Skip to content

பதினாறு வருட தேடல்

March 16, 2011

தேடல் இல்லாத வாழ்கை சலிப்பு. எத்தனை விதமான தேடல். சூழ்நிலைக்கும் எண்ணங்களுக்கும் ஏற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன தேடல்கள். என்னுடைய ஒரு தேடல் என் பால்ய கால நாயகனுடையது. செல்சன் சாம்வேல். எங்களது பள்ளியின் ஆங்கில ஆசிரியர். அப்படி எளிதாக சொல்லிவிட முடியாது. அவர் ஆங்கில ஆசிரியர் என்ற பெயரில் இயங்கினார். பள்ளியின் இசைக்குழுவை தோற்றுவித்தார். பல ஊர்களுக்கு அழைத்து சென்றார். எங்களுக்கு உலகினை காட்டினார்.

தேடல்:
பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் அவர் எங்கள் பள்ளியில் இருந்து விலகி வேறு ஊருக்கு மாறினார். இணையம் வரும் முன்னர் இருந்தே இவர் எங்கு இருக்கின்றார் என தேடல் துவங்கியது. பழைய நண்பர்களை பார்க்கும் போதெல்லாம் இவரை பற்றிய பேச்சும் ஏதும் இவரை பற்றிய செய்தி உண்டா என கேள்விகள் எழும். இணைய தொடர்பு வந்ததில் இருந்தே தேடி வருகின்றேன். “Selson Samuel” என போட்டு ஒவ்வொரு தேடுகளம், சமூக இணையதளங்களில் தேடிவந்தேன்.சில் நாட்கள் முன்னர் முகநூலில் எங்கள் பள்ளிக்கான ஒரு குழுவை துவங்கினோம். பழைய நினைவுகளை பகிர்ந்த போது, எல்லோரும் எங்கள் ஆசிரியர் செல்சனை தேடுவது தெரிந்தது. நண்பர்களாக சேர்ந்து தேடினால் என்ன என கேள்வி எழுந்தது. (செல்சன் என்ற பெயர்காரண் கூட நினைவிருக்கின்றது.

எங்கள் பள்ளி சி.பி.எஸ்.சி பள்ளி. குறிப்பிட்ட கேள்விகள் தான் வரும் என்றில்லை. முக்கியமாக ஆங்கிலத்திற்கு இந்த புத்தகம் என்று மட்டுமே சொல்வார்கள் ஆனால் கேள்விகள் ஆங்கில அறிவினை சோதிக்குமாறு தான் இருக்கும். மனனம் வேலைக்கு ஆகாது. மிகுந்த சிரமம் எடுத்து எங்களுக்கு பாடம் எடுப்பார். இவர் பாடல்களை விளக்கும் விதமே சுவையானது. ஒரு வரியை கடக்க அரைமணி நேரம் கூட எடுத்துக்கொள்வார். அதை விட அழகு கதைகளை சொல்லும் விதம். இன்னும் நினைவிருக்கின்றது அது ஒரு ரஷ்சிய கதை. இவான் என்பவன் கதாநாயகன். அவனுக்கும் பக்கத்து வீட்டுக்காரனக்கும் சண்டை நடக்கும். கதையை படித்தபடியே இவான் எப்படி உதைப்பான் என விஜயகாந்த் போல வகுப்பில் உள்ள சுவரில் ஓங்கி கால்களால் உதைத்தார். அந்த ஷூவின் தடம் இரண்டு வருடத்திற்கு இருந்தது.

பால்யத்தின் ஹீரோவாக எங்களுக்கு தெரிந்தவர் அவர். எதை சொல்ல எதை விட. எல்லாம் பசுமையான நினைவுகள். அவரின் வருடக்கனக்கான காதல் கதை, அவரின் காதல் திருமணம், விருந்தில் அவர் பாடிய பாடல், புதிதாய் குடியேறிய வீட்டில் எங்களுக்கு தந்த லெமன் ஜூஸ், கன்யாகுமரி பயணம், மார்த்தாண்டத்தில் அவர் அம்மாவின் பள்ளிக்கூடத்தில் தங்கிய இரவு, ரப்பர் தோட்டங்களை பற்றிய விளக்கங்கள், மேடை பேச்சிற்கு என்னை பழக்கிய நாட்கள், அவர் தந்த உற்சாகம், விழா ஏற்பாடுகளில் அவர் காட்டி நேர்த்தி, இசை மீதான பிரியம், மாணவர்கள் மீதான உண்மையான அக்கரை. .. இதில் எதையும் பிரித்தெடுத்து இதனால் பிடிக்கும் என சொல்ல முடியவில்லை. இவருடைய பழக்கம் கடந்து போன மேகமாக இருக்க கூடாது என ஆழமாக நம்பினேன்.

ஆஸ்திரேலியாவில் இருந்து மனீஷ் ஒரு சுட்டி அளித்து அதில் செல்சன் என்பவர் ஆங்கில ஆசிரியராக உள்ளார், மும்பையில் அந்த பள்ளி இருக்கு அவரா என கண்டுபிடிக்க முயற்சி செய் என கொடுத்தான். செல்சன் + ஆங்கில ஆசிரியராக இருப்பவரெல்லாம் அவராகிவிட முடியாதல்லவா. அந்த தளத்திலேயே மேலும் தேடினேன். அவர் இசைக்குழுவில் இருப்பதும் தெரிய வந்தது. எங்கள் பள்ளியிலும் அவர் இசைக்குழுவை துவங்கி இருந்தார். கிறுத்துவ பள்ளி என்பதால் கிருஸ்மஸ் மிக ஆடம்பரமாக விசேஷமாக நடக்கும்.  பிண்ணனியில் ஒலிக்கும் பாடல் மிக மென்மையாக காற்றில் பறப்பது போல இருக்கும். செல்சனின் கிடார் இசை மிக பிரபலம். அவர் எந்த தேதியில் சேர்ந்தார் என்றும் இருந்தது. சரியாக ஒத்துப்போனது. படங்கள் ஏதேனும் இருக்கா என பார்த்துக்கொண்டே வந்தேன். இடையில் அந்த பள்ளியின் மாணவர் சங்க தலைவரின் அலைபேசி எண் கிடைத்தது, 2 முன்னாள் மாணவர்களின் அலைபேசி எண் கிடைத்தது (உபயம் முகநூல்). ஒரு படத்தில் ஓரத்தில் அவர் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தார். ஆஹா கண்டுபிடுத்தேன்..ஆனந்தம்.

உடனே பள்ளிக்கே போன் அடித்து இந்த மாதிரி நான் அவருடைய மாணவர் நம்பர் தாருங்கள் என கேட்டேன் அவரும் ஆன்ந்தமாக கொடுத்தார். ரிங்க் அடித்தது..
“ஹலோ”..
“ஈஸ் இட் செல்சன்?”
“எஸ் செல்சன் ஸ்பீக்கிங்க்”
“சார்…”
“..”
“சார். நல்லா இருக்கீங்களா…”
“நல்லா இருக்கேன். யாரு…”
“சார். நான் உமாநாத் சார். வேலூர். சென்னையில இருந்து பேசறேன்..”
“உமாநாத்….. ஏய்ய்…எப்படி இருக்க..எப்படி இந்த நம்பர் கெடச்சது….”
நான் அவரை இன்னும் 30 வயது இளைஞராகவே நினைத்திருந்தேன். குரலில் தெரிந்த கரகரப்பு அவரின் வயதை காட்டியது. அவரின் குரல் கேட்ட போது தான் நான் அவரை எவ்வளவு தொலைத்திருந்தேன் என எனக்கே தெரிந்தது. அந்த பக்கம் அவர் எவ்வளவு ஆனந்தமாக இருந்தார் என அவரின் குரலில் தெரிந்தது. “Nostalgic”.பத்தாவது படிக்கும் மகளின் தந்தை. பொன்னான நிமிடங்கள். என் எழுத்து பயணத்தை சொன்னவுடன் மிகுந்த உற்சாகம் கொண்டார். “I am so proud Umanath” என்றார். பெருமையாக இருந்தது. ஒரு ஆசிரியனுக்கு மாணவன் கொடுக்கும் பரிசு. நன்றிக்கடன். ஒவ்வொருவரையாக எப்படி இருக்கின்றார்கள் என கேட்டார்.

மறுநாள் என்னை போனில் அழைத்தார். மீண்டும் வேலூரின் பழைய நினைவுகளை அசை போட்டோம். முக்கால் மணி நேரம் பேசி இருப்போம்.
“Those were days when i taught from heart, now i just give lectures” என்று மடலில் கூறினார்.

விரைவில் நேரில் சந்திக்க வேண்டும். நாங்கள் பேசும்போது இவர் தம்பியும் எழுதுவதாக தெரிவித்தார். அவரும் எனக்கு சின்ன வயதில் பழக்கம் உண்டு. தம்பியிடமும் பேசினேன்.சந்தோஷப்பட்டார். இவரும் ஒரு வலைப்பதிவர். அவர் பேசும் போது சொன்னது.”நாம் ஒவ்வொருத்தரும் எதையாச்சும் தேடிக்கிட்டு தான் இருக்கோம். கிடைச்சா எவ்வளவு சந்தோஷம் இல்ல..”  இல்லையா பின்ன..

– விழியன்

Advertisements
17 Comments leave one →
 1. March 16, 2011 1:30 pm

  கொடுத்துவைத்தவர் உமா நீங்கள்.
  மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எத்தனையொ தேடல்கள் இருந்தாலும் முனைப்பு இல்லாவிட்டால் நிறைவேறுவது சிரமம்.
  உங்களது விடாமுயற்சிக்கு என் அனபு மிகுந்த வாழ்த்துகள் மா.
  சீக்கிரமே அவரை நீங்கள் சந்தித்துப் பேசி அதையும் பதிவிடுங்கள்

 2. March 16, 2011 1:38 pm

  நெகிழ்ந்தேன். தேடல் அபாரம்.

 3. Ajith permalink
  March 16, 2011 1:38 pm

  Sooooper Uma..

 4. March 16, 2011 1:40 pm

  ம்ம்ம்ம்ம்ம்ம்……..
  மிக அழகாக எனது மனதைப் படம்பிடித்துள்ளீர்கள் …….வாழ்த்துகள் உமா

 5. Raveendran permalink
  March 16, 2011 5:07 pm

  Super anna… great…

 6. சேர்ம ராஜா அ permalink
  March 17, 2011 5:43 am

  🙂 ………….

 7. kousalya permalink
  March 17, 2011 5:43 am

  Hi Umanath, I am just moved with your writing.Nostalgic indeed!! I am also from Township English school,Vellore and so a proud student of Selson Samuel sir. Pls convey my regards to him when you speak to him next time. Also can you pass on his contact no too.

  Regards,
  Kousalya

 8. Sashidharan permalink
  March 17, 2011 6:49 am

  உங்கள் தேடல் பிரமிக்க வைக்கிறது விழியன்.

 9. March 17, 2011 8:38 am

  நல்ல தேடல், இம்மாதிரித் தேடலில் எங்க பொண்ணும் அவளோட பள்ளித் தோழர்கள், கல்லூரித் தோழர்கள்னு கண்டு பிடிச்சிருக்கா. அதே போல் அவளுடைய +2 ஆசிரியர் ஒருவரையும் கண்டு பிடிச்சிருக்கா. எனக்கும் சில உறவுகள் கிடைத்தது இணையம் மூலமே. வாழ்த்துகள் உமாநாத்.

 10. March 17, 2011 9:31 am

  great great great….

 11. Vaishali Kumar permalink
  March 17, 2011 10:02 am

  .”நாம் ஒவ்வொருத்தரும் எதையாச்சும் தேடிக்கிட்டு தான் இருக்கோம். கிடைச்சா எவ்வளவு சந்தோஷம் இல்ல..”

  எத்தனை உண்மையான வார்த்தைகள்….

 12. March 17, 2011 10:44 am

  made me speechless……grt!!!

 13. March 17, 2011 5:23 pm

  very interesting.. glad to see and I can understand the satisfaction you would have got.. I have also experienced this.. but it was not of 16 yrs old..

  have a good time.. best wishes to Selson Sir 🙂

 14. Arvindh permalink
  March 17, 2011 5:55 pm

  I kicked myself when I realised that our school days favourite teacher is right here in Mumbai and haven’t met him. I wished to meet our teachers but did not take the effort. Hats off Umanath… I am going to meet him within 48hours!!!

 15. March 18, 2011 4:45 pm

  நெகிழ்வான பதிவு. உண்மையான தேடல் ஒரு போதும் பொய்ப்பதில்லை.

 16. March 19, 2011 8:14 am

  தங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
  http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_19.html

 17. March 23, 2011 5:20 am

  தேடல் அருமை பராட்டுக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: