Skip to content

மூன்று வார வேகவாசிப்பு

November 21, 2011

இந்த பிறந்தநாளில் யாருக்கும் சொல்லாத ஒரு தீர்மானம் தீவிரமாக வாசிப்பது என்பதே. அதற்கு துணைபோவது போலவே போரூரில் ஒரு நூலகமும் தென்பட்டது. ஈஸ்வரி வாடகை நூலகம். நூலகம் அந்த கட்டிடத்திற்கு வந்து ஒரு மாதம் ஆகின்றது. குழந்தை வைத்துக்கொண்டு படிப்பது என்பது மிகுந்த சிரமமான காரியம். வாசகர் வட்டத்தில் பகிர்ந்துகொள்ளவேனும் புத்தகம் படிக்க வேண்டும் என்று அவ்வப்போது ஒன்று இரண்டு புத்தகங்கள் கஷ்டப்பட்டு படிப்பதுண்டு. நூலகத்தில் ஜனரஞ்சகமான நூல்களே அதிகம் இருந்தது. எண்டமூரி வீரேந்திரநாத்தில் ஆரம்பித்தேன். இதோ இந்த மூன்று வாரத்தில் வாசித்த நூல்களின் பட்டியல். அநேகமாக அனைத்தும் நாவல் வகையறாக்கள் தான்.

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்கள் :

நெருப்பு கோழிகள்

சொல்லாத சொல்லிற்கு விலை ஏது

பணம் மைனஸ் பணம்

அபிலாஷா (தூக்கு தண்டனை)

ஒரு ராதாவும் இரண்டு கிருஷ்ணன்களும்

பர்ணசாலை

Mark Twain’s Adventures of Tom Sawyer

Chetan Bhagat’s

1. 3 mistakes of life

2. Revolution 2020

3. Two state – story of my life

வாசிப்பில் :

பிஜி தீவுகள் – கட்டுரைகள் (துளசி கோபால்)

The painter of signs – R K Narayanan

ஆத்மாவின் ராகங்கள் – நா. பார்த்தசாரதி

————————————

வாசிக்க வாசிக்க வசீகரிக்கின்றது வாழ்கை. குழந்தையும் மனைவியும் உறங்கிய பின்னரும், அவர்கள் எழும் முன்னரும் மட்டுமே தடைகள் இன்றி வாசிக்க முடியும். குழலி முன்னர் படித்தால் அவளுடைய புத்தகம் எடுத்து வந்த “அப்பா படிக்கலாம் பா” என்பாள். மறுக்கமுடியுமா என்ன?

நல்லவேளை லேப்டாப்பை சுத்தமாக உடைத்துவிட்டாள் குழலி. படங்களை கூட ப்ராசஸ் செய்ய முடியவில்லை. கால் ஸ்கிரீன் மட்டுமே தெரிகின்றது. அவ்வ்..

————————————

அபிலாஷா (தூக்கு தண்டனை) பற்றிய சில குறிப்புகள்

* தூக்கு தண்டனை குறித்தான பன் நோக்கு பார்வையினை முன்வைக்கின்றது நாவல்.
* அபிலாஷா என்று தெலுங்கில் எழுதி பின்னர் தூக்கு தண்டனை என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்.
* ஆசிரியர் – எண்டமூரி வீரேந்திரநாத்.
* மொத்தம் 380 பக்கங்கள். படிக்க ஆரம்பித்து அன்று இரவிற்குள்ளே முடித்த பெரிய நாவல்களில் இதுவும் ஒன்று. (இது ஒன்று மட்டும் தான்)
* மொழிபெயர்ப்பு என எங்குமே தெரியவில்லை. சீரிய பணி.
* வசீகரிக்கும் எழுத்து நடை. களம் வித்யாசமான  களம்.
* தூக்கு தண்டனையால் தன் தந்தையை இழந்த சிரஞ்சீவி தன் தந்தைக்கு ஏற்பட்ட கொடுமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என வக்கீலுக்கு படித்து தூக்கு தண்டனைக்கு எதிராக எப்படி போராடுகிறார், சிக்கிகொள்கிறார், மீள்கின்றாரா இல்லையா என்பதே கதை.
* மொத்தம் 5/6 கதாபாத்திரம் மட்டுமே.
* தூக்கு தண்டனைக்கு எதிரான குறிப்புகள் மிக முக்கியமானவை, அவை கட்டுரை வடிவிலேயே எழுதி இருக்கின்றார் ஆசிரியர்.
* நல்ல திரில்லர்.
* சிரஞ்சீவியில் Characterization அற்புதம்
* நன்றி டு சித்தார்த் (எதோ ஒரு விவாதத்தில் குறிப்பிட்டான் இந்த நாவலை பற்றி)

———————————–

சேதன் பகத்தின் விட்டுவைத்த மூன்ற நாவல்களையும் படிச்சாச்சு. Revolution 2020 லீஸ்டு ரேட்டிங். மற்றவை மசாலா. 3 mistakes of life கொஞ்சம் உண்மை சம்பவங்களை வைத்து நகர்த்தப்பட்ட நாவல். கடைசி பகுதிகள் சிறப்பானவை. Story of my marriage படித்து பல இடங்களில் கோவம் வந்தது, தமிழனை ரொம்ப அவமானப்படுத்தி இருக்கார். நக்கல் என்ற பெயரில். நாவல் முதலில் ஒரு டிஸ்கிலைமர் போட்டுவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?

சேத்தனின் பார்முலா : நண்பர்கள் – பண சிக்கல் – காதல் – செக்ஸ் (எப்படியும் எல்லா நாவலிலும் திருமணமாகாத பெண் உறவு வைத்துக்கொள்கிறார்கள்)- துரோகம் – மாற்றம்

என்ன சொன்னாலும் அவர் வெற்றி எழுத்தாளர்.

————————————

Mark Twainனை திரும்ப வாசிக்க வேண்டும் என நெடுநாள் ஆசை. இந்த வேக வாசிப்பில் வாசித்துவிடுவேன் என நம்புகிறேன். டாம் சாயரின் சாகசங்களை எத்தனையாவது முறை வாசிக்கிறேன் என தெரியவில்லை, ஆனாலும் சலிக்கவில்லை. பால்ய நினைவுகளை கண்முன் நிறுத்திவிடுகின்றது. அடுத்து ஹக்கில்பெரி பின். கிழக்கின் shortened version படித்து திருப்தி ஏற்படவில்லை. Prince and Pauperம் கையில் இருக்கு.

————————————

இந்த மூன்று வாரத்தில் 2 பயணங்கள் – ஏலகிரி & மேட்டூர்.

வரும் வாரத்தில் மூன்று நாட்கள் மதுரையில். சனி, ஞாயிறு, திங்கள்.

– விழியன்

Advertisements
2 Comments leave one →
 1. November 21, 2011 1:48 pm

  Perfect 🙂

  Agree with your comments on Chetan Bhagat!

 2. Gokul permalink
  November 21, 2011 2:29 pm

  Kalakaringa Vizhiyan…
  Balancing professional life , family life and passion is a great art, which is evident that you almost mastered it 🙂

  All the best !!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: