Skip to content

குழந்தை இலக்கிய பரிசு

June 24, 2013

இன்று காலை ஒரு இன்ப அதிர்ச்சி, பழனியில் இருந்து மோகனா அம்மா போன் செய்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். என்ன விஷயம் என கேட்டதற்கு பேப்பரை பாருங்க உங்களுக்கு குழந்தை இலக்கிய பரிசு கிடைத்திருக்கின்றது என தெரிவித்தார்கள். உடனே மடலை திறந்தால் பி.கே.ராஜனும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். ‘அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை’க்கு இந்த பரிசு கிடைத்திருக்கு. இது சமீபத்தில் கடைசியாக வந்த புத்தகம்.

ஓவியங்கள் வரைந்து கொடுத்த தங்கை சோபனா, அதனை டிஜீட்டலைஸ் செய்த தம்பி உதயன், அழகாக வெளியிட்ட தோழர் நாகராஜன், மற்று கதைக்கரு மற்றும் ஆலோசனை வழங்கிய செல்வி ரஞ்சன குழலி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்

———–

அறிவிப்பு:

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் இலக்கியம் மற்றும் குறும்பட ஆவணப்பட பரிசுக்கு நூல்களும், ஆவண, குறும்படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். அறிவிப்பு விவரம் வருமாறு:விளிம்பு நிலை மக்கள் பற்றிய படைப்புக்கான சு.சமுத்திரம் நினைவுப்பரிசு – அ.பகத்சிங் எழுதிய முள் கிரீடம் – வெளியீடு – எதிர் வெளியீடு.தமிழ் வளர்ச்சி படைப்புக்கான குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு – முனைவர் ப.பெருமாள் எழுதிய சுவடிப் பாதுகாப்பு – வெளியீடு – கோவிலூர் மடாலயம்.மொழியாக்கப் படைப்புக்கான வ.சுப.மாணிக்கம் நினைவுப்பரிசு- போப்பு மொழி பெயர்த்த ஒருவழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம் – வெளியீடு – சந்தியா பதிப்பகம்.தமிழ் கலை இலக்கிய ஆய்வுக் கான சுந்தரம் நினைவுப்பரிசு – மோகனா எழுதிய தமிழில் விலாச நூல்கள் – வெளியீடு – சந்தியா பதிப்பகம்.


நாவல் இலக்கியத்திற்கான கே.பி. பாலச்சந்தர் நினைவுப்பரிசு – பூமணி எழுதிய அஞ்ஞாடி – வெளியீடு – க்ரியா பதிப்பகம்.

சிறுகதைத் தொகுப்புக்கான புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு – செல்வராஜ் எழுதிய செள்ளு – வெளியீடு – பாரதி புத்தகாலயம்.

கவிதை நூலுக்கான செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு – கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் எழுதிய சிறகு முளைத்த பெண் – வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம்.

குழந்தை இலக்கியத்துக்கான அகிலா சேதுராமன் நினைவுப்பரிசு – விழியன் எழுதிய அந்தரத்தில் நடந்த அபூர்வக்கதை – வெளியீடு – பாரதி புத்தகாலயம்.

பா.ராமச்சந்திரன் நினைவுப்பரிசு – குறும்படம் – ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய மௌன மொழி ஆவணப் படம் – இரா.முருகவேள் – லட்சுமணன் இயக்கிய நாளி.இலக்கியப் படைப்பாளிகளுக்கு ஜூலை 28 அன்று விருதுநகரில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.குறும்பட ஆவணப்பட இயக்குநர்களுக்கு ஜூலை 25 அன்று சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

—————

antharathil

English Brief: One of my book has received a Child literature award. Award given in the name of Akila Sethuraman by Tamilnadu Progressive Writer’s and Artist Association.

 

20 Comments leave one →
  1. June 24, 2013 8:24 am

    மனமார்ந்த வாழ்த்துகள். மேன்மேலும் பல சிறப்புகளைப் பெறவும் வாழ்த்துகள்.

  2. Sashidharan V permalink
    June 24, 2013 8:34 am

    வாழ்த்துக்கள் விழியன்.

  3. ganesh kumar rajapp permalink
    June 24, 2013 8:40 am

    congrats uma

  4. Meena permalink
    June 24, 2013 9:13 am

    Congrats

  5. June 24, 2013 9:29 am

    congratulations thalai🙂 Best wishes for the future Awards as well. keep rocking🙂

  6. Ajith permalink
    June 24, 2013 10:00 am

    Congrats Uma!!!

  7. அ சேர்ம ராஜா permalink
    June 24, 2013 11:43 am

    வாழ்த்துக்கள் விழியன்….

  8. June 24, 2013 5:15 pm

    *
    ( ஒவ்வொரு பிரிவிலும் பரிசுகள் பெற்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.. )

    குழந்தை இலக்கியத்துக்கான பரிசு பெரும் ஆருயிர் நண்பர் விழியனுக்கு…
    ஓர் ஆரத்தழுவல் மற்றும் முத்தங்கள்..

  9. Michael Raja permalink
    June 25, 2013 7:24 am

    vaalthuckal, melum pala petru vaalga

  10. July 6, 2013 4:21 pm

    வாழ்த்துகள் விழியன்.

  11. July 23, 2013 9:44 am

    மனமார்ந்த வாழ்த்துக்கள் விழியன்! மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: