Skip to content

வேடந்தாங்கல்

December 26, 2011

Write a short note on Vedanthangal:

பள்ளி நாட்களில் சென்னை டூர் என்றால் காலை உணவு வேடந்தாங்கலில் தான். பறவைகள் இருக்கும் என்பார்கள். ஆனால் அந்நாட்களில் பறவை இருக்கும் சமயமாக வரமாட்டோம், எப்போது பள்ளியில் செல்ல தோதாக இருக்குமோ அப்போது கூட்டி வருவார்கள். அந்த சமயங்களில் பறவைகள் பார்த்ததாககூட நினைவு இல்லை. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய எல்லை பகுதிக்கு மேடம் அனைவரையும் அழைத்து செல்வார்கள். தத்தமது உணவுகளை பிரித்து நண்பர்கள் உண்போம். ஒரு டெலஸ்கோப் அங்கே இருக்கும் அதில் தேடி ஒன்று அல்லது இரண்டு பறவைகள் பார்ப்போம்.

கல்லூரி நாட்களில் ஒரு சமயம் நண்பர்களுடன் வேடந்தாங்கல் சென்றோம். அது கல்லூரியின் கடைசி நாள். கல்லூரி நண்பர்கள் அனைவரும் ஒன்றாக பயணித்த கடைசி பயணம். ஒரு பக்கம் ஈரவிழிகள், ஒரு பக்கம் களிப்பு. மறக்கமுடியாத பயணம். அப்போதும் பறவைகள் பார்த்ததாக நினைவு இல்லை. நண்பர்களை கவனிக்கவே நேரம் போதவில்லை. ஓவென ஒருத்தி அழ மற்றவர்கள் தேத்தியது நன்றாக நினைவில் உள்ளது. குடும்பத்துடன் இரண்டு முறை சென்றுள்ளோம்.

கேமரா கையில் வந்தவுடன் வேடந்தாங்கல் வேடந்தாங்கல் என அழைத்தது. சரியாக கிருஸ்துமஸ் 2010 அங்கே கேமரா கையுமாக சென்றோம். அப்போதும் மூன்று வண்டிகள். பிரசன்னா வண்டி, மோகன் வண்டி & எங்க வண்டி. வீட்டில் வாண்டுகள் கூட்டம் அரையாண்டு விடுமுறைக்கு வந்து இருந்தார்கள். குழலி ரொம்ப குழந்தையாக இருந்தாள்.

2011:

விழித்ததும் கடிகாரத்தில் நேரம் 3.30. குழலிக்கு பால் குடிப்பாட்டி, நாள் 25-12 என இருந்ததை பார்த்ததும் ஒரு நிமிடம் சுனாமி நினைவு வந்துபோனது. கேபி பக்கத்து அறையில் விழித்து இருந்தான். பேட்டரிகளை கேமராவில் போட்டு சரிபார்த்தேன். கிண்டியில் இருந்து பிரசன்னாவின் வண்டியில் செல்வதாக திட்டம்.  ஐயப்பன் தாங்கலில் வண்டியை நிறுத்திவிட்டு பஸ்ஸில் கிண்டிவரை செல்வதாக திட்டம். பார்கிங் 6 மணிக்கு தான் திறப்போம் என காவலாளி சதாய்க்க நான், குழலி, வித்யா பேருந்தில் கிளம்பினோம். கந்தபழனி போரூரில் வண்டியை பார்க் செய்துவிட்டு எங்களை பின் தொடர்ந்தான். அந்த அதிகாலையிலும் பேருந்து நிரம்பி இருந்தது. கிருஸ்துமஸிற்காக ஆலயம் செல்லும் கூட்டம்.

நாங்கள் கிண்டி செல்லவும், பிரசன்னா வரவும் சரியாக இருந்தது. குழலியின் கண்கள் மட்டும் தான் தெரிந்தது. Fully covered. இரவு சளியும் இரும்மலும் இருந்தது. விட்டுவிட்டு போக சொல்லி இருந்தார்கள் அம்மா. வேடந்தாங்கல் செல்வதின் முக்கிய நோக்கமே குழலிக்கு பறவைகளை அறிமுகம் செய்துவைப்பதே. புகைப்படம் இரண்டாம் இலக்கே. (சமாளிச்சனா? 🙂 ) மூன்று வண்டிகளில் நண்பர்கள் கிளம்பினோம். வழக்கமான பெருங்களத்தூர் பேருந்து நிலைய நிறுத்தத்தில் வண்டிகள் சங்கமித்தன. தேநீர். (அது எப்படி பேப்பர் கப்புகளில் தேநீர் பருகுகின்றீர்களோ).

வேடந்தாங்கல் சென்றபோது மணி 7. ஆறுமணிக்கே திறந்துவிடுமாம். நாங்கள் தவறாக 7 மணி என நினைத்து மெதுவாக வந்தோம். சூரியன் தலைகாட்டியாகி இருந்தார். லேட்டாக வந்துவிட்டோமோ என்ற எண்ணத்திலே உள்ளே நுழைந்தோம். பறவைகள் பறவைகள் எங்கும் பறவைகள்.  ஜோடி பறவைகள். ரெக்கை விரித்தபடி பறவைகள். தனிமையில் சில பறவைகள். எதையோ அடைந்த சில பறவைகள். நீந்தியபடி சில பறவைகள். ஓய்வு எடுக்கும் பறவைகள். விமானங்கள் எப்படி பறக்கும் என காண்பிக்கும் பறவைகள். குச்சிகள் கொண்டு எதையோ கட்டும் பறவைகள். காகங்கள் போல கறுப்பு பறவைகள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தை பிடித்துக்கொண்டனர் பிடிப்பதற்கு. நாதஸ் மட்டும் நீண்ட துப்பாக்கி போன்ற லென்ஸ் பொருத்தி இருந்தார். ஜகதீஷ் ஆளையே காணவில்லை. மோகன் கிளிக் கிளிக் என அடித்துக்கொண்டிருந்தார். அவருக்கு இணையாக இணையான விஜியும் தன் பங்கிற்கு விளாசித்தள்ளினார்.

அந்த க்ளிக் க்ளிக் ஓசை ஒரு மயக்கம் தான். அதுவும் பல க்ளிக்குகள் தொடர்ந்து கேட்டது வேறு உலகிற்கு அழைத்து சென்றது. குழலி விளையாட ஆரம்பித்து இருந்தாள். 300 எம்.எம் வைத்து பல காட்சிகளை படம் பிடிக்க முடியாமல் போனது அலுப்பை ஏற்படுத்தியது. பல பறவைகள் என்னை டீஸ் செய்வதாகவே தோன்றியது. இன்னும் படங்களை திரும்ப கூட பார்க்கவில்லை கேமராவில் இருந்து. சில நன்றாக வந்திருக்கலாம், ஆனால் திருப்தி இல்லை. அடுத்த முறை கண்டிப்பாக 600 எம். எம்முடன் தான் வரவேண்டும் என மட்டும் தோன்றியது.

நான், குழலி வித்யா மூவரும் மற்றவர்களை விட்டு கொஞ்ச தூரம் நடந்தோம். குழலியின் சேட்டைகளால் வித்யா கடுப்பானதை ரசித்தபடியே வந்தேன். பசித்தது. இன்றைய பிஸ்னஸ் ஓவர். வேடந்தாங்கல் சரணாலயத்தின் கடைசியில் இருந்தோம். திரும்ப ஒவ்வொருவரையாக அழைத்து வாசலில் இருந்த கடைக்கு சென்றோம். சூடான இட்லி, பஜ்ஜி, வடை. சட்னி மட்டும் சட்னியாக இருந்திருக்கலாம். குழலி பலூன் ஒன்றினை கொண்டு எல்லோரையும் மொத்து மொத்து என அடித்துக்கொண்டிருந்தாள். ஒரு வண்டி மட்டும் அங்கேயே இருந்தது. மற்ற இரண்டு வண்டிகள் சென்னையை நோக்கி நகர்ந்தது. இனிய பயணம்.

பயணித்தவர்கள் : வித்யா, குழலி, கேபி, பிரசன்னா, பிரசன்னா துணைவி, விஜி (12ஆம் வகுப்பு தோழி), விஜியின் கணவர் மோகன், உதயன், ப்ரவீன், ஜகதீஷ், நாதஸ், பாஸ்கர், ராஜா.

வேடந்தாங்கல் எப்படி செல்வது, எது சரியான சமயம் என அறிந்துகொள்ள இங்கே அழுத்தவும்.

நண்பர்கள் புகைப்படங்கள் பார்க்க.

Praveen – http://pinkurippukal.blogspot.com/http://www.flickr.com/photos/prawintulsi/

Nathas – http://www.flickr.com/photos/naathas/

Udhayan -www.udhayam.in

KP – http://nallaraan.wordpress.com/

Prasanna – http://iprasan.blogspot.com/

Jagadeesh – http://mycreationz.wordpress.com/

Mohan – http://www.incredibleindiaphotogallery.com/

படமில்லாமல் முடித்தால் நல்லா இருக்காது என்பதற்காக ப்ரவீனின் ஒரு புகைப்படம்

– விழியன்

Advertisements
9 Comments leave one →
 1. December 26, 2011 8:07 am

  நல்லதொருப்பதிவு. ஆனால் என்னமோ குறைகிறது.

 2. Raveendran BS permalink
  December 26, 2011 9:56 am

  Finally, spent a long time to complete reading with all other stuffs….

 3. Raveendran BS permalink
  December 26, 2011 10:09 am

  Link இங்கே is going to google anna…

 4. December 27, 2011 11:01 am

  நல்ல பதிவு.
  வாழ்த்துகள்.

 5. makkaaa permalink
  December 27, 2011 11:13 am

  Ada… naanum anru thaan vedanthaangal sendru vanthen… 11.25am-01.00pm.

 6. Aru permalink
  December 30, 2011 3:21 pm

  I too got cheated by Google link :)..
  How do you write things in Tamil? Are you using Google Transliteration… It takes time..

  However i am happy to see the Tamil pathivugal.. Valthukkal.

  –Arumugam

 7. January 10, 2012 10:19 am

  வணக்கம் விழியன். பதிவு அருமையாக பழமை நினைவுகளையும் சுமந்து வந்துள்ளது. காலங்கள் கடந்தாலும், கற்பனையும், அதன் தொடர்பான் நினைவுகளும் தொடரும் எப்போதும். வாழ்த்துக்கள் ப்திவுக்கும். நாங்களும் அறிவியல் இயக்க மாநில செயற்குழு மதுராந்தகத்தில் நிகழ்ந்த போது சென்றோம். ஆனால் வேடந்தாங்கலின் கதவுகள் திற்க்குமுன் அங்கே நின்ற்ரிருந்தோம். பின்னர் யாரும் ஒலியின்றி மெதுவாக சென்று பார்த்தோம். கூட்டம் கூட்டமாய் பறவைக்கூட்டம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில். முடிந்தவரை காமிராவுக்குள் சிறைப் பிடித்தோம். சிக்காமல் சிதறி பறந்தவைகள் அதிகம். அப்போதுதான் கூடுகட்ட வேற்றிடங்களிலிருந்து, வேடந்தாங்கல் நோக்கி வந்துள்ளன. சத்தமிட்டால், இனி பறவைகள் வராது. சத்தமின்றி நடங்கள் என் பாதுகாப்பாளர் கூறியதை கருத்தில் கொண்டு பார்த்தோம். ரம்மியகாட்சிதான் எங்கும். மனதுக்கு மகிழ்வான நிகழ்வுகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: