்ததாலும், இரண்டு கிரண்டு வீட்டில் பாதி தோட்டத்திற்காக விட்டிருந்தது மனதிற்கு இனிமையாக இருந்தது.

அவருக்கு வயது 81. காலை ஐந்து மணிக்கெல்லாம் தினம் எழுந்துவிடுவேன் என்று சொல்லி இருந்தார். ப்ரவீன் அவரை முதல்முறையாக சந்திப்பதால் அறிமுகம் செய்துகொண்டோம். ப்ரவீனின் சில படங்களை பார்த்து வெகுவாக பாராட்டினார். உங்களுக்குள் இந்த பிட்டோரியல் புகைப்படம் எடுக்கும் திறன் ஏற்கனவே இருக்கு, உங்களுக்கு எல்லாம் நான் பாடம் எடுக்க முடியாது என கூறினார்.

பிட்டோரியல் புகைப்படக்கலை பற்றி பேச துவங்கும் முன்னர். புகைப்படங்கள் பற்றி பேசினார். போகல் பாயிண்ட்ஸ், 1/3 சூத்திரம், படங்களின் பேலன்சிங், ப்ரேமிங் போன்ற விஷயங்களை விளக்கினார். உதயன் மழையில் நடந்தபடி உள்ளே வந்தான். தன் கணினியில் இருந்த புகைப்படங்கள் கொண்டு சில பிட்டோரியல் படங்களை காட்டினார்.

1900களின் ஆரம்பத்தில் துவங்கிய இந்த புகைப்படக்கலை, ஆரம்பத்தில் படங்களை கழுவும் போது சில மாற்றங்கள் செய்து அதை அழகிய ஓவியம் போல காட்ட வேண்டும் என்ற நிலையில் துவங்கியது. பின்னர் இந்த நிலைப்பாடு மாறி படங்களில் அழகியல் படம் எடுக்கும் போதே வர வேண்டும், எடுத்த பின்னர் அதை Softening  செய்வது கூடாது என்ற நிலை வந்தது.

ஒரு படத்தை எடுக்கும் போது அது கதை சொல்ல வேண்டும். ஒரு கவிதையை உள்ளடக்கி இருக்க வேண்டும். ஒரு நினைவை மீட்ட வேண்டும். வாழ்வியலை குறிப்பதாக இருக்க வேண்டும். அதிகாலை குடித்த சூடான காபியின் உற்சாகத்தை கொடுப்பதாக இருக்க வேண்டும். திரும்ப திரும்ப பார்க்க தூண்ட வேண்டும். படத்தை பெரிதாக்கி வாழும் அறையில் தொங்க விட வேண்டும் என எண்ண தூண்ட வேண்டும்.

ஆன்ஸல் ஆடம் தான் இந்த புகைப்பட கலையில் முன்னோடி. அவர் படங்கள் சிலவற்றை பார்த்தோம். இந்தியாவில் பல முன்னோடிகள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். சி. ராஜகோபாலன் பற்றி குறிப்பிட்டு பேசினார். கல்பட்டு நடராஜன் எடுத்த படங்களை காட்டி அதில் இருக்கும் குறைகள், அழகியல் பற்றி விளக்கினார். அற்புதமான படங்கள். கறுப்பு வெள்ளையில் ஓர் விருந்து.

Ansel Adam Photographer

இடையே சூடான சுவையான அற்புதமான காபியினை பாட்டி கொடுத்தார்கள். ஐயாவின் கண்களில் இருந்து நீர் வந்துகொண்டு இருந்தது கொஞ்சம் கஷ்டப்படுத்தியது. வயதானவர்களை நாம் சிரமத்திற்கு ஆளாக்குகின்றோமோ என எண்ணத்தோன்றியது. ஆனால் இருவரும் எங்களை உற்சாகமாக கவனித்தனர். ஒருவர் கண்களுக்கு செவிகளுக்கு உணவளித்தார், மற்றொருவர் காபி, உம்புமா, சட்னி, பட்ஷணம் என வயிற்றை குஷிபடுத்தினார். கடைசியில் ச.கி மற்றும் அவன் மகன் கார்திக் இணைந்து கொண்டனர்.

மெல்ல பறவைகள் பற்றியும் அவற்றின் படங்கள் பற்றி விளகினார். அவர் பறவைகளை அற்புதமாக படம்பிடித்து உள்ளார். படத்தை விட அந்த படத்தின் பின்னர் இருக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகள் தென்றல் போல வருடின. அவரும் பழைய நினைவுகளை அசை போட்டு ஆனந்தம் கொண்டார். ஒரு ஆந்தையை படம் பிடிக்க எவ்வளவு சிரமப்பட்டார்கள், பறவை ஒன்றின் நம்பிக்கை பெற எத்தனை பொறுமை காத்தார்கள், பயணங்கள், சிக்கல்கள் என நிகழ்வுகள் விரிய விரிய ஆச்சரியப்பட வைத்தார்.

இன்று நாம் ஒரு கேமரா வாங்கி சொடுக் சொடுக்கென கிளிக்கிவிடுகின்றோம், அந்த காலத்தில் கேமரா வாங்கிவிட்டால் எல்லாம் முடியவில்லை. ப்ளாஷ் செய்ய வேண்டும், கருவிகளை நாமே செய்ய வேண்டும், படத்தை இருட்டு அறையில் நாமே கழுவ வேண்டும். டெவளப் செய்ய வேண்டும். இவை அனைத்தையும் செய்தால் மட்டுமே அந்த படம் நம்முடைய படைப்பாகுமாம்.

பறவைகள் பற்றியும் அவற்றின் குணாதிசயம், உணவு பழக்கம், குஞ்சு பொறிக்கும் விதம், கூடு கட்டும் விதம், அடைகாக்கும் விதம், பறந்து சொல்லுதல் என ஏராளமான விஷயங்கள் கொட்டி தீர்த்தார். சுவாரஸ்யமாக. அத்தனை பறவைகளின் பெயரை கூட கேட்டது கிடையாது. நம்க்கு தெரிந்தது குருவி, காக்கா , சிட்டுக்குருவி, கிளி, ஆந்தை, புறா..அப்புறம்… ஓவர்.

ஒரு விஷயத்தில் நாம் கவனம் செலுத்தினால் அவற்றில் முழுமையாக ஈடுபடல் வேண்டும். பறவைகளை படம்பிடிக்கும் முன்னர் அவற்றை பற்றிய அத்தனை விஷயமும் அறிந்தால் மட்டுமே அவற்றை படம் எடுப்பதில் சிறந்து விளங்க முடியும்.

போக வேண்டிய தூரம் வெகு தொலைவு. மாட்டி இருக்கும் சொருப்போ, ஏறி இருக்கும் வாகனமோ முக்கியமில்லை, தொலை தூரம் கடக்க வேண்டும் என்ற வைராக்கியமும், துணிவும், திடமும் அவசியம்.

புகைப்பட பாடங்களை விட அவரிடம் நான் கற்றது. வாழ்கை ரொம்ப ரொம்ப இனிமையானது. கடும் உழைப்பு பலனை தரும். அற்பணிப்பு அவசியம். எதிர்பார்ப்பில்லாத உழைப்பு அற்புதமானது. இன்னும் என்னென்னவோ…

– விழியன்

Advertisements
14 Comments leave one →
 1. December 6, 2010 9:45 am

  சென்னைய ரொம்பவே மிஸ் பண்றேன் 😦

 2. வாணி permalink
  December 6, 2010 9:53 am

  சுவாரசியமா எழுதியிருக்கீங்க அண்ணா 🙂

  சென்னைய ரொம்பவே மிஸ் பண்றேன் 😦

 3. December 6, 2010 9:53 am

  ஒரு கலைஞரை சந்தித்திருக்கிறீர்கள் …வாழ்த்துகள்

  (அப்போ அது காப்பி தானா ? :)))

 4. selvaraj permalink
  December 6, 2010 9:56 am

  Good one… anna…

  yes… these days… just we are clicking.. clicking… but in olden days… each snap… they have to wait and take…. needs lots of patience…

 5. nandha permalink
  December 6, 2010 10:12 am

  நான் மிகப்பெரிய வாய்ப்பைத் தவற விட்டிருந்திருக்கிறேன்.

  😦

 6. SUNDARAM.G permalink
  December 6, 2010 10:26 am

  Hi Vizhiyan,

  Valkaiyil valvathargu enpatharkku ivar oru eduthukattu..

  Ungalai ninaithu perumau padukiren..Thusi thattiya file velichathil padithapodhu erpaduthiya puthiya anupavam…

  Anbudan,
  Sundaram G

 7. December 6, 2010 10:58 am

  அன்பு உமா
  கல்பட்டு நடராஜன் அய்யாவுடனான சுவையான அனுபவத்தை அதே சுவையுடன் பரிமாறியதற்கு நன்றி.

  வாழ்த்துகள்.

 8. Shanmuga sundharam permalink
  December 6, 2010 11:12 am

  can we have some collection of Mr.Kalpattu Natarajan’s

 9. December 6, 2010 2:23 pm

  Excellent report. I wish to meet the legend soon.

 10. December 6, 2010 2:52 pm

  அவர் 81 வயது இளைஞர்… அவருடன் இருக்கும் போது சோர்வு என்பது அறியாமல் போகிறது. ஆச்சர்யங்களும் வாழ்வினை முழுமையாக வாழ்வதற்கான உற்சாகமும் தான் அதிகமாகிறது. மேலும் தன் வீட்டிலுள்ள சின்னச் சின்ன உபகரணங்களை தானே செய்திருக்கிறார். தானியங்கிக் கதவு, தண்ணீர் செப்பனிடும் தொட்டி, அபரித தண்ணீர் சுட்டி போன்றவை அவருடைய படப்பாற்றலுக்கும், உற்சாகத்திற்கும் உதாரணம். இனி சோர்வுறும் போதெல்லாம், இந்த சந்திப்பை ஒரு முறை நினைத்துக் கொள்வேன்… அது மிகுந்த உற்சாகத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை…

 11. yourfriendpr permalink
  December 7, 2010 7:18 am

  Lucky you!

 12. December 9, 2010 11:32 am

  விழியன்

  இந்தப் பதிவை படித்தால் எனக்கு பல விஷ்யங்களில் ஆர்வம் வருகிறது..

  வாழ்த்துக்கள்

  ஐயாவிற்கு என் வணக்கங்கள்

 13. Dhatchina permalink
  December 24, 2010 7:34 am

  dfdf

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: