Skip to content

கூச்சத்தை தகர்த்த பிரான்ஸ் பயணம்

September 16, 2015

கூச்சத்தை தகர்த்த பிரான்ஸ் பயணம்

நான் உண்மையில் மிகுந்த சூச்ச சுபாவம் உள்ளவன். இப்போது பரவாயில்லை கல்லூரி நாட்களில் இன்னும் அதிகமாகவே கூச்சம் இருந்தது. நேரில் யாரிடமும் எளிதாக பேசிவிட மாட்டேன். அது பெருமளவு மாறிவிட்டாலும் இன்னும் மிச்ச சொச்சம் இருந்துகொண்டு தான் இருந்தது. எல்லோருக்கும் இருப்பது போல பயம் தான். இந்த பிரான்ஸ் பயணம் அதை தும்சம் செய்தது.

நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் பிரான்ஸில் ஒருவரை பார்த்ததும் பான் ஜோர் செல்வதை. ஆம் ஆரம்பத்தில் இந்த பழக்கம் விநோதமகா இருந்தது. வீதியில் நடந்து செல்லும்போது அவர்களை கண்களை பார்த்துவிட்டால் இன்முகத்துடன் ஒரு போன் ஜோர். பேருந்தில், டிராம்களில் என எங்கும் இந்த போன் ஜோர். அலுவலகத்தில் சுமார் 300 பேர் இருப்பார்கள். எங்கே யாரைப்பார்த்தாலும் இதே தான். லிப்டில், படிகளில், நடக்கையில், காபி பிடிக்கும்போது என எங்கே பார்த்தாலும் போன் ஜோர். ஆரம்பத்தில் நான் திரும்ப ஹலோ சொல்லிக்கொண்டிருந்தேன். இவனுக்கு பிரஞ்சு வராது என புரிந்து கொண்டவர்கள் இப்போது எங்கே பார்த்தாலும் ஹலோ சொல்கின்றார்கள், நான் போன் ஜோர் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். இங்கே இருக்கைக்கு வந்து எல்லோரிடமும் ஹலோ சொல்லும் பழக்கமும் இருக்கின்றது. கேட்டதற்கு அது உறவினை வளர்த்தும் தொடர்பில் வைத்திருக்க ஒரு உத்தி என்றார் ஒருவர். இன்னொருவர் இது மிகச்சாதாரணமான ஒன்று என்றார்.

வார இறுதிகளில் ஊர் சுற்றும்போது ஏராளமான சுற்றுலா பயணிகளையும் உள்ளூர் பயணிகளையும் பார்க்க நேரிட்டது. பாரிசில் என்ற பெரிய நகரத்தில் இன்முகத்திற்கான மதிப்பீடு குறைவாகவே இருந்தது, நானே வலுக்கட்டாயமாக சில தமிழர்களிடம் பேசினேன். லக்ஸம்பர்க் இரண்டு வார பயணத்தில் எங்கு யாரைப்பார்த்தாலும் பான் ஜோர் அல்லது ஹலோ. அது செமத்தையான அனுபவமாக இருக்கின்றது. அவர்களின் குரலை கேட்கின்றேன். இறுக்கம் தளர்ந்து ஒரு புன்னகை உதிக்க செய்கின்றேன். அது செயற்கையாக இல்லாமல் இயற்கையாகவே மாறிவிட்டது. ஆரம்பத்தில் பிரஞ்சு மொழி தெரியாத சூச்சம் எளிதில் யாரிடமும் பேச அஞ்ச வைத்தது, போன் ஜோர் என்ற ஆயுதம் அதனை சுக்கு நூறாக்கியது.

அலுவலகத்தில் இருந்து அறைக்கு ஒரு டிராம், ஒரு பேருந்தில் போக வேண்டும். வரும்போது பேருந்து நிலையத்தில் இருந்து டிராம் எடுக்கலாம். ஐந்து ஸ்டேஷன்கள் தள்ளி அறை. அங்கிருந்து ஒரு 10 நிமிட நடை. ஆனால் பேருந்து நிலையத்தில் இருந்து நடந்தே அறைவரை செல்கின்றேன். அதுவும் நேர் வழியில் அல்ல, ஒவ்வொரு நாளும் ஒரு குறுக்கு சந்து, புதிய வழி. இப்போது பயமாக இல்லை. அங்கே தென்படுகின்றவர்களை பார்த்து புன்னகைக்கின்றேன். அருகே இருக்கும் ஸ்டேஷனுக்கு வழி கேட்கின்றேன். நல்ல காபி எங்கே கிடைக்கும் என கேட்கின்றேன். அவர்கள் உடனே பாகிஸ்தானியா என கேட்கின்றார்கள். இந்தியர்களைவிட பாக்கிஸ்தானியர்கள் அதிகம் போல. இங்கு இரண்டு ஸ்குவயர்கள் இருக்கின்றன. இங்கே அமர்ந்துகொண்டால் அன்றைய மாலைப்பொழுதினை போக்கிவிடலாம். ஒன்று சர்ச் வாசலிலும் மற்றொன்று ப்ளேல் ஆப் ஸ்டேன்ஸிஸ்லிலும் இருக்கின்றது. ஒன்று ஐரோப்பாவில் புகழ்பெற்ற அழகான ஸ்குவயர் என்பதால் நிறைய பயணிகளை பார்க்கலாம். அதனை சுற்றி பல உணவகங்கள் மற்றும் பார்கள். தனியாக பார்கள் என இல்லை, எல்லா உணவகத்திலும் அது ஒரு அங்கம்.

வெளிச்சம் இரவு எட்டரை வரை இருப்பதால் நிறைய சுற்றலாம். ஆனால் பெருவாரியான கடைகள் 7 மணிக்கு மூடிவிடுவார்கள், அதுவும் இல்லாமல் குளிரெடுக்க ஆரம்பித்துவிடுகின்றது. காலை முதல் மாலை வரை எந்த அவசரமும் பரபரப்பும் இல்லாத நகரம். நகரத்திற்கு உண்டான எந்த முகாந்திரமும் இல்லை. ஒரு பெருமழைக்கு பின்னர் இறங்கி நடப்பது சிரம்மகாக இருக்கும் என எண்ணினேன். தண்ணிர் தொளித்தது போல மட்டுமே இருந்தது. எங்கும் எந்தவித நீர் தெக்கத்தையும் பார்க்கவில்லை. நகரம் அவ்வளவு சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் நடந்துகொண்டே இருக்கின்றது நகர் முழுக்க. நகரத்திற்கே உண்டான எரிச்சல் இங்கே சுத்தமாக இல்லை.

இன்னும் சில தினங்களில் பெட்டி கட்டப்போகின்றேன். மனைவியையும் குழந்தைகளையும் விட்டு இருப்பது அத்தனை சிரமமாக இருக்கின்றது. விடியோ காலில் பேசிக்கொண்டாலும் நேரில் இருப்பது போல இல்லை. இந்த பயணத்தில் அந்த தனிமை மட்டுமே மிகச்சிரம‌மாக இருந்தது, அதனை மறைத்துக்கொள்ள என்னென்னவோ போர்வைகளை போர்த்திக்கொண்டேன். ஒருவேளை யாரிடமாவது பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற பழக்கம் கூட கூச்சத்தை தகர்த்தி இருக்கலாம். நான் பேசி அவர்கள் பேசலைன்னா என்ற அந்த சுவரை உடைத்தால் அந்தப்பக்கம் நிறைய சுவை இருக்கவே செய்கின்றது.

ஆனாலும் ஆனாலும் அந்த அல்ஜீரிய திருமணத்தில் எனக்கு மிகவும் பிடித்துப்போன அந்த அல்ஜீரிய பெண்ணிடம் ஒரு ஹலோம் ஒரு போன் ஜோர் , ஒரு கைக்குலுக்கல், ஒரு புன்சிரிப்பு இது எதுவும் செய்யாதது இந்த பயணத்தில் ஆகச்சிறந்த வருத்தமாக உள்ளது

– விழியன்

Advertisements
No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: