Skip to content

வெளியீட்டு விழா குறிப்புகள்

June 8, 2012

வெளியீட்டு விழா குறிப்புகள்:

விழா சிறப்பாக நடந்தது.  ஒரு நிகழ்ச்சிக்கு என்னென்ன சோதனை வருமோ அத்தனை சோதனையும் முந்தைய நாள் தாக்கியது. ஞாயிறு நிகழ்ச்சிக்கு புத்தகம் சனி இரவு 9 மணிக்கு தயாரானது. இரவு ஏழு மணி வரை பைண்டர் சார் கரண்டு இல்லை இல்லை என சொல்லிக்கொண்டிருந்தார். ஞாயிறு கடைவேறு விடுமுறை எனச் சொல்லி இருந்தார். எப்படியோ இரவு 9 மணிக்கு தம்பி உதயன் புத்தகங்களை வாங்கிவிட்டான். இது ஒரு புறம் இருக்க இலட்சுமி நகர் நூலக திறப்பு விழாவும் வெளியிட்டுடன் இருந்தததல்லவா, அவர்கள் சனி மதியம் “சார் நிகழ்ச்சியை ஒரு 10 நாள் அல்லது 2 வாரம் தள்ளி வெச்சிக்கலாமா? எங்க பகுதி மக்களுக்கு இன்னும் சொல்லவே இல்லை” என பீதியை கிளப்பினர். முடிவாக வெறும் புத்தக வெளியீடு மட்டும் நடத்திக்கொள்வோம் என்ற ஏற்பட்டில் முடிவுற்றது பீதி.

இசைக்கவி இரமணம் வெளியிட யூமா வாசுகி பெற்றுக்கொள்கிறார்

5 மணிக்கு நிகழ்ச்சி என்றாலும் 6 மணிக்கு சில நொடி முன்னர் தான் நிகழ்ச்சி துவங்கியது. இசைக்கவி இரமணன் அண்ணாவின் இனிய கானத்துடன் துவங்கியது. தலைமை ஜகதீஸ்வரன் (மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்). வெறும் மேடைப்பேச்சாக மட்டும் நிகழ்ச்சி இருக்க வேண்டம என்பதால் ஒரு கலந்துடையாடல் நிகழ்வாக இருக்கட்டும் என நானும் அப்பாவும் முடிவெடுத்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக எழுத்தாளர் கமலாலயன் துவங்கி வைத்து கலந்துரையாடல் துவங்கியது. “தற்கால குழந்தைகள் ஏன் அதிகம் புத்தகங்கள் படிப்பதில்லை. தமிழில் வாசிக்க தற்போது நல்ல நூல்கள் வருகின்றனவா? என்ன செய்ய வேண்டும் நாம்?” என்பது தான் தலைப்பு. மையம் இது தான் என்றாலும் தற்கால சமூக கட்டமைப்பில் உள்ள சிக்கல்களுக்கும் பயணித்தது விவாதம். தரமான, மணியான கருத்துக்கள் விவாத்ததினூடே வந்தன. குழந்தைகளுக்காக நிறைய எழுதும் யூமா வாசுகி சிறப்பான கருத்துக்களை முன்வைத்தார். அதில் குறிப்பிடபட வேண்டிய ஒன்று “குழந்தைகளை கூட்டாக வைத்து அவர்களுக்காக நாம் யோசிப்பதில்லை” என்பது. இது மேலும் விவாதப்படவேண்டிய ஒன்று.

எழுத்தாளர் கமலாலயன்

 

அப்பா – கு.செந்தமிழ் செல்வன்

பின்னர், இசைக்கவி இரமணன் தன் பாடல்களுடன் தன் உரையை நிகழ்த்தினார். குழந்தைகளை பற்றியே பேச்சு அமைந்தது. முன்னர் நடந்த விவாதத்தின் சாரம்சத்தையும் தன் உரையில் கோர்வையாக்கினார். குழந்தை வளர்ப்பு என்பதை விட பேணுதலே சரியாக இருக்கும் என்றார். தன் இளமை காலம், தன் பிள்ளைகளின் வளர்ப்பு, தன் பேரன்களின் அட்டகாசம், பாடல், பாரதியார் பாடல் என ரசமாக இருந்தது உரை. பென்சில்களின் அட்டகாசம் பற்றியும் பேசினார். ஒற்றுப்பிழைகளை சரிபார்க்குமாறு விமர்சனம் வைத்தார். குழந்தைகளின் மொழியில் அவர்களின் கற்பனை உலகும் கை கூடுகின்றது என பாராட்டினார்.

கடைசியாக என்னுடைய ஏற்புரை. நான் சொன்னவை இரண்டு விஷயங்கள் தான். குழந்தைகள் புத்தகம் வாசிப்பதில்லை என்பதற்கு சொல்லும் காரணம் 1. கல்வி 2. ஆசிரியர்கள் 3 பெற்றோர்கள். கல்வியிலும் ஆசிரியர் மனோபாவத்திலும் மாற்றம் வேண்டும், ஆனால் அதே சமயம் அது நடைபெறுவதற்கும் நம் பிள்ளைகள் பெரியவர்களாகிவிடுவார்கள். அதுவரை காத்திருக்காமல் பெற்றோர்கள் அந்த பொறுப்பினை ஏற்று புத்தகம், கதைகள் வாசித்தலை ஊக்கப்படுத்தவேண்டும்.

விவாதத்தின் மற்றொரு கருத்தாக நிறைய நீதிக்கதைகளை குழந்தைகளுக்கு போதிக்கவேண்டும், எழுத்தாளார்கள் எழுதவேண்டும் என்ற கோரிக்கை வந்தது. எனக்கு இதில் உடன்பாடு கிடையாது. கதைகள் அவர்களை கற்பனை உலகிற்கும், தன் காணாத உலகின் ஒரு பகுதியினை, மகிழ்ச்சியினை, வாழ்வில் இருக்கும் இன்பங்களை சொல்லாமல் சொல்லவேண்டும். நீதிக்கதைகளை போதிப்பதை விட பெற்றோர்களின் கதைகள் நீதிக்கதையாக இருக்க வேண்டும். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்றால் பெற்றோர்கள் உதவிக்காட்டுங்கள், அதிகாலை எழ வேண்டுமென்ற போதனை சொல்லவேண்டும் என்றால் பெற்றோர்கள் அதிகாலை எழவேண்டும் என்றேன்.

மேடையில் அனைவரும்

உதயன் (தமிழ்நாடு அறிவியல் இயக்கம்) நன்றியுரை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்ததே ஊரில் இருக்கும் நண்பர்களின் முகங்களை ஒரு சேர பார்ப்பதற்கே. அரிதாக வரும் சந்திப்புக்களை சாத்தியப்படுத்தவே.

நிகழ்விற்கு வந்திருந்து வாழ்த்திய நண்பர்கள், புத்தகம் வெளிவர பெரிதும் உதவிய நாகராஜன், படங்களை கேட்டாற்போல செதுக்கி தந்த ஓவியர் சொக்கலிங்கம், லட்சுமிநகர் குடியிருப்போர் நலச்சங்க பொறுப்பாளர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கும், உறுதுணையாய் நிற்கு துணைவிக்கு சிறப்பு ப்ரியங்கள்.

படங்கள்: உதயன்

– விழியன்

Advertisements
6 Comments leave one →
 1. ganesh kumar rajappa permalink
  June 8, 2012 5:55 am

  it was a good feel to be present on the occassion. I have read the book, and its good.. All the best for future creations also…

 2. June 8, 2012 2:23 pm

  மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் நிறைய புத்தகங்களை சிறுவர்களுக்காக எழுதுங்கள்.யூமாவாசுகி மொழிபெயர்த்த ‘மரகதநாட்டு மந்திரவாதி’ வாசித்திருக்கிறேன். எனக்கு ரொம்ப பிடித்த புத்தகம். தங்கள் புத்தகத்தையும் வாங்கி வாசிக்கிறேன்.
  இன்றைய தலைமுறையை வாசிக்க வைக்க பெற்றோர்களும், பள்ளிகளும் இணைந்து செயல்பட வேண்டும். வீட்டில் தொலைக்காட்சியும், பள்ளிக்கூடத்தில் மனப்பாட பாடமுறையும்தான் வாசிப்பை அழிக்கிறது.
  தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்.

 3. June 9, 2012 3:39 am

  That is great .Congratulations Boss. Good to see Isaikkavi Ramanan Aiyaa. My wishes and regards to him.

 4. June 10, 2012 5:17 pm

  வாழ்த்துகள்.

 5. June 13, 2012 1:55 am

  வாழ்த்துகள். பெற்றோர் முன் மாதிரியாக இருத்தலும் அவசியம் என்பதைப் போல் நீதிக்கதைகள் குழந்தைகளுக்குத் தெரியப் படுத்துவதும் மிக அவசியம். முன்பெல்லாம் வாரம் இரு நாட்கள் கடைசி வகுப்பு நூலகப் புத்தகங்கள் படித்தலுக்கு எனவும், வாரம் இரு வகுப்புகள் நீதி போதனைகளுக்கு எனவும் இருந்தன. நீதி போதனை வகுப்பில் வெறும் நீதிபோதனை மட்டுமில்லாமல் குடிமைப் பயிற்சியும் சேர்ந்து சொல்லிக் கொடுப்பார்கள். இப்போதெல்லாம் அவை இல்லை. :(((((

 6. June 24, 2012 1:05 pm

  அன்புடன் விழியனுக்கு… தங்கள் விழாவில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை… குறைந்த அளவு தங்களைச் சந்திக்கலாம் என்ற எண்ணமும் ஈடேறவில்லை… அலைபேசியிலும் ஒருசில வார்த்தைகளே பேச முடிந்தது… மீண்டும் உங்களிடமிருந்து அழைப்பு வரும் என நானும் என் ஆசிரியரும் காத்திருந்தோம்….

  சரி வாழ்த்துகள்…

  துணைவிக்கு சிறப்பு ப்ரியங்கள். ///// இது தட்டச்சுப் பிழையா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: