Skip to content

பெண்களுக்கான கல்வியில் இடர்பாடுகள்

March 3, 2014

பெண் பிள்ளைகளுக்கான கல்வியில் எத்தனை எத்தனை இடர்கள். வாய்மொழியாகவும் எங்கோ நடந்த அனுபவத்தை கேட்பதைவிட நேரடி அனுபவம் சக்திவாய்ந்தது என அப்பா அடிக்கடி குறிப்பிடுவார்.

சுமார் இருபது மாணவிகள் (6 முதல் 9 வகுப்பு வரையிலானவர்கள்) என்னைச் சுற்றி அமர்ந்தனர். ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள். அவர்களுடைய ஆசிரியை என்னை அணுகி “சார், கொஞ்ச நேரம் எங்க பசங்க கூட பேசுங்க” என்றார்கள். பேச்சுப்போட்டியில் பேசிய ஒரு மாணவி கடைசியில் மயங்கி விழுந்துவிட்டாள். அவளை அழைத்து அமர்ந்திருந்த மாணவிகள் முன்னிலையில் பேச வைத்தேன். ‘நான் விரும்பும் கனவு வகுப்பறை’ என்ற தலைப்பில் அழகாக பேசினாள். கைத்தட்டுகள். பின்னர் நீங்க உங்க வகுப்பில், பள்ளியில் என்னென்ன மாற்றம் வேண்டும் என நினைக்கின்றீர்கள் என்ற கேள்வியை அவர்கள் முன் வைத்தேன். ஒரு டையரியில் ஒவ்வொருத்தர் சொல்வதையும் குறித்துக்கொண்டேன்.

கூரை சரியாக இல்லாதது. கொசுக்கள் தொல்லை, பூச்சி தொல்லை, கேட் வேண்டும், டென்னில் பால் வேண்டும், மைதானத்தில் விளையாட வேண்டும் என சொல்லிக்கொண்டே வந்தார்கள். ஒருத்தர் ஒரு பாயிண்டை மட்டும் சொல்ல வேண்டும் என சொல்லி இருந்தேன். ஒரு மாணவியிடம் பார்வை நின்றது. ஒருவேளை ஆசிரியை இருப்பதால் தயங்குகிறாள் என்று அந்த ஆசிரியரை கொஞ்சம் தூரப்போகச்சொன்னேன். “சார், எங்க டீச்சர்கள் போல வரமாட்டாங்க, அவங்க மேல நாங்க எந்த குறையும் சொல்லமாட்டோம்” என்றனர் கூட்டாக. அமைதியாக இந்த அந்த பெண் வாயைத் திறந்தாள்.

“சார், எங்க ஸ்கூல் காம்பெளண்டை ஹைட் ஆக்கணும் சார்” என்றாள். எனக்கு ஏன் என்று புரியவில்லை. அவர்களுடைய ஆசிரியை விளக்கினார். மாலையில் அந்த ஊர் போக்கிரி பசங்க வந்த மாணவிகளை கிண்டல் செய்வார்களாம், பார்த்துக்கொண்டே இருப்பார்களாம். ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லையாம். பெரும்பாலும் முதல் தலைமுறை மாணவிகள், அதனால் ஆசிரியைகள் பள்ளி முடிந்தாலும் அதிக நேரம் சிறப்பு வகுப்புகளை எடுத்து மாணவிகளுக்கு உதவுவார்களாம், இந்த பசங்க வந்ததும் கடகடவென கிளம்பி விடுவார்களாம்.

திக் என இருந்தது. என்ன மாதிரியான அவஸ்தகளை ஒரு பெண் கல்வி கற்கும்போது சந்திக்க நேர்கின்றது. கண்கள் கலங்கியது. அந்த மங்கள் பார்வையில் முன்னே இருந்த அனைத்து மாணவிகளும் குழலி போலவே தெரிந்தார்கள்.

இன்னொரு மாணவி தொடர்ந்தாள் “எங்க ஸ்கூலுக்கு டாய்லட் இருக்கு சார், ஆனா ஊர்காரங்க வந்த அசிங்கம் செஞ்சிட்டு போயிட்றாங்கச் சார். கொஞ்ச நாள் சுத்தம் செஞ்சு பயன்படுத்தினோம், ஆனால் எப்பவும் இதே தொல்லையால் அதை இப்ப பயன்படுத்துறதே இல்லை சார்”

வீட்டிலும் இதை சொல்ல முடியாது. போதும் படிச்சது வீட்ல இரு என்றே குரல்கள் எழும். கழிப்பறை இந்த வயது பெண்களுக்கு எவ்வளவு தேவையான ஒன்று. பெண்கள் கல்வியில் எத்தனை இடர்கள். ச்சை!

பெண் குழந்தைகள் பாதுகாப்பாக, சுதந்திரமாக, நிம்மதியாக கல்வி பயில யார் பாதுகாப்பு தர வேண்டும்? அப்படி தரவேண்டியவர்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்?

கல்வி உரிமைச் சட்டத்தில் ஒரு பள்ளியில் குடிநீர் வசதி இல்லை என்றாலே அது Constitutionக்கு எதிரானது என வரி இருப்பதாக வாசித்தேன், அப்படி என்றால் கிராம்புற மாணவிகள் என்ன செய்ய வேண்டும்?

அன்று மாலை நடந்த நிறைவு விழாவில் சிறப்பு விருந்தனராக உரை நிகழ்த்திய போது அவர்களிடன் சொன்னது இதை மட்டுமே “பெண் குழந்தைகளே உங்களை எல்லா இன்னல்களில் இருந்தும் விடுவிடுக்கும் சக்தி ஒன்றிற்கு மட்டுமே உண்டு. அது உங்களுக்கான கல்வி. எக்காரணத்திற்காகவும் அதனை விட்டுவிடாதீர்கள்”. ஆனாலும் ஒரு குற்ற உணர்ச்சியும் எதுவும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கமும், கோபமும் வருத்தமும் மோலோங்கியே இருக்கின்றது.

Advertisements
One Comment leave one →
  1. June 11, 2015 4:04 am

    அரசினர் மகளிர் பள்ளியில் படித்த பொழுது இதே போன்ற பிரச்சனைகளை சந்தித்து , கடந்து வந்தது நினைவுக்கு வர கண்கள் குளமாகியது. இந்தப்பிரச்சனைகளை கடப்பதற்கு பேருதவியாக இருப்பது நட்பு ஒன்றே. இவை மாணவிகளுக்கு மட்டும் அல்ல, ஆசிரியர்களுக்கும் தான். ஆண்கள் பள்ளிகளிலும் சங்கடங்கள் இருக்கலாம் சார்…விசாரித்தால் தான் தெரியும். நீங்கள் சென்ற பள்ளிக்கு மட்டுமாவது யாராவது ஒரு மாணவியின் கோரிக்கையாவது நிறைவேற்ற முடியுமா சார்…?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: