Skip to content

பொறுப்பு

November 1, 2013

எஸ்.ராவை எனக்கு ரொம்ப பிடிக்கும். மற்ற எழுத்துகளை விட பயணம் & சிறுவர் இலக்கியத்திற்காக அதிகமாகவே. பத்து நாட்கள் முன்னர் டிஸ்கவரி புக் பேலஸில் நடந்த நிகழ்ச்சியில் அவருடைய புத்தகம் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்த அவருடைய ஏற்புரையில் மூன்று விஷயங்கள் கொஞ்சம் நெருடலாக இருந்தது.

1. அவர் பேசும் போது, ‘நான் சிறுவயதில் இருந்த போது தமிழ் புத்தகங்களே கிடைக்காது, எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் தான் படிக்க வேண்டும், ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை, சிறுவர்களுக்கு நிறைய புத்தகங்கள் இருக்கின்றது’ என்றார். இது நம்ம ஏரியா என்பதால் முதலில் அதை சொல்லிவிடுகிறேன். 1975ல் குழந்தைகள் எழுத்தாளர் சங்கம் ஒரு புத்தகம் வெளியிடுகின்றது அது சுமார் 400 குழந்தைகள் எழுத்தாளர்களின் முகவரி, விவரம் அடங்கிய புத்தகம். ‘ஆலிஸ்ஸின் அற்புத உலகம்’ 1970 மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது. இன்று குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு புத்தகங்கள் வருகின்றன ஆனா போதுமான அளவில் இல்லை. 400 எல்லாம் வேண்டாம் அதில் 10% இப்போது இருக்கின்றார்களா? ஏன் போகிற போக்கில் இப்படி ஒரு வரியை பேசவேண்டும்?

2. ஏனோ எழுத்தாளர்களுக்கு இணைய வாசகர்கள், பயனாளிகள் என்றால் இளக்காரமாகவே இருக்கின்றது. இரண்டாம்பட்சமாகவே பார்க்கபடுகின்றார்கள். விழாவிற்கு வந்திருந்த நண்பர் ‘லுங்கி டான்ஸ் என்பது தமிழக கலாச்சாரமாக பரவுகிறதே, இதனை எதிர்த்து ஏன் எழுத்தாளர்கள் குரல் கொடுக்கவில்லை’ என வினா எழுப்புகிறார். அதற்கு எஸ்.ரா இணையம் ஒரு “Bubble” அதில் வரும்விஷயங்கள் அடங்கிவிடும், மேலும் இது போன்ற விஷயங்களை யார் ஷார் செய்வது? நீங்கள் தானே என்றார்.

3. மெக்கலே பற்றியும் அவர் கொண்டு வந்த கல்விமுறை + பீனல் கோடு பற்றியும் பேசினார். மெக்கலே முதல்முதலாக இந்தியாவிற்கு சென்னையில் இறங்குகிறார். சூடு தாங்காமல் ஊட்டிக்கு பயணப்படுகிறார், பல்லக்கில். வழிதெரியாமல் மைசூர் வழியாக செல்கிறார் அதுவும் 45 நாட்கள் ஆனது என சொல்லி அனைவர் வாயினையும் திறக்க வைக்கிறார் எஸ்.ரா. 45 நாட்கள் என்பது சாத்தியமே இல்லை என தோன்றியது.

உண்மையில் மெக்கலே இந்தியா இறங்கியதில் இருந்து தனது சகோதரிக்கு கடிதங்கள் எழுதுகின்றார். அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆற்காடு, பெங்களூர், மைசூர் வழியாக செல்வது சரிதான் ஏற்கனவே நிறுவப்பட்ட சாலை வழியாக செல்லவே இந்த பாதை. அதுமட்டுமில்லாமல் வழியில் ஆற்காடு நவாப், பெங்களூர் ராஜா (3 நாட்கள் அங்கே தங்குகிறார்), மைசூர் ராஜா ஆகியோருடன் நேரத்தை செலவிடவே இந்த ஏற்பாடு. அதுவும் கிளம்பியதில் இருந்து ஊட்டி செல்ல எடுத்துக்கொண்ட நாட்கள் 15. (45 அல்ல). வெயில் அதிகமாக இருந்ததால் பகலில் பாதி நேரம் தான் பயணம்.

_http://www.gutenberg.org/files/2647/2647-h/2647-h.htm
{(In the afternoon of the 17th June I left Madras. My train consisted of thirty-eight persons.) இங்கிருந்து வாசிக்கலாம் }

ஜெமோ, சாரு, எஸ்.ரா ஆகியோர் சொல்வதை தெய்வவாக்காக பலர் கருதுகின்றனர். அவர்கள் கூறினால் சரியென பெரிதும் நம்புகிறார்கள். இப்படி மதிப்பு பெற்றவர்கள் இன்னும் கொஞ்சம் சிரத்தையோடு இருக்க வேண்டாமா?

(இன்றைய வெங்கடாசலபதியின் எதிர்வினையை பார்த்ததும் பதிவுசெய்யாமல் விட்ட இவ்விஷயத்தை பதிவு செய்கிறேன்)

Advertisements
One Comment leave one →
  1. November 3, 2013 9:41 am

    இதில் எனது அறிவுக்கு எட்டுவதும் , மனதை நெருடுவதும், முதலில் குறிப்பிடப்பட்ட ‘நான் சிறுவயதில் இருந்த போது தமிழ் புத்தகங்களே கிடைக்காது” என்கிற விஷயம்! கண்டிப்பாக தமிழ் புத்தகங்கள் எந்தக் காலத்திலும் கிடைத்துக் கொண்டுதானிருந்தன , சிறுவர் நூல் உட்பட ! 1955 முதல் நானும் அறிந்தது தான் இந்த விஷயம் . இங்கே இதனை அறிவித்துக்கொள்ள விழைகிறேன் !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: