Skip to content

அப்படி இப்படி ஏப்ரல் – 2012

April 30, 2012

அப்படி இப்படி ஏப்ரல் – 2012
2012ல் குறைவான பயணங்களே மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்திருந்தேன். காசிக்கு சென்ற வந்தபின்னர் அந்த முடிவில் மாற்றம் வந்துவிடுமென அச்சம் வருகின்றது. திருப்திகரமான காசி பயணம் ஏப்ரல் முதல் வாரத்தில் நிகழ்ந்தது. 11 பேர் கொண்ட நண்பர்கள் குழுவுடன் காசிக்கு சென்று வந்தோம். கடந்த வடநாட்டு பயணம் நிறைய அலுப்பினை தந்தது, இம்முறை அப்படி இருக்கவில்லை. ஹிந்தி பேசி கொஞ்சம் சமாளித்துவிட்டோம். நிறைய புகைப்படங்கள். சுமார் ஐந்து கேமராக்களுடன் சென்று இருந்தோம். இடையில் சிலருக்கு உடல்கோளாறு ஏற்பட்டது மட்டும் பின்னடைவு. கடுமையான் வெயில், கடைசி நாள் சூராவளி காற்றுடன் மழை. காசி பயணம், எங்கே போகலாம், என்னென்ன பார்க்கலாம், காசி ஏற்படுத்தும் அதிர்வுகள், என தனி கட்டுரை எழுத வேண்டும். எந்த ஊரின் கட்டுரை எழுதும் முன்னர் எனக்கு அந்த ஊர் அனுபவத்தின் படபடப்பு நின்றபின்னரே எழுத துவங்குவேன், காசி பயணத்தின் படபடப்பு இன்னும் நீடிக்கின்றது. நீடிக்கவேண்டும்.

சக பயணிகளின் புகைப்படங்கள்:
தம்பி ஜெகதீஷ் எடுத்த படங்கள்
ப்ரவீன் எடுத்த புகைப்படங்கள்
தம்பி உதயன் எடுத்த புகைப்படங்கள்

கந்தபழனியின் புகைப்படங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

அடுத்த புத்தகம்:
ஆறு வருடம் முன்னர் சித்தார்த் மற்றும் சில நண்பர்களுடன் சென்னை டு வேலூர் செல்லும் போது கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டு முதல் முதலாக இந்த சிறுவர்கதையினை சொன்னேன். இன்று தான் அது முழு உருவம் பெற்று அச்சிட சென்று இருக்கின்றது. நினைத்த மாதிரியே ஓவியங்களை வரைந்து தந்த சொக்கலிங்கம் அவர்களுக்கு நன்றி. அவரை அறிமுகம் செய்துவைத்த யூமா வாசுகிக்கும் நன்றி. விரைவில் வெளிவரும் புத்தகம் பற்றி எந்த ரகசியத்தையும் வெளியிட முடியாது 🙂 இது சிறுவர்களுக்கான சின்ன நாவல் (அல்லது பெரிய கதை). நிச்சயம் குழந்தைகள் விரும்புவார்கள்

திருப்பதி:
நான்கு வருட நச்சரிப்பில் கடைசியாக இரண்டு வாரம் முன்னர் திருப்பதி சென்றோம். பள்ளி தேர்வுகள் முடிவிற்கு வராததால் கூட்டம் குறைவாகவே இருந்தது. குழலிக்கு நான்காவது மொட்டை. நல்ல தரிசனம் 2.5 மணி நேரத்தில். இரண்டாம் நாள் திருப்பதி சுற்றியுள்ள இடங்களை பார்வையிட்டோம். தற்போது கையில் இருக்கும் கேமராவின் உயிர் முடிந்துவிட்டது என நினைத்திருந்தேன், ஆனால் இன்னும் உயிர் இருக்கின்றது என சொல்லியது. திருப்பதியில் எங்கு காணினும் மக்கள், எங்கும் வரிசைகள். ஆனாலும் திருத்தளங்களில் நகரமே சுத்தமாக இருக்கும் இடம் திருப்பதியாக தான் இருக்க முடியும். எங்கு சென்றாலும் சுத்தும், எங்கும் அமரலாம், 100 அடிக்கு ஒரு கழிவறை, நிறைய டீக்கடைகள். 24 மணி நேரமும் அதே சுறுசுறுப்புடன் இருக்கின்றது. நிச்சயம் திருப்பதி தேவஸ்தானத்திர்கு சபாஷ் தான் போட வேண்டும். இரண்டு முறை கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடந்தே ஏறி இருக்கின்றேன், இனி நல்ல நண்பர்கள் செட்கிடைத்தால் மட்டுமே ஏற முடியும். கல்லூரி நாட்களில் சென்ற திருப்பதி பயணம் நினைவுகள் வந்து வந்து போனது. அழகான நாட்கள் அவை.

குடும்ப விழா:
நேற்று வேலூரில் குடும்ப விழா ஒன்று நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் தொடர்ந்து செயல்படும்/பட்ட ஆர்வலர்களின் குடும்பங்கள் ஓர் இடத்தில் சந்தித்து பாடி/ஆடி/ விளையாடி / பேசி இன்புற வேலூர் கோட்டை மைதானத்தில் சந்தித்தோம். சிறுவர்களுக்கு விளையாட்டுக்கள், பெரியவர்களுக்கு விவாதம், இடையே குளிர்பானம், சுவையான உணவு, மழை (வேலூரில் மழை), நனைதல், போட்டி, மொக்கை, பழைய முகங்கள் என சுவையாக கழிந்தது. குழலி காலை முதல் மாலை வரை சுற்றிக்கொண்டே இருந்தாள். குழந்தைகளுக்கு மகிழ்ச்சி கொள்ள கொஞ்சம் மண் கூட போதுமானது. நிகழ்ச்சி ஆர்வலர்களுக்கு அவர்கள் குடும்பத்தினருக்கு நல்ல உற்சாகம் கொடுத்தது / கொடுத்திருக்கும். தொடர்ந்து வருடாவருட இது போன்ற நிகழ்வுகள் நடைபெற வேண்டும்.

விளையாட்டு:
நான் விளையாடி விளையாடி திளைத்த தெருவில் நின்று கொண்டு நாள் முழுக்க வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன். தெருவில் ஒரு சிறுவன் சிறுமி கூட காணக்கிடைக்கவில்லை. எங்கே போனார்கள் என தெரியவில்லை. இந்த கால சிறுவர்களுக்கு கோடை விடுமுறையை கழிக்க தெரியவில்லையா? அல்லது கழிக்க பெற்றோர்கள் கற்றுத்தரவில்லையா? (நமக்கு சொல்லியா தந்தாங்க?) அந்த நாட்கள் திரும்ப வராதா என ஒவ்வொரு கோடையும் ஏங்க வைக்கின்றது.

கோலிகுண்டு நாட்கள்

குழலி ஸ்பெஷல்:

முகல் சாராபாய் ரயில்வே நிலையத்தில் சங்கமித்ரா ரயிலுக்காக காத்திருந்தோம். இரவு 10.30. 5 நாள் சோர்வு. பலருக்கு உடல்நிலை சரியில்லை. ஒரு மணி நேரம் தாமதம். நான்காம் ப்ளாட்பாரத்தில் காத்திருந்தோம், மூன்றாம் ப்ளாட்பாரத்தில் ரயில் வந்துவிட்டது. நல்லவேளை பக்கத்திலேயே இருந்தது. பெட்டிகளை எடுத்து வேகமாக எங்கள் இருக்கைகளில் அமர்ந்தோம். அப்பாடாவென இருந்தது.

குழலியும் ப்ரவீனும் பால்கனி (Upper Berth)யில் அமர்ந்து விளையாட ஆரம்பித்தனர். மணி 1. களைப்பில் இருந்தோம். இரண்டாம் ஏ.சியில் ரயில் கட்டணம் ஏறியதால் டி.டி.ஆர் ஏறிய 10 நிமிடத்திலேயே இருக்கைக்கு வந்தார் வசூல் செய்ய. அவர் வந்து அமர்ந்ததும் யாரும் எதிர்பாராத வண்ணம் குழலி
“வந்துட்டார்யா வந்துட்டார்…” என்றாள் சத்தமாக வடிவேலு ஸ்டைலில்.

குழந்தைகள் நொடிப்பொழுதில் துடைத்துவிடுவார்கள் துன்பங்களை.

நல்லவேளையாக அவருக்கு தமிழ் தெரியவில்லை.
—————————

குழலிடம் ஒரு 3D டம்ளர் இருக்கின்றது. அதன் வெளிப்புறம் டயனோசர் படம் போட்டிருக்கு.
‘அப்பா இங்க பாருங்க டயனோசசசர்.. இது என் தண்ணிய குடிச்சிடுச்சு..’
‘அதை பார்த்திருக்கியா குழலி ‘
‘பார்த்திருக்கனே’
‘எங்க’
‘காட்லப்பா. யானைய சாப்பிடும்.. பெரிய பல்லு. உங்க பல்ல காட்டுங்க..இதோ இவ்வளவு பெருசு.. யானையவே சாப்பிடும்பா..நேத்து என் ஹார்லிக்ஸ் கூட குடிச்சிடுச்சுப்பா ‘ ம்ச்..என உதட்டை பிதுக்கினாள்.

கதைகள் மட்டும் சொல்லிக்கொண்டிருந்தவர் இப்போது கதை விடுகின்றாள் 🙂

—————————–

சின்ன காரணம் ஒன்றிற்கு அழ ஆரம்பித்தாள். ஒவ்வொருவரின் விசாரிப்பிலும் சத்தம் அதிகமானது. என்ன ஆச்சு என்ன ஆச்சு ஏன் அழுகிறாய் என கேட்க கேட்க விசும்பல் ஓவென உருமாறியது. பத்து நிமிட அழுகைக்கு பின்னர் ஏன் அழுதாய் என நிதானமாய் கேட்டதற்கு “தெரியலையே…” என்றாள் கண்துடைத்து கைவிரித்தபடி.

குழந்தைகள் காரணங்களை அழுகையில் கரைத்துவிடுகின்றனர்.

#தேவதைகள் வாழும் வீடு

– விழியன்

Advertisements
6 Comments leave one →
 1. April 30, 2012 10:47 am

  அனுபவி ராஜா அனுபவி

 2. April 30, 2012 1:14 pm

  // ஏன் அழுதாய் என நிதானமாய் கேட்டதற்கு “தெரியலையே…” என்றாள் கண்துடைத்து கைவிரித்தபடி//

  பலர் வீட்டில் இப்படித்தான். அதனால்தான் அவர்கள் குழந்தைகளாக இருக்கிறார்கள் 🙂

 3. Sashidharan permalink
  April 30, 2012 3:14 pm

  குழலி ஸ்பெஷல் எப்போதும் போல superb..!

 4. May 9, 2012 7:47 am

  :))))))))))))))

 5. May 12, 2012 3:56 pm

  அற்புதமான நினைவு மற்றும் புகைப்படத்தொகுப்பு. கோலிகுண்டு விளையாட ஆள் இல்லாமல் போனது வருத்தம்தான். ஐபிஎல், வேல்டுகப்புன்னு இந்த கிரிக்கெட்டு சனியன எப்பப் பார்த்தாலும் டி.வி’ல போட்டுட்டே இருக்காங்ங. அந்த சனியன் ஒழிஞ்சாத்தான் மற்ற விளையாட்டுக்களை பார்க்க முடியும். பகிர்விற்கு நன்றி. காசி படங்களும் அருமை.

 6. ஜெய் சுரேஷ் permalink
  May 18, 2012 9:53 am

  மனம் சோர்வடையும் போது விழியன் பக்கம் வந்தால் மனச்சோர்வு காணமல் போகும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: