தேசிய கல்விக்கொள்கையும் CBSE பள்ளிகளும் – விழியன்
தேசிய கல்விக்கொள்கையும் CBSE பள்ளிகளும்
மிகவும் மும்முரமாக தேசிய கல்விக்கொள்கை CBSE பள்ளிகளில் விவாதிகப்படுகின்றது. அதன் சாதகங்கள் என்னவென்று ஒவ்வொரு ஆசிரியரும் விளக்க வேண்டுமாம். சரி ஒரு பெற்றோராக தேசிய கல்விக்கொள்கையால் CBSE பள்ளிகளில் என்ன மாற்றம் வரும் என்ற கேள்வி எழுவது நியாயமானது. பார்த்துவிடுவோமே.
1. ECCE – முன்பருவக்கல்வி ஏற்கனவே CBSE பள்ளிகளில் உள்ளது. மேலும் கொள்கை பரிந்துரைக்கும் பல விஷயங்களுக்கு எதிராகவே நடைமுறை உள்ளது. எழுதுவது ப்ரீ கேஜியிலேயே துவங்கிவிடுகின்றது. வேறு எந்த நாட்டிலும் இந்த வயதில் பேனாவை பிடிப்பதில்லை. மூன்று வயதில் இருந்தே படி, எழுது. இதனை மாற்ற எந்த பரிந்துரையும் இல்லை.
2. Curtailing Dropout Rates and Ensuring Universal Access to Education at All Levels – இதற்கும் CBSE பள்ளிகளுக்கும் சம்பந்தமில்லை.
3. Restructuring school curriculum and pedagogy in a new 5+3+3+4 design – இதனாலும் ஒரு பாதிப்பும் இல்லை. மாற்றமும் இல்லை. வழக்கம்போலவே குழந்தைகள் பள்ளிக்கு செல்வார்கள். பள்ளிக்குள் நிகழும் எதுவும் வெளிப்படையாக பெற்றோர்களுக்கு தெரியப்போவது இல்லை.
4. Eradicate Rote Learning – ஏற்கனவே 1986ல் பரிந்துரைக்கப்பட்டது தான். CBSE ஆசிரியர் கையேட்டில் வருடா வருடம் தவறாமல் இடம்பெறும் வரிகள் தான். மீண்டும் புதிதாக சொல்லப்பட்டு இருக்கு. நடைமுறையில் இது எப்படி என்று எதுவும் சொல்லப்படவில்லை.
5. ஆசிரியர்கள் – தனியார் பள்ளி ஆசிரியர்களும் TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கின்றது கல்விக்கொள்கை. சராசரியாக ஒரு பள்ளியில் 10-20% ஆசிரியர்கள் கூட இதனை எழுதி இருப்பது சிரமமே (தனியார் பள்ளிகளில்). சர்வ நிச்சயமாக இது கட்டாயமாக்கப்படாது. ஆகவே இதனால் ஒரு பயனும் இல்லை.
6. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றதா? யார் பயிற்சி அளிக்கின்றார்கள்? அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் அளவிற்கு அளிக்கப்படுகின்றதா? தனியார் பள்ளிகளில் அதற்கான இடமும் சாத்தியமும் இருக்கின்றதா?
7. சிறப்புக்குழந்தைகளுக்கான இடம் தனியார் பள்ளிகளில் இருக்கின்றதா? இடமில்லை என்றால் மறுகேள்வி கேட்க முடியுமா?
8. ஆரம்ப வகுப்புகளில் சிறப்புக்குழந்தைகளை அடையாளம் காணும் பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு இருக்கின்றதா? இந்த தேசிய கல்விக்கொள்கையில் அதனைப் பற்றிய குறிப்புகள் இல்லை. தனியார் பள்ளி நிர்வாக நினைத்தால் சத்தியம் உண்டு.
9. தேசிய அளவில் ஒரே பாடதிட்டம். இது ஏற்கனவே நடைமுறையில் இருப்பது தான். CBSE பள்ளிகளில் ஒரு மாற்றமும் இதனால் இல்லை. தமிழ் பாடம் மட்டுமே தமிழக பாடநூல் புத்தகத்தினை பயன்படுத்துகின்றனர். இனியும் அப்படித்தான் இருக்கும்.
10. Holistic development of learners – எத்தனை பள்ளிகளில் நூலக பயன்பாடு சிறப்பாக உள்ளது? சில Chains of Schoolகளில் ஒரே செட் புத்தகத்தினை மட்டும் வைத்துக்கொண்டு எங்கு என்ஸ்பெக்ஷனோ அங்கே இதனை இடம் மாற்றிக்கொள்கின்றனர்.
11. Reduce curriculum content to enhance essential learning and critical thinking – இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது மறு சீரமைக்கப்பட்ட பாடதிட்டம் வந்தபிறகே சொல்ல இயலும். இதே விஷயங்களை CBSEயும் NCF 2005ம் சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றது. அதனை ஏட்டில் இருந்தில் வகுப்பிற்கு கொண்டு வருவதில் தானே சிக்கல்.
12. Experiential learning – இவை ஓரளவிற்கு உள்ளது. Brouchreகளில் போடவதற்காவது இதனை பள்ளிகள் ஏற்கனவே செய்கின்றனர்.
13. Empower students through flexibility in course choices – இது எந்த பள்ளியிலும் சாத்தியமில்லாத விஷயம். நடைமுறைச் சிக்கல் தான். ஒன்று அளவிற்கு அதிகமான மாணவர்கள் இருந்தால் சாத்தியம். ஏனெனில் 1-2 மாணவர்களுக்காக ஒரு ஆசிரியரை தனியார் பள்ளிகள் நியமிக்குமா? இதுவும் ஏட்டளவில் தான் இருக்கும்.
14. Three language – அடுத்த புள்ளிக்கு செல்லலாம். பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கு. ஆனால் இந்தி, ப்ரெஞ்ச் தவிர்த்து மற்ற மொழிகள் உள்ளனவனா அல்லது ஏற்பாடு இருக்குமா என்பது சந்தேகமே.
15. கட்டணம். பள்ளிகள் தேவையான கட்டணம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் நிச்சயம் அவர்கள் தொண்டு தான் செய்ய வேண்டும் (ப்ளீஸ் சிரிக்கக்கூடாது). ஆகவே கட்டணம் சர்வ நிச்சயமாக அதிகரிக்கும். ஏற்பாடு செய்ய ஆரம்பித்துவிடலாம்.
16. தனியார் பள்ளிகளிடம் “Light but tight”ஆக இருப்பார்கள். இது எப்படிப்பட்ட நடவடிக்கை, சட்டதிட்டம் என்பதனை ஆராய தனி பல்கலைக்கழகம் அமைப்படும்.
17. Vocational Courses : இங்கே வழங்கப்படும் தொழிற்கல்வி வேறு மாதிரி தான் இருக்கும். பள்ளியை விட்டு இறங்கமாட்டார்கள்.
18. இன்னும் இன்னும் நிறைய ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும். தற்சமயம் படிக்கும் பாடங்களுடன் கூடுதலாக 20 புதிய பாடங்கள் இருக்கும்.
19. அடிக்கடி தனியார் பள்ளிகளும் அரசுப்பள்ளிகளும் ஒன்று என்றே சொல்லிக்கொண்டு போகின்றது கொள்கை. சர்வநிச்சயமாக சின்னப்பள்ளிகள் கால ஓட்டத்தில் மூடப்பட்டு chain of schools மட்டுமே சந்தையில் இருக்கும். ஒன்று விழுங்கப்படும் அல்லது விரட்டி அடிக்கப்படும். பள்ளிகளை கார்பரேட்டுகள் நிர்வகிக்கும் அபாயம் நிச்சயம் உள்ளது.
20. National Textbooks with Local Content and Flavour – இதுவும் அரசுப்பள்ளிகளுக்கே பொருந்தும்.
21. தேர்வுகள். ஏற்கனவே CBSE க்ரேட் சிஸ்டத்திற்கு நகர்ந்துவிட்டது. மேலும் 3,5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சிபிஎஸ்.சி பள்ளிகள் ஏற்குமா என்று தெரியவில்லை. ஏற்றுக்கொண்டால் 9 ஆம் வகுப்பில் நடக்கும் கூத்துகள் இனி 3ஆம் வகுப்பு முதற்கொண்டே நடைபெறும். சரியாக படிக்காத மாணவர்களை வடிகட்ட, வெளியேற்ற, நெருக்க எல்லா ஏற்பாடுகளும் நடக்கும். சரியாக தேர்வு எழுதமாட்டான் என்றால் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைக்கும் கொடூரங்களும் நடக்கும். முதலாம் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என்று பெயிலாக்கிய சம்பவங்களை நாம் ஏற்கனவே பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.
22. ஆசிரியர்கள் : தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாகிவிடும். ஏற்கனவே அவர்களுக்கான சம்பளம் சொற்பம். ஆனால் வேலை வாங்குவது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு தான். எதையும் கேள்வி கேட்கவும் முடியாது பாவம். தேசிய கல்விக்கொள்கையில் சொல்ப்படும் ஒவ்வொரு விஷயமும் நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள் தான் தேவை. கற்பித்தலில் துவங்கி, அவர்களை மதிப்பீடு செய்வது வரையில். எல்லா பகுதியிலும் கூடுதல் சுமை. அதற்கு ஏற்ப மாணவர்: குழந்தை விகிதம் இருக்க வேண்டும். போதிய கால அவகாசம் அவர்களுக்குத்தர வேண்டும். சுதந்திரமாக சிந்திக்க விடவேண்டும். அதிகமான பயிற்சிகள் வேண்டும். They must be allowed to be teachers rather than tutors. இந்த பகுதியில் கோட்டைவிட்டால் மொத்தமும் முட்டுச்சந்து சிக்கலில் தான் போய் நிற்கும்.
23. Career Management and Progression (CMP) – இது ஆசிரியர்களுக்கு. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இது சாத்தியமா?
24. Efficient Resourcing and Effective Governance through School Complexes/Clusters – இது நடைமுறையில் சாத்திமில்லாத விஷயம். அதாவது தனியார் பள்ளி மாணவர்களும் அரசுப்பள்ளி மாணவர்களும் உரையாடுவது. Resourceகளை பகிர்ந்துகொள்வது. எந்த இரண்டு பள்ளிகள் உரையாடும்போது ஏகப்பட்ட உரசல்கள் ஏற்படும். பள்ளி நிர்வாகம் 100% தவிர்க்கும்.
25. //8.7. Public and private schools (except the schools that are managed/aided/controlled by the Central government) will be assessed and accredited on the same criteria, benchmarks, and processes, emphasizing online and offline public disclosure and transparency, so as to ensure that public-spirited private schools are encouraged and not stifled in any way.// தனியார் பள்ளியின் பண விவகாரங்கள் அனைத்தும் பொதுவெளியில் வைப்பார்களாம். அப்புறம் அரசு அதிகாரிகளை கவனிக்கும் செலவினங்களையும் இந்த பட்டியலில் சேர்ப்பார்களா தெரியவில்லை.
26. Critical Thinking என்று சொல்லிவிட்டு பழமைகளை கொண்டு வரவேண்டும் என்றே கொள்கை முழுக்க சொல்கின்றது. இரண்டு முரண்பாடான விசயங்கள் அல்லவா?
27. பல்வேறு Olympiadகளை நடத்த வேண்டும் என்று வெளிப்படையாக கொள்கை முன்மொழிந்துள்ளது. ஏற்கனவே வாரம் ஒரு ஒலிப்பியாட்களை இந்த பள்ளிகளில் நடந்துகொண்டு தான் இருக்கின்றது, இது மேலும் அதிகரிக்கும். அவை அறிவினையோ வேட்கையையோ மேம்படுத்துவதில்லை. Olympiad will not enhance knowledge but create pressure and competition
28. தாய்மொழி வழி கற்பித்தல் இங்கு சாத்தியமில்லை. முடியாது என சொல்லிவிட்டார்கள்.
29. கூடுதலாக பல்வேறு கோ-கரிக்குலர் (கலைத்திட்டம்) செயல்பாடுகள் பள்ளியில் இணைக்கப்படும். இதில் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் பள்ளி கூடுதலாக வசூலிக்கும்.
30. வீட்டுப்பாட சுமை குறித்தோ, பள்ளியில் விளையாட்டு மைதானம், ஏற்பாடுகள் குறித்தோ எந்த குறிப்பும் பரிந்துரையும் இல்லை. பெரும்பாலான பெருமைகள் வெறும் நீரில் எழுதிய எழுத்துக்களாகவே உள்ளன. மீதியும் கவனமான நடைமுறைப்படுத்தலில் உள்ளது.
ஆகவே…
– விழியன்
#UnderstandingNEP2020