Skip to content

ஏலகிரி பயணம் – 1

July 29, 2011

மீண்டும் ஒரு பயணம். ஆனால் இம்முறை இணையத்தில் சந்தித்துகொண்ட நண்பர்களின் குடும்பத்துடன். பல வருடம் பழக்கமுள்ள பள்ளி, கல்லூரி, ஊர், தெரு நண்பர்களை இப்போதெல்லாம் சந்திப்பதே அரிதாகிவிட்டது. அதிலும் ஒரு சுற்றுலா என்றால் சுத்தம், பதில் கூட வருவதில்லை. இந்நிலையில் இணைய நண்பர்களின் குடும்பங்கள் சுற்றுலா அசாத்தியம் என்றே ஏற்பாடு செய்யும் பொழுது நினைத்திருந்தேன். ஆனால் எதிர்பார்ப்பிற்கு மாறாக வாக்களித்த/ சம்மதித்த அனைவரும் ஆஜர்.

அதிகாலை 4 மணி முதலே அலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது. வண்டி சைதையில் இருக்கின்றது, நரேஷ் வீட்டில் இருந்து கிளம்பியாச்சு, ஆசாத் ஐயாவை ஏற்றிக்கொண்டாகிவிட்டது, ஐயப்பன் தாங்கல் வந்துவிட்டோம், ஹோட்டல் ஹைவே வந்துவிட்டோம் என்றபடி. எங்கள் வீட்டில் இருந்து நான், மனைவி, குழலி, தங்கை திவ்யா, மாப்பிள்ளை மீனாட்சி, ப்ரியா ஆகியோர் சென்றோம். நந்தா, நரேஷ் மற்றும் மகேஷ் (நரேஷ் மனைவி), ச.கி. நா என அழைக்கப்படும் நடராஜன் குடும்பத்தினர், ஆசாத் குடும்பத்தினர், அஷிதா & குடும்பத்தினர் ஸ்டாலின், அவர் மனைவி & எழில் ஓவியா, உதயன், ஓம் என 16 பேர் இருக்கைகள் கொண்ட வண்டியில் 21 பேர் ஏறினோம். பெரிய வண்டியில் சென்றிருந்தால் கூட இத்தனை ஆனந்தமாக இருந்திருக்குமா என தெரியாது. அத்தனை நெருக்கத்தில் நெருக்கத்தை உணர்ந்தோம். பூந்தமல்லி தாண்டிய உடனே கச்சேரி ஆரம்பமானது. பாட்டுக்கு பாட்டு வெகு ஜோராக துவங்கியது. சகிநாவின் குரல் டாப்கிளாஸ். ஆசாதின் பழைய பாடல்கள் அபாரம். வில்லன் என்கின்ற ஓமின் நினைவாற்றலையும் பாராட்டியாக வேண்டும். வழக்கம் போல ‘லகரத்தில்” பல பாடகள் துவங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டத்து. ஒரு கட்டத்தில் ல பாடல்களை தடை செய்தோம். அப்படியே வேலூர் வந்தது. மச்சான் ஏறிக்கொண்டான். டீ அருந்தினோம்.

அதுவரை தூங்கியவர்களும் எழுந்தாகிவிட்டது. பாடியடியே ஆம்பூர் அடைந்தோம். ஓ போகும் இடத்தை குறிப்பிடவில்லை. ஏலகிரி. மலைகளின் இளவரசி என அழைப்பட்டும் ஊர். இன்னும் கமர்சியலைஸ் ஆகாத மலை கிராமம். ஆனாலும் கடந்த 20 ஆண்டுகளில் ஏகப்பட்ட மாற்றங்கள். பத்தாம் வகுப்பு படிக்கும் போது நண்பர்களுடன் சென்ற நினைவு வந்துபோனது. ஆம்பூரில் பிரியாணி சாப்பிடலாமா என கேட்டார்கள். ஏலகிரியில் கிரிக்கெட் விளையாட பந்து தேடி வெகு நேரம் அலைந்து நந்தாவும் உதயனும் கடைசியில் ஒரே ஒரு பந்தினை வாங்கி வந்தார்கள். ஊசி வளைவுகளை கடந்து சுத்தமான காற்றினை சுவாசிக்க ஆரம்பித்தோம். மலை காற்றி மேனியை வருடியது உடல் சிலிர்த்தது. நல்ல வேளை வெயில் இல்லை. வானம் மப்பாக இருந்தது. நிலாவூருக்கு வழி கேட்டு ஏ.எம். ரிசார்ட் அடைந்தோம். அந்த டீல் பிடித்திருந்தது. மூட்டை முடிச்சுகளை எடுக்காமல் நேராக உணவருந்தும் இடத்திற்கு சென்று காலை உணவினை முடித்தோம். பொங்கல் உறக்கத்திற்கு அழைத்தது. மெதுவாக ஒவ்வொருவரும் எங்கே தங்குவது என தீர்மானித்து பைகளை எடுத்து வைத்தோம்.

குழலி செம குஷியாகிவிட்டிருந்தாள். அப்பா ஜாலி இருக்கு என தெரிவித்தாள். விளையாட சறுக்காமரம், ஊஞ்சல், வாத்து என இருந்ததாக இருக்கலாம், அல்லது அந்த குளிராக இருக்கலாம். உண்மையில் குழந்தைகள் தான் ஒரு சுற்றுலாவின் போக்கை தீர்மானிக்கின்றார்கள். அவர்கள் சுணங்கிவிட்டால் சுற்றுலாவே சுணங்கிவிடும். அங்கும் இங்கும் ஓடி ஆடினாள். மக்கள் குட்டி தூக்கம் போட்டபடியும் ஆங்காங்கே மொக்கை போட்டபடியும் அமர்ந்திருந்தார்கள். கிராமத்திற்குள் ஒரு நடை போகலாமா என வினவிய போது 10 பேர் மட்டும் வர கிளம்பினார்கள். மீதமுள்ளவர்கள் கிரிக்கெட் விளையாட கிளம்பிவிட்டனர்.

அப்பா, அம்மா & மகள் என மூன்று குடும்பங்கள் + ப்ரியா கிராமத்தை நோக்கி ஒரு இலக்கற்ற நடை நடக்க துவங்கினோம். கிராமம் வெகு தொலைவில் இருக்கின்றது. வெறும் நிலங்கள் மட்டும் தான். அருகே புதிதாக அப்பார்மெண்ட் கட்டிக்கொண்டிருந்தார்கள். ஏலகிரியின் அழகினை இது கெடுத்தது. ஆசாத் மகளும் சகிநா மகளும் முதல் முறையாக சீதாபழத்தை பார்த்து அதிசயித்தனர். மரமொன்றில் இருந்து பழத்தை பறித்து சில்லென உண்டோம். குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்ததுபோல இருந்தது. எங்கும் ப்ளாஸ்டிக் காணவில்லை. திருப்தியாக இருந்தது. அப்பார்ட்மெண்ட் கட்டும் தொழிலாளிகளிடம் பேச்சு கொடுத்தோம். மீண்டும் தங்கிய இடத்திற்கு சென்று நன்றாக உண்டோம். சிக்கன் சூப்பராக இருந்தது 🙂

அவரவர் கொஞ்சம் குட்டி தூக்க போட்டுவிட்டு ஏரிக்கு கிளம்பினோம். ஏலகிரியின் முக்கிய கவர்ச்சி இந்த ஏரி தான். அதனருகே இருக்கும் பூங்காவில் பல வருடம் முன்னர் ‘காதலி’ பட ஷூட்டிங் பார்த்த நினைவு. போகும் வழியில் நிறைய பழங்கள் உண்டோம். ஸ்டார் பழம் சுவைத்தது. சிலர் படகு சவாரி சென்றனர். ஸ்பெ குட்டி தூக்கம் போட்டார், சிலர் ஏரியை சுற்றி வருவதென கிளம்பினோம். இங்கு தான் பல முக்கிய புகைப்பட கலைஞர்கள் கிளம்பினார்கள். வில்லன், ப்ரியா, மீனாட்சி கேமராக்களில் சுட்டு தள்ளினர். குழலி நந்தாவை கண்டாலே பயந்தபடி இருந்தாள். குடிசை ஒன்றில் சூடான வடைக்கு ஆர்டர் கொடுத்தார் ஆசாத். மணி ஐந்திற்கு மேல் ஆனது.
—–

இரவு இரண்டு மணிக்கு படுக்கைக்கு சென்றேன். அப்படியே அன்றைய நினைவுகள் நெஞ்சில் ஓடியது. நடு இரவு ஒரு மணிக்கு தூக்கம் வரவில்லை என நானும் நந்தாவும் நடக்க கிளம்பினோம். ஏ.எம்.ரிசார்ட்ஸ் இருப்பது யாரும் அருகில் இல்லாத இடத்தில். இருட்டு மட்டுமே துணை. அலைபேசியின் வெளிச்சம் கொண்டு வெளியே சென்றோம். எதிரில் இருந்த வக்கீல் வீட்டு வாசலில் மட்டும் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. மலைகளில் இரவு ரம்மியமானது. அது மனதை குளிரசெய்யும் வல்லமை கொண்டது. அதன் வான் இன்னும் அழகானது. சென்னையில் 100 நட்சத்திரம் தெரியும் என்றால் அங்கே நிச்சயம் 4-5 மடங்கேனும் அதிகமாக தெரிகின்றது. கேரளாவில் ஒரு காலை காட்சி பற்றியும் இமயத்தில் நிலாவினை கீழே பார்த்தது பற்றியும் நந்தாவிடம் சொல்லியபடி நடந்தோம். 200 அடி எடுத்து வைத்திருப்போம், திடீரென இரண்டு நாய்கள் எங்களை துரத்தியது. நாய் எங்கே இருந்து குரைக்கின்றது எனக்கூட தெரியவில்லை. பயம் உடல் முழுக்க படர்ந்தது. ஷூ ஷூ என சொல்லியபடியே நகர்ந்தோம். நாயின் சத்தம் தூரத்தில் கேட்க ஆரம்பித்தது. ரிசார்ட் வாசலில் அமர்ந்துகொண்டோம். என்ன பேசினோம் ? ஆனால் மிக நெருக்கமான பேச்சு. மறுநாள் காலை சீக்கிரம் எழுந்துகொள்ள வேண்டும் என்பதால்.

ஒரு மணி வரை சீட்டுகட்டு விளையாடிய களைப்பில் உறங்கிக்கொண்டிருந்தனர் வில்லன், ஸ்பே மற்றும் நண்பர்கள். அது பதினோரு நபர்கள் படுக்கும் பெரிய அறை அங்கே தான் இரவு உணவிற்கு பிறகு கூடினோம். முதலில் படத்தின் பெயரை சைகையால் கண்டுபிடிக்கும் விளையாட்டு. ஜித்தர்கள் ஒரு அணியிலும் போட்டி பற்றிய ஞானம் குறைவாக இருந்தவர்கள் ஒரு அணியிலும் பிரிந்தோம். எப்பாடி என்ன டேட்டாபேஸ் என்ன டேட்டாபேஸ். படப்பெயர்கள் குவிந்தது. இரண்டாவது அணி பலம் இழந்த அணியாக இருப்பதினால் ஈடுகட்ட நந்தா மட்டும் அணி மாறினார். நந்தா வந்தவுடனே வெற்றி முகம் தான். ஜித்தர்கள் அணி நிறையவே திண்டாடினார்கள். அத்தனை திறமை + அனுபவம் இருந்தும் 🙂 ஸ்பெவின் ஜித்தன் நடிப்பும், சகிநா மகன் கார்திக்கின் ஜெநோவா நடிப்பும் உச்சம்.

ஆசாத், சகிநா உறங்க செல்ல சீட்டு கட்டு விளையாடினோம். சிவாரஸ்யமான ஆட்டம். 3-4 ஆட்டம் சென்றிருக்கும். களைப்பில் உறங்க சென்றனர். இரவு நடனமாடிய களைப்பாக இருக்கலாம் அல்லது மதியம் விளையாடிய கிரிக்கெட்டாக கூட இருக்கலாம். மதியம் ஒரு மினி ஐபிஎல் நடந்து முடிந்திருந்தது. மக்கள் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினர். கணவன்கள் விளையாடும் ஆட்டத்தை காண வாய்பு கிடைத்ததாக மனைவிமார்கள் பெருமையாக பேசினர்.. மாலை இயற்கை பூங்காவில் கண்களுக்கு விருந்து கிடைத்தது. பல பூக்கள், பச்சை நிறம், நீர், இலைகள், செயற்கை அருவி, புகைப்படங்கள் என இனிமையாக கழிந்தது. அங்கிருந்து திரும்பிய பின்னர் பயர் கேம்ப் வைத்தோம். நடுவில் நெருப்பை குவித்து நாங்கள் அதனை சூழ்ந்து அமர்ந்தோம். திவ்யா தன் லேப்டாப்பில் மெல்லிசையை ஓடவிட்டிருந்தாள். குளிர் அதிகமும் இல்லை, குறைவாகவும் இல்லை, ரசிக்கும்படியாகவே இருந்தது. முதல் பலிகடா நான் தான். மொக்கையாக ஏதோ செய்ய சொன்னார்கள், அதைவிட மொக்கையாக செய்து அமர்ந்தேன். தொப்பி ஒன்றினை சுற்றில் விட்டு யார் கையில் இருக்கும்போது இசை நிற்கிறதோ அவரே அடுத்த பலி. இப்படியே ஒவ்வொருவராக மாட்டினார்கள். சுதாகரின் செய்கைகள் நன்றாக இருந்தது. குழந்தையை கையில் வைத்திருந்ததால் தாய்மார்கள் தப்பித்தார்கள். இன்னும் அரைமணி நேரத்தில் சப்பாத்தி/ பரோட்டா ரெடியாகும் என்ற செய்தி வந்ததும். குத்து பாடல்கள் ஒலிக்க துவங்கியது. ஆரம்பத்தில் ஏதாவது கூச்சம் இருக்கும் என நினைத்தேன், யாருக்கும் அது இருப்பதாக தெரியவில்லை. உள்ள புகுந்து ரகளை தான். உற்சாகமாக நடனமாடினோம், சிலர் கை கால்களை அசைத்தனர்.

சூடான சப்பாத்தி, பரோட்டா, சிக்க குழம்பு..ஸ்ஸ்ஸ்..

(குறிப்பு: துரை ஐயா பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். தூத்துக்குடியில் இருந்து ஏலகிரி நோக்கி வரும் வழியில் திண்டுக்கல் அருகே டையர் பஞ்சராகி அவர் குடும்பத்தின் கனவினையும் பஞ்சராக்கிவிட்டது. அவருக்கு இருக்கும் உற்சாகமும் துடிப்பும் நமக்கு எப்போது வாய்க்குமோ. மதியம் 3 மணி வரையில் நிச்சய்ம் டயர் ரெடியானதும் வந்துவிடுகிறேன் என்றே சொல்லி வந்தார். டயர் மதுரையில் இருந்து வர தாமதமானதும் ஆங்கேயே அறை எடுத்து தங்கிவிட்டார். அவர் வந்திருந்தால் எங்களுக்கும் அவர் குடும்பத்திற்கும் நன்றாக இருந்திருக்கும். )

(தொடரும்)

– விழியன்

Advertisements
2 Comments leave one →
  1. July 29, 2011 8:56 am

    wow.. travellogue is nice 🙂 enjoy maadi..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: