Skip to content

மேட்டூர் பயண குறிப்புகள்

November 17, 2011

நண்பன் நந்தாவின் திருமணத்திற்காக மேட்டூர் பயணம் மேற்கொண்டோம், அந்த பயணத்தின் குறிப்புகள்

* “இணையத்தில் அறிமுகமான நண்பனின் திருமணத்திற்கு இரண்டு நாள் விடுமுறை எடுத்துட்டு போறியா?” – நண்பன் என வந்துவிட்டால் எப்படி அறிமுகமானால் என்ன?

* மேட்டூர் சூப்பர் சர்வீசின் ஸ்லீப்பர் பேருந்தில் பயணித்தோம். குழலி குதுகலமாக இருந்தாள். நம்ம ரூமாபா என கேட்டபடி உறங்கினாள்.

* எதேர்ச்சையாக நண்பர் ஹரிகிருஷ்ணனை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சந்தித்தேன். கூடம்குளம் அனுமின்நிலைய எதிர்ப்பு போராட்டம் பற்றியும், சந்திப்புகள் பற்றியும் பேசினார். தான் எழுத வேண்டிய கட்டுரைகளை பற்றியும் குறிப்பிட்டார். நடுவில் “ தோழா, தப்பா நினைக்காம உன் பேரை சொல்லிடு “ என்றார். அவர் ஊட்டி முகாமில் போன வருடமும், புத்தக கண்காட்சியில் இந்த வருடமும் சந்தித்து பேசியுள்ளேன். இன்று காலை தான் என்னை அடையாளம் தெரித்துகொண்டதாக முகநூலில் தெரிவித்தார் 🙂

* மேட்டூர் காந்தி ஸ்குயர் மார்கெட் அருகே இருக்கும் எல்.எல்.கே விடுதியை காலை 4.30க்கு அடைந்தோம். பின்னர் கார் ஒன்றை புக் செய்து 7 மணிக்கு தாரமங்கலம் சென்றோம். தாரமங்கலம் மேட்டூர் டூ சேலம் வழியில் 30 கி.மீ தூரத்தில் இருக்கும் சின்ன ஊர். கைலாசநாதர் கோவில் இருக்கின்றது. சிற்ப வேலைப்பாடுகள் படு அற்புதமாக இருக்கும். போன முறை சென்ற போது அதிசயத்து போனோம். முக்கியமாக அந்த ரதி – மன்மதன் சிற்பம் க்ளாஸ். ராமன் – வாலி சிலையும் அற்புதம். இம்முறை சிவன் – பார்வதி கல்யாண கோலத்தில் இருக்கும் அந்த சிற்பத்தில் வாழை தோரணத்தை சொதுக்கி இருப்பதை அங்கே இருப்பவர் காண்பித்தார்.

* நாங்க சென்ற வாகனத்தின் சாரதி சரவணனிடம் பேசியபோது தான் திருமணமாக போகும் நந்தாவின் பள்ளி தோழர் என தெரிந்தது. பல வருடமாக சந்திக்கவில்லையாம். போன் போட்டு இருவரையும் இணைத்த பெருமை அடியேனை சேரும் 🙂

* மதியம் 2.30 மணி வாக்கில் துரை தன் BOSS வண்டியில் வந்து இறங்கினார். மாதேஸ்வர மலைக்கு புறப்பட்டோம். பாதை சிதைந்து இருந்தது. மழைக்காக இருக்கலாம். வழியின் நின்று புகைப்படங்கள் எடுத்தோம். மாதேஸ்வர மலையில் சிவன் கோவில் இருக்கின்றது. கர்நாடகம். ரொம்ப நாள் கழித்து ஜிலேபிகளை சுவற்றில் பார்த்தேன். தரிசனம் முடித்து இருட்டுவதற்குள் கிளம்ப தயாரானோம்.

* நிச்சயம் உயிர் தப்பியதும், காயங்கள் இன்றி தப்பியதும் அதிசயம் தான்.  மெதுவாக கீழ் இறங்கிகொண்டிருந்த வண்டி சாலையில் சிதறி இருந்த பாறாங்கல் மீது ஏறி கட்டுப்பாட்டை இழந்தது.  பைப்லைனுக்காக குழி வெட்டி உள்ளிருந்த கற்களை சீர் இல்லாமல் போட்டு வைத்திருந்தனர். வண்டி அந்த கற்கள் மீதேறி பள்ளத்தில் விழுந்தது. உள்ளிருந்த இரண்டு குழந்தைகளுக்கு ஏதும் பாதிப்பில்லை. சில நேரம் முன்னர வரை குழலி மட்டும் பின் இருக்கையில் விளையாடி வந்திருந்தால், பத்து நிமிடம் முன்னர் தான் வித்யா அவளை மடியில் அமர்த்தி இருக்கமாக பிடித்து வந்திருந்தாள்.

* சினிமாவில் வருவதை போல கீழ் இருந்து வண்டி கதவை திறந்து வெளிவந்தேன். அதுவரை பதட்டம் இல்லாமல் இருந்தது. வெளியே பெட்ரோல் வாசனை வந்ததும் தான் கலவரம் அடைந்தேன். உடனடியாக அனைவரையும் வெளியேற்றினோம். என் குடும்பம் & ஸ்டாலின் குடும்பம். ஓவியா (ஸ்டாலின் குழந்தை) முன் சீட்டில் சாய்ந்ததால் அழுதுகொண்டிருந்தாள், அதை பார்த்து குழலியும் அழ ஆரம்பித்தாள். மணி 6. நடுவனம் என்பதால் ஏதும் சிக்னல் கிடைக்கவில்லை. பத்து நிமிடத்தில் மேட்டூர் பேருந்து அங்கே வந்தது. மக்கள் எங்களை மேட்டூர் போய்விட்டு ஏற்பாடு செய்ய சொல்லி பஸ்ஸில் கூட்டி சென்றனர்.

* அடுத்த 6-7 கி.மீட்டருக்கு ஆள் நடமாட்டம் இல்லை. அடுத்த 30 கி.மீட்டருக்கு முதல் உதவி இல்லை. நல்லவேளை யாருக்கு எந்த காயமும் இருக்கவில்லை.

* இரவு நந்தா திருமண பெண் அழைப்பில் கலந்துகொண்டோம். எப்படி வண்டியை எடுப்பது என ஊர் பெரியவர்கள் மினி மாநாடே நடத்தினர். காலையில் செல்வதே உசிதம் என்றனர். இரவில் யானை நடமாட்டம் இருக்குமாம். பெட்ரோல் டாங்கு உடைந்து இருந்தது தான் கொஞ்சம் பயமுறுத்தியது.

* உடல் அசதியாக இருந்ததால் காலை திருமணத்திற்கு (4.30 – 6.00) நங்கவள்ளி கோவிலுக்கு போகமுடியவில்லை.  குழலியும் நானும் இரண்டாம் நாளாக மார்கெட்டை ரவுண்டு அடித்து வந்தோம். இரண்டு நாட்களும் சரியாகவே அவள் சாப்பிடவில்லை. சென்னையில் இருந்து மற்ற நண்பர்கள் 9 மணிக்கு வந்தனர். உதயன், வில்லன், ஆசாத் ஜயா, சா.கி ஐயா, வில்லன், அஷிதா & குடும்பம். மண்டபத்தை அடைந்தோம். (கொளத்தூர்)

* வண்டியை மீட்டு வர துரை & பிரசாத் ஊர்காரர்களுடன் சென்றனர். 4 மணி நேரத்திற்கு பிறகு வண்டி வந்தது. வண்டிக்கு உள்ளே புகுந்து டி.வி.டி செட், ஸ்பீக்கர்ஸ், சின்ன சின்ன பொருட்களை லவுட்டு இருக்கிறான் லாவகமாக. போனவன் தன் லுங்கியை விட்டு சென்று இருக்கார். இதென்ன டிரேட்மார்கா தெரியவில்லை. பெட்ரோல் டாங்கிலும் பில்டரிலும் ஓட்டை. எப்படியோ சமாளித்து எடுத்து வந்தனர். மேட்டூரில் சரிபார்க்கமுடியவில்லை சேலம் சென்றனர். சேலத்திலும் சரிவரவில்லை 40 கி.மீ வேகத்தில் தூத்துக்குடிக்கு இரவெல்லாம் ஓட்டி சென்றுள்ளார் துரை அண்ணன். பிரச்சனைகள் இரண்டு. 1. வண்டியை நிறுத்த கூடாது. 2. பெட்ரோல் 10 லிட்டருக்கு மேல் போட கூடாது. கால்குலேஷன் போட்டபடியே போய் சேர்ந்திருக்கார் தனியாக். சல்யூட் அண்ணே. (சென்ற வாரம் தான் அண்ணனை பற்றி ஆ.வியில் செய்தி வெளியாகி இருந்தது)

* 16 மதியம் 3.30 மணி வாக்கில் மேட்டூர் அணையில் பண்புடன் வாசகர் வட்டம் துவங்கியது. தம்பி பிரசாத் தன் அறிமுகம் தந்தான். அதற்கே நேரமாகிவிட்டது. உதயன் தான் படித்த ‘நெடுஞ்சாலை’ புத்தகம் பற்றி சிலாகித்தான். நேரமாகவே கிளம்பி ஸ்டேஷன் அடைந்தோம்.

* இரவும் சுவாரஸ்யமான உரையடல்கள். ஆசாதின் அனுபவங்கள் குறிப்பிடதக்கவை.

நெகிழ்ச்சியான தருணம்

Sk Natarajan

இவர் பள்ளி ஆசிரியர். Deaf, Dumb and Blind பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பாடம் எடுக்கின்றார். அவருடைய மாணவர் சேலத்தில் அவரை சந்தித்தார். (மேட்டூரில் இருந்து நாங்கள் சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்தோம்). மேச்சேரியில் பள்ளி ஆசிரியர். SKவிற்கு முத்தமழை பொழிந்தார். கட்டி அணைத்தார். SK எங்களை அறிமுகம் செய்து வைத்தார். “சார் எப்படி சார் இணையத்தில் இவ்வளவு நண்பர்கள்…”என்றார். அந்த காட்சி அற்புதமாக இருந்தது. உடனே செல் எடுத்து “இந்த பக்க பாருங்க ஒரு போட்டோ எடுத்துக்கொள்கிறேன்” என்றேன். சொன்னது தான் நங் என மண்டையில் உறைத்தது. சில விநாடியில் கலங்கிவிட்டேன். அந்த நண்பர் பார்வை இழந்தவர்.

அந்த காட்சி மிக அற்புதமானது. மாணவர் ஆசிரியரை ஆராதித்த தருணம். வெளிச்சம் காட்டியவரின் மீது அன்பு மழை. ச்ச. I love SK. Salutes.

பயணம் இனிதே முடிந்தது.

– விழியன்

Advertisements
7 Comments leave one →
 1. November 17, 2011 12:32 pm

  வழக்கம் போல உங்களின் எழுத்து நடை… இன்னும் கொஞ்சம் கூட்டி இருக்கலாம்….
  படம் இல்லாதது ஒரு ஏமாற்றம்..:-(

 2. November 17, 2011 12:33 pm

  எந்த பிரச்சனையும் இல்லாமல் வந்ததே போதும்.

  வரமுடியாதது வருத்தமாயிருக்கிறது.

 3. கார்த்திக் permalink
  November 17, 2011 1:03 pm

  நல்ல அனுபவம்….நந்தா கல்யாணத்த வாழ்க்கைல மறக்கமுடியாதளுக்கு பண்ணிட்டார் :-))))
  நந்தாவுக்கு வாழ்த்துக்கள்

  • November 17, 2011 1:06 pm

   கார்திக், நாங்க தப்பிச்சிட்டோம், நந்தா மாட்டிகிட்டார் 🙂 🙂

 4. கார்த்திக் permalink
  November 17, 2011 1:08 pm

  // நந்தா மாட்டிகிட்டார் //

  அஹஹஹ :-))))))

 5. November 17, 2011 1:41 pm

  hallo,
  so many writers from Mettur. I am really proud.I f there are anybody who knows me ,i will be happy to know them
  karthik amma [ kalavathy teacher]

 6. November 18, 2011 2:08 pm

  நல்ல பதிவு.
  ஒரு பெரிய விபத்திலிருந்து தப்பியிருக்கிறீர்கள்
  வாழ்த்துகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: