Skip to content

பள்ளி என்கின்ற சுவாரஸ்யம்

June 10, 2013

கோடை விடுமுறை முடிந்து இன்று தமிழகமெங்கும் பள்ளிகள் திறக்கின்றன. கடந்த ஒரு வாரமாக புத்தக பைகள், ஷூக்கள், ஆடைகள் பயங்கர சேல்ஸ். இது கடந்த வாரமே நடந்திருக்க வேண்டும், பள்ளிகள் ஒருவாரம் தாமதமாக திறந்ததால் இந்த வாரம் சேல்ஸ் பரபர.

கோடைக்கால விடுமுறைகள் ஒரு அனுபவம் என்றால் பள்ளிக்காலமும் அதற்கு இணையான அனுபவம் தான். இதனை பெற்றோர்கள் நன்றாக உள்வாங்கவேண்டும். ஏதோ விடுமுறைகளில் பிள்ளைகள் செம ஜாலியாக இருந்துவிட்டு பள்ளி திறந்ததும் வேதனையை அனுபவிக்க போகின்றார்கள் என்ற பிம்பத்தை பெரும்பாலானோர் உருவாக்கி வருகின்றனர். அந்த மனப்போக்கை முதலில் நாம் மாற்றிக்கொள்வது அவசியம்.

குழந்தைகளுக்கு இந்த தேதியில் பள்ளி திறக்கின்றது என முன்னரே அறிவித்து அவர்களை மனதளவில் தயார் செய்துவிடவேண்டும். ‘ஐ, நாளைக்கு ஸ்கூல, புது ப்ரெண்டஸ் பார்க்க போற, லீவு கதை எல்லாம் பேசப்போறீங்க, புது புக், ஐ..’ என்று பாசிட்டிவாக அவர்களை பள்ளி மீதான ஈர்ப்பினை அதிகப்படுத்த வேண்டும்.

குழலியை ஒருவார காலமாகவே அப்படி எல்லோரும் சேர்ந்து தயார் செய்து வந்தோம். இன்று காலை வெளியே சென்று வரும்போது குழலி எழுந்து இருந்தாள். “ப்பா, இன்னைக்கு ஸ்கூல்..” என படு உற்சாகமாக கூவினாள். பையில் எல்லா புத்தகங்களையும் உள்ளடக்கினாள். ஒவ்வொரு புத்தகமாக எடுத்து பெயர் எழுதி இருக்கா என இருவரும் சரி பார்த்தோம். வழக்கத்தை விட சீக்கிரம் குளிக்கப்போகலாம் என அவசரப்படுத்தினாள். பின்னர் ஷூவிற்கு பாலிஷ் போடவில்லை என அதனை கவனித்தாள். அவளுடைய உற்சாகம் எங்களையும் தொற்றிக்கொண்டது.

முதல் நாள் என்பதால் வீட்டம்மாவும் பள்ளிக்கு வந்தார்கள். குழலி ஏனோ வண்டியை கிளம்பும்போது அமைதியானாள். என்ன காரணம் என தெரியவில்லை. பக்கத்து அறைக்கு மாறி இருந்தது குழலியின் வகுப்பு. குழலியின் நெருக்கமான நண்பர்கள் ஆஜர். LKGயில் எல்லா முகமும் புதியதாக இருந்தது. ஒரு சிறுவன் மட்டும் அழதுகொண்டிருந்தான். அவனை சமாதானம் செய்து இருக்கையில் அமரச்செய்தேன். Pre-KGயில் மஞ்சள் சட்டை அணிந்த தேவதை ஒன்று ஓ வென ஓலமிட்டு கொண்டு இருந்தது. உட்கார வைத்து என்ன பேசினாலும் சமாதானம் ஆகவில்லை. எதிரே இருந்த மற்றொரு குழந்தையிடம் பேசியதும் என்ன பேசுகிறோம் என கேட்க அமைதியானாள். அந்த அறையைவிட்டு வெளியேறியது மீண்டும் ஓ.. அவங்க அம்மா வெளிய ரொம்ப வெள்ளந்தியா பேசினாங்க. குழந்தை மாதிரியே.

குழலி வகுப்பிற்கு புதியதாக ஒரு குட்டி தேவதை. தலையின் ஜிட்டு பெரிய கருப்பு பூபோல செம அழகாக இருந்தது. நான் தான் ஆசிரியர் என்று எழுந்து நின்றாள். ஹலோ உங்க பேரு என்னன்னு கேட்டேன். திவ்யதாரினி என்றாள். அவளை அழைத்து சென்று வகுப்பில் இருந்த எல்லோரிடமும் கை குலுக்க வைத்து பெயர்களை சொல்ல வைத்தேன். உம்மென இருந்த குழந்தைகள் முகத்தில் கொஞ்சம் சந்தோஷம் வந்தது. என் வழக்கமான கை குலுக்கள்களை ஏற்கனவே முடித்திருந்தேன். குர்ஷாத் வகுப்பு மாறி எல்.கே.ஜியில் அமர்ந்திருந்தான் (அதே ஹிந்தி கை, ஹிந்தி முடி இருக்கும் பையன் தான்).

LKG Annual Exam ரிப்போட்டுகளை வாங்கிக்கொண்டு ஆவலுடன் வாசலில் காத்திருந்த PreKG பெற்றோர்களிடம் ஒரு புன்னகை வீசிவிட்டு நானும் குழலியம்மாவும் இல்லம் திரும்பினோம்.

அரை நாளில் நடந்தவைகளை எப்படியும் ஐம்பது கதையாக மாற்றி மாலை சொல்லுவாள்.

பள்ளிக்குள் மீண்டும் காலெடுத்து வைத்துள்ள எல்லா சிட்டுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நிறைய நிறைய கற்றுக்கொள்ளுங்கள், ஆனந்தமாய் எந்நாளும் வலம் வாருங்கள்.

– விழியன்

Advertisements
2 Comments leave one →
  1. June 10, 2013 8:13 am

    வாழ்த்துகள், அனைத்துக் குட்டிச்சுட்டிகளுக்கும்.

  2. June 10, 2013 8:24 am

    உண்மையான மாற்றம் பெற்றவர்களிடமிருந்து வரணும் சார். நீங்க குறிப்பிட்டது சரியே. பல பெற்றோர்கள் ஸ்கூல் திறந்தா நிம்மதின்னு நினைக்குறாங்க, அவுங்க எப்படி தன் குழந்தைகளை தயார்படுத்துவார்கள்? அவர்களுக்கே முதலில் பள்ளி செல்வதைப்பற்றி கற்றுக்கொடுக்கவேண்டும், குறிப்பு படித்த பெற்றோர்கள் கூட இவ்வாறுதான் நடந்துகொள்கிறார்கள் என்பது வருத்தமே…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: