Skip to content

சில பகிர்வுகள்

June 17, 2011

வாழ்வின் அநேக நேரங்களை குழலி எடுத்துக்கொள்கின்றாள். அவளுடன் நேரத்தை பகிர்வதே இந்நேரத்தில் நான் செய்யும் நியாயமாக இருக்கும். மனதினை லேசாக்கிவிடுகின்றாள். அவளுக்காக ஊர் சுற்றல், குழந்தைகளை சந்தித்தல், பூங்கா செல்தல் என இனிமையாக கழிகின்றது. பல வாரங்கள் எனக்கொரு வலைப்பூ இருப்பதே மறந்துபோனது. இடையில் தங்கையின் திருமணம் வேறு. திருமண ஏற்பாட்டிற்கும், திட்டமிடலுக்கும் வார இறுதிகள் வெயிலில் காய்ந்தது. இது ஒரு சந்தர்ப்பமாக கருதி உறவினர்கள் பலரையும் சந்தித்தோம், நண்பர்கள் இல்லம் சென்றோம். திருமணங்கள் புதிய உறவினை வரவேற்கும் நிகழ்வுமட்டுமல்ல பழைய உறவுகளை கொஞ்சம் தூசி தட்டவும் உதவுகின்றது. சென்னை வெயில் தான் வாட்டி எடுத்தது. எல்லாம் சுபம்.

புத்தக விமர்சனம்:
இராமலஷ்மி அவர்கள் என் காலப்பயணிகள்/ ஒரே ஒரு ஊரிலே சிறுவர் நாவலை பற்றிய விமர்சனம் வைத்துள்ளார்.
விழியனின் இரு நாவல்கள் – ஒரு பார்வை
இராமலஷ்மிக்கும் வல்லமைக்கும் நன்றி. (http://www.vallamai.com/?p=3628)
குழந்தை வளர்ப்பு குழுமம்:
தற்போதைய சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பு ஒரு சாதாரண காரியமாக தெரியவில்லை. கடந்த தலைமுறைகளில் வெகு சாதாரணமாக இருந்த இந்த விஷயம் இப்போது பெரும் கவனத்திற்கு ஆளாகி உள்ளது. காரணங்கள் பற்பல. ஒரே காலகட்டத்தில் இருக்கும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள், அதனை கையாண்ட விதம், நடவடிக்கைகள், மகிழ்வான செய்திகள் ஆகியவற்றை பகிர ஒரு பெற்றோர் குழந்தைகள் வளர்ப்பு குழுமத்தை ஆரம்பித்துள்ளோம். இதுவரை மிக சிறப்பான விவாதங்கள் நடைபெறுகின்றன. ஒரு வயது முதல் மூன்று வயது வரை நிரம்பிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இது உதவியாக இருக்கும். தற்போது அவர்களின் பிரச்சனைகளே அதிக அலசப்படுகின்றது. பெற்றோராக போகின்றவர்கள் சேர்ந்தும் பயன்பெறலாம். விவாதங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் நிகழும்.
சுட்டி :குழந்தை வளர்ப்பு குழுமம்:  http://groups.google.com/group/09parentsclub

பண்புடன் வாசகர் வட்டம்:
தொடர்ச்சிய வாசகர் வட்ட நிகழ்வுகள் மகிழ்ச்சியினை தருகின்றது. வெற்றிகரமாக ஐந்து கூட்டங்கள் நடந்துமுடிந்துள்ளது. மே 29 தி.நகரில் உள்ள சடையன் சாபு ஐயா வீட்டில் கடைசியாக சந்திப்பு நடந்தது. பல புதிய முகங்களை தொடந்து சந்திப்பது மகிழ்வே. ஆனாலும் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம். அடுத்த வாசகர் வட்டம் ஜூன் 25, மாலை 3 மணிக்கு நடைபெறும். இடம் மட்டும் இன்னும் முடிவாகவில்லை. இது முன்னரிவிப்பாக எடுத்துக்கொள்ளுங்கள். வாசிப்பு செம்மைபடுத்துகின்றது, வாசிப்பின் பகிர்வு மேலும் வளப்படுத்துகின்றது.

பயணங்கள் மூலமே நான் வளர்ச்சி அடைகின்றேன். இன்றும் மதுரையில் இருந்திருக்க வேண்டியது. தவிர்க்க இயலாக காரணங்களினால் பயணிக்க முடியவில்லை. நாளை காலை செம்பரம்பபகம் ஏரிக்கு புகைப்படம் எடுக்கவும், இயற்கையை ரசிக்கவும் செல்கின்றோம். நண்பர்கள் சேர்ந்துகொள்ளலாம். சனிக்கிழமை காலை – 5.15 – செம்பரம்பபக்கம். 4.45 போரூரில் சந்திக்கலாம்.

தொடர்ந்து சந்திப்போம்.

– விழியன்

Advertisements
One Comment leave one →
  1. Karthik permalink
    June 17, 2011 1:45 pm

    nice 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: