Skip to content

குழலியால் (2)…

August 16, 2011

தளுக்கு தினங்கள்

இன்றும் நேற்றும் அதற்கு முந்தைய நாளும்
முகம் ஜொலித்ததாம்
முறையே
பிஞ்சு கைகளில் என் முகம் துடைந்திருந்தாள்
வெகுநேரம் ஆனை சவாரி செய்திருந்தாள்
கன்னத்தில் முத்தமிட்டு தொப்பையில் உறங்கினாள்

நாளையும் மறுநாளும் அடுத்த வாரமும்
என் முகம் பிரகாசிக்கும்
எனக்கென்ன காரணமா கிடைக்காது

—————————————————————————–

ஆனந்த அகராதி

அவள் பிறந்தபோதே
அவளுக்கான அகராதியும் பிறந்தது.
சொற்கள் ஏதுமின்றி
வெறும் சத்தங்களால் நிரம்பி வழிந்தது

மெல்ல சொற்கள் வெளிவந்தன
ஒவ்வொரு நுழைவிற்கும்
ஆச்சரியங்களும்
முகப்பூரிப்புகளும்

சொற்கள் நிரம்பின
இல்லம் முழுக்க
அவை அலைந்து திரிந்து ஆனந்திட்டன
அர்த்தங்களை அத்தனை எளிதில்

அர்த்தப்படுத்தல் ஆகாது
தேவையும் இருக்கவில்லை

வளர வளர சொற்கள் வெளியேறின
அனைவருக்கும் புரிந்த அகராதிக்கு

ஒன்றிரண்டு சொற்களை மட்டும் விடுத்து
காலியாய் போனது
அவளுக்கான அகராதி

நன்றி – பண்புடன் இணைய இதழ்

– விழியன்

 

 

 

 

 

2 Comments leave one →
  1. August 16, 2011 2:17 pm

    மழலைக் குரல் இனிது.
    வாழ்த்துக்கள்.

  2. August 20, 2011 4:54 pm

    good ! I like this. congratz!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: