Skip to content

குழலியால்..

August 16, 2011

குழலியால் எழுதிய கவிதைகள்..

‎நகர்வாழ் குழந்தை

கண்ணிழந்த ரமேஷ்
காலுடைந்த ஸ்வேதா
சட்டை கிழிந்த ஆர்த்தி
தலை கவிழ்ந்த மோனிகா
பிள்ளையை சுமக்கும் சீதா
எப்படியோ கிடைக்கிறது
பொம்மைக்கான பெயர்கள்

இவற்றுடனே கழிகின்றன
மகிழ்ந்தாடி சண்டையிட்டு
இன்புற்று கழிய வேண்டிய நாட்கள்

——————————————————————

பொம்மைகள் பேசும்
நம்பவில்லை நானும்
நடு இரவில் எனையெழுப்பி
காக்கா காலுடைந்த கதையும்
கரடி (டெட்டி) டெல்லி போன கதையும்
ரமேஷ்- சுரேஷ் காலேஜ் கதையும்
ரகசியமாய் அம்மாவிற்கு கேட்காமல்
காதினில் சொல்லிவிட்டு
சீதா சொன்னாப்பா என்றாள் !
பொம்மைகள் ஏன் நம்மிடம் பேசுவதில்லை

——————————————————————

கோடுகளும் அவளும்

பென்சில் பிஞ்சுவிரலில் தவழ்கின்றது
சுற்றி சுற்றி கோடுகள் பிறக்கின்றது
”கண்டுபிடிங்க பார்க்கலாம்” என்கிறாள்
சிங்கம் – இல்லை
மான் – இல்லை
மயில் – ஆமாம்
வேகமாக தலையசைக்க
கோடுகள் வளைந்து நெளிந்து
அவள் அசைத்ததற்கு மாறிக்கொண்டன

——————————————————————

– விழியன்

4 Comments leave one →
  1. August 16, 2011 2:14 pm

    அருமை.

  2. August 16, 2011 3:14 pm

    arumai🙂

  3. sundaram G permalink
    August 18, 2011 5:48 am

    Ungal pugolakavithai..ennai suraiyadivittadhu..

    Manathil pala pathivugal ungal kavithai padithapodhu..

    Anbudan
    G.Sundaram

  4. August 23, 2011 4:54 am

    nice

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: