Skip to content

தொடர் பயணங்களுக்கு பின்னர்

September 23, 2011

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எத்தனை பயணம்.  நினைத்துப்பார்த்தாலே கொஞ்சம் அயர்ச்சி தட்டுகின்றது. ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் திருக்கடையூர், காரைக்கால், வேதாரண்யம், வேளாங்கண்ணி, கோடிக்கரை, நாகப்பட்டினம். ஒரு வார இடைவெளியில் தில்லி, இமயம் (ஜாகேஷ்வர்). அதனை தொடர்ந்து திருவண்ணாமலை, ஆரணி. அடுத்த வாரமே விழுப்புரம்.

ஒவ்வொரு பயணத்தில் காரணிகள் வேறு வேறு. பயணங்களே உயிர்ப்புடன் வைக்கின்றது. பயணங்களுக்காகவே வாழ்வதாக நினைத்துக்கொள்கிறேன். இதில் குழந்தைக்கு தான் அதிக சிரமம் இருக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் குழலி தான் எல்லா இடங்களிலும் அதிகமாக மகிழ்ந்தாள். நிச்சயம் அப்பனை போல் இல்லாமல் அவள் உலகம் சுற்றுவாள். (கூடவே என்னையும் அழைத்து செல்வாள்).
0
காரைக்கால் அருகே பார்த்த சரஸ்வதிக்கான கோவில் அந்த பயணத்தில் மிகவும் பிடித்திருந்தது. கூத்தனூர் சரஸ்வதி கோவில். ஒரு தந்தை முதல் முறையாக தமிழ் எழுத்துக்களை மகனுக்கு மடிமேல் அமர்த்தி கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார்.
0
தில்லியில் இந்தி தெரியாததால் நிறைய ஏமாற்றிவிட்டார்கள். வெளியூர் காரர், இந்தி தெரியாதவர் என முகத்தில் அப்பி இருக்கின்றதா என தெரியவில்லை. ஒவ்வொருத்தரும் ரவுண்டு கட்டி ஏமாற்றி தயாராகின்றார்கள். எப்படியோ ஏமார்ந்தது இரண்டு மூன்று பேரிடம் தான்.
0
செங்கோட்டை வாசலில் மதுரைக்கார போலிஸ்காரரை சந்தித்தோம். ரொம்ப இனிமையாக பேசினார். ஊரில் பார்த்திருந்தால் மட்டு மரியாதை கூட இருந்திருக்காது. தமிழ் என்றதும் விரைப்பாக நின்ற ஆர்மி ஆளும் சிரித்தார். திருநெல்வேலிங்க, நீங்க?
0
இமயம் என்றாலே ஒரே ஒரு பெரிய மலை. எங்கும் பனி, அமர்நாத் மட்டும் தான் இமயம். கடும் குளிர் இருக்கும். மவுண்ட் எவரஸ்ட் மட்டும் இமயம். இமயத்தில் டெண்டு போட்டு மட்டுமே உறங்க முடியும் என பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றது. இமயம் மிகவும் விஸ்தாரமானது. அதனை சுற்றி முடிக்க ஒரு ஆயுள் போதாது.
0
காத்கோடம் டு ஜாகேஷ்வர் பயணம் அலாதி ரசனையானது. இந்த பயணமே இமயத்தின் பிரம்மாண்டத்தை விளக்கிவிடும். என்ன பெரிய மலைகள். இந்த சமயம் மழை பெய்து சாலைகள் பாதியாகி போய் இருந்தன. நிலச்சரிகளை நேரடியாக கண்டோம். கொஞ்சம் பயத்தை கூட்டியது என்னவோ உண்மை தான்.
0
சுமார் 10 வருடம் முன்னர் நான், சரவணன், கார்திக் மூவரும் ஒரு காலை வேளை திருவண்ணாமலையில் சந்தித்துக்கொண்டோம். ஒரு ஹோட்டலில் உணவு உண்டோம். சரவணன் தவிர யாரிடமும் பர்சில் பணமில்லை. கல்லூரி முடித்த காலம். அதே ஹோட்டல் முன்னர் குடும்பத்தாருடன் நின்றிருந்தோம். பழைய நினைவுகள் மனதை வாட்டியத். இலக்கின்றி திருவண்ணாமலையில் சில நாட்கள் சுற்றி இருக்கின்றேன். இன்று அவசரம். இங்கு முடிச்சு அடுத்து அங்க, அங்க முடிச்சு அவன் வீடு, அங்கிருந்து ஊருக்கு. ரொம்ப அவசரமாகிவிட்டது.

0

திங்கட்கிழமையில் தில்லியில் இறங்கியதால் அநேக சுற்றுலா இடங்கள் மூடிவிட்டு இருந்தனர். பிர்லா மந்திர், இந்தியே கேட், குதுப் மீனார், ராஜ் காட் மற்றும் சென்றோம். குதுப்மினாரில் நேரமே போதவில்லை. கால்வாசி கூட பார்க்கவில்லை. இடைச்சொறுகலாக சென்றதால் நேரம் பத்தவில்லை.
0
பயணங்கள் அடுத்த பயணத்திற்கு ஆசையை வளர்த்துவிடுகின்றது.
0
பயணங்கள் என்னை உயிர்ப்புடன் வைத்துக்கொள்கின்றன.
0
பயணங்களுக்கு இடையே வாழும் வாழ்கை சுவையாக கழிகின்றது.
0
காரைக்கால் சுற்றி தான் எத்தனை கோவில்கள். சுற்றிக்கொண்டே இருந்தாலும் முடிக்க முடியாது போலும். ஸ்ரீவாஞ்சியம் கவர்ந்தது. கோடிக்கரை சரணாலயத்தில் சுற்றி சுற்றி மொத்தம் இரண்டே மான்களை கண்டோம். வெயில் வதைத்து எடுத்தது. பறவைகள் ஒன்றையும் காணவில்லை. கோடிக்கரையில் பறவைகள் சரணாலயமும் இருக்கின்றது. ஆப் சீசன் போலும். வேதாரண்யம் டு கோடிக்கரை வழியில் சாப்பிட்ட அந்த ரோட்டுக்கடை சாம்பார் நாவில் நிற்கின்றது. “அண்ணே சாப்பாடு நல்லா இருந்தது” என்றபோது கடைக்காரர் முகத்தில் புன்னகை. யாருமே சொல்லி இருக்க மாட்டாங்க போல. நல்லா இருந்தா எங்கையும் வாழ்த்துங்க. அது அவர்களுக்கு தரும் மகிழ்ச்சி அளவிட முடியாதது.


0
தில்லிக்கு ரயில் காலை 6 மணிக்கு. இரவு 12 மணிக்கு மாமாவை பேருந்து நிலையத்தில் விட்டு தேநீர் அருந்தலாம் என கிளம்பினோம் நான், உதயன், கேபி. ஐயப்பன் தாங்கலில் இருந்து போரூர் வரை சென்றோம், கடையில்லை. சரி குமனன்சாவடிபக்கம் போவோம் எனவும் சென்றோம். கடையில்லை. அப்படியே பூந்தமல்லி நோக்கி சென்றோம். எதிர்புறத்தில் எல்லா வாகனங்களையும் அங்கிள்கள் பிடித்து பரிசோதனை செய்துகொண்டிருந்தார்கள். திரும்பி வந்தால் ரிஸ்க் என பூந்தமல்லி-கோயம்பேடு நெடுஞ்சாலையில் சுமார் 7 கி.மீ சுற்றி வேலப்பன்சாவடி அடைந்து அங்கே ஒரே ஒரு டீக்கடை இருந்தது. ஒரு டீ சாப்பிட 13 கி.மீட்டரா என வருத்தம் மேலிட்டதால் நானும் கேபியும் இரண்டு டீ அடித்தோம்.
0
வாழ்கையில் போது போதும் என்று சாப்பிட சென்னை – தில்லி ராஜ்தானி அல்லது தில்லி – சென்னை தொரந்தோ எக்ஸ்பிரஸ்ஸில் பயணிக்கவும். எம்மா கொடுத்துட்டே இருக்காங்க (நாம கொடுத்த காசுகிற்கு என்றாலுமே). சலிப்பதே இல்லை. டீ, பிஸ்கட், சூப், காலை உணவு, மதிய உணவு, ஸ்வீட், பப்ஸ், …. தின்றே பெருத்தோம்.

0

விழியன் எனக்கு தரும் கல்யாணப்பரிசே  நீங்க எடுக்க போகும் என் திருமண புகைப்படங்கள் தான் என சொன்ன ஆத்மநண்பன் திருமணத்தை தட்டி கழிக்க முடியவில்லை. வாழ்க செந்தில்நாதன் & அகிலா.


0
சமீபத்தில் மிகவும் தொல்லை கொடுக்கும் பாடல் இது. கேட்டு மகிழவும்

0

புதிதாக பில்டர்கள் கேமராவிற்கு வாங்கி வந்தான் செந்தில்நாதன். இன்னும் பரிசோதிக்கவில்லை. சூரிய உதயம் & அஸ்தமனத்திற்கு ஸ்பெஷல் பில்டராம். ஆர்டர் செய்த பிரசன்னாவிற்கு நன்றி.

(தொடரும்)

– விழியன்

Advertisements
16 Comments leave one →
 1. Guhan CP permalink
  September 23, 2011 5:39 am

  Your photo graphhy is ultimate … I feel your place is some where else not only for FB … I am wishing you all the best for your future growth in photography …

  Wishes to you Vizhiyan …

  Guhan

 2. Aravind permalink
  September 23, 2011 5:51 am

  Excellent post. Expecting a exclusive post on himalayas 🙂

  ~Aravind

 3. September 23, 2011 5:53 am

  நெக்ஸ்ட் வேர்ல் டூர் போக வாழ்த்துக்கள்..

 4. September 23, 2011 5:54 am

  நெக்ஸ்ட் வேர்ல்ட் டூர் போக வாழ்த்துக்கள்..

 5. ganesh kumar rajappa permalink
  September 23, 2011 5:58 am

  டெல்லி: என்ன நடந்தது? நான் நாட்கள் ஜோடியை டெல்லி பயணம் செய்ய வருவேன்.

 6. selva permalink
  September 23, 2011 5:59 am

  ulagam suttrum family man… good…good… enjoy anna…

 7. karthic permalink
  September 23, 2011 6:19 am

  post are good

 8. Raveendran BS permalink
  September 23, 2011 6:40 am

  http://youtu.be/ib3r6mPD3aY This is one more song in the same line… I think you will enjoy this too…

 9. Kanthi Jagan permalink
  September 23, 2011 7:41 am

  நிச்சயம் அப்பனை போல் இல்லாமல் அவள் உலகம் சுற்றுவாள். (கூடவே என்னையும் அழைத்து செல்வாள்). Sure, she will….!!

  It’s high time you learnt Hindi, Vizhiyan. Try to learn it.

  Best Wishes..
  ~kanthi~

 10. Jasan Pictures permalink
  September 23, 2011 8:42 am

  வழக்கம் போல் நல்ல கட்டுரை

 11. நாகை சிவா permalink
  September 23, 2011 9:02 am

  🙂 இமயம் முதல் குமரி வரை ஒரே மாதத்தில்……….. 🙂

  • September 27, 2011 5:48 am

   🙂 உங்க வீட்டுக்கு வந்ததை அடுத்த குறிப்பில் போட்டுவிடுகிறேன் 🙂

 12. September 23, 2011 11:27 am

  அருமையான சுற்றுலா பதிவு.
  வாழ்த்துக்கள்.

 13. kiran permalink
  September 27, 2011 4:00 am

  Photos are very good. Loved the video post 🙂

 14. Sashidharan permalink
  September 27, 2011 2:46 pm

  mikavum arumai vizhiyan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: