Skip to content

ஏழாவது வாசகர் வட்டம் – இம்முறை விடிய விடிய

September 26, 2011

ஏழாவது வாசகர் வட்டம் – இம்முறை விடிய விடிய

காரணங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலம் ஒரு காரியத்தை செய்யாமல் இருக்க. அப்படி அடுக்கிக்கொண்டே போன காரணங்களை தகர்த்தெரிந்து மீண்டும் வாசிக்க வைத்தது பண்புடன் வாசகர் வட்டம். உண்மையில் இந்த வாசகர் வட்டத்தின் அடிப்படை காரணியே இது தான். சோர்ந்து போன வாசகர்களை உற்சாகப்படுத்தவும், வாசிப்பின் விஸ்தாரத்தை உணர்த்திவிடவும், வாசிப்பின் கூர்மை, வேறு விதமான பார்வைகள், கலந்துரையாடல் இன்னும் பல.

நண்பர்களுடன் இருக்கும் போது இரவில் தான் மனம் இன்னும் லேசாலும், இன்னும் ஆழமாக பேசும், இன்னும் உணர்ச்சிவசப்படும். அதனால் தானோ என்னவோ இம்முறை வாசகர் வட்ட சந்திப்பு விடிய விடிய என்றதும் அனைவருக்கும் மகிழ்ச்சி சற்று கூடுதலாய் அமைந்தது. குறுகிய நண்பர்கள் வட்டம். சண்முகம் என்னும் நண்பர் மட்டும் தான் புதிய முகம். உதயன், ஷண்முகப்ரியா, நந்தா, நரேஷ் & துணைவி, ஓம் ஸ்ரீ, மொராஜி , அச்சு சுதாகர், வித்யா, நிலாரசிகன்.

எங்கேயும் எப்போதும் படத்தின் அஞ்சலி கதாபாத்திரத்தை பற்றி விவாதம் துவங்கியது. Characterization பற்றி இரண்டு பக்கமும் விவாதம் சூடாக சென்றது. மேலும் படத்தில் ரசிக்கும்படியான காட்சியமைப்பினை பற்றியும் உரையாடல் நகர்ந்தது.

உச்சகட்ட வாசிப்பின் அடுத்த கட்டம் நிச்சயம் எழுத்து தான். உச்சம் என்பதை காட்டிலும் எதோ ஒரு சந்தர்பத்தில் நமக்குள் இருக்கும் எழுத்து திறமையினை எதோ ஒரு சந்தர்ப்பத்தில் மெழுகேற்ற வேண்டும். வாசகர் வட்டம் ஆரம்பிக்கும் பொழுதும் இந்த ஒரு நோக்கமும் இருந்தது. நண்பர்களின் எழுத்து திறமையினையின் இனம் கண்டு அதனை செழுப்பாக இந்த வட்டம் நிச்சய்ம் ஒரு உந்துதலாக இருக்க வேண்டும் என்பதே அவ்வெண்ணம். இம்முறை அதனை நடைமுறை படுத்தும் விதமாக ஒரு நபரின் எழுத்தில் இருக்கும் பலம், பலவீனம், செல்ல வேண்டிய பாதை என்று ஆக்கபூர்வ விமர்சனத்தினை யார் மீது வைக்கலாம் என்றபோது இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த ஓம் ஸ்ரீயை டார்கெட் செய்தோம்.

ஓம் ஸ்ரீயின் பலம், பலவீனம், எங்கே தவறுகின்றான், எங்கே திறம்பட அவனது ஆற்றல் வெளிப்படுகின்றது என ஒவ்வொருவராக மனதில் எந்த தடையில் இன்றி பேசினார்கள். நிச்சயம் ஓம் ஸ்ரீக்கு இது நல்ல பாடமாகவும், வழிகாட்டுதலாகவும் இருந்திருக்கும். கடைசியில் அவன் ஏற்புரையும் இனி அவன் செல்லப்போகும் திசையினை பற்றியும் கூறினான். நிச்சயம் நிறைவாக இருந்தது இந்த பகுதி.

அடுத்து மோர், பின்நவீனத்துவம் என்றால் என்ன என வினவியபோது. அதற்கு சில விளக்கங்கள் கொடுத்தபடியும் உனக்கேற்ற ஆள் நிலா என சொல்லி முடிக்க நுழைந்தான் நிலா. நூறு ஆயுசு. வந்தவுடன் 361 டிகிரியின் இரண்டாம் இதழினை அனைவருக்கும் கொடுத்தான். விபாகை அண்ணனின் அற்புதமான டிசைன் மெய்சிலிர்க்க வைத்தது. இந்த இதழின் மிக முக்கியமான படைப்புகள் பற்றியும் சில சுவாரஸ்யங்கள் பற்றியும் பேசினோம். நிலாவின் மழைவழிபயணம் என்ற கவிதை பற்றிய விவாதமும் நடந்தது. அதன் மூலம் பின்நவீனத்துவம் என்றால் என்ற விளக்கங்கள் மோருக்கு வழங்கினோம். அப்பாவும் எங்களுடன் இணைந்துகொண்டார்.

சண்முகம் வேலப்பன்சாவடியில் இருப்பதாக தகவல் வந்ததும் உதயன் கிளம்ப, இரவு உணவினை உண்ண ஆரம்பித்தோம்.

சுவையான உணவிற்கு பின்னர் அங்கும் இங்கும் பேசியபடி இருந்தோம். நந்தா வழிந்தபடியே அலைபேசியுடன் ஒதுங்கினான். அப்பா அனைவரையும் கூட்டி சில கணித புதிர்களையும் விளையாட்டுகளையும் வைத்தார். சுவாரஸ்யமாக இருந்தது மக்களின் கணித திறன்கண்டு. நம் பள்ளிகளும் பாடதிட்டமும் கணிதத்தை எப்படி ஒரு தீண்டத்தகாக பொருளாக உருவகப்படுத்தியுள்ளது என்பதனை கண்கூடாக காணலாம். மோர் கிளம்பிவிட்டிருந்தான்.

சுமார் பத்துமணிக்கு அடுத்த சுற்று துவங்கியது. முதலில் பா. சண்முகத்தின் அறிமுகம் நடந்தது. கிட்டத்தட்ட ரேகிங் போன்றே சென்றது. துடிப்பான இளைஞன். போன் ஓய்ந்த நிலையில் நந்தா “தரையில் இறங்கும் விமானங்கள்” புத்தகம் பற்றிய விமர்சனம் சொன்னான். ஆசிரியர் இந்துமதி. (என் இரண்டாம் புத்தகத்தை வெளியிட்டவர். வெளம்பரம்). நந்தா விவரித்த விதமே நாவலினை படிக்க தூண்டியது. வில்லன் தெரியாத்தனமாக வீட்டிலெயே விட்டுவிட்டதால் பாதி புத்தகம் முடித்துவிட்டேன். இந்துமதியின் மற்ற நாவல்கள் இந்த நாவல் அளவிற்கு வராமல போனதற்கான காரணம் என்ன எனவும் வினவினார்.

அடுத்து அவரவர் வாசித்த சிறுகதைகள் தலைப்பு மட்டுமே சொன்னால் போது என துவங்கியது. உண்மையில் நிறைய சிறுகதைகள் வாசித்து இருந்தாலும் தலைப்புகள் மண்டைக்குள் ஏறாதது கஷ்டமாக இருந்தது. முறையாக இருக்கவில்லை. ரெண்டு தலைப்பு சொல்வார்கள், அப்படியே சில கதைகள், அதன் ஆசிரியர் பற்றி போகும், மீண்டும் சில தலைப்புகள் கதை. நரேஷின் ஆரம்பகால வாசிப்பு அனுபவம். நாவல்கள். சிலாகிப்புகள் என சுற்றியபடி வந்தது.

12.30 மணிக்கு அடுத்த ரவுண்டு உணவு. மீதம் இருந்த இடியாப்பமும் வெஜிடபுள் பிரியாணியும் காலியானது. நம்ம பசங்க நம்ம பசங்க தான். ஐ ஜஸ்ட் லவ் திஸ் கேரக்டர். நரேஷ் & துணைவியும் இரவு 1 மணிக்கு கிளம்பினார்கள். அப்போது சினிமா சம்பந்தமான உரையாடல்கள் ஆரம்பமாகி இருந்தது. இனியும் கனமான உரையாடல்கள் வேண்டாமென சினிமா பக்கம் போயிருந்தது. மொட்டை மாடிக்கு நகர்ந்திருந்தோம். வானில் நட்சத்திரங்களை ரசித்தபடி அடுத்த 2 மணி நேரம் கழிந்தது. நிலாவின் மிமிக்கிரியின் போது லேசாக உறக்கம் தட்டியது. 3 மணிக்கு கீழே இறங்கினோம். நந்தாவும் அச்சுவும் கிளம்பினர். மற்றவர்கள் காலை 7 மணிக்கி கிளம்பினார்கள்.

உண்மையில் இளங்கோ ஒரு முறை குறிப்பிட்டது போல, இது போன்ற சந்திப்புகள் ஒரு சுத்தமான ஆக்சிஜன் போல. சந்திப்புகளும் பகிர்வுகளும் இனிதே தொடரும்.

– விழியன்

Advertisements
8 Comments leave one →
 1. September 26, 2011 6:51 am

  ஒரு முறையாவது கலந்துக்கணும்னு ஒவ்வொரு முறையும் நினைப்பேன்.. தவறிகிட்டே போகுது. விரைவில் அந்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.

 2. September 26, 2011 7:33 am

  /* இது போன்ற சந்திப்புகள் ஒரு சுத்தமான ஆக்சிஜன் போல. */ எதார்த்தம்..

 3. Kanthi Jagan permalink
  September 26, 2011 8:28 am

  I wish I could attend this next time….. !

 4. September 26, 2011 4:55 pm

  எழுத்துப்பிழையுடன் வாசிப்பதே சுகம் டா 😉

 5. Sashidharan permalink
  September 27, 2011 2:33 pm

  காரணங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலம் ஒரு காரியத்தை செய்யாமல் இருக்க. – 100 percent correct 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: