Skip to content

பெரும்வலி

November 1, 2013

மிக எளிதாக கடந்து வந்திருக்கலாம் தான். ஆனாலும் அது பல பழைய நினைவுகளைத் துழாவி எடுத்துவந்துவிட்டது. அலுவலகத்தின் ஆண்டு விழா. உள்ளூர் பாடகர்கள், நடனங்கள், பரிசளிப்பு, பேச்சுக்கள், உணவு எல்லாம் முடிந்து வெளியீர் பாடகர்கள் பாலாஜி மற்றும் மது (ஏட்டெல் சூப்பர் சிங்கர்) பாட ஆரம்பித்தார்கள். அவர்கள் பாட பாட நம்ம மக்கள் நடனமாட ஆரம்பித்தார்கள். நான் கிளம்பும்வரை குத்துப்பாடல் இடம்பெறவில்லை. மெலோடி, ஜாஸ், கலவைப்பாடல்கள் என சென்றுகொண்டிருந்தது. கால்களை வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்டேன். அந்த பிரம்மாண்ட ஒலியும், சிலிர்க்கும் குரல்களும் திக்குமுக்காட செய்தது. ஏன் ஆடவில்லை என்ற காரணம் எனக்கு தெரியவில்லை.

நான் அடிப்படையில் ஒரு பரதக் கலைஞன். முறையாக பரதம் பயின்றேன். ஆனால் சில காரணங்களுக்காக அதில் மேலே போகவில்லை. முக பாவங்களும், உடல் நலினமும் பெண் போல மாறிவிடும் என்ற பயம் தான். பதின்ம வயதில் தோன்றிய தேவையற்ற பயம் என்று இன்று தோன்றுகிறது. பள்ளி காலத்திலேயே நடனத்திற்காக மேடையேறினேன். ஒரு நாட்டுப்புற நடனக்கலைஞன் என்றே நண்பர்கள் அறிந்து இருந்தனர். ஊர் பார்ப்பதைவிட ஆனாலும் யாரும் பார்க்காத தனிமையான நடனம் பெரும் ஆனந்தத்தைக் கொடுத்தது.

இசையை உடலுக்குள் செலுத்திக்கொள்ள நடனத்தைவிட சிறப்பான ஒன்றை நான் உணர்ந்ததில்லை. கல்லூரி காலத்தில் அது பெரும்வலியையும் கொடுத்தது பெரும் சுகத்தையும் கொடுத்தது. அது ஒரு stress burster. அது ஒருவகை தியானம். அது ஒருவகை அமைதி. புத்தகம் வாசிப்பதைப் போல, பயணம் செய்வதைப் போல, இசையை ரசிப்பதைப் போல, நடனம் ஒரு பேரனுபவம். அதனை மேடையேறி ஊரார் பார்க்கவேண்டிய அவசியமில்லை. It is so personal.

2005ல் நடந்த சாலை விபத்தொன்றில் இடக்காலில் லிகமண்ட் டியர். அன்றில் இருந்து அடிக்கடி twistகள், கால்கள் வலுவிழந்துவிட்டது. கொஞ்சம் அதற்கு சிரமம் கொடுத்தாலும் பிரச்சனையாகிவிடும். நடனம் மெல்ல மெல்ல தூரவிலகியது. ஒவ்வொரு அலுவலக விழாவிலும் இதே போன்ற அவஸ்தையை சந்திப்பேன், ஆனால் இம்முறை அந்த இசையும் குரலும் மேலும் அதிகப்படுத்திவிட்டது. யாருமற்ற சாலையில் ஓவென கத்தியபடியும் சிலதுளிகள் கண்ணீர் விட்டும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். வீட்டை அடைந்ததும் மனைவியின் கைபிடித்து நடந்ததை கூறியதும் தான் அந்த வருத்தம் வறட்சி கண்டது.

Advertisements
4 Comments leave one →
 1. November 1, 2013 5:30 am

  எல்லாம் நன்றாக நடக்கட்டும்…

 2. November 1, 2013 5:50 am

  அன்புள்ள விழியன்,
  உங்கள் வலி புரிகிறது. இப்போது நீங்கள் குழந்தைகளுக்குச் செய்துவரும் சீரிய தொண்டில் இந்த வலி மறந்துவிடும் என்று தோன்றுகிறது.
  தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும், அன்பு மனைவிக்கும், அருமை குழந்தைகளுக்கும்.

 3. November 3, 2013 11:32 am

  “பதின்ம வயதில் தோன்றிய தேவையற்ற பயம் என்று இன்று தோன்றுகிறது………. ஊர் பார்ப்பதைவிட ஆனாலும் யாரும் பார்க்காத தனிமையான நடனம் பெரும் ஆனந்தத்தைக் கொடுத்தது…
  இசையை உடலுக்குள் செலுத்திக்கொள்ள நடனத்தைவிட சிறப்பான ஒன்றை நான் உணர்ந்ததில்லை” – எத்தனை பெரிய உண்மையை எத்தனை எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ! எழுத்தில் தத்ரூபமாக வெளியிடப் பட்டிருக்கும் உங்கள் மனவலியை உணர்கிறேன் நான் முழுமையாக ! மிக நல்ல பதிவு! மிக்க நன்றி !

  எனக்கும் சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது அபரிமிதமான பிரேமையும் மதிப்பும்.. ஆசை முளையிலேயே கிள்ளியெறியப்பட்டது ! காட்டப்பட்ட காரணம் நீங்கள் சொன்ன அதேதான் – “முக பாவங்களும், உடல் நலினமும் பெண் போல மாறிவிடும் என்ற பயம் ” . நான் கற்க நினைத்த நடனத்தை மகள் மூலமாக நிறைவேற்றிக் கொண்டேன் – அதுவும் ஓரளவு வரைதான் ! அரங்கேற்றம் வரை கொண்டு செல்லாததற்கு அவள் இன்று வரை என்னைக் குறை கூறிக் கொண்டுதானிருக்கிறாள் ! நினைக்கும் எல்லா விஷயங்களையும் நிறைவேற்றிக் கொள்ள முடிவதில்லைதான் ! அதுதான் வாழ்க்கை !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: