Skip to content

பண்புடன் வாசகர் வட்டம் முதல் நிகழ்வு – இனிய துவக்கம்

January 22, 2011

பண்புடன் வாசகர் வட்டம் முதல் நிகழ்வு

“பண்புடன்” வாசகர் வட்டத்தின் முதல் கூட்டம் இனிதே நிறைவுற்றது. தொடங்கியது என்பதே சரியான பதம். கூட்டம் 3 மணிக்கு தான். நந்தாவும் நிலாரசிகனும் 2 மணிக்கே

வந்தனர். முந்தைய வார இராமச்சந்திரா மருத்துவமனை அனுபவம், புத்தகம் பற்றியும் புத்தக கண்காட்சி பற்றியும் பேசத்துவங்கினோம். ப்ரியாவும் சேர்ந்து கொண்டாள். கொஞ்ச நேரத்தில் ஸ்டாலின், அஷிதா, ஆறுமுகம், குணசேகரன், இளங்கோ, நாகராஜன், ச.கி. நடராஜன் ஐயா, கார்திக், சடையன் சாபு ஐயா, லட்சுமண ராஜா, திவ்யா, அப்பா மற்றும் அம்மா கூட்டத்தில் சேர்ந்து கொண்டனர்.

முதலில் நாங்கள் அனைவரும் சொந்த ஊர் (வேர்) மற்றும் என்ன செய்து கொண்டிருக்கொன்றோம் என சின்ன அறிமுகம் நிகழ்ந்தது. அடுத்த சுற்று அறிமுகத்துடன் புத்தகங்கள் தொட்ட வரலாறும் அதன் தடங்களை பற்றி பேசினோம். இளங்கோவின் புத்தக வரலாறு சுவாரஸ்யமான ஒன்றாக இருந்தது. நந்தா ஒரே சமயத்தில் பத்து புத்தகம் வைத்து வாசிப்பது ஆச்சரியப்படுத்தியது. நிலா தன் ஆரம்பகால வாசிப்பு பற்றியும், மெதுவாக தன் அண்ணன் டையரியை புரட்டி அவருக்கு போட்டியாக கவிதை எழுத ஆரம்பித்த கதை முதல் “வெயில் தின்ற மழை” வரையிலாக கதை கேட்க சுவையாக இருந்தது. எல்லோரின் அறிமுகம் முடிந்த பின்னர் லட்சுமண ராஜா வந்து சேர்ந்தான். மீசை இன்னும் வளர்ந்து இருந்தது. முறுக்கும் தான். ஆவண புகைப்படங்கள் பற்றியும் தன் புதிய வேலையை பற்றியும் பேசினான். இராவணன் என்ற புனைப்பெயருக்கான காரணம் க்ளாஸ். அறிமுகம் ஆரம்பிக்கும் முன்னர் நந்தாவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அறிவு சார்ந்த எழுத்தாளராக பரிணமித்த பின்னரும் நந்தா தன் வலைப்பூவில் நந்தாவின் கிறுக்கல்கள் என வைத்திருக்கின்றார் என குற்றச்சாட்டு எழுந்தது. உடனடியாக அவர் அதை மாற்றிவிடுவார் என நம்புவோமாக 🙂

இடையில் தேநீர் மற்றும் பிஸ்கட்டுகள். வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அப்பா பேசினார். வாசிப்பும் அந்த வாசிப்பு அனைவரின் படைப்பிற்கும் உதவும் வகையில் வருங்கால செயல்கள் இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். அடுத்த கூட்டத்திற்கு முன்னரே இந்த புத்தகம் பற்றி விவாதிக்கப்படும் என அறிவித்து அனைவரும் அந்த புத்தகத்தின் மீதான விமர்சனம்/ அனுபவம் வைக்க வேண்டும், அதே சமயம் அந்த படைப்பில் உள்ள சிறப்புகளை கவனித்து நம் படைப்புகளில் அவற்றை செலுத்த வேண்டும் என்றார். புத்தக அறிமுகம் போன்றே எழுத்தாளார்களை அழைத்து பட்டறைகளியும் இந்த வட்டம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இரண்டு மூன்று நண்பர்கள் கிளம்பியதாலும் அறை இருட்டியதாலும் ஹாலிற்கு கூட்டத்தை நகற்றினோம்.

இப்போது புத்தக அறிமுகம்/ வாசிப்பு அனுபவம் துவங்கியது. உதயன் தான் வாசித்து தன்னை மிகவும் பாதித்த “எரியும் பனிமலைக் காடு” என்ற புத்தகத்தை பற்றி பேசினார். அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தக என குறிப்பிட்டார். பின்னர் நான் யூமா வாசுகி பற்றிய சின்ன அறிமுகமும் அவர் எழுதிய “கடல் கடந்த பல்லு” என்ற சிறுவர் நாவலின் அறிமுகம் கொடுத்தேன். இந்த கதை ஒரு அணில் மேற்கொண்ட பயணத்தின் பற்றிய கதை. அதன் சிறப்பம்சம் பற்றியும் தெரிவித்தேன். நிலாரசிகனும் நானும் யூமாவின் மற்றொரு படைப்பான “மஞ்சள் வெயில்” நாவலை பற்றி உரைத்தோம். அதன் அழகியல், எங்களை கவர்ந்த விஷயம், பாங்கி, கதிரேசனின் மனநிலை, ஜீவிதா மீதான… கடைசி பக்கத்தில் இருந்த வரிகளை வாசித்தாலே மஞ்சள் வெயிலின் அழகு புரியும்.

அதன் பிறகு ஸ்டாலின் பெலிக்ஸ் ரப்பர் நாவல் படித்தது பற்றியும் அதின் மீது தன் விமர்சனத்தை பற்றியும் பதிவிட்டார். (விரைவில் அந்த கட்டுரை வெளியாகும்.) நிகழ்வின் முத்தாய்ப்பாக இந்த விமர்சன வாசிப்பு அமைந்தது. அதனை தொடர்ந்து விமர்சனத்தின் மீது விமர்சனம் எழுந்தது. மணி எட்டாகி இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. அனைவரும் துவக்கமே நல்ல நிறைவை தந்தது என்ற ஆனந்தத்தை பகிர்ந்தனர். தொடர்ந்து இயங்குவதே வெற்றியாகும். மெல்ல மெல்ல கலைந்து சென்றனர்.

நான், ஸ்பெ, இளங்கோ, உதயன் நால்வரும் மேலும் ஒரு மணி நேரம் உரையாடினோம். மேலும் எப்படி அடுத்த கூட்டங்களை எடுத்து செல்வதென விவாதித்தோம். புத்தக பரிமாற்றத்தில் இருக்கும் சிக்கல்கள், நிகழ்வு, நிறை குறை பற்றி பன்னீர் சோடா அருந்தியபடி பேசினோம். உண்மையில் எனக்கு கூட்டங்களை விட கூட்டங்களின் ஆரம்பம், இடையில், முடிவில் நிகழும் இது போன்ற உரையாடல்கள் நிறைய சுகத்தை தரும், இளையராஜாவின் இசைக்கு நடுவே நிலவும் மெளனத்தை போல..

-விழியன்

Advertisements
3 Comments leave one →
 1. January 23, 2011 6:08 am

  முதல் கூட்டம் இனிதே நடந்ததறிந்து மிகவும் மகிழ்ச்சி. கலந்துக்கொள்ளும் ஆவலை தூண்டுகிறது.

  • January 24, 2011 4:40 am

   இந்தியா வரும் போது நீங்க தான் சிறப்பு விருந்தினர் அண்ணே.

 2. ramji_yahoo permalink
  January 23, 2011 6:42 am

  பகிர்விற்கு நன்றிகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: