Skip to content

அப்படி இப்படி – மார்ச்

March 20, 2012

அப்படி இப்படி மார்ச்

நிகழ்வுகளால் நிரம்பி வழியும் மார்ச் மாதம்

ஆரம்ப பள்ளியில் ஒரு மணி நேரம்

ஆரணிக்கு ஒரு குடும்ப விழாவில் பங்கெடுக்க சென்றிருந்தோம். நானும் குழலியும் அக்கா வேலை செய்யும் ஆரம்ப பள்ளிக்கு சென்றோம். குழந்தைகளுடன் 1 மணி நேரம் செலவிடலாம் என்ற யோசனையில். முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 1 ஆசிரியை, மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பிற்கு 1 ஆசிரியை. சுமார் 40 மாணவர்கள் இருந்திருப்பார்கள். இரண்டு பழகிய முகங்களை தாண்டி மற்றோர் புதிய முகம் பார்த்ததில் அவர்களுக்கு ஆனந்தம். முதலில் அனைவரும் தங்கள் பெயரினை தங்களுக்கு பிடித்த உணவுடன் சேர்த்து சொன்னார்கள். எ.கா உப்புமா உமாநாத் ஜாங்கிரி ஜானகி. பலருக்கு ஆப்பிள் தான் பிடித்த உணவாக இருந்தது. பின்னர் இரண்டு பாடல்கள். பின்னர் 1 கதை. இடையில் சத்துணவு ஆயா முட்டை தந்தார்கள். குழலி மாணவர்களுடன் கலந்துவிட்டாள். அவர்களுடன் சென்று முட்டையும் வாங்கிகொண்டு வந்தாள். பெஞ்சொன்றில் ஏறி தனக்கு தெரிந்த திருக்குறள்களை சொல்ல மாணவர்கள் திருப்பி சொன்னார்கள். பள்ளிகளில் மாணவர்களுக்கு மூன்றாம் வகுப்பில் இருந்து தான் திருக்குறள் ஆரம்பமாம். பின்னர் மாணவர்கள் கதை சொன்னார்கள், கதை படித்தார்கள். 2 விளையாட்டு விளையாடினோம். சின்ன பானை பெரிய பானை. ரொம்பவும் ரசித்தனர் குழந்தைகள். அடுத்த முறை ஆரணி வரும்போது வருகிறேன் என விடைபெற்றோம்.

நண்பர்களே, நேரம் கிடைக்கும்போது உங்கள் அருகாமையில் இருக்கும் பள்ளிக்கு சென்று கொஞ்ச நேரம் செலவழியுங்கள். அது இருவழி ஆனந்தத்தை கொடுக்கும் 🙂 ஒரு நாள் சந்திப்பாக இல்லாமல் தொடர் சந்திப்புகள் இன்னும் செழுமையாக்கும்

மேடையில் துணைவியாரும் மகளும்

மார்ச் 8 சர்வதேச மகளீர் தினத்திற்கு எங்கள் பகுதி மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் சுமார் 150 பேரை ஒருங்கிணைத்து பெண்கள் தின விழாவினை கொண்டாடினார்கள். மனைவி அதனை ஒருங்கிணைத்தார். யூனியன் பேங்க், போரூர் கிளை விழா செலவுகளை ஏற்றது. தனிப்பட்ட முறையில் எனக்கு சந்தோஷம் தந்தது மனைவியும் மகளும் முதல் முறையாக மேடையில் பிரவேசித்தார்கள். மக்கள் இயக்க நிகழ்வுகளில் மனைவி தலைமையேற்று நடத்துவது முதல் முறை. குழலி சர்வசாதாரணமாக மைக் பிடித்து திருக்குறள்கள் சொன்னாளாம். (அச்சமயம் நான் அங்கிருக்கவில்லை). மாலை பாட்டுப்போட்டியின் போது அவளே மேடையேறி ‘ஜனகன மண’ பாடுகிறேன் என பாடினாள். இருவரும் மேலும் பல மேடைகளையும் மக்களையும் காண வேண்டும் என்ற ஆவா. இது ஒரு சுயநலம் கூட, நான் நிம்மதியாக ஊர் சுற்றலாம், அல்லது ஊர் சுற்றுவதின் அவசியம் இன்னும் தெளிவாக விளங்கும். டாட்.

பூனையும் குட்டி பூனையும்

புத்தக அலமாரியின் கீழே இருந்த இதழ்கள் சிதறி இருந்தது. அங்கே ஒரு பூனையை காலையில் பார்த்ததாக அம்மா தெரிவித்தார்கள். அன்றைய தினம் இரவு அதே இடத்தில் பூனை அமர்ந்திருந்தது. அதட்டியும் நகரவில்லை. குச்சி எடுத்து வந்தும் நகரவில்லை. பின்னர் தான் புரிந்தது அது ஈன்றெடுக்க இடம் தேடி அமர்ந்திருக்கு என்று. அறைக்கதவுகளை திறந்துவிட்டோம். காலையில் பார்த்த போது 4 குட்டிகள். வீட்டிற்குள் இருந்து மொட்டைமாடியில் பாதுகாப்பாக வைத்துவிட்டோம். ஆனாலும் பெரிய பூனை அங்கிருந்து இடம் மாற்றி செருப்புகள் இருக்கும் பெட்டியில் வைத்திருந்தது. நான்கு குட்டிகள். ரொம்பவும் குட்டி. குழலிக்கு அதை பார்க்க பார்க்க சந்தோஷமாக இருந்தது. பெரிய பூனையிடம் பேச ஆரம்பித்தாள். உங்க குட்டிங்க உள்ள இருக்கு அம்மா எங்கன்னு கேக்குது போ..
4 நாட்களில் அதுவே அனைத்தையும் இடம் மாற்றியது. 1 நாள் குட்டியை பிடித்த படங்கள்..

பயிற்சி பட்டறை

தமிழ்நாடு அறிவியல் இயக்க தென்சென்னை மாவட்ட தன்னார்வலர்கள் பயிற்சி பட்டறை படப்பையில் மார்ச் 2,3,4 தேதிகளில் நடந்தது. நீண்ட நாட்கள் கழித்து ஒரு தங்கும் முகாமில் கலந்துகொண்டேன். சிறுவயது நினைவுகள் வந்து சென்றது. டாக்டர் கல்பனா பெண்களும் உழைப்பும் என்ற தலைப்பில் பேசினார். மார்ச் 8 ஏன் கொண்டாடுகின்றோம், பெண்களின் உழைப்பு எப்படி கணக்கில் வராமலே போகின்றது பற்றி அருமையாக பேசினார். சி.ராமலிங்கம் அவர்கள் மக்கள் அறிவியல் இயக்கங்கள் பற்றி பேசினார். இரவில் வான் நோக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. மன்னா தோட்டம் என்ற இடத்தில் நிகழ்ச்சி நடந்தது. அமைதியான சூழல். சுப்பிரமணி ‘மாத்தி யோசி’ என்ற தலைப்பில் கலகலப்பான வகுப்பை எடுத்தார். மதுரை பாண்டியராஜன் துளிர் இல்லம் பற்றியும் அங்கே என்ன என்ன செய்யலாம் என்பதை பற்றி விளக்கினார். அப்பா இரண்டு வகுப்புகளை எடுத்தார். நானும் எழுத்தாளர் கமலாளயனும் ‘வாசிப்பின் அவசியம்’ மற்றும் எதை எல்லாம் வாசிக்கலாம் என்பதை பற்றி பேசினோம். கடைசி நாள் மாலை ஒரு கலந்துரையாடல். நிகழ்ச்சி நிறைவாக இருந்தது. வந்திருந்த இளைஞர்கள் கண்டிப்பாக நிறைய எடுத்து சென்றிருப்பார்கள்.

பண்புடன் வாசகர் வட்டம்

கடந்த மார்ச் 18ஆம் தேதி பண்புடன் வாசகர் வட்டம் நவபாரத் பள்ளியில் நடந்தது. கவிஞர் தேவதேவன் சிறப்பு விருந்தினராக பங்குகொண்டார். அதிகம் பேசாத அவர் தொடர்ந்து 2 மணி நேரம் பேசினார். நிறைவான சந்திப்பாக அமைந்தது. புதிய நண்பர்கள் பலர் பங்குகொண்டனர். தேவதேவன் கவிதைகள் பலவற்றை வாசித்து இன்புற்றோம். ஒவ்வொரு கவிதையின் பிண்ணனி அதன் பின் இருக்கும் விஷயம் பற்றி நேரடியாக கேட்டது சுவாரஸ்யம். அமைதி, மெளனம் பற்றிய கவிதைகள் ஈர்த்தது. தொடந்து பங்கெடுத்து சிறப்பிக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

(ஸ்டாலின் கவிஞர் தேவதேவனுக்கு நினைவு பரிசு வழங்குகின்றார்)

காசி பயணம்.

இம்மாத இறுதியில் காசிக்கு பயணிக்கிறோம். நண்பர்கள் & குடும்பத்துடன். மதுரையை போலவே காசி சலிப்பூட்டாத நகரம். 5 வருடம் முன்னர் சென்றுள்ளேன். என்று ரயிலேருவோம் என்ற ஆவலிலேயே ஒவ்வொரு மணியும் கடக்கின்றது. புகைப்படத்திற்கு பஞ்சமே இல்லாத நகரம். உடன் 5 கேமராக்கள் பயணிக்கின்றன. அள்ளிக்கொண்டு வருகிறோம் படங்களையும் அனுபவங்களையும்.

குழலி டச்.
நேற்று மாலை நானும் குழலியும் டிஸ்கவரி சேனல் பார்த்துக்கொண்டிருந்தோம். சிங்கம் ஒன்று மிருகத்தை வேட்டையாடியது. மற்றொரு சிங்கம் அருகே வந்ததும் பங்குபோட்டு தரவில்லை. பின் குரலில் “சிங்கங்கள் இன்னும் பங்குபோட கற்றுக்கொள்ளவில்லை” என வந்தது.

குழலியுடம் “குழலி உன்கிட்ட 2 தோசை இருக்கு, பசியில ஒரு அக்காவோ பாப்பாவோ வந்தா என்ன செய்வ?”
குழலி – “ஒரு தோசை தருவேன்..”
நான் – “குட். இப்படி தான் இருக்குறது கொடுத்து சாப்பிடனும். சரி இப்ப நான் தான் சிங்கம், என்கிட்ட பகிர்ந்து சாப்பிட எப்படி சொல்லுவ?”

கொடூர குரலில் “குழலி நான் தான் சிங்கம்..உவா….(உறுமல் சத்தம்)”

“சிங்கம் சிங்கம், உன் கிட்ட பாப்பாவோ அக்கோவோ வந்தா தோசை தரனும் சரியா?

அவ்வ்வ்வ்..
#(தேவதைகள் வாழும் வீடு)

– விழியன்

Advertisements
8 Comments leave one →
 1. Sashidharan V permalink
  March 20, 2012 8:56 pm

  குழலி டச் – மிக அருமை 🙂

 2. March 21, 2012 7:34 am

  superb….

  http://sivaparkavi.wordpress.com/
  sivaparkavi

 3. March 21, 2012 9:43 am

  arumai

 4. March 21, 2012 1:50 pm

  அருமை.
  வாழ்த்துகள்.

 5. March 26, 2012 9:42 am

  அருமையான அனுபவங்களும் அதற்கான நச் என்ற விவரணைகளும்.

  வாழ்த்துகள்.

 6. March 31, 2012 2:44 pm

  வணக்கம் விழியன். நான் இப்போதான் மார்ச் ..நிகழ்வுகள் படித்தேன். அருமையான பதிவு. அதைவிட, இந்த படங்கள் அற்புதம். காமிரா கலக்கல் அண்ணே.. எடுத்தவரின் திறமை.. கருப்பு வெள்ளையில் வெளிச்சம் போடுது.. மோகனா

Trackbacks

 1. ‘விழியன் பக்கம்’ இன் ‘என் விகடன்’ « விழியன் பக்கம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: