Skip to content

சிறுவர் இலக்கிய சந்திப்பு அனுபவம். ஏப்ரல் 5,6

April 9, 2014

மிக சிறப்பாக மிக நிறைவாக சிறுவர் இலக்கிய சந்திப்பு நிகழ்ந்தது. பல்வேறு காரணங்களினால் சில நண்பர்கள் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும் துவங்கியாச்சு. நான் (விழியன்), விஷ்னுபுரம் சரவணன், சந்திரா பிரவீன்குமார், மலர்விழி (மழலைச் சொல் பதிப்பகம்), ப்ரமிளா (டெக்கன் கிரானிக்கல்), ப்ரியா, வித்யா (ஓவியர்),ரஞ்சன குழலி (மழலை கதைச்சொல்லி), செந்தமிழ்செல்வன்) ஆகியோர் கலந்துகொண்டனர். 

மூன்று முக்கிய தலைப்புகளில் உரையாடல் நிகழ்ந்தது. 1. சிறுவர் இலக்கியத்தின் படைப்பு வகைகள். சுமார் 20 வகைகளை பற்றியும் அதன் உள்ளடக்கம், யாருக்கானது, எவ்வளவு பெரியது ஆகியவை பற்றி பேசினோம். 2. சிறுவர் இலக்கிய படைப்பாளிகளின் தன்மை, எதை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும், எப்படி தயாரித்துக்கொள்வது என பேசினோம். 3. அடுத்த கட்ட நடவடிக்கைகளாக – சிறுவர் இலக்கியத்தில் இயங்கும் இயக்கங்களை ஒன்றிணைத்தல் மற்றும் ஆர்வலர்கள், படைப்பாளிகளை ஒன்றிணைத்து தொடர் பணிமனை/ சந்திப்புகளை நிகழ்த்துவது. குழந்தைகளுடன் கதை சொல்லல் நிகழ்ச்சி, நாடக பணிமனை, இன்னபிற நிகழ்வுகளை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

உரையாடல்கள் நேர்கோட்டில் பயணிக்கவில்லை. திடீரென எங்கேனும் முந்தைய அனுபவத்திற்கு, குழந்தைகள் பற்றியும் , பழமொழி கதை பற்றியும், வாசிப்பு பற்றியும், பல ஆண்டுகள் முன்னர் நடந்த சம்பவங்கள் பற்றியும், இன்ன பிற நினைவுகளிலும் பயணித்தது. ஒவ்வொரு தலைப்பிலும் விரைவான கட்டுரைகள் விரைவில் வெளிவரும். சரியான நேரத்தில் தேநீர், பழங்கள், பழரசம், உணவளித்த குணசுந்தரி மற்றும் வித்யாவிற்கு இந்நேரம் நன்றி கூறுகிறோம்.

ஒன்றிணைவோம் வாருங்கள். உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சிறுவர் இலக்கிய தேரினை நகர்த்திவைப்போம் 

– விழியன்

2 Comments leave one →
  1. April 10, 2014 6:30 pm

    இந்த முறை சந்திப்புக்கு வர இயலவில்லை.

    மன்னிக்கவும்.

    கண்டிப்பாக அடுத்த முறை ஆஜராகிவிடுவேன்.

  2. சே.குமார் permalink
    October 24, 2014 9:29 am

    வணக்கம் சகோதரா/ ஐயா..

    தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
    நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

    வலைச்சர இணைப்பு
    http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_24.html

    நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: