Skip to content

பயணங்கள் – 2011

December 16, 2011

பயணங்கள் வாழ்விற்கு ருசியூட்டுகின்றன. பயணங்கள் பற்றி எழுதுவதை விட பயணிக்கவே ஆசைப்படுகிறேன். புத்துணர்ச்சியையும் தெம்பையும் இன்னும் இன்னும் சுற்றவேண்டும் என்கின்ற உத்வேகத்தையும் கொடுத்துவிடுகின்றது. லென்ஸ் வழியே பார்க்கும் போது மேலும் அழகு ஒட்டிக்கொள்கின்றது.

2011 நிச்சயம் பயணங்கள் நிறைந்த ஆண்டாகவே அமைந்தது. இடையில் தங்கைக்கு வேறு திருமணம் வேளைகள் வேறு. சுமார் மூன்று மாதம் நகரமுடியவில்லை. குழலியின் அனுமதியால் மட்டுமே இது சாத்தியமானது. அவளின் ஒத்துழைப்பின்றி சில பயணங்கள் தோல்வியும் கண்டது. அவள் ஊர் சுற்றுவதை ரசிக்கின்றாள். ஊர் சுற்றும்போது நன்றாக இருக்கும் அவள் வீட்டில் 2 வாரம் தங்கினால் சளி/வயிற்றுப்போக்கு என ஏதேனும் உடல்கோளாறினை உண்டு செய்துகொள்கிறாள். அவளை உலக பயணியாக உருவாக்க வேண்டும். ஆனால் என் கனவுகளை அவள் மீது என்று திணிக்க மாட்டேன்.

பட்டியலிட்டு பார்க்கும்போது கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருக்கின்றது. சில தூர பயணங்களும் சில லோக்கல் விசிட்டுகளும். புகைப்படம் எடுப்பதும் பயணிப்பது கைகோற்த்துக்கொள்கின்றன. கடந்த டிசம்பர் 15 முதல் இந்த டிசம்பர் 15 வரை சென்ற ஊர்கள்

பெங்களூர், வேடந்தாங்கல், பிச்சாவரம், போட்டோ நோவா, சிதம்பரம், சங்கரன்கோவில், குற்றாலம், மதுரை, மேட்டூர், தில்லி, இமயம், சபரிமலை, பிள்ளையார்பட்டி, ஏலகிரி (இரண்டு முறை),  ஜலகன்பாறை,  அயனம்பாக்கம் ஏரி, கொலவை ஏரி (செங்கல்பட்டு), ஊட்டி , செம்பரம்பாக்கம் ஏரி,  திருவண்ணாமலை, திருத்தனி, விழுப்புரம், காரைக்கால் & சுற்றியுள்ள ஊர்கள்,

கோவில்கள் என பார்த்தால் பட்டியல் இன்னும் நீள்கின்றது

குன்றத்தூர் முருகன் கோவில், மருந்தீஸ்வரர் (திருவான்மியூர்),  மயிலாப்பூர் கபாளீஸ்வரர், வேலூர் ஜலகண்டீஸ்வரர், ஸ்ரீவாங்சியம் சிவன் கோவில், கூத்தனூர் லட்சுமி, நாகை அம்மன், வேதாரண்யம் சிவன் கோவில், திருக்கடையூர் கோவில், இஞ்சிமேடு சிவன் கோவில், திருவேற்காடு அம்மன் கோவில், ஜாகேஷ்வர் சிவன் ஆலயம், டில்லி பிரில்லா மந்திர்,  சிதம்பரம் நடராஜர் கோவில், சங்கரன்கோவில், திருகுற்றாலநாதர், மதுரை மீனாட்சி அம்மன், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், குன்றக்குடி முருகர், சபரிமலை ஐயப்பன், சோட்டானிக்கரை பகவதி அம்மன், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், அழகர்கோவில், பழமுதிற்சோலை முருகன் கோவில், திருத்தனி முருகன் கோவில், கூடலழகர் கோவில் இன்னும் சிற்சில கோவில்கள்.

முக்கியமான பயணங்கள் இரண்டு. ஜாகேஷ்வர் & சபரிமலை. ஜாகேஷ்வர் – குழலி அந்த தட்பவெப்பத்திற்கு சமாளிப்பாளா என்பது. ஆனால் அங்கே சென்றதும் ஜடகங்காவில் முதலில் குதித்தது அவள் தான். ஐஸ்கட்டிபோல இருந்த ஆறு. அடுத்தது சபரிமலை. பெருந்த உடலினை சுமந்து அத்தனை தூரம் வெறும் காலில் நடப்பது. இதற்காகவே இன்னும் குறைக்க வேண்டும்.

நிச்சயம் ஆண்டின் துவக்கத்தில் எதையும் தீர்மானிக்கவில்லை. தானாகவே அமைந்தது. அடுத்த வருடத்தில் இலக்கு இரண்டே இரண்டு இடம் தான். காசி & லட்சத்தீவுகள். மற்றவை எல்லாம் போனஸ்.

ஒவ்வொரு பயண விவாதத்தின் போதும் அப்பாவும் அம்மாவும் ‘கொஞ்சம் ரெஸ்ட்’ எடுக்கலாமே என மறைமுகமாக உணர்த்துவார்கள். அதற்காகவே சில பயணங்களை தவிர்த்தும் உள்ளோம்.

பயணங்கள் சந்தோஷத்தை தருகின்றது. பயணங்கள் சோர்வடைவும் செய்கின்றது. பயணங்கள் வாழ்கையின் முழுமைக்கு அழைத்து செல்கின்றது.

இன்னும் இன்னும் பயணிக்கவே பயணங்கள் உணர்த்துகின்றன. தூண்டுகின்றன.

——————–

ஹலோ சண்டே Alamparai Fort போகலாமா?

எந்த ஞாயிறு?

இந்த ஞாயிறு.

ஓ? நாளைக்கு சொல்லட்டுமா?

ஓகே.

——————

– விழியன்

Advertisements
7 Comments leave one →
 1. December 16, 2011 6:24 am

  உங்களின் கடந்த (2011) பயணத்தில் கால்வாசி என்னையும் சேர்த்து கொண்டதற்க்கு என் நன்றிகள்…

  இனி வரும் பயணங்களிலும் என்னையும் சேர்த்து கொளுங்கள் சேர்ந்து பயணிப்போம்…

  • December 16, 2011 6:26 am

   சற்றே யோசிக்கவேண்டிய விண்ணப்பம் 🙂

 2. December 16, 2011 8:09 am

  good to see about kuzhali’s support 🙂

  Keep travelling..

 3. கார்த்திக் permalink
  December 16, 2011 8:42 am

  என்சாய் ராசா :-)))

 4. December 16, 2011 4:38 pm

  உங்கள் பயண வரலாறு அருமை!
  பகிர்விற்கு நன்றி நண்பரே!
  என் வலையில் :
  “நீங்க மரமாக போறீங்க…”

 5. December 20, 2011 4:53 pm

  வாழ்த்துகள்.

 6. January 5, 2012 1:09 pm

  வணக்கம். பயணங்களுக்கும்,பயணிக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள். நானும் பயணத்தை அனுபவித்து ரசிக்கும் ரகம்தான். இப்போது ஜெய்ப்பூர் பயணம், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு ப்யணமும் ஒவ்வொரு தனித்தனி அனுபவம்தான்.அதனை ரசித்து அனுபவிக்க தனி மனம் வேண்டும்.. ஜெய்ப்பூர் குளிர் 2 டிகிரி.. குழந்தைகள் ரசித்து அனுபவித்தனர். பழகிக்கொண்டனர். மூடுபனி போர்த்திய ஜெய்ப்பூர். மதியம் 12 மணிக்குக் கூட சுடாத சூரியன்.. மாலை 5 மணிக்கே குளிருக்குப் ப்யந்த்து படுக்கப் போன பகலவன்..இந்தியா முழுவதிலிருந்தும், 9 ஆசிய நாடுகளிலிருந்தும் வந்திருந்த குழந்தை விஞ்ஞானிகள்.. இந்திய ஆசிய கலாச்சார இணைப்பு. மொழிகளைக் கடந்து பொது மொழி பேசிய குழந்தை விஞ்ஞானிகள்..மீண்டும் இவர்களை எப்போது சந்திப்போம் என்றிருந்தது..இந்த ஆண்டின் துவக்க நாளான ஜனவரி முதல் தேதியில், குதூகலமும், குளிரும், கொஞ்சம் பிரிவு வேதனையும்.. அன்புடன், மோகனா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: