Skip to content

புத்தக அறிமுகம் – கடல் கடந்த பல்லு

October 29, 2012

புத்தக அறிமுகம் – விழியன்

கடல் கடந்த பல்லு – ஒரு குட்டி அணிலின் சாகச பயணம்.

பயணம் என்றால் யாருக்கு தான் கசக்கும். அதுவும் ஒரு குட்டி அணிலுடன் காடு, மேடு, கடல், பாலைவனம் என நாமும் பயணம் செய்வது என்றால்.. அட எத்தனை சுவாரஸ்யமாக இருக்கும். ஆம் அப்படி ஒரு சுவாரஸ்யத்தை கொடுப்பது தான் கடல் கடந்த பல்லு என்ற சிறுவர் நாவலின் புத்தக வாசிப்பு. இது ஒரு குட்டி அணிலின் சாகச பயணம். அணில்என்றதும் அதன் அழகான கண்களும், அதன் மெல்லிய வாலும், முதுகில் இருக்கும் பொசு பொசு முடியும் தான் நினைவிற்கு வரும். இனி இந்த குட்டி அணில் பல்லுவும் நம் நினைவிற்கு வரலாம.

பல்லு என்ற பெயரினை பாட்டியிடம் பெருகின்றது குட்டி அணில். சின்ன தோட்டத்தில் ஆனந்தமாக வசித்து வருகின்றது பல்லு. பாட்டி வெளிநாட்டிற்கு பயணிக்கின்றார்கள். பாட்டியை விட மனம் இன்றி விமானத்தில் வெளிநாடு பயணிக்கின்றது பல்லு. பாட்டி செல்வது ஒரு பாலைவன நாடு. அங்கே வீட்டில் இருந்து தவறி பாலைவனத்திற்குசெல்கின்றது. பாலைவனத்தில் இரண்டு நண்பர்கள் கிடைக்கின்றார்கள். ஒரு குரங்கும் ஒரு முயலும். மனிதர்கள் தொல்லையில் இருந்து தப்பிக்க கடலில் குதிக்கின்றது குரங்கு, அதை தொடர்ந்து குரங்கும் பல்லுவும் குதிக்கின்றன. நடுக்கடலில் ஒரு திமிங்கலம் இவர்களுக்கு உதவி செய்கின்றது. பின்னர் கருடன் இவர்களை காட்டிற்கு கொண்டு செல்கின்றது. காட்டில் ஆனந்தமாக கழிக்கின்ற நாட்களை. அங்கு புலி ஒன்றின் கோபத்தை சம்பாதித்து பல்லுவின் சாமர்த்தியத்தால் தப்பிக்கின்றன. கருடன் கொஞ்ச நாட்களில்
இவர்களை எங்கு விடவேண்டுமோ அங்கு விடவதாக வாக்களித்து செல்கின்றது, அதன் படியே வந்து இவர்களை ஏற்றி பல்லுவின் ஊரில் இறக்கிவிடுகின்றது. கடைசியாக பாட்டியை அடைகின்றது பல்லி, இரண்டு புதிய நண்பர்களுடன்.”கடல் கடந்த பல்லு”வின் கதாநாயகன் பல்லு தான். எந்த ஒரு சந்தர்பத்திலும் பதட்டப்படாமல், நிதானமாக செயல்பட்டு வெற்றி காண்கின்றது. பார்க்கும் மிருகங்களை எல்லாம் அண்ணா, அம்மா, அக்கா என அழைப்பது சகோதரத்துவத்தை நமக்கு உணர்த்தும். பயணங்கள் தரும் பாடங்கள் அற்புதமானவை. மேலும் ஒவ்வொரு இடத்தில் அழகு இருக்கின்றது என சொல்லாமல் சொல்லி செல்கின்றது பல்லு. மனதிற்கு இனிய பல்லு துன்பத்தில் சிக்கும் பொழுது வாசிக்கும் நம் மனமும் பதட்டம் கொள்கின்றது, அதே போல பல்லு உற்சாகமாக வளம் வரும் போதும் நாம் ஆனந்தம் கொள்கின்றோம்.இந்த நாவலின் மற்றொரு சிறப்பு அம்சம் நட்பு. பாலைவனத்தில் மூன்றும் சந்தித்த கொஞ்ச நேரத்தில் இணக்கமான நண்பர்களாகி விடுகின்றன. உடனே நண்பனுக்கு நேரும் துன்பத்தில் இருந்து காப்பாற்ற தன் உயிரையும் பாராமல் கடலில் குதிக்கின்றது பல்லு, எந்நேரமும் நண்பனுடனே இருக்கின்றது குரங்கு, ஒரு தாயின் மென்மையுடன் வளம் வருகின்றது முயலம்மா. வெவ்வேறு இடங்களுக்கு அலைந்து, பல இன்னல்களை கடந்து, கடைசியில் பாட்டியின் அரவணைப்பில் ஆனந்தமாக இணைகின்றன. இவ்வாறு கதை முடிகின்றது.

நம் கற்பனை எல்லலகளை நிச்சய்ம் இது போன்ற கதைகள் விரிவடைய செய்யும். சிறுவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல். மலையாளத்தில் எழுதப்பட்ட நாவலை நமக்காக மொழி பெயர்த்துள்ளார் யூமா வாசுகி. மலையாள மூலத்தை எழுதியவர் எ.டி. பத்மாலயா. அழகான சித்திரங்களை வரைந்து இருப்பவர் சதீஷ். புக்ஸ் பார் சில்ட்ரன்(Books for Children) சார்பாக பதிப்பிக்கப்பட்டுள்ள இந்த புத்தகம் தமிழகம் எங்கும் பாரது புத்தகாலய நிலையங்களில் கிடைக்கும். புத்தகத்தின் விலை நாற்பது ரூபாய்.

நூலின் ஆசிரியர்: யூமா வாசுகி.
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூபாய் 40/- 

– விழியன்

(நன்றி துளிர் – பிப்ரவரி 2011)

Advertisements
No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: