Skip to content

அயனம்பாக்கதில் ஒரு அதிகாலை

August 1, 2011

அயனம்பாக்கதில் ஒரு அதிகாலை

கூகிள் மேப்ஸ் வழியாக நீர்நிலைகள் எங்கே இருக்கின்றது என ஆராய்ந்த போது வீட்டின் அருகிலேயே ஏரி ஒன்று இருப்பது தெரிந்தது. அயனம்பாக்கம் ஏரி. இணையத்தில் ஏதேனும் செய்திகள் கிடைக்குமான என ஆராய்ந்து ஏமார்ந்து தான் போனேன். சரி என்ன தான் இருக்கின்றது பார்த்துவிடுவோமே என நான், மனைவி & குழலி கிளம்பினோம்.

வேலப்பன்சாவடியில் ஏற்கனவே செந்தில் பிரபு காத்திருந்தார். செந்தில் பிரபுவை முதல் முறையாக சந்திக்கிறேன். வலைப்பூவில் அறிமுகமாகி, முகநூலில் நட்பு தொடர்ந்தது. சூடான தேநீர். திருவேற்காடு செல்லும் பாதையில் எங்கோ திரும்பவேண்டும் என்று மேப்பில் பார்த்த நினைவு. பெட்ரோல் பேங் அருகே திரும்பினோம். கொஞ்ச தூரத்தில் சின்ன கோவில் ஒன்று. இடப்பக்கம் நீர் தெரிந்தது. வண்டி நிறுத்தி லொக்கேஷன் பார்த்தோம். இன்னும் போதிய வெளிச்சம் இருக்கவில்லை. ஆனால் அந்த கருநீலம் மயக்கமானது. கண்களுக்கும் கேமராவிற்கும் அது போதை. செந்தில் பிரவுவை நானும் மனைவியும் பேட்டி எடுத்தோம். ஊர், கல்லூரி, வேலை, கேமரா..

ஏரியில் இருந்து கிளம்பிய சத்தம் / ஓசை நிறைய பறவைகள் இருக்கின்றது என தெரிவித்தது. ஆனால் அவ்வளவு பறவைகள் இருக்கும் என நினைத்தும் பார்க்கவில்லை. இதே போல செம்பரம்பாக்கம் ஏரியிலும் ஏராளமான பறவைகளை நானும் நந்தாவும் பார்த்திருக்கிறோம். சல சலவென நீந்துவது, பறப்பதும்,  கூட்டமாக செல்வது என பரபரப்பாக இருந்தது அவை. கறுப்பு நிறத்தில் இருந்தது.

நிறைய தாமரைகள் இருந்தது. லில்லி மலர்களும் அங்காங்கே இருந்தது. வானம மேகமூட்டத்துடன் இருந்ததால் மெதுவாகவே புகைப்படம் எடுத்தோம்.

ஏரிகளில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை, மக்கள் அங்கு செய்யும் அசிங்கம் தான். புகைப்படத்தில் வாசனையும் சேர்ந்திருந்தால் பாதி படங்கள் கப்படிக்கும்🙂 வண்டியில் அப்படியே எவ்வளவு தூரம் ஏரி இருக்கிறது என ஆராய்ந்தோம். குழலி வீட்டுக்கு போகலாம் என சொல்ல ஆரம்பித்துவிட்டாள். அவளை கீழே விழாதது கூட காரணமாக இருக்கலாம். சில இடங்களில் ப்ளாஸ்டிக் பொருட்கள் இருந்தது. ஏரியின் முடிவினை பார்க்கமுடியவில்லை. ஒற்றையடி பாதை அங்கே சென்றது.

ஆனாலும் இன்னும் நிறைய புகைப்படங்கள் திரும்பி வருகையில் தெரிந்தது. வழக்கம் போலவே ஒரு தேநீர், இரண்டு இட்லியும் முடிந்தது ஷூட், துவங்கியது அன்றைய தினம்.

– விழியன்

4 Comments leave one →
  1. August 1, 2011 6:31 am

    நல்ல பதிவு.

  2. drtv permalink
    August 1, 2011 10:05 am

    எங்கே ஒரு படத்தையும் காணோம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: