Skip to content

குழலி ஸ்பெஷல்

August 20, 2012

பேஸ்புக்கில் பகிர்ந்த சில நிலைத்தகவல்கள் – குழலி ஸ்பெஷல்

இன்று காலை குழலி பள்ளியில் விட வண்டி எடுத்துக்கொண்டிருந்தேன். கீழ் வீட்டில் குடியிருக்கும் சரணின் தாத்தா என்னிடம் பேசினார். போகும் போது “அப்பா, அந்த தாத்தா பேரு என்ன? ”
“சரண் தாத்தா”
“நம்ம தாத்தா பேரு”
“செல்வன் தாத்தா”
“நீங்க பேசனீங்களே அந்த தாத்தா பேரு என்ன? ”
“பன்னீர்செல்வம் – சரண் தாத்தாவைத்தான கேக்குற”
அவளின் கேள்வி எனக்கு புரிந்தது. சரண் தாத்தாவை அப்படி கூப்பிடுகின்றீர்கள் ஆனால் நம் தாத்தாவை செல்வன் தாத்தானு சொல்ல சொல்றீங்க, குழலி தாத்தான்னு தான வரணும்?

நான்கு முறை திரும்ப திரும்ப இதே கேள்விகளை கேட்டாள், சலிக்காமல் அதே விளக்கம் அளித்தேன்.

கேள்விகளால் சூழந்த குழந்தைகளில் உலகு அனுகுவது சிக்கலானதும், அழகானதும் கூட🙂
17-08-12

————————————

நேற்று மாலை பூ வரைய கற்றுக்கொண்டிருக்கிறாள் குழலி. ஸ்கெட்ச் பேனாவில் வேறு வேறு வண்ணத்தில் வரைந்து காட்டினாள். இன்று காலை பள்ளியில் விடும் வழியில் காற்றில் அந்த பூவினை வரைந்து காட்டினாள்.

“ஒரு சர்கிள் போடனும்பா. அப்பறம் ஒரு ரவுண்டு, ஒரு ரவுண்டு, ஒரு ரவுண்டு ஒரு ரவுண்டு, ஒரு ரவுண்டுப்பா
ஒன், ஒன், ஒன் ஒன்
ஒரு கோடுப்பா”

சொல்லிக்கொண்டே காற்றில் வரைந்துகொண்டிருந்தாள்.

“கீழ ஸ்லீபிங்க் ஒன், ஸ்லீபிங்க் ஒன்…ஸ்லீப்பிங் ஒன்.. ” (குழம்ப வேண்டாம் அது தண்ணீர்)

#காற்றில் கவிதையை கண்டேன் – அது ஓவியமல்ல
16-08-12

————————————

இன்று காலை குழலி தன் புத்தகம் ஒன்றை தேடிக்கொண்டிருந்தாள். அவள் கையில் ஜூலை மாத செம்மலர் கிடைத்தது. பின் அட்டையை பார்த்தது முகம் மலர்ந்தாள். அவள் தாத்தாவிடம் அதில் ஒரு பகுதியை காட்டினாள் மகிழ்ந்தாள். பாட்டியிடம் காட்டினாள், அம்மாவிடம் காட்டினாள். ஹி ஹி என பல்லிளித்தாள். அங்கே பாரதி புத்தகாலயத்தின் விளம்பரம். அதில் கடந்த மாத வெளியான புத்தக புகைப்படங்களில் “பென்சில்களின் அட்டகாசம்” அட்டைப் படம் இருந்தது. It made the day for all of us🙂
14-08-12

————————————

குழலிக்கு எண்கள் சொல்லித்தரும்போதெல்லாம் எங்கே இந்த கேள்வியை கேட்டு என்னை திக்குமுக்காட செய்வாளோன்னு பயத்தோடவே சொல்லித்தரேன்.
Twenty, twenty one , twenty two…
Thirty, thirty one, thirty two..
அப்போ
Ten, ten one, ten two, ten three தானே வரணும்?

இப்ப எல்லாம் சுடோகு ஒளிந்து விளையாட வேண்டி இருக்கு😦

————————————

குழலியின் கைவண்ணம்

– விழியன்

6 Comments leave one →
  1. August 20, 2012 8:36 am

    Ten, ten one, ten two, ten three //

    ஆமா, இல்ல? அப்படித்தானே வரணும்? :)))))

  2. August 20, 2012 8:37 am

    சமத்துப் பாப்பா; அப்பாவைத் திணற அடிக்குது. :))))

  3. Sashidharan V permalink
    August 20, 2012 2:22 pm

    so lovely🙂

  4. August 20, 2012 2:53 pm

    வணக்கம்.விழியன். மிக்க மகிழ்ச்சி.. குழலியின் வினவலும் தங்களின் பதிவும். மனசுக்கு நிறைவாக இருக்கிறது. குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்பதைவிட்,அமிழ்தினும் ஆற்ற இனிதே.தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் என்ற குறள்தான் எனக்கு இஷடம். அது போல, குழலியின் ஐயங்கள் அவள் வரையில் சரிதானே.. நிகழ்வுகள் நிறைவாகவும், சந்தோஷமாகவும் உள்ளன. .வாழ்த்துகள்..மோகனா.

  5. August 28, 2012 6:20 pm

    🙂 குழலி பேச வேணாம்..குறும்புப் பார்வையே போதுமே..!!

  6. September 5, 2012 3:26 pm

    Good one🙂

    Regards,
    J

    http://jasanpictures.com
    http://jaggy.me

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: