Skip to content

பிச்சாவரம் – போர்ட் நோவோ பயணக்குறிப்புகள் – 1

February 10, 2011

பிச்சாவரம் – போர்ட் நோவோ பயணக்குறிப்புகள் – 1

பயணங்கள் ஏனோ சலிப்பதே இல்லை. பயணங்கள் நம்மை அறியாமல் உடலிற்கும் மனதிற்கும் உற்சாகம் கொடுக்கின்றது. ஒரு பயணம் இன்னொரு பயணத்திற்கு வித்திடுகின்றது. கடந்த வாரம் இறுதியில் மீண்டும் நினைவில் தங்கும் ஒரு ஆனந்த பயணம்.

நான், மனைவி, குழலி, அலுவலக நண்பர் இருவர் மற்றும் அவர்களில் ஒருவரின் தம்பி. செர்வோலட் பீட். கிண்டியில் சந்தித்தோம். சீறீப்பாய்ந்தது சிதம்பரத்தை நோக்கி. ECR சாலை பயணத்தை சுலபமாக்கி இருக்கின்றது. பாண்டிச்சேரியில் ஒரு உணவகத்தில் நிறுத்தினோம். உணவக வாசலில் இருந்தே ஒரு நபர் எங்களை வரவேற்று உள்ளே அழைத்து சொல்லும் போதே சற்று யோசித்தோம். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு இருக்கையில் அமர்ந்த போது தான் கவனித்தோம். 2 இட்லி 40 ரூபாய். மனைவி திறந்திருந்த வாயில் ஈ அல்ல கோழி ஒன்றே சென்றிருக்கலாம். சரி இனி விலைப்பட்டியலை பார்த்தால் உண்ணமாட்டோம் என முதலில் ஆர்டரை முடித்தோம். என்ன தான் விலை என திறந்த போது மேலும் ஒரு ஆச்சரியம், வெங்காய ஊத்தப்பத்தின் விலை 75 ரூபாய், ஆனால் அதிக விலையுள்ள வோட்காவோ 70 ரூபாய் தான். பாண்டிச்சேரி பாண்டிச்சேரி தான் !!

மீன் தொட்டியில் இருந்த மீன்களை வெகுவாக ரசித்தாள் குழலி. ஐந்து வாய் உணவு உள்ளே போனது. மாடியில் இருந்து பார்த்த பறவைகளால் மேலும் 2 வாய் சென்றது. அவ்வளவு தான் அந்த இடத்தை விட்டு வர மறுத்தாள். மார்பிளால் ஆன குதிரையிடம் சென்று சிரித்துவிட்டு வந்தாள். அந்த காவலாளி அதன் விலை 1 லட்சம் ரூபாய் என்றார். வண்டியை கிளப்பினாலும் குழலி அங்கிருந்து வரமறுத்தாள். அந்த மீன், வாத்து, குதிரை அவளை மயக்கி இருந்தது. ஏதோ பொய் சொல்லி அங்கிருந்து அவளை கிளப்புவதற்குள் படாதபாடாகி போனது.

வழியில் ஒரு ஏரிக்கரையில் நிறுத்தினோம். குழலி நன்றாக உறங்கி எழுந்திருந்தாள். அப்பா பீச் என்றாள். அவளுக்கு நீர் நிலைகள் என்றாலே பீச் மட்டும் தான். வெயில் அதிகம் இருந்ததால் கேமராவை வெளியே யாரும் எடுக்கவில்லை. ஏரிக்கரையில் ஒருவர் படகுடன் இருந்தது அழகான காட்சியாக இருந்தது. ஆனால் வண்டி அதை தாண்டி வெகுதூரத்தில் நின்றது. கடலூர் – சிதம்பரம். சிதம்பரத்தில் மூன்று விடுதிகளின் பெயர் தெரிந்து இருந்தது. சாரதாம்மா, ரிட்ஸ் மற்றும் வாண்டையார். மூன்றிலும் அறைகள் கிடைக்கவில்லை. அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஏதோ கருத்தரங்கமமாம், அதுமட்டும் இல்லாமல் திருமண நாள் வேறு. கடைசியில் RMV லாட்ஜில் இரண்டு அறைகள் கிடைத்தது.

“ஏழு வருடங்கள் முன்னர் ஒரு முறை சிதம்பரம் வந்துள்ளேன். நண்பர்களுடன். கோவிலுக்குள் செல்லவில்லை. நேரம் கடந்தபடியால் மூடி இருந்தது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் Pen Friend ஒருத்தி இருந்தாள். இப்போது நினைத்தாலும் சுகமாக இருக்கின்றது. என் தோழியின் தோழி அவள். டாக்டருக்கு படித்துக்கொண்டிருந்தாள். (உண்மையில் அவள் பெயர் கூட இப்போது மறந்துவிட்டது). நிறைய கடித போக்குவரத்து நடந்தது. அவளை முதல் முதலாக (க்டைசியுமாக) அந்த பயணத்தின் போது பல்கலைகழக வளாகத்தில் சந்தித்தேன். பத்து நிமிடம் கூட இருந்திருக்காது. முகம் கூட மறந்துவிட்டது (பெயரே மறந்துவிட்டதாம்…)”

சிறுது நேர ஓய்விற்கு பின்னர், ஐஸ்வர்யா ஹோட்டலில் மதிய உணவை முடித்து பிச்சாவரம் நோக்கி சென்றோம். தவறுதலாய் ஒரு மாற்று / சுற்று / கரடுமுரடான பாதையில் சென்றுவிட்டோம். புகழ்பெற்ற இந்த இடத்திற்கு இப்படி ஒரு பாதையா என சந்தேகமாக இருந்தது. வழியில் பச்சை வயலை கண்டதும் பரவசம் அடைந்தோம். இரண்டு பக்கமும் வயல். கொஞ்ச தூரத்திலேயே மையில் கற்களை நட்டு வைத்தாற் போல வெள்ளை பறவைகள்.ஆஹா. ஆர்வமிகுதியால் வயல்வரப்பில் கால் தவறி வழுக்கி விழுந்தார் பிரசன்னா. சிறிது நேரம் அங்கேயே நின்று காய் வைத்தோம். பஞ்சு மிட்டாய் காரன் குழலிக்கு பஞ்சுமிட்டாய் கொண்டு வந்தான். வயலில் நடவு நடந்துகொண்டிருந்தது. எந்த பத்திரிக்கை என எங்களிடம் கேட்டார்கள்.

பிச்சாவரம்:

பிச்சாவரம் அதிக அறியப்படாத இடம். பள்ளி வகுப்புகளில் நிச்சயம் படித்து இருக்கலாம். சுந்தர்பன் சதுப்புநில காடுகள் மற்றும் பிச்சாவரம் சதுப்பு நில காடுகள். உலகில் மிகப்பெரிய முதல் மற்றும் இரண்டாம் காடுகள் இவை. கடலில் இருந்து வரும் Back Water தான் இவை. இங்கு விளைந்துள்ள செடிகள் சுனாமி வந்தாலும் அதனை மேலும் செல்லவிடாமல் தடுத்துவிடுமாம். பல ஆண்டுகளாக இது கள்ளக்கடத்தல் நிகழ்த்து ஏதுவான இடமாகவே இருந்து வந்துள்ளது. பின்னர் அண்ணா ஒரு முறை இங்கே வந்த இந்த செழிப்பை பார்த்து சுற்றுலா இடமாக மாற்றும் யோசனையை முன்வைத்துள்ளார். பின்னர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் “இதயக்கனி” படத்தை இங்கே படம் பிடித்தார். கொஞ்சம் பிரபலம் அடைந்தது. அதன் பின்னர் பல திரைப்பட காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த ‘கல்லை மட்டும் கண்டால்’ பாடலும் இங்கே படமாக்கப்பட்டதாம்.

எங்கள் படகை செலுத்தி சென்ற சம்பத்தின் வயது 56. இவர் சுமார் 40 ஆண்டுகள் படகு செலுத்துகின்றாராம். எல்லா முனையும் சந்துகளையும் சதுப்புநில காட்டிற்குள் தெரிந்துவைத்திருந்தார். ரொம்ப சுவாரஸ்யமான விஷயம் இவர் எல்லா செடிகளில் பெயரையும் அதன் Biological பெயர்களையும் அழகாக சுட்டி காட்டினார். இந்த காட்டிற்குள் சென்று வந்தது ஒரு பேர் அனுபவம். சென்று ரசித்தாலே அதன் குதுகலம் புரியும். தண்ணீர் + காடு ஒரு ரசமான கலவை. தண்ணீரின் அளவு சுமார் 1-2 அடி மட்டுமே இருக்கும். படகு ஒரு சந்தில் செல்லும் போது அங்கே ஒருவர் குனிந்து ஏதோ செய்துகொண்டிருந்தார். எறா பிடித்துக்கொண்டிருந்தார். கைகளில். உள்ளே செல்ல செல்ல கொஞ்சம் பயம் கிளப்பியது. ஆழம் இல்லை என்றாலும் அந்த இருட்டும் சப்தமும் ஏதோ செய்தது. குழலி வெகு அமைதியாக அனைத்தையும் கவனித்தபடி வந்தாள். அவள் அழுவாள் என எதிர்பார்த்தோம். தூரத்தில் ஒரு அலறல். அவை ஓநாய்கள் என்றார் சம்பத். பயமேதும் இல்லையாம். சிறிது நேரம் நண்பர் ஒருவரின் அலைபேசி வழியே பழைய பாட்டு கேட்பது இனிமையாக இருந்தது. ஆனால் இந்த இடத்தின் ஒளியை நாம் மீண்டும் கேட்கமுடியாது என நிறுத்திவிட்டோம். சில இடங்களில் நன்றாக குனிந்தால் தான் படகு நகரும் சூழல். லாவகமாக படகை செலுத்தினார் சம்பத்.

(தொடரும்…)

புகைப்படங்கள்

Advertisements
5 Comments leave one →
 1. February 11, 2011 5:11 am

  உங்க பதிவ படிச்சவுடனே ஊருக்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு. 🙂

 2. February 14, 2011 9:19 am

  விரிவான பயண குறிப்பு.

  நாங்களும் வந்திருக்க வேண்டியது 😦

 3. February 18, 2011 12:28 am

  அன்பு உமா. உங்களைப் பார்க்க முடியவில்லையே என்ற குறையை இந்தப் பதிவைப் பார்த்தவுடன் கொஞ்சம் குறைவதை உணர்ந்தேன். படங்கள் மிக அருமை. ஒரு திகில் தெரிகிறது.
  குழந்தை அழாமல் இருந்தாள் என்பதே ஒரு அதிசயம். மிகவும் நன்றிமா.

 4. Sashidharan permalink
  February 21, 2011 2:45 pm

  Nice writeup.

Trackbacks

 1. Vizhiyan Photography – Pichavaram & Porto Novo – 2 « விழியன் பக்கம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: