Skip to content

டாலும் ழீயும் – நூல் அறிமுகம்

June 11, 2013

என்னுடைய ‘டாலும் ழீயும்’ புத்தகத்திற்கு விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய நூல் அறிமுகம். துளிர் சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழில் (மார்ச் – 2013) வெளிவந்தது.

—————————————————

Daal-Zhee-Vizhiyan

அன்புள்ள சாக்லேட் சரவணனுக்கு..

நான் நலமாக இருக்கிறேன். நீயும் நலம்தானே?
சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு நான் அப்பா,அம்மா, அண்ணன் எல்லோரும் போயிருந்தோம். அங்கு நீ போன கடித்தத்தில் எழுதியிருந்த சிம்புவின் உலகம் புத்தகம் வாங்கினேன். கூடவே நிறைய புத்தகங்களும் அம்மா வாங்கி கொடுத்தாங்க. வீட்டுக்கு வந்தவுடனே அந்த புத்தகத்தை படிச்சிட்டேன் நீ சொன்ன மாதிரி ரொம்ப சூப்பரா இருந்துச்சு. சிம்பு எப்படி மறுபடியும் காட்டுக்கு போனது என்று தெரிந்துகொண்டேன்.

அடுத்த நாள் சென்னை கடற்கரைக்கு போயிருந்தோம். அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்ப புத்தககண்காட்சியில் வாங்கின “டாலும் ழீயும்” புத்தகத்தைப் படித்தேன். டாலும் ழீயும் . நம்மை போலவே. நல்ல நண்பர்கள்ஆனால் டால் என்பது ஒரு டால்பினின் பெயர் அதுபோல ழீ என்பது தங்கமீன் ஒன்றின் பெயர். ஆமாம். நான் கடற்கரைக்குப் போனப்ப கடலைப் பார்த்துபிரமிச்சிபோயிருந்தேன். இந்தப் புத்தகம் என்னடான்னா… அந்தக் கடல் உள்ளே வாழ்கிற உயிரினங்களைப்பற்றி இருக்குது. எவ்வளவு பொருத்தமா இருக்கு பாரேன்.
டால் இருப்பது டால்பின்புரம். ழீ இருப்பது மீசையூர். ஆனால் டாலும் ழீயும் ஒண்ணாத்தான் பள்ளிக்குப் போகும். ஒன்றாகத்தான் விளையாடும். ழீ ரொம்ப குட்டிமீன் என்பதால் ழீயும் பள்ளிக்கூட பையை டால்தான் தூக்கிட்டு வரும். இப்படித்தான் ஒருநாள் ழீயோட பள்ளிக்கூடத்தில் கொடுத்த புத்தகத்தை இரண்டு பேரும் சேர்ந்து படிச்சிட்டு இருந்தாங்க. அதில் ஒரு பெரிய கோட்டையின் படம் இருந்துச்சு. அந்தக் கோட்டையை டாலும் ழீக்கும் ரொம்ப பிடிச்சுபோயிடுச்சு. நாமளும் அதை மாதிரி ஒரு கோட்டை கட்டினால் என நினைச்சு அதற்கான வேலைகளை ஆரம்பிச்சுடுச்சு.

நிறைய செடிகளாக இருந்த இடத்தை சுத்தம்செய்து இடத்தை தயார் பண்ணிட்டாங்க. ஆனால் கோட்டை கட்ட மாதிரி வரைப்படம் வேண்டுமே என்ன செய்வதாம். பெரியமீன்கள் சொன்னது ”டிகிரோ என்கிற ஆக்டோபாஸ்தான் வரையும்.” இரண்டு பேரும் போய்வாங்கிவிட்டு திரும்பி வரும்போது ஒரு பெரிய ஆபத்தில் ழீ மாட்டிக்கொண்டது. அதை நான் சொன்னால் நீ கதை படிக்கும் சுவாரசியம் போய்விடும். அதனால் அதை நீயே படித்துப்பார்.

எல்லாம் சரியாகி கோட்டை கட்ட ஆரம்பித்தாகிவிட்டது. அங்கு இருந்த பொறாமை பிடித்த திமிங்கலம் கட்டிக்கொண்டிருக்கும் கோட்டையை இடிக்க ஒரு திட்டம் போட்டுச்சு. டாலும் ழீயும் சேர்ந்து எப்படி அந்த திமிங்கலத்தின் திட்டத்தை முறியடிச்சுதுன்னு படிக்க படிக்க பிரம்பிப்பாக இருந்தது.

கடைசியில் கோட்டைத் திறப்புவிழா எல்லாம் எப்படி நடந்துச்சுன்னு வேற இருக்கு அது ஒரே காமடியா இருக்கு. சிரிச்சிட்டே படிச்சேன். நம்ம சீனு மாமா உன் பிறந்த நாளுக்கு பரிசா கொடுத்தாரே பென்சில்களின் அட்டகாசம் புத்தகம். அதை எழுதின விழியன் மாமாதான் இந்த புத்தகத்தையும் சூப்பரா எழுதியிருக்காரு.. அவசியம் வாங்கி படி. படிச்சிட்டு எப்படி இருக்கு என்று கடிதம் எழுது.
அன்புடன்
மிட்டாய் மின்னு.

டாலும் ழீயும்
விழியன்
பாரதி புத்தகாலயம்
421 அண்ணாசாலை, தேனாம்பேட்டை
சென்னை600 018.

—————————

thulir0004

Advertisements
2 Comments leave one →
 1. சரவணன் permalink
  July 26, 2013 12:45 pm

  டாலும் ழீயும் படித்தபோது தமிழில் ஒரு ‘ஃபைன்டிங் நெமோ!’ என்று தோன்றியது. அருமையான கற்பனை வளம் புத்தகத்தில் தெரிகிறது. கோட்டுச் சித்திரங்களும் பிரமாதமாக இருக்கின்றன. தமிழில் இம்மாதிரியான புத்தகங்கள் வருவது, அதிலும் நேரடியாகத் தமிழில் எழுதப் படுவது வெகு அபூர்வமான விஷயம்! வாழ்த்துகள், நன்றி.

  புத்தகத்தில் ஆங்காங்கே சிறு எழுத்துப் பிழைகள், குறிப்பாக ஒற்றுப் பிழைகள் கண்ணில் படுகின்றன. அடுத்த பதிப்பில் அவற்றைக் கவனமுடன் சரி செய்துவிடுவீர்கள்தானே.

  • July 30, 2013 8:02 am

   நன்றி சரவணன்.

   நிச்சயம் அடுத்த பதிப்பில் ஒற்றுப்பிழைகள் நீக்கப்படும். நேர்மையான கருத்திற்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: