Skip to content

‘உனக்குப் படிக்க தெரியாது’ – வாசிப்பு அனுபவம்

December 1, 2011

’உனக்குப் படிக்கத் தெரியாது’ – வாசிப்பு அனுபவம்

கமலாலயன் எழுதி வாசல் வெளியீடாக வந்திருக்கும் புத்தகம் ‘உனக்குப் படிக்கத் தெரியாது’. இது ஒரு சுயசரிதை. அமெரிக்காவில் வாழ்ந்து கல்வியில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெண்மணி பற்றிய புத்தகம்.

மேரி ஒரு கருப்பின குழந்தை. சாம் மற்றும் பாட்சிக்கு பிறந்த பதினைந்தாவது குழந்தை. அவள் தன் ஏழை தாய் தந்தை மற்றும் சகோதர சகோதரிகளுடன் ஒரு கிராமத்தில் வளர்கின்றாள். பருத்திக்காட்டில் உழைக்கும் குடும்பம். யார் முதல் பூவை பார்ப்பது என சின்ன சின்ன ஆனந்தத்துடன் கஷ்டங்களுக்குள் வாழும் குடும்பம். பதினோறாம் வயது வரை படிப்பின் வாசம் அறியாதவள். தன் தாய் வெள்ளையர் ஒருவர் வீட்டில் அவ்வப்பொழுது வேலைக்கு செல்வாள். அச்சமயம் அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகளுடன் மேரி விளையாடுகின்றாள். புத்தகம் ஒன்றினை தொட முயற்சிக்கும்போது ‘உனக்கு படிக்கத் தெரியாது’ அதனை தொடாதே என அந்த மாளிகை வீட்டு குழந்தை சொல்ல, மேரிக்கு படிக்கும் ஆர்வம் பிறக்கின்றது. இந்த வாக்கியம் ஏற்படுத்துகின்ற தாக்கம் தான் பின்னாளில் மேரியை அமெரிக்க ஜனாதிபதியின் ஆலோசகராக உயர்த்த உந்துகின்றது. அமெரிக்க கருப்பின தலைவர்களுள் முக்கிய இடத்தையும் பிடிக்கின்றார் பின்னாளில் மேரி மெக்லியோட் பெத்யூனின்.

ஆர்வமும் அதற்கான வழியும் தானாக பிறக்கின்றது. பக்கத்து ஊருக்கு சென்று பயில்கின்றாள். பின்னர் மேற்படிப்பு செல்ல வெளியூர். அப்படியே கல்லூரி, ஆசிரியர் என வளர்கின்றாள். மேரி கருப்பினத்தவருக்கு கல்வி வழக்கும் கனவினை ஏற்கிறாள். வெறும் கல்வி மட்டுமல்ல வாழ்கை கல்வி தருவில் முனைகின்றார். ஐந்த குழந்தைகளுடன் ஒரு வாடகை வீட்டில் தன் லட்சிய கனவினை துவங்கி பின்னாளில் பெரும் கல்வி சாம்ராஜ்யத்தை உருவாக்குகின்றாள். வழி நெடுக கடும் வலி, வேதனை, பணத்தட்டுப்பாடு, கருப்பினத்தவர் என்பதால் கடும் எதிர்ப்பு. இவை அனைத்தையும் சமாளித்து தன் வாழ்நாளிலேயே கருப்பினத்தவரின் முன்னேற்றத்தையும் காண்கின்றார்.

ஒரு வாழ்கை வரலாற்றை படு சுவாரஸ்யமாக விவரித்து இருக்கின்றார் ஆசிரியர். தங்கு தடையற்ற ஆறு போல பயணிக்க வைக்கின்றது. மேரி என்னும் அந்த ஆளுமை நிச்சயம் வாசிப்பவரிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஒற்றை டாலர் கூட இல்லாமல் தன் கனவு பள்ளியை துவங்கும் இடம் ஆகட்டும், எந்த பின்னடைவு வந்தாலும் போராடும் அந்த குணம் ஆகட்டும், வெள்ளையர்களின் அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் பாங்கு ஆகட்டும், வழி நெடுக நம்மை உணர்ச்சி வசப்பட வைக்கின்றார் மேரி. மேரி என்ற தனி மனித வெற்றியாக இதனை கருதிவிட முடியாது, தன் ஆரம்பகால ஆசிரியர், வெளியூருக்கு அனுப்ப உதவும் அந்த வெள்ளைக்கார பெண்மனி, துணை நிற்கும் ஆசிரியர்கள், கட்டுக்கடங்காத கனவினை கொண்டுள்ள மனைவியின் ஆசைக்கு குறுக்கே நிற்காத கணவர், ஊர் மக்கள், நன்கொடையாளர்கள் என அனைவராலுமே சாத்தியமாகி உள்ளது.

பல இடங்களில் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. குறிப்பாக சிறைக்கைதிகள் தப்பித்து வந்து இவர்கள் பள்ளி மாணவியருக்கு பழங்கள் கொடுக்கும் இடம், பெரும் விழா ஒன்றில் சின்ன வயதில் உதவிய வெள்ளைக்கார பெண்மனியை சந்திக்கும் இடம் என பல இடங்களில் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்குகின்றது. மூல நூல் பற்றிய குறிப்புகள் இல்லாமல் போனது சற்று குறையாக இருந்தது. மேலும் பல ஆங்கில பெயர்கள் வருவதால் எங்கேனும் ஒரு இடத்தில் ஆங்கிலத்தில் பெயரை குறிப்பிட்டு இருக்கலாம்.

வாசித்து முடித்ததும் எதோ ஒரு இசை காதில் கேட்டுக்கொண்டே இருப்பது போல இருந்தது. நிச்சயம் அது ஆசிரியரின் எழுத்தின் காரணமாகத்தான்.

உனக்குப் படிக்கத் தெரியாது
-கமலாலயன்

பக்கங்கள் : 96

பிரிவு : சரிதை

வெளியீடு : வாசல்
40-D\3, முதல் தெரு,
வசந்தா நகர், மதுரை-625 003.
மொபைல் 91 98421 02133

மேலும் வாசிக்க : http://en.wikipedia.org/wiki/Mary_McLeod_Bethune

வாழ்த்துக்கள் கமலாலயன் அங்கிள் & ரத்தின விஜயன் அண்ணா. (இருவரும் பால்ய காலங்களில் அறிவியல் அறிவொளி இயக்கங்கள் மூலம் அறிமுகமாகி குடும்ப நண்பர்களாக மாறியவர்கள்)

– விழியன்

Advertisements
2 Comments leave one →
 1. December 1, 2011 8:25 am

  அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!
  நம்ம தளத்தில்:
  “மாயா… மாயா… எல்லாம்… சாயா… சாயா…”

 2. salem selvaraj permalink
  December 2, 2011 5:07 am

  Thanks for Sharing anna…… it is making me read myself…. i mean you made the impression…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: